Srimanthudu-2015 Movie Review | ஸ்ரீமந்துடு என்கிற செல்வந்தன் திரைவிமர்சனம்.



 ஸ்ரீமந்துடு.

மகேஷ்பாபுவுக்கு  கடந்த கால படங்கள்   மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று  சொல்ல முடியாவிட்டாலும்,   சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை..  கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும்  அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று  மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார்.


 வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை இனி விரிவாய் பார்ப்போம்.

சரி ஸ்ரீமந்துடு என்றால் என்ன அர்த்தம்..??  பணக்காரர் என்று அர்த்தம்.

அதற்கு முன் ஸ்ரீமந்துடு திரைப்படத்தின் கதை என்ன என்று பார்த்து விடலாம்..

========
பணக்கார ஜெகபதிபாபுவின் பையன் மகேஷ் பாபு.. அப்பாவின் தொழிலில்  ஆர்வம் இல்லை…. கண்டதும் ஸ்ருதி  மேல் காதல்…   தான் ஒரு பணக்கார வீட்டு பையன் என்பதை ஸ்ருதியிடம் மறைக்கின்றார்…  ஸ்ருதிக்கு உண்மை தெரியும் போது, தான் கிராமத்து பெண் என்றும்  நீ பணக்காரன்.. அதை விட  என் மூதாதையர்கள்   வாழ்ந்த கிராமத்து வேருக்கு என்று மதிப்பு இருக்கு… உனக்கு உன் பூர்வீகம் என்வென்று தெரியாது.. பணக்காரன் என்பதால் அது பற்றிய கவலையும்  உனக்குஇல்லை  அதனால் நமக்குள் காதல் சரிவாராது என்று சொல்லி  விடுகின்றார்… தன் பூர்வீக  கிராமம்  நோக்கி மகேஷ்பாபு செல்கின்றார்..அங்கே பல பிரச்சனைகள்….  மகேஷ் பாபுவின் காதல் கை கூடியதா??   கிராமத்து பிரச்சனையை தீர்த்து வைத்தாரா ? என்பதே ஸ்ரீமந்துடு படத்தின் கதை.
==
அத்தடு,அதிதி திரைப்பட வரிசையில் மகேஷ் பாபுவுக்கு ஒரு ஸ்டைலான  வெற்றித்திரைப்படம் ஸ்ரீமந்துடு.

மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்...


மேலும் விரிவாய் வீடியோ விமர்சனத்தில்..





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner