என்ன வெளிநாடு...? பொல்லாத பெரிய வெளிநாடு???
ஆயிரம் இருந்தாலும் செருப்பை போடும் போது பாஸ் போர்ட் எடுத்து வச்சிக்கிட்டாச்சான்னு பேண்ட் பாக்கெட்டை தொட்டு பார்க்காம...
திடிர்ன்னு எல்லாரும் நம்மளையோ பார்க்கறாங்களோன்னு hesitant ஏதும் இல்லாம...
கைல காசு இல்லாம போன கூட வடபழனியில பசங்க கிட்ட வாங்கிங்கலாம்ன்னு நம்பிக்கையா போறதும்
நைட்டு பண்ணிரண்டு மணிக்கு மேல வெளியோ போய் ஒரு டீ குடிக்கலாமா? வேணாமா? ன்னு மனசுக்குள்ள பூவா தலையா போட்டு பார்க்கமா?
மயிலாப்பூர் வீட்டுல இருந்து சட்டையை போட்டுக்கிட்டே...
மாடி படி இறங்கிக்கொண்டே எது பற்றியும் கவலை இல்லாம இரண்டு சட்டை பட்டன் போடாம... பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் கவலை இல்லாம...சட்டுன்னு ஜட்டி கூட போடாம காத்தோட்டமா கைலியை கட்டிக்கிட்டு வண்டியை எடுத்துக்கிட்டு...
இரண்டு மணிக்கு ‘ மெரினாவுக்கு போய் காந்தி சிலைக்கிட்டு இருக்கற குல்பி ஐஸ்காரன்கிட்டயோ... அல்லது சுக்கு காபி விக்கறவன் கிட்டயோ... வாங்கி, தின்னு குடிக்கற சொகம் இருக்கே....
சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா?
பெத்த தாய் பெத்த தாய்தான்.. வளர்ப்பு தாய் வளர்ப்பு தாய்தான்..
மா துஜே சலாம்...
சாரி...
வந்தே மாதரம்...
சாரி...
தாய் மண்ணே வணக்கம்.
ஜாக்கிசேகர்.
03/04/2017
(நான் வியட்நாம் போனதை தன் பயணமாகவும் அதே வேளையில் என் மகிழ்ச்சியை நீங்களும் உணர்ந்து அதை வாழ்த்தாக வார்த்தையில் வெளிப்படுத்தி என்னை மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காடவைத்த அனைத்து வலையுலக முகநூல் நண்பர்களுக்கும் மிக்க நன்றி. ஞாயிறு விடியற்காலை சென்னை வந்தடைந்தேன். )
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஹா..ஹா.. பதிவுல நகைச்சுவை ததும்புது. யாதார்த்தம் தூக்கி நிறுத்துது. நீங்க வெளிநாடு போய் வந்த்து எனக்கு தெரியாம போச்சே. இருந்தாலும் அதுக்கும் வாழ்த்துகள்..! பத்திரமா வந்து சேர்ந்ததுக்கு டபுள் வாழ்த்துகள்!
ReplyDelete