திரைப்பட துறையில் வாய்ப்பு பெறுவதும் அந்த வாய்ப்பை வைத்துக்கொண்டு கூரையேறி கொடி பிடிப்பதும் சாதாரண விஷயம் அல்ல...
கடைசி வரை கோழி பிடிப்பேன் என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள் இந்த கோடம்பாக்க தெருக்களில் எராளம்...
அப்படியே வாழ்க்கையை தொலைக்காமல் கோழியில்லா கூரையில் உட் கார்ந்துக்கொண்டு கோழிக்காக வெயிட் செய்து கொண்டு இருப்பவர்களையும் இந்த கோடம்பாக்கம் பார்த்து இருக்கின்றது...
முன் பக்கம் கை கொடுத்து சிரித்து பேசி அணைத்து மகிழ்ந்து பின் பக்கம் பள்ளம் பறித்து குழியில் தள்ளி விடுபவர்கள் அனைத்து துறைகளில் இருந்தாலும், சினிமா துறையில் சற்று அதிகம்..
மூன்று ஹேட்ரிக் வெற்றிக்கொடுத்த இயக்குனரின் திரைப்படம் ஒன்று கடந்த தீபாவளிக்கு ரிலிஸ் ஆனாது. படம் ஊத்திக்கொண்டது... அப்படி அந்த படம் ஊத்திக்கொண்டதுக்கு பார்ட்டி வைத்து ஒரு குழு கொண்டாடியது என்று கோடம்பாக்க செய்திகள் தெரிவித்தன...
அப்படிபட்ட உலகம்.. அதே போல பல காலம் கோழி பிடிக்க முடியாமல் இலவு காத்த கிளியாக இருப்பவர்களுக்கு இயல்பிலேயே வெற்றி பெற்றவர்கள் மீது ஒரு கோபம் இருந்துக்கொண்டு இருக்கும்.... அதை நிறைய இடங்களில் பார்க்க முடியும்...
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி சமீபத்தில் வெளியான கோலி சோடர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது... கோயம்பேடு குப்பைகளை கலிஜ் என்று சொல்லும் ஆங்கில பத்திரிக்கைகள் கூட இந்த படம் பெரிய ஹீரோயிச நடிகர்களை இனி யோசிக்க வைக்கும் என்று எழுதி தள்ளுகின்றன.
வழக்கம் போல இந்த திரைப்படம் வெளியானதும் இந்த திரைப்படம் காப்பி அடிக்கப்பட்ட திரைப்படம் ...கதை திருடிய திரைப்படம்.... என்று யூகங்களாய் செய்திகள் உருள தொடங்கி இருக்கின்றன...
பொதுவாய் ஒரு இயக்குனர் இது போன்ற குற்றசாட்டுகளின் போது இரண்டு நிலைப்பாடுகளை எடுப்பார்கள்....
ஒன்று மணிரத்னம் போல கடந்து போய் விடுவார்கள்... மற்றது.. பாரதிராஜா போல குதிப்பார்கள்...
இன்னும் சிலர் படம் ஓடி முடிந்து.... நாலு மாசத்துக்கு அப்புறம் விகடனுக்கு கொடுக்கும் போட்டியில்.... உங்க திரைப்படம் திருட்டுக்கதைன்னு கேள்வி கேட்கும் நிருபர் கேள்வியை முடிக்குமுன், பொழுது போகாதவனுங்க எதையாவது பேசிக்கிட்டு இருப்பானுங்க.. அதை போய் பெருசு பண்ணிக்கிட்டு...??? வாங்க நமக்கு ஆயிரம் வேலை இருக்குன்னு பதில் சொல்லி விட்டு அடுத்த கேள்விக்கு தாவுவார்கள்...
ஆனால் அந்த குற்றச்சாட்டு வந்தவுடன் முதலில் விஜய் மில்டன் தனது விலாசத்தையும் தனது செல்நம்பரையும் சமுக வலைதளத்தில் தெரிவித்தார்.... இதை எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் எந்த இயக்குனரும் செய்தது இல்லை... மடியில் கணம் இல்லை அதனால் வழியில் பயமில்லைன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு எப்போது வேண்டுமானாலும் இது பற்றி விவாதிக்க ரெடின்னு ஸ்டேட்டஸ் போட்டு போன் நம்பர் கொடுத்தார்.
அதோடு கூட சில பேர் விட்டு விடுவார்கள்..... இன்னும் தனது தரப்பை வீடியோ எடுத்து பதிவேற்றி திருட்டு கதையா என்பதற்கு விளக்கம் வேண்டும் என்று பொதுவெளியில் கோரிக்கை வைக்கின்றார்... எனக்கு தெரிந்து விஜய் மில்டன் மட்டுமே இப்படி ஒரு வீடியோ பதிவை பொதுவெளியில் வைக்கின்றார் என்று நினைக்கின்றேன்...
முட்டை போட்ட கோழிக்குதான் வலி தெரியும்.... அந்த படபடப்பு வீடியோவில் நேர்த்தியாகவே பதிவாகி இருக்கின்றது.
மடியில் கணம் இல்லை என்று போல்டாக முதல் முறையாக விஜய் மில்டன் சொல்லி இருக்கின்றார்.. ஆதாரத்தோடு பதிவு செய்யுங்கள்...
வரவேற்கிறோம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS..
.
Boss ..,
ReplyDeleteMaheshbabu latest movie Nenokkadine parthhengala.watch it quickly
வித்தியாசமானவர்தான்!
ReplyDeleteரொம்ப நாளா பதிவே போடல? எங்க போனீங்க ஜாக்கி?
ReplyDelete