சென்னையில் பெருகி வரும் வட மாநிலத்து இளைஞர் கூட்டம்....



சென்னையில் முன் எப்போதும் இல்லாத வகையில்  தற்போது  வட இந்திய இளைஞர்களின் கூட்டத்தை நாம்  அதிகம்  காண்கிறோம்....
வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு ,வட இந்திய பனியாக்களின் வருகையும் அவர்களின் சவுக்கார்  பேட்டை  தேசமும்  நமக்கு புதிது அல்ல.... காரணம் அவர்கள் பல காலம் நம்மோடு வாழ்ந்து  வருகின்றார்கள்...


ஏற்றுமதி இறக்குமதியில் நம்பிள்கி நிம்பிள்கி சேட்டுகள்... குடும்பத்தோடு  சென்னையில் தொழில் செய்ய வந்தவர்கள்... தமிழர்களில் வறுமையை  உணர்ந்துகொண்டு அநியாய வட்டிக்கு  ரயிலில் கொண்டு வந்த பணத்தை  காசக்க சென்னை மற்றும் தமிழகத்தின் புறநகர் பகுதிகளில் பஜன்லால் சேட்டுக்களாக  ஊடுருவியவர்கள்.... 

கண்ட்ராஸ்ட் கலர் சட்டையில் டிசைன் வேலைபாடு கொண்ட சட்டை பேண்ட் அணிந்து  இன் செய்து .... இடுப்பு  தெரிய முக்காடு போட்ட மனைவியை ...வெஸ்ப்பா ஸ்கூட்டரில் பின் பக்கம் உட்காரவைத்து  அழைத்து செல்வதை இந்த தமிழ் கூறும் நல்லுலகம்  வசன் ஐ  கேர் செல்லாமல் நன்கு  அறிந்தே வைத்திருக்கிறது....


ஆனால் முன்னெப்புதும் இல்லாமல் இந்த முறை நிறைய  வட இந்திய இளைஞர்கள் சென்னையை ஆக்கிரமித்து இருக்கின்றார்கள்.... அதுவும் குறிப்பாக  கடந்த  எட்டு வருடங்களில் மிக அதிகம்....சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரிகள் புற்றீசல் போல சென்னை புறநகர்களில்  கால் பதித்த போது திட்டு திட்டாக வட இந்திய இளைஞர் கூட்டத்தை காண முடிந்தது...


என்னிடம் படித்த நிறைய வட இந்திய  மாணவர்களிடம் கேட்பேன்..

 உங்க ஊர் எப்படி இருக்கும் என்று...? 

சார் எங்க வீட்டுல  நிறைய பணம் இருக்கு... ஆனா இங்க போல கரண்ட் இருக்காது...   நாலு  மணி நேரம் கரன்ட் கிடைச்சா பெரிய விஷயம்...நீங்க இங்க நினைச்ச நேரத்துக்கு  பஸ்புடிச்சி  நகரத்தோட எல்லா இடத்துக்கும்  பயணப்படுறிங்க... 

ஆனா எங்களுக்கு  ரயிலை விட்டால் நாதி இல்லை.... அதுவும் டிக்கெட் எடுக்காமதான் போவோம்... முக்கியமா.. வன்முறை ரொம்ப அதிகம்... கவுரவக்கொலைகள் அதிகம்..... 

வங்கி அதிகாரிகள் கொடுத்த பணத்தை யாரும் திரும்பி வாங்க முடியாது... வராக்கடன் லிஸ்ட்ல் போட்டுவாங்க... மீறி பேசினா.... நாட்டு  துப்பாக்கி   பேங்க் மேனேஜர்  மேல... ஆசையா அதே சமயத்துல கோவமா வெடிக்கும் என்று நிஜ கேங்ஸ்   ஆப்  வாசிப்பூர் கதைகளை அனுராக் கஷ்யாப்  ஸ்டைலில் சொல்வி கிலி  ஏற்ப்படுத்துவார்கள்..... 

உங்க ஊர் சொர்கம் சார்...மக்கள் எல்லாருமே  ஆசையா  பார்த்துக்கறாங்க...    ராயபுரம் பக்கத்தை தவிர   நாங்க  எந்த  இடத்திலும் பெரிசா    பிரச்சனையை சந்திச்சது இல்லை.... இது பீகார் பையன் ஸ்டேட்மென்ட்...


இன்னைக்கு சென்னயில குறைந்த பட்சம் 25 லட்சம் பேராவது இருப்பாங்க என்பது என் எண்ணம்.. முக்கியமா கட்டுமான தொழில்ல வட இந்திய இளைஞர்கள்  ஏராளம்...

 என்னைக்கு சென்னையில் ஓஎம்ஆர்ல ஐடி காரிடர் கட்டி தகவல் தொழில் நுட்ப பூங்கா ஆரம்பிச்சாங்களோ.... அன்னையில் இருந்து, வட இந்திய இளைஞர் சென்னையில் கட்டுமான வேலைக்கு வருவதும் அதிகரிக்க ஆரம்பித்தது...

இன்னைக்கு பெங்களூர்ல இருக்கற அனைத்து மிக பிரமாண்ட கட்டிடத்துக்கு  பின்னே தமிழ்களின் வியர்வை வாசம் இன்னமும் மிச்சம் இருப்பதாய் சொல்வதுண்டு.... அது போல சென்னையில் இருக்கும் அத்தனை பிரமாண்ட கட்டிடத்துக்கு பின்னும்  வட இந்திய இளைஞர்களின் உழைப்பும் வியர்வையும்  கலந்து இருக்கின்றன  என்பது மறுக்க முடியாத  உண்மை.


சென்னையின்பிரமாண்ட வாளாகமான தலைமைசெயலகத்தில் இருந்து, கோயம்பேடு,கிண்டி,பாடி மேம்பாலங்கள் முதற்கொண்டு இன்றைய  சென்னையின்  பிரமாண்ட ராட்சத திட்டமான  மேட்ரோ ரயில்  வரை  வட இந்திய  இளைஞர்களின் உழைப்பும் வியர்வையும்  பின்னனியில் இருக்கின்றது... அது மட்டுல்ல  வில்லாவில் இருந்து சிங்க பெட்ரூம் வீடு வரை  பீகார் மற்றும் வெஸ்ட் பெங்காலில் இருந்து   சாரை சாரையாக குடும்பத்தோடு வந்து  கட்டும் வீட்டில் தங்கி.... வீடு கட்டி முடியும் வரை சாக்கு மறைப்பில் குடும்பம் நடந்தி, கட்டும் வீட்டுக்கு காவல்காரனாய் இருந்து,  பின் குடும்பமாக இடம் பெயர்கின்றார்கள்...


வெஸ்ட் பெங்காலில் இருந்து வந்து  எங்க ஏரியாவில் பெயிண்ட் அடிக்கும் பையனிடம் பேசினேன்...2500 கிலோ மீட்டர் பயண தூரம் ரெண்டு புள்ளைங்க...  பொண்டாட்டி புள்ளை ஊர்ல இருக்கு...

 ஆறு மாசத்துக்கு ஒருவாட்டி  நான்  ஊருக்கு போய் வருவேன்... இங்க நல்ல சம்பளம்...  எங்க ஊர்ல இது போல வேலை வாய்ப்பு இல்லை.... அரிசி சாப்பாடு கஷ்டம்தான்.. ஆனா இங்க அப்படி இல்லை....

எப்ப இந்த  மொழியை கத்துக்கிட்ட ??

ஒரு ஆறு  மாசம்தான்  தமிழ் கத்துக்கிட்டேன்.. என்று தமிழை  கடித்தான்... முக்கியமா டிவி சீரியல் ஈவ்னிங் பார்ப்போம்.... அதை பார்த்து பார்த்து கத்துக்கிட்டோம்... பாலில் விஷம் எப்படி கலக்கறது..? வண்டி பிரேக் ஒயரை எப்படி கட் பண்றதுன்னு எல்லாத்தையும் கத்துக்கிட்டிங்களாடான்னு கேட்டேன்... விழுந்து விழுந்து சிரிக்கறானுங்க...



மேட்ரோ ரயில் பிராஜக்ட்டில் வேலை செய்யும் அத்தனை வட இந்திய இளைஞர்களும்  சென்னை ரமாபுரம்  அருகே  உள்ள மனப்பாக்கம்  அடையாறு கரையோரம் தகடு கூறைகள் வேய்ந்த  பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்...

12 மணிநேர வேலை... இரண்டு பேருந்துகளில் தினமும்...ஹெல்மட்டோடு  பேருந்தில் பயணிக்கின்றார்கள்...வார இறுதியில் மாநகர பேருந்து பிடித்து சைதாப்பேட்டை மாக்கெட் போய் காய்கறி வாங்கி, அன்றைய வார சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து வீடியோகான் டிஷ்ஷில் நண்பர்களோடு  இந்திப்படம் பார்க்கின்றார்கள்...

குடும்ப கமிட்மென்ட் அதிகம் இல்லாத இளைஞர்கள் வார  இறுதியில்  சென்னை சத்தியமில் ஆயிரம் முறைக்கு மேல் ஓடியும் தேயாத ஆர்டிஎக்ஸ் பிரிண்ட்டில்... ஷாருக்கான் ஆடும்லுங்கி டான்ஸ் பார்த்து, கரீனா  தீபிகாவின் சரேல் என வளையும்  இடையில் சொக்கி  இரவில் நண்பர்கள் அனைவரும் கண் அயர தேவுடு காக்கின்றார்கள்.....


இதே மெட்ரோ ரயில் வேலையில் கிரேன் சரிந்து இதுவரை ஐந்துக்கு மேற்ப்பட்டவர்கள் மரித்து போய் இருப்பார்கள் என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன..... 

சென்னை  மெரினா பீச்க்கு போய் இருந்தால் பத்தடிக்கு  ஒரு பாஸ்ட் புட் கடை இருப்பதை பார்த்து இருக்காலம் ... எல்லா  கடையிலும் இரண்டு பேர்   மாணிக்சந்த் வாயோடு சிக்கன் ரைஸ் சாப்பிடுறிங்களா? சார்ன்னு கேட்கறதை ஹயம் பார்த்து இருக்கலாம்.... அங்கே மட்டுமல்ல...சென்னை நகரில் இரவு நேர துரித உணவகங்களில்  தமிழர்களுக்கு வாணலில் சோற்றை வறுத்துக்கொடுக்கும் அனைத்து கைகளும் வட இந்திய மாவா கைகளே... 

 பத்து வருஷம் பண்ணிரண்டு வருஷ  சோற்றை வறுத்துக்கொடுக்கும் எக்ஸ்பிரியன்ஸ்  பேக்ரவுண்டு இவர்களுக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்..

இது மட்டுமல்ல.... கார்பெண்டர், இண்டிரீயர் டெக்கர்ன்னு பல துறைகளில் வியாபிச்சி இருக்காங்க...செக்யூரிட்டியில் இருந்து காவ கீளின் பண்ற வேலை  வரை எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க...

அதே போல  இங்க வந்து  என்ஜினியரிங்க காலேஜ் படிக்க வந்துட்டு ஆள் புடிச்சி கொடுக்கும் புரோக்கர்  வேலை பார்க்கும் போது நடக்கும் குற்ற  சம்பவங்களில் பெரியதாய் வட இந்திய பணக்கார  இளைஞர்கள் ஈடுபடுகின்றார்கள்...

 சோழிங்கநல்லூர்  பேங்க் கொள்ளை,  வேளச்சேரி என்கவுண்டர்ன்னு சென்னையில்  நடந்த குற்ற சம்பவங்களில்  இவர்களின் வழி  தோன்றல்களின் பங்கு கணிசமானது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் அன்னாடம் காட்சியான  தினக்கூலி வேலை செய்யும் வட இந்திய பசங்க  பெரியதாய் வன்முறையில் ஈடுபடுவதில்லை...

 அப்போது வட  இந்திய பெண்கள்....???

அவர்களுக்கும்  சென்னையில்  வேலை இருக்கின்து....உங்கள் மகளின் புருவம், தங்கையின் ஹேர்கட்,  மாமியாரின் பேசியல் போன்றவற்றில் வடஇந்திய பெண்களின் பங்கு கணிசமாக உள்ளது... இன்னும் சொல்லப்போனால் நேபாளிகள் பியூட்டி பார்லர் துறையில் அதிக அளவில் இருக்கின்றார்கள்...

 கண்ட்ரஸ்ட் சிகப்பு டவுசரில்  பளிர் மைதாமாவு கலர்  தொடை தெரிய, உங்கள் ஏரியாவில் டோன் லீ தங்கச்சி சாயலில் யாராவது நடந்து சென்றால் ... மிக அருகே ஒரு  மீட்டரில்  பியூட்டி பார்லர் இருக்கின்றது என்று அர்த்தம்....

அதே வேளையில் நான் பார்த்து பேசி அத்தனை இளைஞர்களுக்கும் திருமணமாகி இருக்கின்றது.. எல்லோரும் சின்ன பையன்களாக இருக்கின்றார்கள்... காசு பணம் இல்லாட்டியும் 18 வயசுல  கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்கன்னு நினைக்கறேன்...


 இங்க 30 வயசுக்கு மேலே ஆகியும் கல்யாணம் ஆகாம.. டெய்லி கைரேகை அழிச்சிக்கிட்டு ,கைலிக்கு கஞ்சி போட்டுக்கிட்டு,  காது பக்கம் வந்த  நரைய மறைக்க டை அடிக்க டிரை பண்ணிக்கிட்டு இருக்கானுங்க.... எல்லாம் நேரம்தான்...

சரி  நம்ம ஆட்களின் ஸ்பேசை இவங்க வந்து  பறிச்சிக்கிட்டாங்களா?- இல்லை   காரணம் ....---??

அந்த அளவுக்கு சென்னை சுற்றி கட்டுமான பணிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன.,.. போதிய ஆட்கள் கிடைப்பதில்லை... என்னோட இந்த தொழில் போகட்டும்ன்னு  போன தலைமுறை முடிவு எடுத்ததன் விளைவு யாரும் குலத்தொழிலை   செய்வதில்லை...

90 களில் பிறந்த இன்றைய தலைமுறை அவர்களுக்கு விருப்பமான துறையில் சிறந்து விளங்குகின்றார்கள்...முன்ன மாதிரி எந்த மேஸ்த்திரி தன் புள்ளையை லீவ் நாளில் செங்கல் தூங்க அனுமதிப்பது இல்லை...


 வந்தாரை வாழ வைக்கும்  சென்னை யாரையும் ஏமாற்றியது இல்லை...  நிறைய பேர் சின்ன சின்ன தொழில் செய்து வருகின்றார்கள்.. ஆனால் ரவுடி என்ற முத்திரையுடன் திரியும் சில சோம்பேரிகளால் இவர்கள் தொல்லைக்கு ஆளாவதை பார்த்து இருக்கின்றேன்...

மெரினாவில் இருக்கும் சோறு வறுக்கும்  துரித உணவுக்கடையில் ஒரு பையன் ரொம்ப நேரம்  ஒரு ஆட்டோவில் இருக்கும் நாலு  தாட்டியான  இளைஞர்களிடம் கெஞ்சிக்ககொண்டு இருந்தான்..... ஆட்டோ விரூட் என ஜூவி கழுகார் போல  பறந்தது.

ஒரு பீப் பிரை இரண்டு சிக்கன்  பிரை சாட்டுட்டு காசு கொடுக்காம திட்டிடுட்டு போறானுங்க என்று அழுதான்...ஒரு நாளைக்கு ஒரு கடை டார்கெட்... கூட்டம் இல்லாத... இரவு நேர கடைகளில் இவர்கள் கொட்டம் அதிகரிக்கும் என்று சோளம் விற்பவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்...


 எல்லாம் ஓகே... இந்த பசங்க தண்ணி  அதிகம் அடிக்கறது இல்லை... நாக்குக்கு  கீழ ஹான்ஸ் வச்சிக்கிறானுங்க.. வாயில மாவா போட்டு கொதப்பறானுங்க... மாணிக் சந் அதிகம்  கிடைக்கலான்னாலும் சாந்தி பாக்கு கிடைச்சிகிட்டு தான் இருக்கு.... அதனால் கிடைக்கற  இடத்துல எல்லாம்  ஊர்ல கடலைவிக்கற கிழவி  வெத்தலை   பாக்கு எச்சியை எந்நேரமும்  கண்ட இடத்துல துப்பிக்கிட்டே  இருக்கறது போல துப்பிக்கிட்டே இருக்கானுங்க......

நைட்டு வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தேன்... செம பசி.... வாணல் ஒருத்தன்  சோத்தை வறுத்துக்கிட்டு இருந்தான்... ஒரு சிக்கன் ரைஸ் பார்சல்ன்னு சொல்லிட்டு நின்னேன்...


 கடாய்ல  எண்ணையை  ஊத்தினான்....  முட்டையை உடைச்சி ஊத்தினான்....வெங்காயம், பீன்ஸ் கேரட் போட்டு ஒரு வதக்கு வதக்கி பச்சக்ன்னு துப்பிட்டு, வாயில  வழிஞ்ச மாவா  எச்சியை தொடச்சிட்டு கோஸ்சை  போட்டு வறுக்க  ...அப்படியே கோஸ்ல கை வச்சான்.... 

நான் சிக்கன் ரைஸ் கேன்சல்ன்னு சொல்லிட்டு பைக்கை ஸ்டார்ட் செஞ்சேன்.


 பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

16 comments:

  1. நான் சிக்கன் ரைஸ் கேன்சல்ன்னு சொல்லிட்டு பைக்கை ஸ்டார்ட் செஞ்சேன். - Super

    ReplyDelete
  2. காட்சியாய் வரிகள் மனதில் விரியும் வண்ணம்
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முழு ”பேண்ட்” பார்த்திருக்கேன். முக்கா ”பேண்ட்” பார்த்திருக்கேன். அட கால் பேண்ட் போட்டு ஸ்கூலுக்கு போயிருக்கேன்... இதென்ன ”பேண்டு”ப்பா....
    ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் -ல தீபிகா படுகோனே போட்டுருக்கிறது. ஒன்றே அரக்கால் பேண்டோ ?.....எப்படித்தான் தைக்கிறாங்களோ ???

    ReplyDelete
  4. Dear Jackie ,
    sariyana alasal naan kooda ivargal niraya idathil parthen. antha manikchand, hans matter thaan rombo idikkuthu

    ReplyDelete
  5. நண்பர் ஜாக்கி.. நான் உங்கள் ப்ளாக்கை படித்திருக்கிறேன்.. ஆனால் இந்தக் கட்டுரையை எழுதியதற்காக உங்களை மனமாற பாராட்டுகிறேன். நான் மிகவும் ரசித்த கட்டுரை இது.. நிற்க மேலும் எனக்குத் தெரிந்த தகவல்கள்..
    எங்கள் அலுவலகத்தின் ஒரு பெரிய வேலை செய்ய ஒரு வடஇந்திய இளைஞர் கூட்டத்தை ஒரு காண்ட்ராக்டர் அழைத்து வந்தார்.. அவரிடம் காரணம் கேட்டேன்.. ”சார்.. இவனுங்க ரொம்ப நேரம் வேல பாக்கறாங்க.. கூலியும் கம்மி.. நம்மாளுங்க சட்டம் பேசுவானுங்க.. அதிக கூலி கேக்கறாங்க..” என்றார்.. மேலும் விசாரித்ததில் நம்மவர்கள் தற்போது படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. அதனால் குறைவாக தினக்கூலி ஆட்கள் கிடைககிறார்கள்.. ஒரு வகையில் அதுவும் உண்மைதான் நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம் ..

    ReplyDelete
  6. Dear Jackie,
    I can imagine the labour put behind by you in this post. This is a very beautiful analysis of the lifestyle of north Indians in Chennai and how they survive, why they came and what the are the benefits they get here. Fantastic Analysis.
    I expect such posts from you more.
    The same is the case with Gujarat also. The locals do not come for petty jobs like plumbing, electrical and tiny civil work. We need to depend upon the people from Bihar, UP Jharkand etc.

    ReplyDelete
  7. நல்லதொரு ஆய்வு, மிக சிறந்த பதிவு, தமிழை இப்படி யாரவது வட நாட்டிலிருந்து வந்து வளர்த்தா சரிதான்

    ReplyDelete
  8. நல்லதொரு ஆய்வு, மிக சிறந்த பதிவு, தமிழை இப்படி யாரவது வட நாட்டிலிருந்து வந்து வளர்த்தா சரிதான்

    ReplyDelete
  9. திரைக்கடல் ஓடி திரவியம் தேடு!!! சென்னைல மட்டும் இல்ல சவுத் இந்திய பூராவும் இவுங்க டேரா போட்டு இருக்காங்க...

    ReplyDelete
  10. நேர்ல பாத்த மாறி இருந்துச்சு

    ReplyDelete
  11. இன்னும் சில வருடதள அவங்க கூட்டம் அதிகம் ஆகிடும். உங்களின் ஆய்வு நல்லாருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு, இன்று திருப்பூரில் பல பெரிய ஏற்றுமதி, மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் இவர்களை நம்பித்தான் இருக்கிறது.
    இந்த எச்சில் துப்பும் பழக்கத்தைதான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  13. idanale nam tamizarkaluku velai illaddaga edo oru patirikail padita nibnaivu

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner