மணி ரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல்... புத்தக விமர்சனம்.




17, பாராதியார் நகர், கூத்தப்பாக்கம், கடலூரில் வாழ்ந்த எனக்கு.... ஜெகதாம்பிகா திரையரங்கு என்று அழைக்கப்படும்  டென்ட் கொட்டகையில்தான் சிறு வயதில்  சினிமா பார்க்க  முடிந்தது...
அதுவும் பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்கள்... சிவாஜி , மற்றும் எம்ஜிஆர் படங்கள்... வெள்ளிக்கிழமைக்கு ஒரு படம் கண்டிப்பாக மாறும்... சில நேரங்களில்  திங்கள் கிழமையே மாறி விடும்....

அதிக பட்சம்  சினிமா பற்றிய செய்திகளை வாரா வாரம்  வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்  தினத்திந்தியின்  வெள்ளிமலரும் மூலம்தான் சினிமா செய்திகளை பற்றி தெரிந்துக்கொள்ள முடியும்.... தந்திப்பேப்பரின்  முன்  பக்கத்தில்  கவர்ச்சி படம் என்ற  போர்வையில் படாவதி பிளாக் அண்டு ஒயிட்  போட்டோவில் சீதுருவாக ஒரு சேலை கட்டி குத்தீட்டி போல   பார்க்கும் கண்களையே குத்தி விடும்   அளவுக்கு எடுப்பான  மார்பகத்துக்கு எடுத்துக்காட்டு போல  ஒரு நடிகையின் படம் இருக்கும்....

ஆங்கில சினிமா என்பது  எப்படி இருக்கும் என்று  எட்டிக்கூட பார்த்தது இல்லை... சினிமா அறிவு என்பது  வெள்ளிக்கிழமை தினத்தந்தி வெள்ளி மலர் மூலம்தான்  தெரிந்துகொள்ள வேண்டும்... அப்படியும் இல்லை  என்றால் ராணி புக்கில் வரும் அன்புள்ள அல்லியில் கிசு கிசு பாணியில் எழுதப்படும்  பதில்களை  படித்து ஒரளவுக்கு தமிழ்சினிமாவில் நாலேட்ஜை   நான் வளர்த்து வந்து இருக்கின்றேன்...

ஒரு படம் திரைக்கு வரும் முன் ஒரு மாதம் முன்பே வெள்ளிமலரில் இயக்குனர் பேட்டி கொடுப்பார்...மூணு எலிகாப்டர் கிளைமாக்ஸ் பைட்டுக்கு பயண்படுத்தி இருக்கோம்...சாங்குல ஹீரோயின் பாவடை முள்ளு செடியில மாட்டி கீழ விழுந்து அவங்க முட்டியில காயம்.. இருந்தாலும் அந்த காயத்தோட அந்த டான்ஸ் மூவ் மென்ட் பண்ணி இருக்காங்க.... என்று பேட்டி கொடுப்பார்கள்....  அப்படி எந்த சேதியும்  இயக்குனர் பக்கம் அதிகம் தெரிவிக்காமல் ஒரு திரைப்படம் வெளியானது... அந்த படம்தான் எனக்கு ரசனை  மாற்றத்தை கொடுத்துது....

1987ல் நாயகன் படம் வந்தது அந்த படம் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த படம் கற்றது தமிழ் போல் ரொம்ப சோக மாக இருந்தது. அந்த வயதில் அந்த சோகத்தை தாங்கும் பக்குவம் என்னிடத்தில் இல்லை எனலாம்.

இன்று அந்த படத்தை கொண்டாடும் அளவுக்கு ,அந்த வயதில் அந்த படத்தை நான் கொண்டாட வில்லை. வாழ்க்கை அப்போது வறுமையை எனக்கு அறிமுகப்படுத்த வில்லை.
அடுத்த வருடம் அதாவது 1988ல் அந்த படம் ரிலிஸ் ஆகியது. அந்த படம் என்னை என் னுடைய 16ஆம் வயதில் வசீகரித்தது. அந்த படம் ஒருவெள்ளிக்கிழமை ரிலிஸ் ஆகியது . அந்த படம் கடலூரில் அப்போது ரமேஷ் இப்போது பாலாஜி என்றழைக்கபடும் தியேட்டரில் திரையிடப்பட்டது.


படத்தின் முதல் நாளே காலை காட்சியை என் அந்தை பையன் தாமோதரனும் சம்ட்டி என்பவரும் அந்த படத்தை பார்த்து விட்டு படம் ரொம்ப நல்ல இருக்கு அதுவும் சினிமா போட்டோகிராபி ரொம்ப நல்லா இருந்ததாக சொல்ல , கடலூர் கூத்தப்பாக்க கிராமத்தில் போட்டோகிராப்பி் நல்லா இருக்கு என்று முதல் டெக்னிக்கள் வார்த்தையை உபயோகப்படுத்தியது என் அத்தை மகன் தாமோதரன்தான் என்பேன்.

நான் பரபரப்புட்ன் வேர்த்து விறு விறுக்க சைக்கிளில் தியேட்டர் சென்றேன் 2,50 டிக்கெட்வாங்கினேன். தியேட்டரில் படம் போடாததால் விசில் பறந்தது. அது நல்ல வெயில்காலம் சித்திரைமாதம்... . படத்தை போட்டார்கள் ஒரு சன்ரைஸ் காட்சி மேகத்தில் மறைந்து இருக்கும் சூரியன் மெல்ல மெல்ல வெயியே வந்து சுட்டு எரிக்கும் சூரியனாக மாறும் காட்சி. அதில்தான் படத்தின் டைட்டில் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்கள் போடப்பட்டது.

சூரியன் மேகத்தில் மறைந்து இருக்கும் போது எந்த ஆடியோவும் இருக்காது.மெல்ல மெல்ல கதிர் பெரிதாக மாறும் போது நகரம் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து பரபரப்பாக மாறுவதை மிக அற்புதமாக ஆடியோவில் வெயிப்படுததி இருப்பார்கள். முதலில் குருவி காக்கா போன்ற பறவைகள் சவுண்டும் பிறகு சைக்கிள் கார்ஹாரன் சவுண்டும் அதன் பிறகு டிராபிக்கில் ஏற்படும் வாகனத்தின் இரைச்சலும் அதன் பிறகு ரயில் விமானம் போன்ற சத்தங்கள் பெரிதாகும் பொது சூரியன் தன் உக்கிரத்தை நகர் முழுவதும் காட்டிக்கொண்டு இருப்பான்.

அந்த படம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் அந்த படத்தின் வித்யாசத்தை நான் உள்வாங்க ஆரம்பத்தேன். அந்த படம் வழக்கமான படங்க்ளில் வரும் கேரக்டர் போல் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை. எல்லாம் இயல்பாக இருந்தது.

இன்டர் வீயுவில் தகராறு பண்ணிய மகனை அழைத்து ஆறுதல் சொல்கிறார் அடுத்த இன்டர்வியு நடக்கும் இடத்தை சொல்கிறார் அங்கு போய் ஒருவரை பார்க்க சொல்கிறார் அந்த இடத்தில்

நேற்று கிருஷ்ணனை பார்த்தேன், பிரேக்ஸ் இன்டியா பர்சனல் மேனஜர், அவங்க கம்பேனியில டிரெய்னிஸ் ரெக்ருமன்ட் எடுக்கறாங்களாம் உன்னை பத்தி அவுரு கிட்ட சொல்லி இருக்கேன் கம்பெனி பாடியில இருக்கு, உன்னை இன்னைக்கு 3 மணிக்கு வந்து பார்க்க சொன்னாரு, என்று சொல்ல வரேன் என்று கிளம்பும் மகனை அசோக் என அழைத்து அங்க கிருஷ்ணன்கிட்ட என் புள்ளன்னு சொல்லாத... அவுரு சுசீலா ரிலேஷனாம் அவுரு எங்கயாவது சொல்லி அது இங்க வந்து அன்னெசசரி காம்ளிகேஷன் பிராப்ளம் பாரு.... என்று ஒரு அப்பன் சொன்னால் எப்படி இருக்கும் ???பெத்த தகப்பன் என்னை அப்பா என்று அடுத்தவனிடம் சொல்லாதே என்று சொல்லும் போது ஒரு பையனுக்கு எப்படி இருக்கும்.???

 அப்படி தினத்தந்தி வெள்ளி மலரில் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று பேட்டிக்கொடுக்காத மணிரத்னம் பரத்வாஜ் ரங்கன் என்று பத்திரிக்கையாளரோடு பேசி இருக்கின்றார்.... சென்னையில்  வளர்ந்த அதுவும்  ஒரு கிராமத்தானைவிட அதிக விஷயங்ககளை அவதாணித்துக்கொள்ளும் நகரத்தில் வசித்த  பரத்வாஜை விட அதிக அளவு மணியை புரிந்து இருக்கின்றேன் என்பதும் அந்த ரசனை மிகசரியாக அந்த காலத்தில் எனக்கு  புரிந்துக்கொள்ளப்பட்டது என்பதும் எனக்கு  இந்த புத்தகத்தை வாசிக்கையில் நிறைவை தருகின்றது....


மணி எல்லா விஷயத்தையும்  மேலோட்டமாக  சொல்லிக்கொண்டு போகின்றார் என்ற குறைபாடு அவர் மேல் உண்டு... ஒரு படைப்பாளி அரசியல்வாதி அல்ல, புரட்சியாளன் அல்ல, ஜோசியக்கரனும் அல்ல.... அவள் ஒரு சாமானியன்... அவனுக்கு தெரிந்த கலை வடிவம் மூலம் அவனுக்கு தெரிந்த அரசியல் பேசுகின்றான்....  அவ்வளவே...இன்று வரைர தமிழுக்ககா  போராடிய எத்தனை இயக்குனர்கள் ஈழத்தமிழர் கதையை தொட்டு இருப்பார்கள்.... தமிழில் பெயர் சொல்லும் பெரிய இயக்குனர்களில் அவர் மட்டுமே தைரியமாக அந்த சப்ஜெக்ட்டை தொட்டார்.... வேறு யாரும் அந்த பக்கம்  போகவில்லை....


பொதுவாக தீர்க்கமாக ஒரு கருத்தை மணி முன் வைப்பதில்லை என்ற கருத்து அவர் மேல் உள்ளது... நான் முன்பே சொல்வது போல இந்த உலகில் இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது....சேது சமுத்திர திட்டம் வேண்டும் என்று தமிழ்நாட்டில் அதிகம் போராடியவர் வைகோ... இப்போது  அந்த திட்டம் தேவையில்லை என்கின்றார்.... அது போலத்தான்  சின்ன வயதில்  பிடித்த எதுவும் இப்போது பிடிப்பதில்லை.. இன்று பிடிக்கும் ஒரு விஷயம் நாளை சலித்து போகும்....  சின்ன வயதில்  காமிக்கும் ராஜேஷ்குமாரும் உயிர்... ஆனா இப்ப?  அப்படி ஒவ்வோரு விஷயத்துல மாறுபட்ட கருத்து இருக்கும் போது  ஒரு கருத்தை எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாத போது, ஒரு படைப்பாளி மட்டும் என்  ஒரு  கருத்தை இதுதான் ஏற்ப்புடையது என்று பைனல்  செய்ய முடியும்... அதனை இந்த புத்தகத்தில் மிக அழகாக விளக்குகின்றார்... மணி...

“திரைக்கதை எழுதும் போது நிறைய எழுதுவோம், அதிலிருந்து குறைவாக காட்சிபடுத்துவோம். இறுதியில், படத்துக்கு என்ன தேவையோ அதைமட்டும் வைத்துக்கொள்ளுவோம்.. நாம் விவாதிக்க விரும்பும் அத்தனையும் பர்ஸ் டிராப்டில் எழுதுவோம். அதை மெருகேற்றும் போது... சில காட்சிகளை நீங்க வேண்டிய சூழல் எற்படும், அப்போது நாம் விவாதிக்க விரும்பும் கருத்துகள் மறைந்து போகும்...
 இறுதியில் அந்த கருத்தின் சாரம்சத்தினை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்... ஏனெனில் நாம் படத்தில் கதையை சொல்கின்றோம்.. திரைப்படம் என்பது முழுக்க முழுக்க சித்தாந்தங்களை விவாதிக்கும் மேடை அல்ல... அங்கே அளவுக்கு மேல் எந்த கருத்தையும் புகுத்த கூடாது. உண்மையாக கதாபாத்திரம் என்ன பேச வேண்டுமோ? அதை மட்டும் பேச வேண்டும்...
பெரும்பாலான பிரச்சனைகளை  இரண்டு வேவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கலாம்.. ஆனால் ஏதாவது  ஒரு பக்கம் நின்று  தெளிவான  நிலைபாட்டை எடுத்து விட்டால்...?? அதன் பின் நாம் முன் வைக்கும் கருத்துகள் அந்த திசையில் பயணிக்கும்... கருத்து ஒன்னு, கருத்து ரெண்டுன்னு வரிசையா விவாதிச்சிகிட்டு போக வேண்டிய அவசியம் இல்லை.. கருத்து ஒன்னு கருத்து ரெண்டையும் விவாதிச்சா போதும்....மற்ற அனைத்தையும் மக்கள் புரிந்துக்கொள்வார்கள்..” என்கின்றார் மணி...

 மிகவும் ரசிப்பவனாலேயே ஒரு இயக்குனரிடம் இப்படி உறவாட முடியும்... அதை பரத்வாஜ் ரங்கன் சிறப்பாக செய்து இருக்கின்றார்...

17, பாராதியார் நகர், கூத்தப்பாக்கம், கடலூரில் வாழ்ந்த எனக்கு ஜெகதாம்பிகா திரையரங்கு என்று அழைக்கப்படும்  டென்ட் கொட்டகையில்தான் சிறு வயதில்  சினிமா பார்க்க  எனக்கு ... திரைப்படத்தின் ரசனை மாற்றத்தை என்னுள் ஏற்படுத்திய  இயக்குனர் மணியோடு ஒரே ஒருநாள் அவரோடு பணி புரிந்து இருக்கின்றேன்...


அதற்கு முன்....

டிவி சீரியல்  மற்றும் திரைப்படங்களில் கேமரா அசிஸ்டென்டாக.. கேமராமேன் அசிஸ்டென்டாக, கேமராமேனாக பத்து வருடத்துக்கு மேல் பணிபுரிந்த  போது நிறைய சண்டைகள் சச்சரவுகளை பார்த்து இருக்கின்றேன்..ஒரு  ஷாட் எடுக்க 100க்கு மேற்ப்பட்டோரை  ஒருங்கினைக்க  போராட வேண்டி   இருக்கும்... அதனால் ஷுட்டிங்கில் சலசலப்பு  சத்தம் இருந்துக்கொண்டே இருக்கும்...ஓப்பன் மைக்கிலேயே டைரக்டர்கள்  உதவி  இயக்குனர்களை  ஆர்டிஸ்ட்டை திட்டுவது போல திட்டி தீர்ப்பார்கள்... கேமராமேன்கள் டைரக்டர் மேல் இருக்கும்   கோபத்தில் தனது அசிஸ்டென்டுகளை வெளுத்து வாங்குவார்கள்....

 அது ஒரு பிரபல நடிகரின் திரைப்படம்.. ஏவிஎம்மில் உள்ள ஒரு  தளத்தில் பாடல் காட்சி..  பாம்பே மாடல்கள் ... சைடில் போய் தம் அடித்துக்கொண்டு இருந்தார்கள்....  ஷாட் ரெடி என்றார் டான்ஸ் மாஸ்டர்... சாயங்காலம் செட்டை உடைக்கனும் அடுத்த படத்துக்கு புளோர் புக் பண்ணிட்டாங்க... இன்னைக்கு நைட்டு பிளைட்டுல நடிகை போய் ஆகனும்... டைரக்டர்  கத்தினார்.... ஓத்தா எங்கடா இருக்கிங்க ???அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்....?, அந்த பாம்பே தேவிடியாளுங்க எங்க நின்னுட்டுகிட்டு இருந்தாலும் இழுத்துக்கிட்டு வாங்கடா,-?


 இது தமிழ்சினிமாவில் சகஜம்... இப்படியான சலசலப்பு பேக்கப் என்று சொன்னதும்தான்.. அமைதியாகும்  அதுவரை  சலசலப்பு இருக்கும் 100 பேர் சேர்ந்த  பணிபுரியும் இடம் எசிக்காற்றில் டைப் அடித்துக்கொண்டு நொட்டை சொல்லும் உத்யோகம் அல்ல...


நாளைக்கு யூ மாட்டிக் கேமராவேனுமாம்... ஏதோ  அதுல ஷூட் செய்யனுமாம்... மணிரத்னம் சார் ஷூட்டிங் என்றார்கள்..  நாளைக்கு கேமரா எடுத்துக்கிட்டு நீ போயிடு ஜாக்கி என்றார்கள்....எனக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லை...ஆயுத எழுத்து பட ஷூட்டிங்... கிண்டி ரோஸ்கோர் சலையின் உள் வட்டத்தில் அதாவது ஸ்பிக் கட்டத்தை தாண்டி  கிண்டி ரேஸ் கோர்ஸ் பாதையில் இறங்கும் போது பர்ஸ்ட் லெப்ட்... அமெரிக்க  தூதரக  வரிசையை தயார் செய்து இருந்தார்கள்.. விவேக் ஒபராய்.. பைக்கில் வந்து  நின்று யூ எஸ் விசா வாங்க கியூவில் நிற்க வேண்டும்....


ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளர்...

ஸ்கிம்மர் வைத்தார்கள்.. பைக்கில் வந்து ஸ்டாண்ட் போட்டு வரிசையில்  நிற்க வேண்டும்.. லைவ் சவுண்டு வேறு... ஒரு வெள்ளைக்காரர் பூம் மைக் பிடித்துக்கொண்டு  நின்று இருந்தார்... நாலு நாள் நரைத்த  தாடியோடு மணி  ஆக்ஷன் என்று மிக சன்னமாக மிக சன்னமாக என்றால் டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் காண்டம் பாக்கெட்டை காட்டி  ஸ்டாக் இருக்கா என்று மனைவியிடம் கணவன் சன்னக்குரலில் கேட்பது போல.... ஆக்ஷன் என்றார்...சுருதி தப்பாமல் தாளம் தப்பாமல் எல்லோரும் இயங்கினார்கள்..,.. நான் அந்த மனிதரையே  வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தேன்...


 சின்ன சின்ன  கரெக்ஷன் எந்த வெட்டி சவுண்டும் இல்லை... அமைதி பேர் அமைதி.....ஆங்கிலத்தில்தான் கமென்டுகள்...பலர் நடக்கும் தெருவே ஒரு கார்ப்ரேட் ஆபிஸ் ஒழுங்குடன்  அமைதியாக இருந்தது... அதே வேளையில் அடுத்து அடுத்து என்று  ஷாட் எடுத்துக்கொண்டே இருந்தார்கள்....

இன்டோர் பேட்  மிட்டன் ஸ்டேடியத்தில் இரண்டு மூன்று ஷாட்டுகள் எடுத்தார்கள்...  நான் எடுத்து சென்ற டீ 35 கேம்கார்டரில்  கொஞ்சம் ரெக்கார்டு செய்து பார்த்தார்கள்... மாலை 500 ரூபாய் பேட்டா வாங்கி வீடு வந்தேன்....அன்றைய நாள்  முழுவதும் மணி சாரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்...ஒரு  வேளை மணி ரத்னம் ஆரம்பகால படங்களில் அதிகம் கத்தி இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்...ஒரே வருத்தம் இப்போது போல கேமரா மொபைல் போன்கள் அப்போது இல்லை  இருந்து இருந்தால் ஒரு புகைப்படம் அவரோடு எடுத்து  இருக்கலாம் என்ற வருத்தம் இன்றளவும் இருக்கின்றது.


மணி ரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல் பரத்வாஜ் ரங்கன் என்ற பத்திரிக்கையாளரிடம் மணிரத்னம் உரையாடுயதை தொகுத்து ஆங்கிலத்தில் புத்தகமாக போட அதனை தமிழில் அரவிந்குமார் சச்சிதானந்தம் மொழி பெயர்த்து இருக்கின்றார்....  கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றது....இந்த புத்தகத்தை இன்னும் முழுதாக வாசிக்கவில்லை...

 வேலை பளுவுக்கு மத்தியில்  பாதியை வாசித்து விட்டேன்... கடந்த காலங்களை அதிகம்  நினைவுபடுத்துவதால்  நிறைய பழைய நினைவுகளில் மூழ்க வேண்டி இருக்கின்றது... அதனால் ரொம்பவும்  மெதுவாக... ஒரு கோப்பையில் இருக்கும்  ஒட்காவை மெல்ல  ரசித்து சுவைத்து  பருகுவது போல  இந்த புத்தகத்தை  வாசிக்கின்றேன்..   சினிமாவை ரசிப்பவர்கள் இந்த புத்தகத்தை  அவசியம் வாசிக்க வேண்டும்...

 நண்பர் நித்யா ஆங்கில புத்தகம் வெளியானஉடன் படித்து  எனக்கு  கொடுத்தாலும் தமிழில் வாசிக்கையில் இன்னும் நெருக்கமாய் உணர்கின்றேன்.

நன்றி பரத்வாஜ் ரங்கன் மிக அழகாக தொகுத்தமைக்கு.....

நன்றி கிழக்கு பதிப்பகம்... புத்தகத்தை  தமிழில் வெளியிட்டமைக்கு...

இந்த புத்தகத்தை முதலில் பார்க்கும் போது... புதுவசந்தம் படத்தில் சித்தாரா ஊமை என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள்.. சித்ரா தள்ளுவண்டி காய்கறிகடைகாரனிடம்  பேரம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து வாய் பிளப்பார்கள்..அல்லவா... அப்படி நீங்களும்  அந்த  புத்தகத்தை வாசிக்கையில் வாய்பிளிப்பீர்கள்.


அப்படி பேசாத மணிரத்னம் நிறைய சுவாரஸ்யமாய் பேசி இருக்கின்றார்.....

புத்தகத்தின் விலை 500 ரூபாய்....



பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:


  1. இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
    மலரட்டும் ......

    ReplyDelete
  2. மிக அருமையாக எழுதிருக்கிங்க, மணி ரத்னம் சார் படங்களிலே மாஸ்டர் பீஸ் நாயகன் படம் தான் இனி மணி சாரே நினைத்தாலும் அப்படி ஒரு படம் கொடுக்க முடியாது.கன்னத்தில் முத்தமிட்டாலும் கொண்டடபடவேண்டிய படமே. உங்களுக்குக்கும் குடும்பத்தினர்க்கும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சன்னமான குரலுக்கு கொடுத்தீங்க பாருங்க ஒரு வெளக்கம்.. ஹ ஹ ஹா
    நல்ல பதிவு ஜாக்கி ...
    வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரர்
    மிக சிறப்பான பதிவி. அழகான நடை.
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. ஜாக்கி,
    மணி ரத்தினத்தை பலர் மோசமாக இன்று விமர்சித்தாலும் அவர் ஆரம்பித்துவைத்த நவீன சினிமாவின் பாதிப்பு இல்லாமல் இன்று யாருமே படம் எடுப்பதில்லை. எடுக்கவும் முடியாது. நல்ல பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete


  7. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் ஐய்யா...

    ReplyDelete
  8. Interesting review. I am looking forward to reading this book.

    ReplyDelete
  9. Interesting review. I am looking forward to reading this book.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner