மவுண்ட் ரோட் பக்கம் போனால் பூம்பூகாரில் கைவினை பொருள் ஒன்று வாங்கி வர தோழி பணித்தார்.
பூம்பூகாருக்கு சென்று பொருள் வாங்கி விட்டேன்... பில் போடும் இடத்தில் வழக்கம் போல லேட் செய்தார்கள்.... அது மட்டுமல்ல... மூன்று பொருளுக்கு பில் போட்டு பணம் கொடுத்து இருந்தேன்..
ஆனால் இரண்டு பொருட்கள் தான் பேக்கிங் செய்யும் இடத்துக்கு வந்து தொலைந்தது..
ஏதோ தப்பு நடந்துடுச்சி.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று ஒரு சிப்பந்தி சொல்ல... எதிரில் மூன்று சேர் இருந்து...
கடைசி சேரில் ஒரு இளைஞன் உட்கார்ந்து இருந்தான்.. நடுவில் ஒரு சேர் காலியாக இருந்தது.. கடைசி சேரில் ஒரு பெண்மணி மிஷ்கின் போல கருப்பு கண்ணாடி அணிந்து இருந்தார்..
பணக்கார செழுமை body language இல் தெரிந்தது... வயது எப்படியும் 60 வயது இருக்கும் ஆனால் 45க்கு கொண்டு வர அதிக மேக்கப்பில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் செலவு செய்து.. தொடர்ந்து முயற்சித்து கொண்டு இருந்தார்.
நடுவில் இருக்கும் காலி சேரில் உட்கார போனேன்... அவ்வளவுதான் அவர் டிராமாவில் கற்புக்கரசி கண்ணகி பிளேவுக்கு கொடுக்கும் ரியாக்ஷனை கொடுத்தார்..
ரமேஷ் நீங்க இங்க உட்காருங்க என்று சொல்ல அந்த இளைஞன் எழுந்திருக்க ஆரம்பித்தான்... டிரைவர் போலும்...
முதலிலேயே உட்கார வைத்து இருக்க வேண்டும்... யாராவது வந்த உடன் எதற்கு எழுந்திருக்க வைக்க வேண்டும்?- ஏன் அவ்வளவு சீன்? என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
ஆனால் எழுந்த வாறே... சார் நீங்க உட்காருங்க ஒன்னும் பிரச்சனை இல்லை... என்று ரமேஷ் சொல்ல...
உனக்கு பிரச்சனை இல்லைப்பா எனக்கு இருக்கு... வாயசானவங்க பீல் பண்ணுறாங்க... நீயே உட்காரு என்று நின்று கொண்டேன்..
அவரை பார்த்தேன் சசிக்கலா ஜெ சமாதியில் கை அடித்து சத்தியம் செய்து முனறினாரே அப்படி முனற ஆரம்பித்தார்...
என் சட்டையில் தொங்க விட்டு இருந்த மிஷ்கின் கண்ணாடியை போட்டுக்கொண்டு பொருளை வாங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தேன்..
என் பின் பக்கம்..... பயங்கராமாக கோடை வெயிலையும் தாண்டி சுட ஆரபித்தது.
ஜாக்கிசேகர்.
13/03/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
0 comments:
Post a Comment