முதல் விமான பயண அனுபவம். சென்னை டூ பாங்காக் ( வியட்நாம் பயணகுறிப்புகள் )


முதல் விமான பயண அனுபவம். சிறு வயதில் இருந்தே அப்பா அம்மா விமானத்தில் அழைத்து சென்று விமான பயணத்தை 12 பி பேருந்தில் பயணிக்கும் கணக்காக இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஏற்றதல்ல.. அதே போல நன்கு படித்து நல்ல உத்தியோகத்து சென்று நிலை பாஸ் போர்ட்டில் வீசா குத்துகள் வாங்கி கொண்டு இருப்பவர்களும் இந்த இடத்தோடு அப்பிட்டாகி கொள்ள வேண்டுகிறேன். இந்த பயணம் பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கும் புத்தகத்தை 100 முறைக்கு மேல் வாசித்தவனின்… விமான நிலையத்தை கடக்கும் போது எல்ல்லாம் ஜர்ஜியானாவையும், குணசேகரனையும், சுபேதார் சின்ன சாமியையும் நினைத்துக்கொள்பவனின் விமான பயணக்கட்டுரை. இது… நிறைய விமான பயணங்கள் சாத்தியமாகி அப்புறம் ஏதோ ஒரு காரணத்தால் அது நிகழாமல் 40 வயதில் விமான பயணம் சாத்தியப்பட்டவனின் பயண அனுபவம் இது.. ஏர்போர்ஸ் ஒன், எக்சிகியூட்டிவ் டிசிஷன் போன்ற ஆங்கில படங்கள் ஏரோ பிளேனின் படம் காட்டி பாகத்தை குறித்தன என்றாலும் நேரடி விமான பயணம் என்பது இப்போதுதான் சாத்தியமானது. கஸ்டம்ஸ் ஆன் அரைவல் வீசா, இமிக்கிரேஷன் போன்ற வார்த்தைகள் இதற்கு முன் கேள்வி பட்டாலும் நான் அந்த வார்த்தைகளின் மேல் பெரிதாய் கவனம் செலுத்தியதில்லை. சென்னை விமான நிலையத்தில் இறங்கினேன்…. வீட்டம்மா எது எதெல்லாம் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் எதையெல்லாம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே ஆனா ஆவன்னா எடுத்து விட்டதால்.. நான் டிக்கெட் ஜெராக்ஸ் பாஸ் போர்ட் காட்ட உள்ளே விட்டார்கள்.. முதல் முறையாக உள்ளே பயணிக்க போகின்றேன் என்ற சந்தோஷம். இதற்கு முன் எடுத்த இரண்டு பாஸ்போர் கன்னி கழியாமலே கலாவதியானது… இந்த பாஸ்போர்ட்.. வேண்டாம் ரொம்ப எரோட்டிக்காக அந்த பக்கம் போய் விடககூடாது என்பதால்.. இந்த பக்கம் வந்துவிடுவோம்.. தாய் ஏர்லைன்சில் பிளைட் நம்பர் TG338 சீட் நம்பர் 39 ஏ வில் பயணிக்க இருப்பதால் அவர்கள் கவுண்டரில் செக் செய்தார்கள்.. 30 கிலோவுக்கு குறைவாக இருந்த காரணத்தால் செக் செய்து டேக் ஒட்டினார்கள்.. எனக்கு ஹேன்ட் லக்கேஜுக்கு டேக் கொடுத்ததோடு போர்டிங் பாஸ் கொடுத்தார்கள்… அதனை பில் செய்து இமிரியேஷன் கவுண்டர் சென்றேன்… நிறைய கவுண்டர்கள் காலியாக இருந்தாலும் கூப்பிடும் பொதுதான் செல்ல வேண்டும்… ஒரு பெண்மணி என்னை அழைத்தார். போனேன்… செக் செய்தார்… எதுக்கு வியட்நாம் என்றார். டூரிஸ்ட் என்றும் யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர் என்றும் அதனால் இந்த பயணம் அவசியம் என்று சொன்னேன். ஒத்துக்கொண்டார்…. பாஸ்போர்ட்டில் முதல் முறையாக குத்து வைத்தார்… நான் உள்ளே போனால் ஹேன்ட் லங்கேஜ் மற்றும் உடமைகளை செக் செய்தார்கள். அதன் பின் அவர்கள் ஒரு சீலை டிக்கெட்டில் குத்தி அனுப்பினார்கள். இங்கே இருந்து கேட் நம்பர் 14 க்கு செல்ல வேண்டும் அது பழைய டெர்மினல்.. காத்திருந்து முதலில் பாக்காங் செல்லும் பிளைட் அதன் பின் அங்கே இருந்து வியட்நாமின் ஹானாய் நகரத்துக்கு செல்ல வேண்டும்… பிளைட்டுக்கு சென்றேன்… தாய் ஏன்லைன்ஸ் கொடியிடை பெண்கள் வணக்கம் வைத்தார்கள்.. நிறைய பேர் அலட்சியமாக செல்ல நான் அந்த தேவதைகளுக்கு ஒரு இரண்டு வினாடி செலவு செய்து வணக்கம் வைத்து உள்ளே சென்றேன்… ஒரு வரிசைக்கு மூன்று மூன்றாக ஆறு வரிசை… பெரிய சுரங்க பாதையை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.. வீட்ட்ம்மா ஜன்னல் ஓர சீட்டினை புக் செய்து இருந்தார்கள். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தேன். பிளைட் காலியாக இருந்தது… ஒரு 20 தாய்லாந்து இளம் பெண்கள் வந்தார்கள் பிளைட் களை கட்டியது….எல்லாம் தொடை தெரிய டவுசரோடு வந்தார்கள்… ஒரு அழகாகன விமான ஆண் சிப்பந்தியை பார்த்ததுமே செமையாக கலாய்த்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். பேகினை மேல் செல்பில் வைத்து விட்டு உட்கார்ந்தேன்.. பின் பக்கம் முன் பக்கம் பர்ஸ்கிளாஸ் அதைனை பார்த்து விட்டேன் ஏகானமி கிளாஸ் வால் பக்கம் வரை நீண்டு இருந்தது. அந்த பக்கம் கடைசி வரை போய் பார்த்து விட்டு வந்தேன். இரவு ஒன்றரை மணிக்கு விமானம் புறப்பபடும் முன் யுவதிகள் சீட் பெல்ட் அணிந்து இருக்கின்றார்களா என்று செக் செய்தார்கள்.. அந்த இரவில் எல்லோரும் தூங்கி வழிய.. ஏங்ஹோஸ்டல்ஸ் பெண்கள் கோல்கட் பற்பசை விளம்பரம் போல பற்களை காட்டிக்கொண்டே எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்க்ள்.. கன்னத்தில் பளபளப்பாக ரூஜ் ஏற்றி இருந்தார்கள்… விமானம் கிளம்புவதாக விமானி அறிவித்தார்கள்… முன்னால் இருந்த டிவி ஸ்கிரினில் தாய் ஏர்வேஸ் பெருமைகள் மற்றும் விபத்து நேர்ந்தால் செயல்படும் முன்னேற்பாடுகள் காட்சிகளாக விரிந்தன. விமானம் மெல்ல அசைந்தது… ஊர்ல கிராமத்துல டயர் வண்டியில போய் இருக்கிங்களா? அது போல அசைந்து அசைந்து தன் பாதைக்கு வந்து நின்றது… டேக் ஆப் என்று அறிவிப்பு வந்த போது… சாதாரன விமான இரைச்சல் பேர் இரைச்சலாக மாறி சில 100 மீட்டர்கள் ஓடி ஜிவ் என்று புவியீர்ப்ப்பு திசைக்கு எதிராக அப்படியே மேல எழுந்து பயணிக்க ஆரம்பித்தது.. அப்படியே சென்னை ஒரு கேலக்சி போல மாற ஆரம்பித்தது.. சான்சே இல்ல… நிச்சயம்.. இப்படி ஒரு அனுபவத்தை வாழ்வில் அனைவரும் அனுபவக்க வேண்டும்.. முக்கியமாக வின்டோ சீட் கிடைத்தாலே அந்த அனுபவம் சாத்தியம்… ஏறக்குறைய டேக் ஆப் வெயிட் 333,400 கிலோ இருக்குமாம்…. அப்படி என்றால் அதற்கு எத்தனை விதமான கருவிகள் வேலை செய்ய வேண்டும்.. உலகத்தில் ரொம்பவும் பாதுகாப்பான பயணம் விமான பயணம் என்று சொல்லுவார்கள்.. அந்த எஃகு பறவை பறக்க அத்தனை செக்கிங்குகள். ரைட்… விமானம் சென்னைக்கு மேல் சென்றதும் மிக அழகாக இருந்தது… கொஞ்சம் நேரத்தல் புள்ளியாக மறைந்து விமானம் வங்காள விரிகுடா மேல் பயணிக்க ஆரம்பித்தது.. எப்படி பயணித்தது என்றால் பழனி மலைக்கு விஞ்சில் யார் யார் போய் இருக்கின்றார்கள்.. அது போல 40000 அடி உயரத்தை தொட செங்குத்தாக படி படியாக சென்று கொண்டு இருந்தது… விமானம் வங்காள விரிகுடாவை தொடும் முன்.. இறங்கை பக்கம் புரொப்பல்லர் பக்கம் எல்லாம் லைட் போட்டு இருந்தார்கள்… கும்மிருட்டு கடலின் மேல் பறக்கும் போது எதுக்கு லைட் என்று அனைத்தும் தாம்பரத்தை தாண்டியதும் லைட் ஆப் செப்புயம் ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் போல பைலட்டும் ஆப் செய்து விட்டார்.. விமான இறக்கையின் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டே இருக்க… வெள்ளை விளக்கு கடலை போட்டே எடுப்பது போல பிளாஷ் அடித்துக்கொண்டு இருந்தது. விமானம் சம நிலைக்கு வந்ததும்… தினசரி நாலு காட்சிகள் சிலைட் போட்டு முடிந்ததும் படம் போடுவார்களே அதே போல டேக் ஆப் வரை தனது சீட்டில் உட்கார்ந்து இருந்த விமான பணிப்பெண்கள் மீண்டும் கோல்கேட் புன்னகையோடு சாப்பாடு இன்ன பிற சமாச்சாரங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்… ஜுஸ் காப்பி லிக்கரில் எது வேண்டும் என்றார்… ஓட்கா என்றேன்… சின்ன லார்ஜ்தான் இருப்பினும் பாங்காங் வரும் வரை அது என்னை உற்சாகம் கொள்ள செய்தது….முக்கியமாக ஒரு மணி நேரம் தூங்க வழிவகுத்தது.. விமானம் காலியாக இருந்தது.. பெரிய பெரிய மால்களில் பார்க்கிங் பக்கம் ஏசி பிளான்ட் பக்கம் நின்றால் ஒரு இரைச்சல் கேட்டு இருப்பீர்கள் அல்லவா? அதுதான் விமானத்தின் உள்ளேயும் மெல்லிதாக கேட்டுக்கொண்டு இருந்தது…. மூன்று மணி நேர பயணம் பாங்காங் விடியலில் மிக அழகாக இருக்க ஆரம்பித்தது… சுவர்ணபூமீ விமான நிலையம் கண்ணுக்கு தென்பட விமானம் பாங்காங்கில் லேண்டிங் ஆனது… தரையிரங்கும் போது மலையில் இருந்து இறக்கத்தில் ஓடி வரும் போது கண்ட்ரோல் செய்ய போராடுவோம் இல்லையா ..? மாடு உற்சாகத்தில் சிம்பிக்கொண்டு ஓடும் போது அடக்க போராடுவோமே? அப்படி பைலட் பறந்த வந்த அத்தனை வேகத்தை தரையில் இறங்கியதும் வேகத்தை குறைக்க போராடினார். விமானம் தரையிறங்கி பல்லாவரத்தில் இருந்து பாரிஸ் தூரத்துக்கு சுத்தி சுத்தி சென்றுகொண்டே இருக்கின்றது… ஏபிசிஎப் வரை ஆறு ஆறு விமானங்கள் என்று வரிசையாக விமானத்தை நிறுத்தி வைத்து இருக்கின்றார்கள்… பரபரப்பாய் விமான நிலையம் விடியலில் இயங்கியது… எல்லோரும் போனதும் பேக் எடுதுக்கொள்ளலாம் என்று இருந்தேன்… என் இருக்கை மேல இருக்கும் கம்பார்ட்மென்டில் திறந்தேன் எனது பேக் இல்லை. அடுத்ததில் திறந்து பார்தேன் அதிலும் இல்லை பாதி பேருக்கு மேல சென்று விட்டார்கள்.. யாரிடம் கேட்பது..? முதல் முறையாக பீதியை சந்தித்தேன்.. விமான பணிப்பெண்ணிடம் சொன்னேன் அமைதி காக்க சொன்னால்… சொல்லி விட்டதோடு மட்டுமல்லாமல்… போகின்றவர்களுக்கு மதிக்கின்றார்களோ.? மதிக்கவில்லையோ ஒவ்வோருவருக்கும் வணக்கம் வைப்பதில் குறியாக இருந்தார்கள்… மோபைல் பார்த்துக்கொண்டே என்னை இடித்து சென்ற சிறு மார்பு பெண்னை ரசிக்க கூட முடியவில்லை...உண்மையாக சாரி சொன்னால்.. அதை ஏற்கும் நிலையில் இல்லை என் பதட்டத்தை பார்த்து விட்டு கும்பலாக வந்த 20 யுவதிகள் கேள்வி குறியை முகத்தில் தொங்க விட்டுக்கொண்டு என்னை பார்த்தபடியே நடந்தார்கள்.. கழுத்தில் வியர்வையும் சட்டை மெல்ல விய்ர்வையில் நனைய ஆரப்பித்தது. பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் எனது பாஸ்போர் கேமரா டிக்கெட், லேப்டாப் என்று எல்லாம் வைத்து இருந்த பேக் காணமல் போய் விட்டது.. யார் எடுத்துக்கொண்டு போய் இருப்பார்கள்.. பாஸ்போர்ட் இல்லையென்றால் ஜட்டியை கழட்டி சூத்தில் பிரம்பால் அடிப்பார்களா? என்று மனதில் படம் ஓட முதல் பயணமே இப்படியா ஆக வேண்டும் என்று வெறுத்து போனேன். ஜாக்கிசேகர் 22/03/2017 தொடரும்.நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

2 comments:

  1. வெள்ளை விளக்கு கடலை போட்டே எடுப்பது போல பிளாஷ் அடித்துக்கொண்டு இருந்தது.

    Rasikanya.....

    ReplyDelete
  2. //அந்த தேவதைகளுக்கு ஒரு இரண்டு வினாடி செலவு செய்து வணக்கம் வைத்து உள்ளே சென்றேன்…// முதல் பயணம்னு அவளுகளுக்கு வணக்கம் வைச்சு கன்பார்ம் பண்ணீட்டீங்க... நானும் என்னோட முதல் பயணத்தில் கையெல்லாம் குலுக்கினேன்...இறங்கிபோகும் போது ஒருக்க நன்றி சேஃப் ஜார்னிக்கு... அப்படீன்னு ஒருக்க கைகுலுக்கினேன். பைலட் மாமாவை கேட்டதா சொல்லுங்கன்னு எல்லாம் சொன்னேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner