Thanks Face Book Friends/ நன்றி முகநூல் நண்பர்களே..


நேற்று நைட்டு  பதினோன்னரைக்கு போன்....


அண்ணே மதன் பேசறேன்... இந்த நேரத்துக்கு  டிஸ்டப்பண்ணறதுக்கு... (என் கூட வேலை பார்க்கறகேமராமேன்)

டேய் விஷயத்துக்கு வாடா...

பிரண்ட் ஒய்ப்.. நாளைக்கு காலையில கர்ப்பபையில ஆப்பரேஷன் ரேர் குருப் ஓ நெகட்டிவ் வேணும்..

அப்படியா?

வண்ணாரபேட்டை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்காங்க...பாவம் அலைஞ்சிக்கிட்டு இருக்காரு... டக்குன்னு உங்க  நியாபகம் வந்துச்சி... அதான் போன்  பண்ணறேன்...தப்பா நினைச்சிக்காதிங்க...

டேய் பணம் காசல  என்னால உதவி பண்ணமுடியாது... என் உடல் உழைப்பை கொடுக்க முடியும்.. கண்டிப்பா முயற்சிக்கின்றேன்... என்று சொல்லி போனை வைத்து விட்டேன்..

நைட்டு பதினோரு மணிக்கு ஆபிஸ்ல இருந்து அப்பதான் வீட்டுக்கு வந்தேன்... செம டயர்டு.. யாருக்கு போன் செய்யறது.. ஜஸ்ட் டயல் போன் பண்ணி பிளட்  பேங்க்  லிஸ்ட் வாங்கி..... அதை வாங்கி போன்  செய்து  இந்த நேரத்தில் வேலைக்காவது என்று சட்டென முகநூல்  நண்பர்களுடன் இந்த செய்தியை கீழே இருக்கும் விதமாக அடித்து போஸ்ட் செய்தேன்.


முகநூல் நண்பர்களே ஒரு அவசர ரத்தான உதவி...நாளை 26/02/13 காலை எழுமணிக்குள் நண்பரின் மனைவிக்கு கர்பப்பையில் ஆப்பரேஷன்...ஓ நெகட்டிவ் ரத்தம் தேவைபடுகின்றது.. எல்லா இடத்திலும் அலைந்துக்கொண்டு இருக்கின்றார்கள்...வடசென்னையில் அரசுமருத்தவமனையில் சேர்த்து இருக்கின்றார்கள்...ஓநெகட்டிவ் உள்ளவர்கள் நண்பரை தொடர்பு கொள்ளவும்...புண்ணியமாக போகும்... பெயர் வீரவேல்....கைபேசி எண்..9940292486...முடிந்தளவு ஷேர் செய்து உதவ வேண்டுகின்றேன்..


போஸ்ட் போட்டுவிட்டேன்...  போஸ்ட் போட்ட பத்தாவது நிமிஷம் எனக்கு   நெருங்கிய நண்பர் போன்  செய்து... நம்ம சர்க்கிளில்  யார் ஜாக்கி ?என்று வினவினார்...

நம்ம சர்க்கிள் இல்லை.. கூட வேலை செய்யற கேமராமேன்பையன்  மதன்னு பேரு... 

அவனோட பிரண்டு ஒய்ப்பை ஆஸ்பிட்டல சேர்த்து  இருக்காங்க,... அதான்....

அப்ப பிரண்ட்ன்னு போட்டு இருக்கே...

டேய் ஒரு அவசர உதவி... அப்ப போய் விலாவரியா எழுதிக்கிட்டு இருப்பாங்களா?

என் பிரண்ட்ன்னு  போட்டேன்.. ஏன்  என் நண்பரோடு நண்பர் என் பிரண்டாவே இருந்துட்டு போவட்டுமே...இங்க பேஸ்புக்குல300 பேருக்கு மேல எனக்கு யாரையும் தெரியாது... அவங்க எல்லாம் என் பிரண்ட் லிஸ்ட்ல இல்லை...?


முஞ்சி ,பேர் தெரியாதவன்  எல்லாம் போன் பண்ணி அண்ணே நல்லா இருகிங்களா-? யாழினி  எப்படி இருக்கா? அண்ணி நலமான்னு போன்ல கேட்கறானே.... அவன் எனக்கு முன்ன பின்ன பழக்கமா? சொல்லு தம்பி எல்லாரும் நலம்ன்னு பதில் சொல்லறோம் இல்லை.. அப்படித்தான்  இதுவும் என்றேன்..

இல்லை நம்ம சர்க்கிள் நினைச்சு போன் செஞ்சேன்....

நம்ம சர்க்கிள்ன்னு  வச்சிக்கோ... பேசற நேரத்துக்கு உன் சைடுல உன் சார்க்கிள்ள யாரு ஓ நெகட்டிவ் ரேர் குருப்புன்னு செக் பண்ணு....

சரி மச்சி....

 போட்ட அரைமணிக்குள்ள 75 பேர் அதை பேஸ்புக்குல ஷேர் பண்ணி இருந்தாங்க...

===
முக்கியமாக ஒரு தனியார் மருத்தவமணையில் அந்த பேஷன்ட் இருந்து இருந்தால் நான் கொஞ்சம் கவலை பட்டு இருக்க மாட்டேன்..காரணம் நிச்சயம் காசு அதிகம் புடுங்கினாலும் பிளட் மோஸ்ட்லி ஏற்ப்பாடு பண்ணி கொடுத்துருவாங்க,... பட்  இது கவர்மென்ட் ஆஸ்பத்திரி...

ஒன்றரை மணிநேரம் கியூவுல நின்று ஓபி சீட்டு வாங்கின  கால் வலியின் வேதனை என்னால் இன்றும் என்னால் உயர முடியும்..  மண்டை  காய்ஞ்சி இருந்தால் எப்படி எல்லாம் உதாசினப்படுத்துவார்கள் என்று நன்றாக தெரியும்...


12 மணிக்கு மேல யாருக்கும் போன்  பண்ணி டிஸ்டர்ப் செய்ய விரும்பவில்லை,.. இருந்தாலும் நண்பர் ராஜசேகர் அவரோட சீர்காழி நண்பர்... அப்பாஸ் நம்பரை கொடுத்தார்... அவருக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை...


காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று உறக்கம் வராமல் படுத்தேன்.
காலையில் 5 மணிக்கு எழுந்து பேஸ்புக்  பார்த்தேன்...104 பேர் ஷேர் செய்து இருந்தார்கள்...


வீரவேல்... நான் மதன் பிரண்ட்  ஜாக்கி பேசறேன்...  பிளட்டு கிடச்சிடுச்சா?

இன்னும்  இல்லைங்க...

 என்ன பிரச்சனை...


கர்ப்பபைல இன்பெக்ஷன். பிளட் இருக்குன்னு சொன்னாங்க... இப்ப இல்லை வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டோம்ன்னு சொல்லறாங்க...நேத்து  சாயங்காலத்துல இருந்து அலையறோம்...

நைட்டுதான் சொன்னாங்க.... கண்டிப்பா பிளட் கெடச்சிடும் கவலைபடாதிங்க. மேலும் பேசாமல் போன் வைத்தேன்.

சட்டென ராஜசேகர் நண்பர்.  அப்பாசுக்கு போன்  செய்து ரத்த வங்கி எண் வாங்கி. போன் செய்யலாம் என்று நினைப்பதற்குள்.... வீரவேலிடம் இருந்து போன்...


சார் பெரம்பூர்ல இருந்து பிளட் கொடுக்க ஒருத்தர் வரேன்ன்னு சொல்லி இருக்கார்... அவர் பேஸ்புக்குல  விஷயம் பார்த்துட்டு வராராம். அப்புறம் சொல்ல மறந்துட்டேன்... நைட்டு ஆமிர்ன்னு கல்ப்புல  இருந்து போன் பண்ணி சென்னையில ஒரு  போன்  நம்பர் கொடுத்து பேச சொன்னார்... ரொம்ப நன்றிங்க..

திரும்ப கொஞ்ச நேரத்துல போன்...

 சார்...  பிளட் கொடுக்க வந்துட்டாரு..

அவருக்கிட்ட போன்  கொடுங்க...

சார் ரொம்ப நண்றிங்க....உங்க பேர்?

கிருஷ்ணபாபு வெங்கடேஷ் என்றார்.. பேஸ்புக் பார்த்துட்டுதான் வரேன் என்று சொன்னார்...ரொம்ப நன்றிங்க... ரேர் பிளட் கொடுக்க வந்ததுக்கு ரொம்ப நன்றி... 

என்னைபற்றி  விசாரித்தார்...திரும்ப பேசுகின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்...ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது....

பேஸ்புக்குல இத்தனை  பேர் ஷேர் பண்ணதால இது சாத்தியம்..  ஷேர் செய்த அத்தனை  நண்பர்களுக்கு என்  நன்றிகள்...

வீரவேல் ஆறாவதுதான் படிச்சி இருக்கார்.... அவரு எங்க போய் இந்த சென்னையில அலைவார்..? உலகம் ரொம்ப  சின்னதாகி விட்டது... யாரோ ஒரு நண்பர் சவுதியில் இருந்து சென்னை எண் கொடுக்கவேண்டும் ? அவருக்கு என்ன தலையெழுத்தா....ஷெர் செய்ததோடு மட்டும் அல்லாமல் ரேர் பிளட் டோனர் நம்பர் கொடுத்து இருப்பது எல்லாம் பெரிய விஷயம்..


நல்லது..... இது நம்மால் சாத்தியம் ஆயிற்று.... நம் அனைவரால்  சாத்தியம் ஆயிற்று....

யார் யார் சிவம்? நீ, நான், சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்...!
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்!
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா!


மிக்க நன்றி நண்பர்களே....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

18 comments:

  1. கண்கள் கலங்கும் சில தருணங்கள்

    ReplyDelete
  2. இதை படித்து முடிக்கும்போது என் கண்களில் கண்ணீர் முட்டுகிறது நன்றி ஜாக்கி

    ReplyDelete
  3. உயிர் காப்பான் தோழன்,யாரா இருந்தாலும் நைட்டு பதினோன்னரைக்கு முழு உடல் அசதி இருக்கும்.இருந்தும் அசராமல் செய்த உதவி.என்ன சொல்ல? வார்த்தை இல்லை

    ReplyDelete
  4. jackie-yin reachche thani.....thodarattum ungal nall pani....

    ReplyDelete
  5. Helping hands are better than praying lips. இதைத்தான் உங்க பதிவு நியாபகப்படுத்துது..மனிதாபிமானம்’ங்கிறது வார்த்தைகள்ல இல்ல, செயல்லதான் இருக்குன்னு நிரூபிச்சிட்டீங்க.. அத்தனை ராத்தியிலையும் உங்களுடைய சிரமத்தை பொருட்படுத்தாது உதவி இருக்கீங்க.. நிச்சயமா கடவுள் அருள் உங்களுக்கு இருக்கும்.. அந்த நண்பருடைய மனைவி விரைவாக நலம் பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்...

    ReplyDelete
  6. நல்லது..... இது நம்மால் சாத்தியம் ஆயிற்று....
    ஜாக்கி யால் இது சாத்தியம் ஆயிற்று..

    சரியான நேரத்தில் உதவுபவன் சாரசரி மனிதனைவிட மேலானவன் இந்த சமூகத்தில் நீங்களும் மேலானவர்கள் தான் ஜாக்கி அண்ணே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அன்புதான் சிவம் . நல்ல உள்ளங்களுக்கு நன்றி .

    ReplyDelete
  8. டெக்னாலஜி ஆல் எந்த தூரம் நல்லது செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.இது நாள் வரையில் உங்களது webpage-ஐ மட்டும் பார்த்து கொண்டு இருந்தேன்.இன்றிலிருந்து உங்களது facebook page-ஐயும் follow செய்ய போகிறேன்.உங்களது உதவியை நான் பாராட்டுகிறேன். கடைசியில் நீங்கள் "அன்பே சிவம்" பாடலை எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  9. FACEBOOK ஐ வெறும் பொழுதுபோக்குக்கும், வெட்டி அரட்டை அடிப்பதற்கும் உபயோகப்படுத்தும் உங்களைபோல் உள்ளவர்களை பார்த்தால் தான் FACEBOOK ல் இணையவேண்டும் என்று விருப்பம் வருகிறது.

    நன்றி!

    ReplyDelete
  10. மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு நீங்களும் உங்கள் நண்பர்களும் (எங்களுக்கும் நண்பர்கள்) சாட்சி. நெகிழவைத்து விட்டீர்கள்...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete


  11. கால‌த்தே செய்த‌ உத‌வி........

    உ.தா அண்ண‌ன் ரத்த தானம் செய்ய விரும்புவர்களை தொடர்பு கொள்ள http://bloodhelper.com என்ற இணைய முகவரியை ஒரு பதிவில் (காவேரி கணேஷ் மூலம் அறியப்பெற்றதாக..)தெரிவித்திருந்தார். எனது உறவினர் ஒருவருக்கு இந்த தளம் மூலம் நான் உதவி பெற்றதுண்டு....

    ReplyDelete
  12. மனிதம் இன்னும் மரிக்கவில்லை....கிரேட்

    ReplyDelete
  13. manitham irukum varai ithu nadakum jakieee...

    uthavi seinja yellarukkum nadrigal....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner