வியட்நாம் பயண குறிப்புகள் 2
பயம்…. தெரியாத தேசம் புரியாத மொழி… முதல் பயணத்திலேயே பேகை பறிகொடுத்த அபாக்கியவான் நானாகத்தான் இருப்பேன்….
அடியேய் என் பேக் என் கனவு எல்லாம் எவனோ லவுட்டிக்கிட்டு போயிட்டான் நான் பதட்டமா சொல்லிக்கிட்டு இருக்கேன்…இவளுங்க என்னடான்னா இளிச்சிக்கிட்டு வணக்கம் வச்சிக்கிட்டு இருக்காளுங்க…
கோவம் தலைகேறியது,…. ஆனால் கோபப்படுவதால் எந்த பலனும் இல்லை என்ன செய்யலாம்-
அமைதியாய் இருக்கலாம்…. காரணம் காலையில்தான் காற்று வெளியிடை பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசும் போது 200 கோடி ரூபாய் போர் விமானத்தை ஒற்றை விமானி ஓட்டிக்கொண்டு போகும் போது ஏதாவது பிரச்சனை என்றால் பதட்டபடாமல் அதனை அமைதியாக அனுகுவதே போர் விமானியின் பாலபாடம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது…
.
200 கோடிக்கே அந்த நிலமைன்னா நாம எல்லாம் எம்மாத்திரம்..??
என்னவாகி விடப்போகின்றது.. சரி அதை அனுபவமாக பார்ப்போர் ரசிப்போம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்…
திரும்புவும் 363,37,38, கம்பார்ட்மென்டகைளை திறந்து பார்த்தேன் காலியாக இருந்தாலும் ஒரு நப்பாசையில் கைகளால் தூழாவி பார்த்தேன்…
இல்லை… எங்கே… தவறு,.,? எந்த இடத்தில் பிசகு…???
விமானத்தின் வால் பகுதி பார்த்து விட்டு வந்த அந்த கணத்தில்தான் ஏதோ தவறு நடந்து இருக்க வேண்டும் என்று மனது திடமாக நம்பியது..
காரணம் எனக்கு ஐந்து வரிசை முன்னேயும் சரி பின்னயும் சரி காலி இருக்கைகள்… ரைட்..
இந்த இடம்தான் பிரச்சனைக்கு காரணமாக இருக்க வேண்டும்… ஒருவேளை சீட் மாறி உட்கார்ந்து பேகை தேடிக்கொண்டு இருந்தால் என்று எண்ணம் தோன்ற…
டிக்கெட் எடுத்து பார்த்தேன்..39A என்று இருந்தது…
ங்கோத்தா ..39Aல பேகை வச்சிட்டு 36 ல போய் குந்திக்கினு…
என் பையை காணோம் என் பையைகாணோம் என்று குதிச்சா கிடைச்சிடுமா?
அவசரத்துல நடுவானத்துல சோறு போட்ட தேவதைகளை வேறு சப்பை அது இதுன்னு திட்டி தொலைச்சிட்டேனே..?
பேகோடு வரும் என்னை பார்தததும் வயிற்படியில் வணக்கம் வைத்துக்கொண்டு இருக்கும் சப்பை தேவதைகள் இன்னும் கோல்கேட் மற்றும் குளோசப் புன்னைகைகளை உதட்டில் எடுத்து வந்தார்கள் காரணம் காலையிலேயே ஒரு ஆர்வக்கோளாறு ஏழரையோடு மல்லுக்கட்ட வேண்டுமா? என்ற டரியல் அவர்கள் முகத்தில் நான் பேக் காணோம் என்று சொன்ன போது இருந்தது.
என்னிடத்தில் பேகை கண்டவுடன் இன்னுமும் சந்தோஷத்தை முகத்தில் கூட்டிக்கொண்டார்கள்…
நான் நன்றி தெரிவித்தேன் அத்துடன் வருத்தம் தெரிவித்தேன்… எது சொன்னாலும் அதிமுக அடிமை அமைச்சர்கள் அம்மாவின் ஆணைக்கு இணங்க மறக்காமல் சொல்வது போல… வெல்கம் டூ பேங்காங் என்றார்கள்..
முதல் முறையாக சுவர்ணபூமி விமான நிலையத்தில் கால் வைத்தேன்….இதே பூமி பந்தில் முதல் முறையாக ஒரு அன்னிய மண்ணில் கால் எடுத்து வைதேன் அது பரவசமாகவே இருந்தது…
சுவர்ணபூமி விமான நிலையத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
ஆத்து பக்கம் ஒரு ஏழு ஏக்கர் நிலம் இருக்கு… அதுல நல்ல வருமாணம் என்று சொன்னாலே மனக்கண்ணணில் ஏக்கர் கணக்கை போட்டோ பார்ப்போம்…
அப்படியே எட்டாயிரம் ஏக்கர் நிலம் என்றால் வாய் பிளப்போம் இல்லையா? அதேதான்… எட்டாயிரம் ஏக்கர் நிலத்தில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது.. பாங்காங் விமான நிலையம்.
நம்ம ஊர்ல எப்படி ஸ்ரீ பெரும்பத்தூர் ஏர்போர்ட் வர திமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுத்து எதிர்கட்சிகளால் கிடப்பில் போட்டார்களோ.. அது போலத்தான் ஸ்வர்ணபூமி விமான நிலையத்துக்கும் நடந்தது..
1973 இல் பாங்காக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி 8000 ஏக்க்கர் நிலம் வாங்கி போட்டு கிடப்பில் போட்டு 2006 ஆம் ஆண்டுததான் விமான நிலையத்தை திறந்து வைத்தார்கள்…
மிக பிரமாண்டம்.. என்னை பொருத்தவரை… நீ பிரான்ஸ் போய் இருக்கியா? ஆஸ்திரேலியா ஏர்போர்ட் பார்த்து இருக்கியா? என்று பில்டப் கொடுக்க கூடாது என்ன??
ரைட் அங்கே இருந்து வெளியே வந்தால்… அத்தனை பேரையும் அழைத்து செல்ல பேருந்து வந்தது… ஏரோப்பிளேன் நின்ற இடத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் பயண தூரத்தில்…. ஏர்போர்ட் அரைவல் பாயிண்ட வைத்து இருந்தார்கள்… ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்தான் கனெக்ட்டிங் பிளைட் என்பதால்…
ரொம்ப பொறுமையாக நடந்தோம்.. ரொம்ப தூரம் என்பதால் நடந்து செல்லும் இடத்திலே சம தளத்தில் எக்சலேட்டர் வைத்து இருந்தார்கள். நிறைய வெளிநாட்டவர்கள்….
டூரிசம்தான் முக்கிய தொழில் …. பெண்கள் ரொம்ப சல்லிசாக கிடைப்பார்கள்.. அதனாலே சுற்றுலா கூட்டம் அதிகம்.….அந்த நகரமே டூரிசத்தை நம்பி இருப்பது தெரிந்தது..பாங்காங் போயிட்டு வந்தேன் என்றாலே.. ஆயில் சர்விஸ் நல்ல படியா முடிஞ்சிதா? என்று நக்கல் விடுவார்கள்..
கொஞ்சம் நேரம் முகம் கழுவி ரெஸ்ட் எடுத்தேன்.. ஒன்றரை மணி நேரம்தான் தூங்கி இருப்பேன்…. அடுத்து கேட் நம்பர் ஆறாம் என்னை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்…
வியட்நாமுக்கு செல்ல நிறைய வெளிநாட்டவர்கள். காத்திருந்தார்கள்.. இதுவும் தாய் ஏர்லைன்ஸ்தான்… பிளைட் நம்பர்….
TG560 seat no 39A வாழ்வில் 39 ஏ சீட்டை என்னால் மறக்க முடியாது…
வால் பகுதியில் இருப்பவர்களை முதலில் அழைத்தார்கள்… அடுத்து நடுப்பகுதி… பர்ஸ்ட் கிளாசுக்கு தனி வழியே இருந்தது.. அவர்களை ராஜ உபச்சாரம் செய்து உள்ளே அனுப்பிய பிறகே எக்கானமி அழைக்கப்பட்டார்கள்..
காலையில் வேளைக்கு செல்லும் 29சீ பேருந்து போல விமானம் பிதுங்கி வழிந்தது.., என் சீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர்.. பாங்காக் போஸ்ட் படித்துக்கொண்டு இருந்தார்.
ஸ்வர்ணபூமியில் ரன்வேயில் டேக் ஆப்புக்காக வெயிட் செய்தது… அவ்வளவு பெரிய இறக்கை…… விமானத்துக்கு சிக்னல் கொடுக்கவும்… விமானம் வேகமாக ஓடி புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலேழும்பியது.
பகலில் புள்ளியாக பாங்காங் நகரம் தெரிய சட்டென மேக கூட்டத்தில் விமானம் மூர்கமான காமூகன் போல உள்ளே நுழைந்தது…
வெறியில் தீர்வை நோக்கி செல்லும் போது உடைகள் கிழித்து ஜாக்கெட் ஹுக்குகள் பறக்குமே.. அப்படியாக வெறிகொண்டு மேக கூட்டத்தின் ஊடே செங்குத்தாக முன்னேறி சென்று 45 ஆயிரம் அடிக்கும் சென்று காமம் முடிந்த அமைதியான உடலை போன்று ஒன்னும் தெரியாத பாப்பா போல அசால்டாக பறக்க ஆரம்பித்தது..
ஊஊஊஊஊஊர்ம் என்ற ஓசை மட்டும் கேட்க ஆரபித்தது.. விமான பணிபெண்கள் வந்து என்ன வேண்டும் என்று கேட்டு கொடுக்க ஆரம்பித்தார்கள்…
ஒரு பாஸ்ட் புட்டை கையில் திணித்தார்கள் ஒன்றை கண்டிப்பாக சொல்ல வேண்டும்… எல்லாம் உணவும் அவ்வளவு ஆவி பறக்க கொடுப்பதற்காகவே பாராட்ட வேண்டும்…
. காபி வேண்டுமா என்றான் நானும் ஆர்வத்துடன் தலையாட்டினேன்..
பிளாக் காபி சக்கரை இல்லாமல்.. அதையும் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த நபர் ரசித்து குடித்தார்… எனனால் வாயில் வைக்க முடியவில்லை...
விமானத்தின் வேகம் மணிக்கு 745 கிலோ மீட்டர் வேகம்… 200 சிசி பைக்ல நாம போனாலே…. நம்ம கண்ணுல தண்ணி சைடுல பறக்கும்.. 745 கிலோ மீட்டர் வேகம்னா..? அப்ப அந்த இறக்கையில உட்கார்ந்த எப்படி இருக்கும்ன்னு யோசிச்சி பார்த்தேன்…
பரலோகத்துக்கு காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் செல்ல வேண்டியதுதான்….
மூன்று மணி நேர பயணம்… வியட்நாம் வந்து விட்டது என்றும் பெல்ட்டை கட்டிக்கொள்ள வேண்டும் என்று பணித்தார்கள்..
ஏர்போர்ட் பெரிய அளவில் இல்லையேன்றாலும் ஏழ்மையான தேசத்தின் ஏர்போர்ட் என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்து போனது.
வியட்நாமியர்களை எனக்கு பிடிக்கும் காரணம் அது பற்றி உணர்ச்சிகரமாக வேறு ஒரு பதிவில் எழுதுவோம்.
வடமலை தனசேகரன் என்று கடித்து துப்பிய ஆங்கிலத்தில் அழைத்தார்கள்…
ஆன் அரைவல் வீசா என்பதால்… பணம் கட்டி முதல் முறையாக வீசா சீல் எனது மூன்றாவது பாஸ்போர்ட்டில் விழுந்தது… மகிழ்ச்சி..
மிலிட்ரி ஆட்கள் இவர்தானா என்று செக் செய்து வெளியே அனுப்பினார்கள். வெளியே வந்தேன்
லாக்கேஷ் பேக் கன்வேயரில் சனிஸ்வரபகவானை ஒன்பது சுத்து கருமமே கண்ணாக சுற்றுவது போல சுற்றிக்கொண்டு இருந்தது…
லாக்கேஜை எடுத்து பார்த்தேன்… வியட்நாமிலும் ஒரு அப்பு பகவான் வச்சி இருந்தான்…. அது என்னன்னா?
எனது லக்கேஜ் பூட்டு உடைக்கபட்டு இருந்தது.,…
ஆனாலும் அது பற்றி யோசித்தால் நிகழ்காலம் டென்ஷன் ஆகும் என்பதால் ரூமில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி ஏற்கனவே டாக்சி மனைவி புக் பண்ணி வைத்து இருந்தார் வடமலை தனசேகரன் என்ற போர்ட்டை தாங்கி பிடித்து இருந்த டாக்சி வாலாவை கண்டு பிடித்தேன்...
முகமன் கூறி வரவேற்றார்..
முதல் முறையாக அன்னிய மண்ணில் ஏர்போர்ட்டை விட்டு தாண்டிய டெர்மினல் டாம் ஹேங்ஸ் போல மனது மகிழ்ச்சியில் திளைத்து...
பேக்ல இருந்து என்ன எடுத்து இருப்பானுங்க..? அதை அப்பறம் பார்த்துக்கலாம்..
தொடரும்.
ஜாக்கிசேகர்
23/03/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
என்ன எல்லாம் களவு போய் இருக்கும்)) ஆவலுடன் அடுத்த பகுதி காண!
ReplyDeleteஅருமை ஜாக்
ReplyDeleteதொடர்க
Jackie ....Enjoyed your post. Ultimate explanation of your bag loss and seat change.
ReplyDelete