முதல் இடம்....
மூடர் கூடம்...
தமிழ்ல லோ பட்ஜெட்டுல பிளாக் ஹீயுமரோட விளம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் துயரங்களை சொல்ல
முடியுமா?- என்ற கேள்விக்கு முடியும் என்று சொன்ன திரைப்படம்....கிக் ஆஸ் ஸ்டைல் மூவி.... சென்ட்ராயன் இன்ட்ரோவில் நடந்து வரும் போது கொடுக்கப்பட்ட
பின்னனி இசை... நிமிர்ந்து வைக்க....யூ மீன் பாஸ்வேர்டு என்று கலாய்பதிலும் கஞ்சா விற்பவன்
எப்படி பேசுவன் ?? பூ வார்த்தை அதிகம் இல்லாம எப்படி பேசமுடியும்..? அப்படித்தான் அவன் பேசினான்...
அதை செல்லுலாய்டில் பதிய வைத்த போது மனதில் நி ன்றார். நவீன். இவன் தமிழ் சினிமாவுக்கு
கடமை பட்டவன்...இதே போல படத்தில் டயலாக்குகளில்
மேல்சாதியினர் பசப்பியதை தெளிவாக திருநெல்வேலியில் ரோட்டுக்கடை புரோட்டா சாப்பிட்ட... ச்சே அங்க புரோட்ட இல்லை இல்ல...சைவ சாப்பாடு சாப்பிடும் கூலித்தொழிலாளிக்கும்
எளிதில் புரியும் விதமாக மாம்பழ கதையின் மூலம் புரிய வைத்தவர்... நவின்... அதனாலே
இந்த படத்தை கொண்டாடுவது தவிர்க்க முடியாமல்...
சிறந்த படம் என்ற அங்கீகாரம் கொடுக்காமல்
சிறந்த கதை, சிறந்த துணை நடிகர் என்று சப்டிவிஷனில் பம்முகின்றது என்பதாக தெரிகின்றது...
யார் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போன
வருடத்தின் மிகச்சிறந்த படம் மூடர் கூடம் என்பது
எனது எண்ணம்....
================
இரண்டாம் இடம்
விடியும்
முன்...
இந்த படத்துக்கு
விமர்சனம் எழுதிஇருக்கனும்ஆனா சிஸ்டம் படுத்தி எடுத்த காரணத்தால் எழுத முடியலை... பட் முகநூலில் எழுதியதை
பகிர்கின்றேன்...
இந்தியாவில் ஒரு கோடி பாலியல் தொழிலாளிகள் உள்ளனர்
40 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
வருடத்துக்கு 8000 பெண் குழந்தைகள்…. பெற்றோர் மற்றும் உறவினர்களால்
விற்கபடுகின்றார்கள்..
10 சதவிகித சிறுமிகள் கற்பழிக்கப்ட்டு விற்க்கப்டுகின்றார்கள்..
12 சதவீகித சிறுமிகள் பெற்ற அப்பாக்களால் பாலியல் தொழிலுக்கு
விற்க்படுகின்றார்கள்
66 சதவிகித ஆண்கள்… 10 இல் இருந்து 14 வயது பெண் பாலியல்
தொழிலாளர்களை தேர்வு செய்கின்றார்கள் அல்லது விருப்பபடுகின்றார்கள்.
70 சதவிகித சிறுமிகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்…
75 சதவிகித சிறுமிகள் ஒரு நாளைக்கு 5முதல் ஆறு முறை உடலுறவுக்கு
உட்கபடுத்த படுகின்றார்கள்.
82 சதவிகித குழந்தைகள் இந்தியாவில் இருக்கின்றார்கள்..
90 சதவிகித குழந்தைகள் படிப்பறிவு அற்றவர்கள்…
புரையோடி போய் இருக்கும் புண்ணை மறைத்து வைத்துக்கொண்டு மகிழ்வாக
இருப்பதாக காட்டிக்கொள்வதில் எந்த பயனும் இல்லை. இந்தியாவில் நடக்கும் கொடுமை இது...
லண்டன் டூ த பிரைட்டன் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பிதான்
தற்போது வெளியாகி இருக்கும் விடியும் முன் திரைப்படம் என்றாலும் தரமான விழிப்புணர்வு
திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
லண்டன் ட பிரைத்டன் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி விடியும்
முன் திரைப்படம் என்றாலும் நல்ல விழப்புணர்வு திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து
இல்லை.... அதை விட அந்த திரைப்படம் காட்சி உருவாக்கம் ஷாட்டுகள்.... தமிழுக்கு புதியவை...
ரெண்டு விப்சசாரிங்க... பாம்பேல இருந்தாங்க.,.. அங்க இருந்து ஒருத்தி திருச்சியில செட்டில் ஆயிட்டா.. இன்னோருத்தியாலா
செட்டில் ஆக முடியலை.. உடம்பு தொங்கி போய்
இன்னும் 100 க்கும் 200க்கும் லாட்ஜ் லாட்ஜ்ஆ ஏறிக்கிட்டு இருக்கா.....அதுல ஒரு சின்ன
பொண்ணு அவ வாழ்க்கையில வர்ரா.... செமை படம்....
இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சனையை தோல் உரிச்சி காட்டிய
விடியும் முன் அறிமுக இயக்குனருக்கு நன்றி... இன்ஸ்பிரேஷனோ
அட்ட காப்பியோ...இப்படியான படத்தை எடுங்கப்பா.......
====================
மூன்றாம் இடம்.
சூது கவ்வும்....
இந்த படத்தை சிறந்த படம் என்று கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள்..
இது சிறந்த படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை... ஆனால் மேலே இரண்டு படங்கள் இந்த
திரைப்படத்தை காட்டிலும் மிக சிறந்த படங்கள்... என்பதை மறுக்க முடியாது...
விஜய சேது பதியோட நடிப்பு...45 வயசு கொள்ளைக்காரன் கேரக்டருக்கு
செம ஆப்டா பொருந்தி இருந்தார்... பேங்க் மேனேஜர் பொண்ணை
விட்டு விட்டு மேனஜர் கிட்ட இருந்து காசு வாங்கி கிட்டு திரும்ப கூலிங் கிளாஸ்
கண்ணாடி போட்டு ஸ்லோமேடஷன்ல திரும்பி நடக்கற அந்த ஷாட்டு ஒன்னு போதும்.. இயக்குனர் நளன் நல்ல ரசிகன் என்று கொண்டாட இந்த படத்தை சமுதாய
பிரச்சனைகளை மிக நேர்த்தியா கதையோட லைட்டா கடைசிவரை டச் பண்ணிக்கிட்டே இருந்தார்.........
அதே போல இன்ஸ்பெக்டர் பிரம்மா கேரக்டர்.... இததுதான் இருட்டு அறையில் முரட்டு குத்தாடா?
என்று வயிறு குலுங்க சிரிக்க செய்ததில் ஜெயித்தார்
நளன்...
===================
நான்காம் இடம்
பரதேசி.
இப்படி ஒரு படத்தை தமிழ் சினிமா செல்லுலாய்டில் பதியவைத்தமைக்கு
இயக்குனர் பாலாவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டு இருக்கோம்... காரணம் கடந்த 500 பவருடங்களில்
தமிழ் சமுகம் பெரிய இடப்பெயர்வு, போர் போன்றவற்றை
சந்தித்தது இல்லை.... அதுவும் இப்போதைய தலைமுறைக்கு
கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.... கஷ்டத்தை கூட ஷங்கர் படம் எடுத்த இந்தியன்
போல பான்டசியாதான் படத்தை எடுக்கனும்... பட் இந்த படம் வலிகளையும் வேதனைகளையும் செல்லுலாய்டில் பதிவு செய்தது..
செழியனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல்
பலம்.
===================
ஐந்தாம் இடம்.
ஓனாயும் ஆட்டுக்குட்டியும்....
தமிழ் சினிமாவில்
ரசனை மாற்றத்துக்கு வித்திட்ட மனிதர் இயக்குனர் மிஷ்கின்... இந்த படத்துல பாடல்கள் இல்லை
ராஜா பின்னனி இசைக்கோர்ப்பு மட்டும் செய்து
இருந்தார்... படம் நன்றாக இருந்தாலும் இன்னும்
இந்த திரைப்படத்தை சிறப்பாக எடுத்து
இருக்கலாம் என்பது என் எண்ணம் .. பட் ஷாட்டுகளில் அசத்தி இருப்பார்.... அதே போல நடிப்பிலும்...
====================
பட்டியல் தொடரும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS..
.
நல்ல அலசல். வாழ்த்துக்கள்
ReplyDeleteLondon to Brighton na Vida vidiyummun making&screenplay good copy thaan but E adichan copy ills John Vijay character antha movie la illa. Climax la oru flash back varum Brighton la illa vidiyum mun super
ReplyDeleteLondon to Brighton na Vida vidiyummun making&screenplay good copy thaan but E adichan copy ills John Vijay character antha movie la illa. Climax la oru flash back varum Brighton la illa vidiyum mun super
ReplyDelete