அவன் நீல சட்டை அணிந்து இருந்தான்….. விலை உயர்ந்த பைக்…. வைத்து இருந்தான்… அநேகமாக அவன் சிட்டி சென்டர் ஐநாக்ஸ் பக்கத்த்தில் இருந்து வந்து கொண்டு இருக்க வேண்டும்..
நான் அப்போதுதான் வண்டியை கழுவிக்கொண்டு இருந்தேன்.. யாரும் வருகின்றார்களா என்பதை பார்த்து சளீர் என்று வாகனத்தின் மீது எறிந்ததேன்… நல்ல தண்ணீர்தான்.. இரண்டாவது முறை சரியாக சளீர் என்று அடிந்தேன்….
மூன்றாவது முறையாக நான் சரியாக சளீர் என்று அடித்து இருந்தாலும் பைக்கின் வேகம்…. ஆட்டோவில் இருந்து கட் கொடுக்க நான் தண்ணீர் அடிக்கவும்… அவன் மேல் நான்கு நீர் திவளைகள் அமீபா மேப் அவன் சட்டையில் போடவும் சரியாக இருந்தது.
வண்டியை நிறுத்தினான் கேனக்கூதி ரோட்டுல இப்படித்தான் வண்டி கழுவுவாங்களா? என்றான்.
முதலில் எனக்கு அவன் திட்டிய போது கோவமே வரவில்லை.. ‘ சிரிப்புதான் வந்தது…அவன் அவசரமாக கிளம்பி போய்க்கொண்டு இருந்தான்…
என் மீதுதான் தவறு,,, அவன் சட்டையையும் என்னையும் பார்த்து வெடித்து கோவத்தோடு கத்த நான் அவன் அருகில் தவறுக்கு மன்னிப்பு கேட்டேன்..
என்ன சாரி… இப்படியா சட்டையை ஈரம் செய்வாங்க.??
.நீல சட்டை நன்றாக இன் செய்து இருந்தான் கருப்பு பிளக்சிபில் ஜீன்ஸ் உடம்போடு ஒட்டி இருந்தது…… படிய தலைவாரி இருந்தான்… கருப்பாக இருந்தான் ஆனாலும் கன்னம் ஒட்டி நடிகர் சந்திரபாபு போல இருந்தான்.
பைக் விலை உயர்ந்த பைன்.. அதன் ஹெட் லைட் ரொம்ப சின்னதாக இருந்தது… மகாபலிபுரத்து பக்கம் ஒரு பெண்ணை அழைத்து சென்றால்.. எப்படியும் பிடிமானமும் இல்லாமல் வண்டி ஓட்டுபவன் மேல் கோவைப்பழக்கொடி வேலியில் படர்வது போல படர்ந்துதான் செல்ல வேண்டும்… வண்டி ஓட்டுபவன் வாழும் போதே சொர்கம் காணாலாம்…
திரும்பவும் சாரி சொன்னேன்..
இப்போது கோவம் குறைந்து சாருக்கு மாறி இருந்தான்..
சொல்லுங்க சார் நீங்க இப்படி வெளிய கிளம்பி போகும் இப்படி நடந்தா சும்மா இருப்பீங்களா என்றான்.?
நான் திரும்பவும் சாரி சொன்னேன்….
உங்க சாரியை தூக்கி குப்பைல போடுங்க என்றவாறு… பைக்கில் பறந்தான்… அடேல் தெரு தான்டி கச்சேரி சாலையில் பயணிக்கும் போது அந்த ஈரம் காய்ந்து விட்டு இருக்கும் என்று மனதை தேத்திக்கொண்டேன்….
அரைமணி நேரத்தில் டே கேரில் இருக்கும் யாழினியை அழைத்து வர சென்று இருந்தேன்… கற்பகாம்பாள் மெஸ் எதிரே… அதே பைக் அதே நீல சட்டை அந்த பெண் அழகாக இருந்தார்….கூட இருந்த பெண் மாநிறமாக இருந்தாள்…இரண்டு பேரிடமும் அவன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தான்…
கோவத்துக்கும் அவசரத்துக்குமான காரணம் எனக்கு புரிந்தது…
நான் வண்டிக்கு பிரேக்கொடுத்து சாரிப்பா என்றேன்.. பராவாயில்லை சார் என்று சங்கோஜமாக வழிந்த படி சொன்னான்… சாரிக்காண காரணத்தை இங்கே இந்த பெண்கள் எதிரில் ஓப்பன் செய்ய வேண்டாம் என்ற கெஞ்சல் அவன் பார்வையில் இருந்தது….
பட் அந்த நீல சட்டையிடம் மீண்டும் மன்னிப்பு கேட்ட போது நிறைவாக இருந்தது… நான் அவனை பார்த்து பார்க்காமல் சென்று இருக்கலாம்..
அப்படி வண்டி பிரேக் அடித்து மன்னிப்பு கேட்க ஒரு காரணம் இருந்தது.
டிசம்பர் மாத மழையில் யாழினியை அழைக்க வேண்டும் என்று காரில் வேகமாக வந்த போது ஒரு பைக் குறுக்கில் வர ராமகிருஷ்ண மடம் எதிரில் இருக்கும் சாலை ஓர பள்ளத்தில் வண்டி சக்கரம் இறங்க சேற்றோடு பிளாட்பாரத்தில் நடந்தவர் மேல் பட்டு விட்டது.. அவர் என்னை பார்த்தார்…
எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது… அவர் இடத்தில் என்னை பொருத்தி பார்த்தேன்.. கோவத்தில் ங்கோத்தா கொம்மா என்று திட்டி இருப்பேன்.. சார் நான் வேணா வீட்டுல டிராப் செய்யட்டுமா என்றேன்..
ஆனால் அவர் திட்டவில்லை… போடா என்று கோவமாக கத்தி விட்டு சர சர என்று நடந்து சென்று விட்டார்… அவர் அசிங்கமாக திட்டி இருந்தாலும் நான் கோபப்பட்டு இருக்க மாடட்டேன் … ஆனால் ஒரு வாரத்துக்கு எனக்கு அந்த மனிதரின் முகம் நினைவில் இருந்து கொண்டே இருந்தது..
அதனால்தான் இந்த நீல சட்டை என்னை திட்டிய போது கூட நான் அமைதி காத்தேன்… என் மீதுதான் முழு தவறும்.
யாழினி கேட்டாள்…
அப்பா அந்த ரெண்டு அக்காங்க யாருப்பா..?
தெரியாது யாழினி..
அப்பா நீங்க சாரி கேட்டிங்கல்ல….. அந்த அங்கிள் பேர் என்னப்பா..?
நீலசட்டை என்றேன்.
ஜாக்கிசேகர்
24/03/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
boss viyatnamilla eppadi yazhini oru korvaya ponga
ReplyDeleteஇது மீள் பதிவா?
ReplyDelete