எந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி... தன் துணை அடுத்தவரோடு நெருக்கம் காட்டினால் possessive அதிகரிக்கும்
என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மைதான்....
ஆண் .... பெண் ... காதலர்களில் இரண்டு பேரில் யார் பாதை மாறினாலும் பதறி விடும்
நெஞ்சம்... பதற்றம் பொது... அதுவும் உண்மையான காதலர்கள்.. வெறித்தனமாக காதலிக்கும் காதலர்கள் வாழ்வில் திடும் என வேறு
ஒரு கேரக்டர் என்டர் ஆகும் போது கண்டிப்பாக பொறுத்துக்கொள்ளவே முடியாது...
என் புருஷனை மார்க்கெட்டுல வெத்தலை பாக்கு கடைக்கிட்ட அந்த குடி
கெடுக்க வந்த சக்காளத்தியோடு பார்த்ததுமே... என் அடிவயிறு எரிஞ்சி போச்சி... என் நெஞ்சே
வெடிச்சி போச்சி போன்ற வார்த்தை பிரயோகங்களை
கேட்டு இருக்கின்றேன்...
என்னைக்கு என்னை விட்டு அவ அவன் கூட போனாலோ... அப்பவே
எல்லாம்முடிஞ்சிடுச்சி... வேற ஏதாது பேசறிங்களா-? எதுக்கு அதை பத்தி பேசிக்கிட்டு...... என்னை விட அவன் உசத்தின்னு அவ கிளம்பிட்டா.... நா மறக்க நினைக்கறேன்..... நீங்க
என்னடான் திரும்ப திரும்ப நீங்க அதை பத்தியே பேசிக்கிட்டு இருக்கிங்க.... நட்பு போர்வையில என்கிட்ட
ஆறுதலா இருக்கறது போல முகத்தை சோகமா வச்சிக்கிட்டு கேட்டு மனசுக்குள்ள சந்தோஷ படாதிங்க.....
இல்லை அது வந்து உன்
மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவுமேன்னுதான்...
நான் எப்ப உன்
கூட குடிக் வந்தாலும் ஓடிப்போன என் பொண்டாட்டியை
பத்தி திரும்ப திரும்ப பேசினா எப்படி ரிலாக்ஸ் ஆக முடியும்...?? சொல்லு மச்சி...
இல்லை ஐடி கம்பெனி சாப்ட்வேர்... எப்படி வீட்டுக்கு வேலை
செய்ய வந்த பிளம்பரோட...? அதான் மச்சி என்னால தாங்க முடியலை...
ஓத்தா நான் பொட்டை அப்படின்னு என் வாயலே என் பர்சனல் பிரச்சனைகளை தெரிஞ்சிக்கிட்டு, அடுத்த வராம் என்னை
விட்டு விட்டு... உன் பிரண்ட்ஸ்கிட்ட குடிக்க
போய் நந்து பொண்டாட்டி ஏன் ஓடிப்போனா தெரியுமா?ன்னு கதைய ஆரம்பிச்சி...
ஓத்தா உங்க போதைக்கு நான் உறுகாய ஆகனுமாட தேவிடியா பையா...
என்று சில வாரங்களுக்கு முன் பாரில் ரெண்டு பேரு பேசிக்கொண்டே பாட்டில் உடைத்துக்கொண்டு
கிளாடியேட்டர் சண்டைக்கு தயாராவது போல தயாராகிக்கொண்டார்கள்....
அவன் மனைவியை ரொம்பவும் நேசித்து
இருக்க வேண்டும்...? ஒடிப்போன அவன்
மனைவி மிகவும் அழகாக இருந்து இருக்க வேண்டும்...
அவன் சண்டையிலும் தாரை தாரையாக கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தான்...அழுகையில்
ஒழுகும் மூக்கு சளி அவனை இன்னும் பாவமாணவனாக மாற்றியது....
எனக்கென்னவோ...
பொண்டாட்டி ஓடிப்போன நண்பனின் மனைவிக்கு நாம எப்படி அழகாய் இல்லாமல் போய் விட்டோம்.... ஒரு
வாட்டி நம்ம கிட்ட படுத்துட்டு எந்த பிளம்பர்காரனோடு ஓடினா நமக்கு என்ன என்ற அங்கலாய்ப்பு அவனிடத்தில் இருந்து இருக்கும் போல... அதனால்தான்
அவன் நண்பனோடு குடிக்க வரும் போது எல்லாம்..
இந்த பிரச்சனையை எடுத்து இவன் அதங்கபட்டு இருக்கின்றான் என்று நான் நினைக்கின்றேன்.
பெண்கள் ரொம்ப சென்சட்டிவ்.... அவர்களை எளிதில் வளைக்கலாம்...
வீழ்த்தலாம்.. ஆனால் அவர்கள் வேண்டாம் என்று
ஒரு முடிவு எடுத்தார்கள் என்றால் அது வேண்டாம்தான்...
ரைட்... நீட்டி முழங்கனது போதும், விஷயத்துக்கு வருவோம்...இரண்டு
இணை பிரியாத காதல் ஜோடிகள் என்றால் எப்படி இருப்பார்கள்-? சாரை பாம்பு போல பின்னி பினைந்து இருப்பார்கள் இல்லையா...? எஸ் அது போலத்தான்
அந்த காதல் ஜோடி... அவன் பெயர் ஆன்ட்ரியன்...
அவன் ஒரு மியூசிக் கண்டக்டர்... கண்டக்டர்
என்றால் நம்ம ஊர் எம்டிசி இல இருக்கற கண்டக்டர்
போல எச்சி தொட்டு டிக்கெட் கிழிச்சி தர்ற வேலை இல்லை... இவன் மியூசிக் கண்டக்டர் குச்சி
வச்சிகிக்ட்டு வாத்திய கருவிங்க வாசிக்கும் போது ஆட்டிக்கிட்டு இருப்பாங்களே அது மாதிரி
வேலை... திறமையானவன்.. நல்ல அழகன்...
அவனுக்கு பெலன்னு ஒரு கேர்ள் பிரண்ட் இருக்கா,.. ஒரு நாள்
திடிர்ன்னு சொல்லிக்காம கொள்ளிக்காம.... வெயிட் அது என்ன? கொள்ளிக்காம... அவ சொல்லிட்டே
போறா..... எஸ் வீடியோவுல நான் உன்னைவிட்டு பிரியறேன்... அப்படின்னு அந்த வீடியோவ.. திரும்ப திரும்ப ஓட வீட்டு அழறான்.. ஹீரோ அந்த மியூசிக்
கண்டக்டர்....
உலகத்துல ரொம்ப வலிஉள்ளது... புரையோடி போன காயம் தரும்
வலியை விட.. ரொம்ப நம்பினவங்க.,.. கழுத்தறக்கறதுதான்.. அதுவும் நகமும் சதையுமா? இருந்துட்டு சட்டுன்னு பிரிஞ்சி போறது... ரொம்ப வலி கொடுக்கும் வேதனை... அது
நம்மில் பலர் அந்த வேதனையை அறிந்து
இருக்க கூடும்... எஸ்.. அதுவும் பொண்ணுங்க
எனும் போது அவர்கள் பிரிந்து சென்றதால் உண்டான
வலியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
அவ யார் கூட ஒன்னா ஓடிப்போவட்டும்... பிரச்சனை என்னன்னு
தெரியாம விட்டு பிரியறதுதான் கொடுமை... சாப்ட்வேர் என்ஜினியர் பொண்டாட்டி பிளம்பரோட ஓடிப்போறான்னா என்ன காரணம்...? அதுக்குதான் அவன் பார்ல குடிச்சிக்கிட்டு
இருக்கான்... அது போலத்தான் இவனும் அவன் லவ்வர்
விட்டு போன சோகத்துல சரக்கை அடிச்சி தொலையறான்...
ஒரு நாள் போதை அதிகம் ஆக.... பார்ல் பழக்கம் ஆனா பொண்ணு அவனை வீட்டுக்கு கொண்டு வந்து விட... போதையில ஒரே ஜலபுலஜங்ஸ் ஆகி விட..... போதை தெளிஞ்சி பார்க்க சொல்லவும்... அந்த பொண்ணு அழகா
இருக்க... ஓடிப்போன காதலியை நினைச்சிக்கிட்டு இருக்காம இந்த பெண்ணோட... செம சூப்பரா காம களியாட்டத்துல ஈடுபட்டுக்கிட்டு இருக்கான்...
அந்த பொண்ணு பேரு...
அதாவது இப்ப ஜலபுலஜங்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கற பொண்ணு பேரு பெபினா....
அந்த மியூசிக் டைரக்டர் இருக்கும் வீடு நகரத்தில் இருந்து சற்று
தள்ளி இருக்கும் தனிமையான அதே வேளையில் மிக அழகான வீடு...
நீங்க உணர்ந்து இருக்கிங்களா-? ஏதாவது கூட்டத்துல யாரோ
நம்மை கண்காணிக்கறா போல இருக்கும் நம்ம உள்
உணர்வு சொல்லும் சட்டுன்னு திரும்பி பார்த்தா
அதே போல யாரோ ஒருத்தி நம்மை பார்த்துக்கிட்டு இருப்பா... அது போல பெபினாவுக்கு அந்த
வீட்டுல யாரோ இருக்கறது போல ஒரு உணர்வு...ஆனா
யாரும் இல்லை...
ஆனா பெபினா சர்வ
நிச்சயமா நம்பற வீட்டு யாரோ இருக்காங்கன்னு... எஸ் அதுவும் பெட்ரூம்ல இருக்கற கண்ணாடியை
பார்க்கும் போது அந்த கண்ணாடிக்கு பின்னாடி
யாரோ நின்னு மேட்டர் பண்ற எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு
இருக்கறா போல ஒரு பீலிங்க...
தொலைஞ்சி போன
காதலியை தேடி அப்ப போலிஸ் விசாரிச்சிக்கிட்டே
இருக்கு... நகரத்தை சல்லடை போட்டு தேடுது... வெளியூர் போன பேசஞ்சர் லிஸ்ட் சிசிடிவி எதிலேயும் அவ இல்லை... இவனும் சலிக்காம போலிஸ் விசாரனைக்கு ஒத்துழைக்கறான்...
ஆனா போலிஸ் இவன்தான் அவனோட காதலியை அடிச்சி சாவடிச்சிட்டு நடிக்கறான்னு நினைச்சாலும்
பாடி கிடைக்கனுமில்லை... ஓத்தா அதுவும் கிடைக்கமாட்டேங்குது.... போலிஸ்சுக்கு மண்டை காயுது.....
சரி எப்படி திடிர்ன்னு
ஒரு பொண்ணு எப்படி திடிர்ன்னு காணம போக முடியும்...??? சொல்லுங்க.,.. ரேட்.. அந்த பொண்ணு எங்கயும் காணம போகலை... அந்த
பொண்ணு அவ வாழ்ந்த அதே வீட்டுலதான் இருக்கா...தன்
காதலன்இன்னோரு பெண்ணுடன் எப்படி எல்லாம் புணர்ந்தான்
என்பதை சவுண்டோடு பார்த்துக்கொண்டு இருந்தால்..
ஆனால் தடுக்க முடியவில்லை.. வெளியே வர முடியவில்லை... விளையாட்டாய் செய்யப்போன விஷயம்
இப்படி வினையாகி போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை....
அந்த வீட்டுல அவ எங்கதான் இருப்பா...? வெள்ளித்திரையில்
காண்க...
சூப்பரான சைக்கலாஜிக்கல் திரைப்படம்....
இந்த படத்து கதை என்ன என்று தெரியாமல் இந்த படத்தை பார்ப்பது
நலம்.... டென்ட் கொட்டாயில்... இப்ப பாரேன் நம்பியார் மூஞ்சில எம்ஜிஆர் பொக்குன்னு மூக்குல குத்துவாருன்னு ஒன்னு முந்திரிகொட்டை போல கதை சொல்லிக்கிட்டு இருக்குமே.. அது போல கதை சொல்லறவன்
இருந்தாலே.. அல்லது இந்த படத்தோட கதையை தெரிஞ்சிக்கிட்டு படத்தை
பார்த்தாலோ... ஒரு எபக்ட்டும் இருக்காது...
அற்புதமான திரைக்கதை.... அதுக்கே இயக்குனருக்கு கை கொடுக்க
வேண்டும்... முதலில் அதை பெய் படம் போல உருவக படுத்தி.. அதன்பின் முடிச்சி அவிழுக்கும்
இடங்கள் மிக அருமையாக காட்சிகள்..
தான் இதே வீட்டில்தான் இருக்கின்றேன் என்று தனக்கு சக்காளத்தியாக
வந்தவளிடம் வெளிப்படுத்தும் இடங்கள் மிக அருமை..
அதே போல தன் வாழ்க்கையை பார்க்கும் சுய நலவாதியாக பெபினா மாறி போவதும் நல்ல
டுவிஸ்ட் காரணம்.. புகழ் பெற்ற ஆளுமையுள்ள
ஆண்....
படுக்கையறை காட்சிகளில்
டீப்பாக காட்டி விட்டு இதெல்லாம் அவள் பார்த்துக்கொண்டு இருக்கின்றாள் என்று நினைக்கும்
போது மனது உச் கொட்ட வைக்கின்றது...
==========
படத்தோட டிரைலர்..
================
படக்குழுவினர் விபரம்
Directed by Andrés Baiz
Starring Quim Gutiérrez
Clara Lago
Martina García
Release dates
September 16, 2011
Running time 97 minutes
Country Colombia
Language Spanish
===================
பைனல் கிக்.
இப்படி ஒரு கான்சப்ட்... சான்சே இல்லை... இந்த படத்தை
இந்தியில மார்டர் 3ன்னு எடுத்தாங்களாம்.. எப்படி இருக்குன்னு இனிமேதான் பார்க்கனும்...இந்த
படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்... கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்.. அற்புதமான கிரைம் திரில்லர்.... முக்கியமாக
பெண்கள்.. ஓடிப்போன காதலி பாயிண்ட் ஆப் வீயுவில் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்....
==============
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டு.
=========
பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Thanks. I will check it out.
ReplyDeleteபார்த்திடுவோம்.
ReplyDeleteஇப்பலாம் அலி பாய் கடைய recommend பண்றதே இல்ல? என்னாச்சு?
ReplyDeleteஅப்ப பார்த்திட வேண்டியதுதான்....
ReplyDeleteபாதி படிக்கும்போதே என்னடா மர்டர் 3 மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்... மீதிய படிக்கிரத்துக்குள்ள கமென்ட் போட்டுடலாமின்னு நினைச்சேன்...
ReplyDeleteஅப்ப மார்டர் 3 படம் காப்பியா ??? அடங்க்கொக்கமக்கா...
சரி ஒரிஜினலையும் பாத்துடுறேன்.