பழையன கழிதலும்... புதியன புகுதலும்...


1994 ஆண்டு பொங்கலின் போது என் இருப்பிடம்.... 
மெரினா காந்தி  சிலையில் பக்கத்தில் இருந்த பிளாட்பாரம்தான்... வானில் பறக்கும் விமானங்களே எனக்கு நேரக்காட்டியாக விளங்கின...  

காலையில் எழுந்திருக்கும் போது  அடுத்த வேளை  சோற்றையும் வறுமையை எப்படி விரட்டுவது என்ற எதிர்பார்ப்புடன்தான் என் வாழ்வை  தொடங்கி இருக்கின்றேன்...

ஊர் விட்டு ஊர் வந்து ஏமாற்றப்பட்டால் இதையெல்லாம் சந்திக்க வேண்டும்... என்  சொந்த ஊர் கடலூரில் நான் வாழ்க்கையை தொடங்கி  இருந்து இருந்தால்... ஊரில் ஒரு போட்டோகிராபராக  பத்துக்கு பத்து ஷட்டர் போட்ட கடையில்  புளு பேக்ரவுண்டில்  மேக்சி போட்டோவும்  பாஸ் போர்ட் சைசு போட்டோவுடன்  என் வாழ்க்கை  ஓடிக்கொண்டு இருந்து இருக்கும்....ஆனால் என்னால் அப்படி  சிறைப்பட்டு கிடக்க எனக்கு விருப்பமில்லை... அதுக்கு ஒரு வயது இருக்கின்றது...


1998இல் சென்னையில் 1500 ரூபாய்க்கு ஒர ஆஸ்பெட்டாஸ் ஷீட் வீட்டில்  வாழ்க்கையை தொடங்கி எனக்கான முகவரியை பெற்றேன்... அதன் பின்... வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் அனேக்ஸ்,ராமபுரம், ராமபுரம் திருமலை நகர், வளசரவாக்கம் அஷ்டலஷ்மி நகர் என்று வீடுகள் மாறி... நிரந்த முகவரியாக  மூன்று வருடங்களுக்கு முன் கடனை உடனை வாங்கி ஒரு வீடு வாங்கினேன்...


தற்போது  யாழினியின் பள்ளிக்காக மயிலைக்கு வீடு மாற இருக்கின்றோம்...  எங்கள் இருவர் அலுவலகங்கள் மவுன்ட் ரோட்டில் இருப்பதாலும்  தினமும் 22 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியதால் வீடு மாறுவது கட்டாயமாகின்றது.


அன்பேசிவம் படத்துல கமல் குரலில் ஒரு டயலாக் கிளைமாக்சில் வரும்...

''பறவைகளுக்கும் துறவிகளுக்கும்  நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை... நானும் ஒரு பறவை தான்....நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக  கருதும் பறவை நான்... அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம். ஆச்சர்யங்கள் நிறைந்த இந்த உலகின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கின்றேன்...''


உண்மைதான்...


ஒளிப்பதிவாள நண்பர் விஜய் மில்டன் இயக்கத்தில் விரைவில் வெளியாக போகும் திரைப்படமான கோலி சோடா திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு....

 ''தொலைச்ச இடத்துலதான் தேடனும்... ''

காந்தி சிலைக்கும் இப்போது நான்   மயிலையில்   குடிப்போகப்போற வீட்டுக்கும்  சில கிலோ மீட்டர்கள்தான்....

புதிய வீடு... அதுவும்  வாடகை வீடு... திரும்பவும் ஒரு   போராட்ட வாழ்க்கை.... வாடகை  கொடுக்கவும்,  என் புது வீட்டு ஹோம் லோன்   அடைக்கவும் இன்னும் பலம் கொண்டு போராட வேண்டும்.

 என் வீட்டுக்கு  அருகில் மாதவ பெருமாளும், முன்டக கன்னியும் என்னை வழி நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில்  வீடு மாற இருக்கின்றேன்... 


சென்னையின்  மிகப் பழமையான  நகரத்தில்   இன்னும் சில  தினங்களில் நாங்களும் சிறு துகளாய்..

வழக்கம் போல... உங்கள்  நல் ஆசிகள் வேண்டி...




பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

  1. வாழ்த்துக்கள் சேகர் சார்

    ReplyDelete
  2. புத்தாண்டும் புதுவீடும் மகிழ்ச்சியானதாய் அமைய வாழ்த்துக்கள் நண்பரே...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. ஜாக்கி,
    புதிய வீடும் இடமும் சந்தோஷமும், நிறைவும், நலமும் உங்கள் அனைவருக்கும் தர நானும் வேண்டுகிறேன். புதிய வீட்டில் இருந்தும் சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
    நன்றி.
    நெல்லைசீமை

    ReplyDelete
  4. Wish you all success in your new house in this new year.

    ReplyDelete
  5. டிவி நாடகங்கள் பார்த்தால் அது நாடகம் எனவும், சினிமா பாத்தால் அது சினிமா என நம்பளால் பார்த்து உணரமுடிகிறது. ரெண்டிற்கும் அந்த கேமரா வித்யாசம் பற்றி கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  6. புதிய வீட்டில் சந்தோஷங்கள் நிறையட்டும்...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner