என் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்..




என் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்..
சென்னைக்கு வந்து 22 வருடங்கள் ஆகின்றது….
மீனம்பாக்கத்தை தாண்டி நங்கநல்லூர் சிக்னல் வரும் போது....வானத்தில் ஈஷிக்கொண்டு செல்லும் விமானஙகளை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல பார்த்து இருக்கின்றேன்…


விமானத்தில் சென்றவர் செல்லாதவர் என்று யாராக இருந்தாலும் அந்த பிரமாண்ட எஃகு பறவையின் பேரிரைச்சலை ஒரு கனமாவது திரும்பி பார்க்க வைத்து விடும்….
நாளை விடியலில் வியட்நாமுக்கு பயணம்… நிறைய யோசனைகள் , நிறைய விவாதங்கள் முடிவில் என் மனைவி வெற்றி பெற்றார்… அயர்லாந்து ஜெர்மன் பயணங்களின் போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதில் பேராசை அவளுக்கு… நான் தான் நிறைய யோசித்து இருக்குறேன்… கடன்கள் அதைனை அடைக்கலாம்… என்று யோசித்து இருக்கிறேன்…
நீ அந்த மாதிரி ஊருக்கு எல்லாம் வந்தா நீ எப்படியெல்லாம் ரசிச்சி எழுதுவே தெரியுமா? அதுக்குதான் உன்னை கூப்பிடுறேன் என்று நிறைய முறை சொல்லி இருக்கின்றாள்..
வலையுலகத்தில் மிக பிரபலமாக இருந்தா போது நிறைய நண்பர்கள் சிங்கபூர் மலேஷியாவுக்கு டிக்கெட் போட்டு அழைத்து செல்ல தயாராகவே இருந்தார்கள்.. ஏன் நண்பர் பாலஸ்ரீராம் கூட துபாய்க்கு வர சொல்லி பணித்தார்…. நான்தான் மறுதலித்தேன்… ஆனால் இந்த முறை வியட்நாமுக்கு செல்ல முடிவு எடுத்து விட்டேன்…
ஜாக்கிசினிமாசுக்கு சில எப்பிசோட்கள் தேத்தியது போலவும் ஆச்சி……
யாழினி பெங்களூக்கு மச்சான் வீட்டுக்கு அனுப்பி விட்டேன்… ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே யாழினி வெக்கேஷன் லீவினை என்ஜாய் செய்ய போகின்றார்..
நீ தானே பொன் வசந்தம் ஜீவா போலத்தான்… சமந்தா போல எட்டின்பார்க் எல்லாம் போக முடிந்தது இல்லை… ஏலகிரியும் ஊட்டியும் வாய்த்தன… அதனையே பார்க்க முடியாமல் இருக்கும் நபர்களுக்கு நான் எவ்வளவோ மேல் என்றே நினைப்பேன்…
இந்த முறை மனைவி சென்றதில் இருந்தே இதற்கான ஆயுத்த பணிகளை மேற்கொண்டார்… எனக்கும் இந்த நேரத்தில்இந்த பயணம் அவசியமாய் இருக்கின்றது…
இதே சென்னை ஏர்போர்ட்டிலும் பெங்களுர் ஏர்போர்ட்டிலும் 70 ரூபாய் கொடுத்து பார்வையாளர் மாடம் வரை சென்று சொந்தங்களையும் நண்பர்களையும் வழியனிப்பி வந்ததோடு சரி..
நீண்ட நெடிய கருப்பு காலுறை யுவதிகளை பார்ப்பதுதான் ஒரே சந்தோஷம்..
என் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்.. வியட்நாமில் ஒரு வாரம் . ஹானாய் நகரில் வாசம்.... தமிழ் நண்பர்கள் அங்கே இருப்பின் சந்திக்கலாம்…
யாரிடமும் சொல்லவில்லை.. விசா கிடைப்பதில் கொஞ்சம் அலைச்சல்… அதனால் விமான நிலையம் வந்து தெரிவிக்கிறேன்.
இமிக்ரியேஷன்.முடிஞ்சிடுத்தா? இரண்டு பிளைட்டுலயும் ஜன்னல் ஓர சீட்டுதான் புக் பண்ணி இருக்கேன்... எனறு என்னை விட வியட்நாமில் இருந்து கொண்டு, அலுவல் அசதியையும் மீறி... வாட்சப்பில் வழி நடத்தும் என்.மனைவிக்கு வந்தனங்கள்..
வியட்நாம் போகின்றேன் என்று நெருக்கமான நண்பர்களிடம் நேற்று சொன்ன போது…. மனைவியை பார்க்கமா இருக்க முடியலையா? என்று நக்கல் விட்டார்கள்..
..

அவர்களுக்கான பதில்…
ஆம்........
ஜாக்கிசேகர்
21/03/2017


=======



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner