MEMORIES-2013/மலையாளம்/ திரில்லர்/குடிகார போலிஸ்
 காக்க காக்க படத்தை பார்த்துட்டு பத்து நாள் தூங்காம இருந்து.
.. நாமளும் இப்படி ஒரு படம் பண்ணணும்  அப்ப மலையாளத்துல ஒரு பெரிய பட்டாளமே சுத்திக்கிட்டு இருந்துச்சி போல... அந்த படத்தின் பாதிப்பு நிறைய படங்களில் நாம பார்க்க முடியுது... 

 எனக்கு தெரிஞ்சி மென்மையா கதை சொல்லற  மலையாள பட உலகில்  அதிரடியான ஷாட்டுகள் மூலம் எனக்கு தெரிஞ்சி செம ஸ்டைலிஷா போட்டு தாக்கின படம் எதுன்னா... அது பிக் பி தான்... என்ன ஷாட்டு... என்ன ஸ்டைலிஷ்.. இது மலையான படம்தானான்னு சந்தேகம் வர வைக்கற அளவுக்கு ஷாட்டு கட்டிங்குல பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க....


 சார் இந்த படம் வேற... இந்த படத்துக்கு காக்க காக்க படத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை... an episode  in the life of a police officer  என்ற கேப்ஷனை பார்த்த சொல்லறிங்களா? மத்த கேனைங்க  அப்படித்தான்  சொல்லும்.. பட்...   நான் அந்த படத்தின் தாக்கம் இந்த படத்தில் இல்லாமல் இல்லை என்று சொல்லுவேன்...

an episode  in the lif of a police officer   காக்க காக்க ஒரு போலிஸ் ஆபிசர் கதைன்னா தமிழகத்துல  கேரளத்துல எல்லலாம் சேர்த்து ஒரு மூனு லட்சம் போலிஸ் இருக்காங்கன்னு வச்சிக்கோங்க.. அதுல ஒரு ஒரு போலிஸ்காரன் பின்னாடியும் ஒரு கதை கண்டிப்பா இருக்கும்... நமக்கு தெரிஞ்சி ரெண்டு கதையை பார்த்து இருக்கோம்ன்னு சொல்லுவேன்..... அப்புறம் வேட்டையாடு விளையாடு.. இந்த படத்துல  நிறைய கவுதம் மேனன் சாயல் அவர் படத்தோட இன்சிபிரேஷன்  நிறைய இடங்களில் தெரிகின்றது...


 வேட்டையாடு விளையாடு படத்துல   போலிஸ்  ஆபிசர் ராகவன் பெருமை மற்றும் கடந்த காலத்தை ஒரு மூன்று நிமிட கற்க கற்க பாடலில் மிக  கம்பீரமாக  காட்சி படுத்தி இருப்பார் கவுதம்..  எனக்கு தெரிந்து இந்தனை வருட கமல் படத்தில் அது  போலான ஒரு மேன்லிநஸ் காட்சியை   யாரும் பார்த்தே இருக்க முடியாது.... அது போல படத்தின் தொடக்கத்தில் ஒரு பாடல் வருகின்றது... மெமரிஸ் ஒரு போதும் இறப்பதில்லை என்று... ஆனால்  இரண்டு  வெவ்வேறானது... பட் மேமரிஸ் படத்தையும் அதன் மேக்கிங் இரண்டையுமே ரசிச்சேன்..
படத்தோட கதை என்னன்னு பார்த்துடுவோம்...


நகரில் கொலைகள் நடக்கின்றன...  திருமணம் ஆன ஆண்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள்.. அவர்கள் கொடுரமாக கொலைகின்றார்கள்... குற்றவாளி யார் என்று தெரியாமல் போலிஸ் தினறிக்கொண்டு இருக்கின்றது.... பிருத்திவிராஜ் திறமையான  போலிஸ் ஆபிசர் என்றாலும்  காக்க காக்க படத்துல எப்படி ரவுடி தப்பி பாண்டியா தப்பிக்கிறான்.. ஆத போல ஒருத்தன்  தப்பிச்சி... பிருத்திவி  பொண்டாட்டி புள்ளையை பிருத்திவி கண் எதிர்க்க சாகடிக்க... வெறுத்து  போய்  போலிஸ் வேலையை விட்டு விட்டு  குடியே கதின்னு கிடக்கறான்.... கொலைகள் தொடர்கின்றன.... பிருத்விகிட்ட கொலை  கேசை கண்டு பிடிக்க  வர சொல்லறாங்க... பிருத்திவி குடி குடிச்சிக்கிட்டே   கேஸ்ல  ஹெல்ப்  பண்ணறேன்னு  ஒத்துக்கறார்... கொலையாளி  யாருன்னு கண்டுடிபிடிச்சாரான்ன்னு சொல்லறதுதான்... மெமரிஸ் மலையாள  திரைப்படத்தின் கதை....


 பிருத்திவி பிளாஷ் பேக் வர்ஷன்..  சின்னதா காக்க காக்க வேற வெர்ஷன்ல பார்க்கறது போல இருக்கு... பட் கொலைகள் நடக்கும் விதத்தையும் காட்சி படுத்திய விதமும் திறமையான இயக்குனர் என்று பரைசாற்றுகின்றது...

 முக்கியமா  சைக்கிளில்  வரும் பால்காரன் மரத்தில்  தொங்கி கொண்டு இருக்கும் பினத்தை பார்க்கும் காட்சியும் போலிஸ் வந்து விசாரிக்கும்  காட்சி  என்று ஒரு வரியில்  எஎழுதி இருக்கலாம்... ஆனால் அதனை காட்சி படுத்திய விதம் சூப்பர்..

. ஆதே போல இந்த  வாய்க்காலில் இருக்கும் பினத்தை வாய்க்காலில் குளிக்க வரும்  சிறுவர்கள் பார்க்கும் காட்சிகள்.... மிக சிறப்பு.. முக்கியமா அந்த வாய்க்காலோட லொக்கேஷன் இன்னும்  ரசிக்க வைக்கின்றன...

துஷ்டனை தெய்வம் பனை போல வளர்த்து   இதுதானே உங்க தெய்வத்தின்ட நீதி எங்கில் ஆ தெய்வத்தோட விசுவாசம் எனக்கில்லை அச்சுன்னு சொல்ற   அந்த கான்வர்சேஷன் பார்ட் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன...


 அதே போல இன்னோரு விஷயத்தை  நான் ரொம்பவும் ரசித்தேன்..  இந்த படத்தின் போஸ்டர்களில் எந்த இடத்திலும்  இது திரில்லர் படம்  என்று  டிசைன் செய்யாமல் ஒரு குடும்ப சித்திரம் என்ற வகையில் போஸ்டர்களை வடிவமைத்து பின் படம் பார்க்கும் வரும் பார்வையாளனை மிரள வைத்து இருக்கின்றார்கள்...


Jeethu Joseph இதற்குமுன் இயக்கிய  மை பாஸ் ஒரு ரோமாண்டிக் காமெடி வகை பிலிம் என்றால் இது  சைக்காலிஜிக்கல் திரில்லர் வகை திரைப்படம்... அது மட்டுமல்ல... திருஷ்யம்ன்னு மோகன்லால் மீனாவை வச்சி அசத்தலான  அடுத்த திரில்லரை கொடுத்து இருக்கார்ன்னு சேர  நாடு முழுக்க பேசிக்கறாங்க....
 பார்த்துடுவோம்...


====
படத்தின் டிரைலர்...=================
படக்குழுவினர் விபரம்

Directed by Jeethu Joseph
Produced by P K Muralidharan
Santha Murali
Written by Jeethu Joseph
Starring Prithviraj
Vijayaraghavan
Mia George
Meghana Raj
Music by Sejo John
Background Score:
Anil Johnson
Cinematography Sujith Vassudev
Editing by John Kutty
Studio Anantha Visions
Distributed by Murali Films
Release dates
9 August 2013
Running time 2 hr 12 min
Country India
Language Malayalam

===============
பைனல் கிக்.

இந்த படம்  செமையான திரில்லர்... அதே நேரத்தில் இந்த படத்தின் நீளம் கொஞ்சம் சோதிக்க செய்கின்றது... நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் செம ஷார்ப்பாக இந்த படம் இருந்து இருக்கும்.... பட் டோன்ட்  மிஸ் இட்... இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம்...
================
படத்தோட  ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.

==============
பிரியங்களுடன்


ஜாக்கி சேகர்நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

4 comments:

 1. Anna..
  Happy Pongal u,anni and pappa
  Drisyum, North 24 Kantham, NPCB, Punniyalan agarbathis, Monkey Pen parunganna..
  ellame nallairukkum...

  Convey my regards to anni...
  Kisses to Yazhini Pappa...
  -Kavi Saran

  ReplyDelete
 2. Drishyam கண்டிப்பா பாருங்க அண்ணன் செம படம் அது

  ReplyDelete
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  ReplyDelete
 4. // நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் செம ஷார்ப்பாக இந்த படம் இருந்து இருக்கும் //

  I feel the same...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner