chennai day | Madras day | சென்னை தினம் | மெட்ராஸ்டே 22/08/2015






என்னை ஏமாற்றிய சென்னை,



1994 இல் என்னை செக்யூரிட்டி டிரஸ்சில் அழகு பார்த்த சென்னை,

ஒன்டிக்குடித்தனத்தை அறிமுகபடுத்திய சென்னை,

பீடாகடையில் வேலைபார்க்கவைத்த சென்னை,

பிளாக்கில் டிக்கெட் விற்று வயிற்றை கழுவ்வைத்த சென்னை,

மெரினா பீச்சில் பிளாட்பாரத்தில் அடைக்கலம் கொடுத்த சென்னை,

அடுத்தவேலை சோற்றை நினைத்து அதிகம் கவலை கொள்ளவைத்த சென்னை,

ஓட்டலில் வேலை பார்க்க வைத்த சென்னை,

சோற்றின் அருமை உணர்த்திய சென்னை,

ஊதாரிதனத்தை கட்டுபத்திய சென்னை,

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அனுதினமும் பயமுறுத்தி பார்த்த சென்னை,

என்னை கலங்க வைத்த சென்னை,

என் தன்னம்பிக்கையை குலைக்க சதி செய்த சென்னை....

குறைந்த செலவில் கெயிட்டியிலும் ஜோதியிலும் காமத்துக்கு மருந்து தடவி விட்ட சென்னை...

பிரா தெரிய சல்லையாக உடை உடுத்தி சந்தியம் தியேட்டர் , மேலோடி தியேட்டர் பெண்களை வாய் பிளந்து பார்க்க வைத்த சென்னை….

பிரசிடென்சி காலேஜ் பின் புறசுவற்று பக்கம் இருப்பிடம் கொடுத்த சென்னை…

பாக்கிங்காம் கால்வாய் ஓரு பெட்டிக்கடையில் சென்னையில் முதல் விலாசம் கொடுத்த சென்னை..

கால்வாய் ஓரம் கடை வைத்து இருக்கும் கால் வீங்கிய ஆயா நடத்திய தட்டுசோறு கடையில் ஒன்றரை ரூபாய்க்கு பசி ஆற்றி ஏப்பம் விட வைத்த சென்னை.

மெரினாவில் நட்ட நடு வெயிலில் காதலியின் மார்பை வியர்க்க விறுவிறுக்க பிசைந்து கொண்டு இருந்ததை பார்த்து அதிரந்து போக வைத்த சென்னை..

கெயிட்டியில் பத்து ரூபாய்க்கு ஹோமேசெக்சுக்கு அழைத்த சென்னை…

கோக் பாட்டில் உடைத்து கொடுத்தற்கு 50 காசு டிப்ஸ் கொடுத்த சென்னை…

ஏழ்மையிலும் சென்னை பதுமைகளை பார்த்து பெருமூச்சி விட வைத்த சென்னை…

சென்னை, கடல் அலை நடுவே என்னை ஓவென்று அழவைத்து என் அழுகை சத்தத்தை மறைத்த சென்னை,



இப்படி என்னை அழ வைத்த சென்னைதான்... நெஞ்சில் குத்திய நபர்கள், துரோகிகள் என ரகவாரியாக அறிமுகபடுத்தி என்னை அலைக்கழித்ததும் இதே சென்னைதான்....



ஆனால் அதே சென்னை எனக்கு அதீத தன்னம்பிக்கை கொடுத்து இருக்கின்றது,

வறுமையில் கஞ்சா விற்க ஒரு கும்பல் என்னை வற்புறுத்திய போதும், நேர்மையாக வாழ வழிகாட்டியதும் இதே சென்னைதான்.....

1994 ராதாகிருஷ்ணன் சாலையில் மகாநதி படம் பார்த்துவிட்டு கலங்கிய கண்களோடு நடந்து போகும் போது பைக்கில் என்னால் போகமுடியுமா? என்று யோசிக்க வைத்ததோடு அதை பிற்காலத்தில் சாத்தியபடுத்தி அழகு பார்த்ததும் இதே சென்னைதான்..

ஆனால் அதே மகாநதி படத்தின் கேமராமேன் எம்எஸ்பிரபுவிடம் எழுத்தாளர் பாலகிருஷ்ணன் ( சுபா) அவர்களால் உதவியால்…. இரண்டு தமிழ் திரைப்படங்கள் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்ய வைத்து அழகு பார்த்ததும் இதே சென்னைதான்…



என் காதல் வளர இடம் கொடுத்து கவுரவித்ததும் இதே சென்னைதான்...

எனக்கான வாழ்விடத்தையும்,குடும்பத்தையும், எனக்கான அங்கீகாரத்தையும் கொடுத்தது இதே சென்னைதான்...

துரோகிகளை விட எனக்கான நல்ல மனிதர்களை இனம் கண்டு அறிமுகபடுத்தி அழகு பார்க்க வைத்ததும் இதே சென்னைதான்....

என்னை எதிர்த்த துரோகிகளை தலையெடுக்க விடாமல் தலையில் தட்டி உட்கார வைத்ததும் இதே சென்னைதான்...





4,828,853 வசிக்கும் சென்னை மக்கள் தொகையில் பிளாக் எழுதி… ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்து.. பத்திரிக்கையாளர் சந்திப்பில்.. நீங்க ஜாக்கிசேகர் தானே??ன்னு என்னிடம் எனக்கு தெரியாத பல ஆயிரக்கனக்கான மனிதர்களை அறிமுகப்படுத்திய சென்னை….



இரண்டு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் கடற்கரை சாலையில் காரில் பயணித்த போது காந்தி சிலைக்கு பக்கத்தில் ஒரு மாதத்துக்கு பிளாட்பாரத்தில் படுத்து இருந்த எனது இருப்பிடத்தை அவளிடம் காட்டி இங்கதான் அப்பா படுத்து இருந்தேன் என்று சொன்னேன்…

உண்மையாப்பா என்று ஆச்சர்யம் விலகாமல் அவள் கேட்டால்…???

உண்மைதான் என்று சொன்ன எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது…

அதுதான் வந்தாரை வாழ வைக்கும் சென்னை.

சென்னைக்கு இன்று 376வது பிறந்த நாள்.. எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்....

இன்னும் நான் நேசிக்கும் சென்னை போல... நானும் அசுர வளர்ச்சி அடைய எல்லாம் எல்லாம் வல்ல பரம் பொருளை பிரார்திக்கின்றேன்.



பிரியங்களுடன்

ஜாக்கி சேகர்.

22/08/2015

#madrasday
#chennaiday
#chennaiday376

#chennaiday
#madrasday
#chennaibirthaday





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. சென்னை இன்னும் பலரை வாழவைத்துக்கொண்டுதான் இருக்கிறது! பழசை மறைக்காமல் சொல்லும் உங்கள் குணம் பாராட்டத்தக்கது!

    ReplyDelete
  2. Heart touching narration,all the best sir

    ReplyDelete
  3. Jackie

    Happy Birthday to Chennai.

    Best wishes for your continued growth.

    ReplyDelete
  4. Ater reading this, I felt a change in the title : It should be :

    "YENNAI (YE)MATRIYA CHENNAI.

    This is called from rags to riches.

    ReplyDelete
  5. மனிதம் மாறாமல் இருந்தால் யாதும் ஊரே யாவரும் கேளிர் இல்லயா ஜாக்கி? வாழவைத்த சென்னைக்கும் வாழ்த்தும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்-டெல்லிவாசி.

    ReplyDelete
  6. Truly touching narration jockey, lets grow more day by day with Chennai, my best wishes for you and Chennai citizens.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner