ஒரு வருடத்துக்கு முன் மயிலை குளத்து பேருந்து நிலையத்தில் நடந்த விபத்துக்கு பிறகு இன்று சின்ன விபத்தில் சிக்கிக்கொண்டேன்…
ஆறுமாதத்துக்கு முன் நண்பர் செந்திலை மயிலை குளக்கரை பேருந்து நிலையத்தில் இரவு எட்டு மணிக்கு விட சென்றேன்….
ரோட்டில் சரியாக கவனித்து கிராஸ் செய்து நேராக பேருந்து நிறுத்தத்தில் அவரை இறக்கி விடும் முன் வேகமாக ஹீரோ ஹோண்டாவில் வந்த இருவர் எங்களை கவனிக்காமல் ஏய்ய்ய்ய்ய்ய் என்று கத்திக்கொண்டே எங்கள் மேல் நிறுத்திய வண்டியில் மோதினார்கள்…
நாங்கள் விழவில்லை… அவர்கள் விழுந்து விட்டார்கள்..
சட்டென அவர்களை தூக்கி விட்டோம் அடி ஏதாவது பட்டு இருக்கின்றதா? என்ற கேட்டேன் இல்லை என்றார்கள்… அவர்கள் இருவரும் அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு சாரி சொல்லி விட்டு பரபரப்பாய் சென்று விட்டார்கள்.
அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் மெல்ல என் முன் வந்தார்… சார் அதுக்குதான் வண்டியை அப்போசிட்ல விட்டு விட்டு உங்க பிரண்ட் ரோட்டை கிராஸ் செய்து இருக்கனும் என்றார்..
நான் ரொம்ப டென்ஷனில் இருந்தேன்….
யோவ்… என் மேல மோதின அந்த ஆளு காலு உடைஞ்சி ரத்தமும் சதையுமா கிடந்தாலும் அப்படியே அள்ளி எடுத்துக்கிட்டு ராயபேட்டை ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போய் இருப்பேன்… நீ வந்து இருப்பியா-?? ங்கோத்த விழுந்துகிடந்தவனை தூக்கி விட வராம இப்ப வக்கனை மயிறா கேள்வி பீப் கேக்க வந்துட்ட என்று ஓத்தம் பட்டு விட… அந்த ஆள் கட் ஷாட்டில் காணாமல் போனான்.
இன்று காலை
மனைவியை பல்லாவரத்தில் டிராப் செய்து விட்டு ஜெயா டிவி ஆபிஸ் அருகே இருக்கும் ஷெல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அடையாறு தரை பாலத்தில் இறங்கி வெஸ்ட் சைதாப்பேட்டைக்கு தரை பாலத்தில் இருந்து வளையும் முன் எனக்கு முன்னே சென்ற ஆட்டோவை அனுப்பி விட்டு எதாவது கிரகம் வேகமாக வரப்போவுது என்று நினைத்து வண்டியை நிறுத்தினேன்.. நிறுத்திய வண்டியில் ஏய்ய்ய்ய்ய் என்று கத்தியபடி ஒரு கிரகம் டொமல் என்று வந்து வேகமாக ,இடித்தது. வண்டியோடு தரையில் பேலன்ஸ் இல்லாமல் விழுந்தேன்.. ரெட் மீ நோட் போர் எனக்கு முன் தரையில் ஸ்விம்ங் செய்தது… இடது கனுக் காலில் உருட்டுக்கட்டையால் தாக்கிய வலி…
கையில் சிராய்ப்பு…
டேங்க் பில் பண்ணி இருந்த காரணத்தால் பெட்ரோல் தரையில் சிந்திக்கொண்டு இருந்தது….
கூலிங் கிளாசோடு விழுந்து அதனோடே எழுந்த காரணத்தால் யார் எப்படி பார்க்கின்றார்கள் என்று நிதானமாக பார்க்க முடிந்தது…. பெரிய அடி படவில்லை என்றதும் மோதியவர் எஸ் ஆக பார்த்தார்.. யோவ்… கால்ல அடி.. வண்டி முன்னாடி பக்கம் முறுக்கிக்கிச்சி… வா போலிஸ் ஸ்டேஷன் போலாம்ன்னு சொன்னதும்.
சார் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.. நான் எவ்வளவோ டிரை செய்தேன்.. ஆனால் வண்டியை நிறுத்த முடியவில்லை என்றார்…
என் இடத்துல நீ நின்னு இதே போல தண்ணி லாரிகாரன் வந்து இருந்து இதே போல என்னால வண்டியை நிறுத்த முடியலைன்னு அவன் சொல்வான் ஆனா நீ அவன் சொல்றதை கேட்கத்தான் உயிரோடு இருக்க மாட்டே என்று சொன்னதும் அவன் கண்ணில் மரண பயம் வந்து போனது…
ரொம்பவும் கெஞ்சி கேட்டதால் அவனை அனுப்பி விட்டு மெக்கானிக்கிடம் வண்டி விட்டு கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஷேக்ஆப்சர்லாம் சரி பண்ணி… கொஞ்சம் பெண்ட் இருக்கு பிரியா இருக்கும் போது வண்டியை விடுங்க என்று மெக்கானிக் சொன்னார்…
வண்டியை ஓட்டும் கண்டிஷனுக்கு சரி செய்து
ஹோலி கொண்டாடிய யாழினியை பிக்கப் செய்து டே கேரில் விட்டு விட்டு வண்டியில் செல்ல…
கணுக்காலில் இருக்கும் வலியை அனுபவித்துக்கொண்டே
மயிலை சிவசாமி காலாலயா பள்ளியை கிராஸ் செய்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் அவனோடு நடந்து வந்த பையனிடம் சொன்னனாள்…
நேத்து நைட்டு ஒங்கூட சாட் செய்யும் போது அப்பா பார்த்துட்டு செம டென்ஷன் ஆயிட்டாரு…
அப்புறம் ?
சாட் ஹிஸ்ட்ரியை படிச்சாரு…
அப்புறம் என்பதுதான் காதில் விழுந்தது.. அதற்கு மேல் காதில் விழவில்லை..
டென்ஷன் ஆகும் அளவுக்கு அந்த சாட்டில் என்ன இருந்து இருக்கும் என்று மனம் யோசிக்க கால் வலி.. கை வலி சிராய்பில் இருந்து கொஞ்சம் விடுதலை ஆனேன்.
ஜாக்கிசேகர்.
13/03/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Kattu onnum podalaya jacky sir
ReplyDeleteசாட் ஹிஸ்டரி என்னாச்சுன்னு ஒரு பதை பதைப்பு... இரணகளத்துலையும் கிளுகிளுப்புன்னா இதான்யா...
ReplyDelete