வியட்நாம் பயணகுறிப்புகள். 4 | வியட்நாமில் பயணம் மற்றும் ஓட்டல் வரை.

#வியட்நாம் பயணகுறிப்புகள். 4 வடமலை தனசேகரன் என்று போர்ட் வைத்து இருந்த டாக்சி டிரைவரை பார்த்தேன்… அவரை பார்த்து கை அசைத்தேன்… ஒரு படத்தில் குடித்து விட்டு பார்த்தீபன் பாதி அளவுக்கு குனித்து ஓட்டல் வாசலில் நிற்பவரிடம் டிப்ஸ் கேட்பாரே… அதே அளவுக்கு குனிந்து என்னை வரவேற்றார்.. பெட்டிகளை காரில் ஏற்றினார்… அது இன்னோவா கார்.
டிரைவர் காரில் பெட்டிகளை ஏற்றினார். கதவைதிறந்து விட்டார்… நான் வீடியோ போட்டோ எடுக்க டிரைவர்க்கு பக்கத்து சீட்டில் உட்கார சென்றேன்… மொக்கை வாங்கினேன். ஆம்…. அங்கே டிரைவர் சீட் இருந்தது.. இங்கே லெப்ட் ஹேன்ட் டிரைவிங்… அப்புறம் ஓடி வந்து நம்ம ஊர் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன்..ஹானாய் நகரத்தில் இருக்கும் மூவன் பிக் ஓட்டலில் ரூம் டிரைவரை அனுப்பியதே ஓட்டல் நிர்வாகம்.. அது போல வீட்டம்மா ஏற்பாடு செய்து இருந்தார். ஏன் பாஷை தெரியாத ஊரில் கொழந்தை வழி தெரியாமல் தவிச்சிடுச்சின்னா.? காரணம் மருந்துக்கு கூட யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.. உதாரணத்துக்கு லேதர் பேக் இதுவா என்றால் லெதர் என்றால் தெரியவில்லை… எண்கள் தெரியவில்லை… முக்கியமாக ஆங்கிலம் தெரிந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று விடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் தமிழ்ர்களுக்கு வியட்நாம் திக்கு தெரியாத காட்டில் என்றால் மிகையில்லை. Noi boi ஏர்போர்ட்டில் இருந்து ஹானாய் மூவன் பிக் ஓட்டலுக்கு வர 30 கிலோ மீட்டர்கள்… முதல் முறையான அந்நிய மண்ணில் எனது மூன்றாவது பாஸ்போர்ட் கன்னி கழிந்து காரில் பயணம் அந்த நிமிடம் வரை என்னால் நம்ம முடியவில்லை.. சில விஷயங்கள் எதிர்பாராமல் நடக்கும் போது அதன் சுவையும் ரசனையும் தனி,… உனக்கானவள் அவள் / அவன் எப்போது வேண்டுமானாலும் துச்சாதனாக மாறலாம்… எந்த கேள்வி மயிறும் இல்ல.. ஆனாலும்..லிப்ட்டில் செல்லும் போது.. ஆமாம் நெத்தியில என்ன? கண்ணு ஒரத்துல என்ன என்று கேட்டு சரி செய்வது போல வந்து கிடைக்கும் முத்தம் ஆயிரம் கூடலுக்கு சமம் அல்லவா? அந்த முத்ததிற்கு ஈடு இனை இல்லை இல்லையா? அது போன்ற சந்தோஷத்தை இந்த பயண அனுபவம் கிடைத்தது… பொதுவாக இந்த பயணத்தை நான் எப்போது வேண்டுமானாலும் செய்து இருக்க முடியும்.. எனக்கு தோன்றும் போது செல்ல வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்… மகிழ்ச்சி.. சாலை இப்போதுதான் போட்டு இருக்கின்றார்கள்.. அது மட்டுமல்ல… ஈச்சை மரங்களை அழுகிற்காக ரோட்டுக்கு நடுவில் மீடியனில் நட்டு வைத்து இருக்கின்றார்கள்… ஊரோட கிளைமேட் எப்படி இருக்கின்றது என்றால் நம்ம ஊர் பெங்களுர் போல.. ஆனால் இங்கே கூட்ட நெரிசல் இல்லை… அவ்வளவுதான்… அதே போல பழமையும் புதுமையும் கலந்த ஒரு நாடு வியட்நாம் என்றால் அது மிகையில்லை.. வழியெங்கும் கட்டிடங்களும் அதற்கு பக்கத்திலேயே வயற்காடுகளையும் பார்க்கும் போதே… சந்தோஷமாக இருக்கின்றது… நம்ம ஊராக இருந்து இருந்தால்… வட்ட செயலர் வண்டு முருகன்.. அந்த வயற்காட்டை மிரட்டி ஆட்டைய போட்டு… ஏர்போர்ட் போற வழி சார்… மெயின் ரோட்டுலே இருக்கு என்று யாரிடமாவது விற்று ஆட்டையை போட்டு… குடும்பத்தோடு குற்றாலத்தில் குளிக்கும் போட்டோவை பேஸ்புக்கில் போட்டு இருப்பார். இங்க அந்த பப்பு எல்லாம் வேகாது… கம்யூனச ஆட்சி.. பருப்பு எடுத்து விடுவார்கள்… காரணம் போராடி பெற்ற சுதந்தி மண்… இது பெருமை மிகு தேசம்.. இந்திய சுந்திர போராட்டத்தில் தமிழர்கள் பங்கு என்ன என்று பார்த்தால் வெகு குறைவு… காரணம் இங்கே அகிம்சை போதிக்கப்பட்டது.. அஹிம்சை அமைதியாக இருக்க வழி வகுத்தது…இரண்டு இட்லியும் கெட்டி சட்னியும் சாப்பிட்டு விட்டு ஆலமரத்தடியில் கதை ஏற்றுக்கொள்ள வைத்தது...
கொடியை கீழே விழும் வரை அதனை பிடித்து இருந்த கொடி காத்த குமரனை நினைவுகூர்கிறோம்.. ஆனால் எதிர்த்து தாக்கி இருக்கவேண்டும்… வலி என்றால் என்ன என்று வெள்ளையானுக்கு புரியவைத்து இருக்க வேண்டும்… அஹிம்சை அடிமையாக இருப்பதை உக்குவிப்பின் ஒரு வழி முறை என்பதை நாம் இன்று உணர்ந்து இருப்போம். அதனால்தான் பொது பிரச்சனைகளில் நாம் ஒன்று கூடுவது இல்லை… யார் வீட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்பதாகவே நம் வாழ்க்கை முறை இருந்து இருக்கின்றது… இந்தி எதிர்ப்பு, ஈழ விவகாரம், முல்லை பெரியாறு, ஜல்லிக்கட்டு தவிர்த்து இந்த 50 ஆண்டுகளில் மக்கள் ஒன்று கூடிய போரட்டங்கள் இவ்வளவுதானா? இதுதான் ஹம்சை நமக்கு போதித்தது… ஆனால் பரப்பளவில் மக்கள் தொகையில் ரொம்பவும் கம்மியான வியட்நாம் உலகில் வல்லரசு என்று மார் தட்டிக்கொள்ளும் அமேரிக்காவையே காலில் விழ வைத்து மண்டியிட வைத்த தேசம் இது… அதுவும் சும்மா இல்லை.. ஐயா சாமி… நாங்க போரை நிறுத்தறோம் … எங்க ஆட்களை விட்டுங்க என்று பொதுவெளியில் அலற வைத்து அமெரிக்காவை மண்டியிட வைத்த தேசம் இது… ஆனானபட்ட அமேரிக்கைவை அலைய விட்ட தேசம் என்பதும் என் முதல் பயணமே அந்த நாட்டில் எனும் போது பயண மகிழ்ச்சி அதிகரித்து… சில மேம்பாலங்களை கடந்து அரை மணி நேரத்தில் ஹானாய்க்கு வந்தடைந்தது கார்.. ரோட்டில் பழமையும் புதுமையும் கொண்ட கட்டிங்கள்… சில இடங்களில் சௌக்கார் பேட்டையை நினைவு கொள்ள வைக்கும் நெருக்கமான தெருக்கள்…. ஒரு சில இடங்களில் பாண்டிச்சேரியில் டிரவல் செய்யும் உணர்வு…. நம்ம ஊர் ஒரு ரூபாய் என்பது இங்கே 350 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள்… அந்த அளவுக்கு பண மதிப்பு இங்கே குறைவு அப்படி என்றால் நம்ம ஊர் பணத்துக்கே இப்படி என்றால் அப்போது டாலர் மற்றும் யூரோ மதிப்புள்ள பணத்தினை எடுத்து வந்தால்… வியட்நாம் சொர்கம் அல்லவா?- அதனாலே நிறைய பாரினர்கள் வியட்நாமியருக்கு இணையாக வலம் வருகின்றார்கள். கார் டார்டயர்ஸ் லேக் வழியாக ஓட்டல் மூவன் பிக்கை வந்தடைந்தது.. சாலம் போட்டு வண்டியில் இருந்து ஓட்டுனர் இறக்கி விட்டார்.. ஓட்டல் ஊழியர்கள் ரராஜ மரியாதையுடன் நடத்தினார்கள் நமக்குதான் கூச்சமாக இருந்தது… நான் 100 ரூபாய் நம் ஊர் பணத்தை கொடுத்தேன்.. டிரைவருக்கு செம மகிழ்ச்சி. ரிசப்ஷனில் பாஸ்போர்ட் காப்பி வாங்கி ஜெராக்ஸ் எடுத்து , ஸ்வைப்பிங் கார்ட் கொடுத்தார்கள்.. ரூம் சாவி எல்லாம் மலை ஏறி விட்டது. மனைவி அலுவலகம் சென்று இருந்தார்… மூவன் பிக்கில் 302 ஆம் அறைக்கு பணியாளர்கள் அழைத்தார்கள்… பார்க்கும் அத்தனை பேரும் காலை வணக்கம் வைத்தார்கள்… இன் முகத்துடன் வரவேற்றார்கள்.. ரூமுக்கு போனதும் பேட்டியை திறந்து பார்த்தேன் எதுவும் களவு போகவில்லை.. சுடுதண்ணீரில் ஒரு குளியல் போட்டேன்… மதிய சாப்பாட்டுக்கு அலுவலகத்தில் இருந்து மனைவி வந்தார்.. கண்டேன் மனநிலையில் இருவரும் இருந்தோம்... சில மகிழ்வான கணங்களை விவரிக்க முடியாது... நான் காதலித்த போது வள்ளியம்மாள் கல்லூரயில் அவர் படித்துக்கொண்டு இருந்தார்... அப்போது எல்லோரும் புடவை கட்டிக்கொண்டு போக வேண்டும்.,.. தகவல் பறிமாற்றம் அவ்வளவாக இருக்காது... ஆனாலும் எப்போதவது பார்க்க சென்று கல்லூரி வாசலில் காத்து இருக்கும் போது... இந்த மொகரையை பார்த்ததும் அவள் முகத்திதில் ஒரு சந்தோஷம் வரும் பாருங்கள்... அப்படியான சந்தோஷத்தை மீண்டும் அன்று கண்டேன்..
ஒவ்வோரு முறை பாரின் போகும் போது நான் மட்டும் போறப்ப எனக்கு எவ்வளவு கஷ்மா இருக்கும் தெரியுமா? என்று கலங்கிய கண்களோடு சொன்னார்... நான்தான் வந்துட்டேனே என்று அவள் விரல் பிடித்துக்கொண்டேன். அரைமணி நேரத்தில் அலுவலகத்துக்கு கிளம்ப அவசரமாக சாப்பிட்டார்... நான் மதியு உணவுடன் ஹானாய் பீர் இரண்டை வயிற்றில் சரித்துக்கொண்டேன்... அசதியில் இந்த நகரத்தை பற்றியும் இதன் வரலாற்று பற்றியும் எப்படி எழுதுவது என்று யோசித்த படி படுக்கையில் சரிந்தேன்.. தொடரும்.. ஹலோ பாஸ் அதுக்குள்ள தொடரும் போட்ட்டிங்க… முதல் விமானபயணம் பற்றிய அனுபவத்தைபற்றி சொல்லவேயில்லை..?? பெண் வாசனை என்றால் என்ன என்று தெரியாமல் அவ்வப்போது செக்ஸ் புத்தகம் மற்றும் போர்ன் வீடியோ பார்த்து நினைத்து பார்த்து அவ்வப்போது கைரேகை அழித்தவன்…. அம்மா அப்பா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து முதலிரவு அறைக்கு சென்றவன் மறுநாள் வரும் போது கலவையான மனநிலையோடு வருவானே….? அப்படி இருந்தது.. சார் தெளிவா சொல்லுங்க.. ஓகே லெட் மீ டிரை. இதுக்கா இப்படி என்ற மன நிலையும்.. முதல் முறையாக கை கொண்ட ஒரு சில விஷயங்கள் மனதில் ஒரு சில்லிப்பை கொடுக்குமே அப்படியான மனநிலைதான்… என்னுடைய முதல் புவீயீர்ப்பு திசைக்கு எதிரான முதல் விமான பயணம்... உண்மையிலேயே தொடரும். ஜாக்கிசேகர்‘ 27/03/2017


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

 1. எழுதுங்கள்! சுவைழாக உள்ளது!

  ReplyDelete
 2. //டிரைவர்க்கு பக்கத்து சீட்டில் உட்கார சென்றேன்… மொக்கை வாங்கினேன்.
  ஆம்…. அங்கே டிரைவர் சீட் இருந்தது.. இங்கே லெப்ட் ஹேன்ட் டிரைவிங்…///

  ஊருக்கு வரும் போது ஏர்போர்ட்டில் டாக்ஸி பிடிப்போம், அப்ப இங்க உள்ள ஞாபகத்துல டிரைவர் சீட்டுக்கு போயி ஒரு பல்பு வாங்கி திரும்ப நாம் இந்தியாவுக்கு வந்திருக்கோம்னு கன்பார்ம் ஆகி காரை இன்னோருக்க அரை சுத்து சுத்தி சீட்ல உட்காருவோம். அதை விடுங்க நீங்க வெளிநாட்டுல வாங்குன் பல்பை ஒவ்வொரு வருசமும் நாங்க இந்திய ஏர்போர்ட்களில் வாங்குகிறோம்..

  ReplyDelete
 3. நல்லா எழுதி இருக்கீங்க. சென்னை உங்களை திரும்பவும் வரவேற்கிறது.
  பயணக்கட்டுரை 1,2,4,5.
  3 எங்கே??

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner