அன்பே
சிவம் படத்துல ...மாதவன் கமல் பேசற சீன் அது...
மாதவன்
கமலை பார்த்து சொல்வாரு....
உங்களை
மாதிரி எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை.
எனக்கு
கடவுள் நம்பிக்கை இல்லைன்னு யார்
சொன்னதுன்னு கமல் மாதவன்கிட்ட கேட்பாரு?
ஓ
இப்ப திடிர்ன்னு கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?
ரொம்ப
நாளவே இருக்கு...
யார்
அந்த கடவுள்
கமல்
மாதவனை கை காட்டுவார்...........
மாதவன்
சொல்லுவாரு... I
don’t unnderstand your joks man.
Its
not joke… முன்ன பின்ன தெரியாத அந்த சின்ன பையனுக்காக கண்ணீர் விடறிங்களே... அதுதான் கடவுள்.....
தேங்யூ...
என்ன திடிர்ன்னு பணிவு....?
ஏன்னா
நானும் கடவுள்
நினைச்சேன்
ஏதாவது ஹூக் இருக்கனுமே?
சரி
நீங்க கடவுள்ன்னு யார் சொன்னது?
மலைமேல
பொட்டிக்கடை வச்சி இருக்கற ஒரு அம்மா
சொல்லிச்சி... அதுல இருந்து நானும் நம்ப ஆரம்பிச்சிட்டேன். புரியலை இல்லை?
புரியக்கூடாது அதுதான் கடவுள் என்பார் கமல்...
எதிர்பார்ப்பு இல்லாமல் சக மனிதர்களுக்கு உதவிகள்
செய்திடும் அத்தனை மனிதர்களும் கடவுள் என்பதைதான் அன்பே சிவம் திரைப்படம்
உணர்த்தியது....
அது
போல என் வாழ்வில் நிறைய கடவுள்களை சந்தித்து
இருக்கின்றேன்.... நானும் கடவுளாகி இருக்கின்றேன்...
பக்கத்து
அக்கத்துல இருக்கற மற்றும் ஆபிஸ்ல
கூட வேலை செய்யறவன்க , நமக்கு தெரிஞ்சவன்க கடவுளா
ஆவுறதும் ,இருக்கறதும் பெரிய விஷய மயிரே
கிடையாது...
ஆனா வெளியூர்ல நட்ட நடுரோட்டுல நிற்கும் போது கடவுள்
அவதாரம் எடுக்கறாங்க பாருங்க அவன்தான் பெரிய கடவுள் என்பேன்..
நானும் என்
மனைவியும் ஊட்டி டூ முதுமலை மசினிக்குடி வழியில் தனியாக போகும் போது பைக் பஞ்சாராகி நின்ற
போது, நட்ட நடு வனத்தில் உதயக்குமார்
என்பவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவினாரே அவர்தான் என்னை பொருத்தவரை பெரிய கடவுள்…..
என்னது
ஊட்டி கடவுளா? கீழ இருக்கும் பதிவை படிச்சா உங்களுக்கே புரியும்....
அது
போல உலகில் நிறைய கடவுள்கள் இருக்கின்றார்கள்....
அப்படி ஒரு ரெஸ்ட்டாரன்ட் பெண் கடவுளை இந்த படத்தில் காட்டி இருக்கின்றார்கள்...
==================
The
Band's Visit-2007 படத்தின்
ஒன்லைன் என்ன?
எட்டு பேர் கொண்ட இசைக்குழு தவறான
விலாசத்தில் சென்று அல்லல் படுவதுதான்
படத்தின் ஒன்லைன்..
====================
The
Band's Visit-2007 இஸ்ரேல் படத்தின் கதை என்ன?
எகிப்த்திய
போலிஸ் இசைக்குழ ஒன்று எட்டு பேருடன்
இஸ்ரேலுக்கு ,அரபு கல்சுரல் சொசைட்டியில் இசை நிகழ்ச்சி நடத்த செல்கின்றது. ஆனால் விலாசம்
மாறி பாலைவனகிராமத்தில் தஞ்சம் அடைகின்றார்கள்... பணம் இல்லை , அது சின்ன கிராமம்,தங்க
ஓட்டலும் இல்லை, பசி.. அவர்களுக்கு ஒரு
சின்ன ரெஸ்ட்டாரண்டில் இருக்கும் பெண்மணி உதவி செய்ய முன் வருகின்றார்...
அவர்கள் எப்படி அந்த இரவை அந்த பாலைவனத்தில் இரவை கிழித்து
சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு சென்றார்களா? என்பதை வெண்திரையில் காணுங்கள்.
==============
படத்தின்
சுவாரஸ்யங்களில் சில...
ஏர் போர்ட்டில்
இசைக்குழு தலைவன் டிசிப்ளின் பற்றி
பேசுவதும் அதனை குழுவில் உள்ளவர்கள்
பணிவதும்.. அதில் இளவட்டம் ஒன்று
எதிர்ப்பதும் அந்த இரண்டு சினிலேயே
அந்த குழு பற்றிய விவரத்தை சொல்லி விடுகின்றார்கள்.
போட்டோ
எடுப்பதில் காட்டும் பர்பொக்ஷன் அங்கு
ஏற்ப்படும் இடர் பாடு என்று ரசிக்க
வைக்கின்றார்கள்...
கவுந்து
அடித்த எழுந்தாலும் மீசையில் மண்
ஒட்டக்கூடாது என்று இருக்கு இசைக்குழு
தலைவன் எதார்த்தாம் புரிந்து மெல்ல மெல்ல மாறுவதும்... இவர்கள் நிலைமை புரிந்து தானே உதவ முன் வருவது.... இரண்டு பேரும்
வெளியில் காரில் சென்று வரும் போது அவர்கள் கதைகளை பகிர்வது அற்புதம்...
உலகில்
எது கஷ்டமான காரியம் என்று அந்த பெண் குழு தலைவனிடம் கேட்க மீன்பிடிப்பது என்று
சொல்வதும்.. அதில் என்ன பெரிய அட்வென்சர்
இருக்கின்றது என்று கேட்க... அலை,நுரை
அதன் சத்தம் எல்லாம் சிம்மபனியை ஒத்து இருக்கும் என்று சொல்லி விட்டு அந்த மீன்
மேட்டர் ஊடே அப்படியே குடும்ப கதைக்கு உள்ளே நுழைவது கவிதை..
இரவில் எப்படி இசையை கன்டக்ட் செய்வது என்று அந்த
பெண்ணுக்கு சொல்லி தருவது அழகு...
மறுநாள்
கிளம்பும் போது எல்லோரும் சொல்லி விட்டு
வந்தாலும் அந்த இரவு கொடுத்த
சந்தோஷத்தை அந்த இசைக்ழு தலைவனும் அந்த ரெஸ்டரன்ட் பெண்ணும் உணர்ந்து, பிரிய மனம்
இல்லாமல் பிரியும் அந்த காட்சி கவிதை
என்றால்...பை சொல்ல சின்ன கையசைப்பும் அப்படியே அவர்கள் இசைக்குழுவுக்கு கண்டக்ட்
செய்ய அவர்கள்கை அசைக்க அப்போது வரும் பின்னனி இசை அருமை...
அதே போல அவர்கள் தங்கிய நகரத்தின் பெயரை பேப்பரில் எழுதி அவனிடம் கொடுத்த ஏப்போது நேரம் கிடைத்தாலும் இங்கே வா என்பதாய் சொல்லும் அந்த விஷூவல் டீரிட் அருமை..
கேமரா பிரேம் அத்தனையும் அருமை... மற்றும் கவிதையான பிரேம்கள்.
இந்த படம் ஆஸ்கார் அவார்டுக்கு பாரின் லாங்வேஜ் கேட்டகிரியில் இஸ்ரேல் சார்பாக அனுப்பிய படம்.. பட் இந்த படத்தை ஆஸ்கர் குழு நிராகரித்து விட்டது.
காரணம் படத்தில் 50 விழுக்காடுக்கு மேல் ஆங்கிலம் தாய் மொழியை விட அதிகமாக உபயோகபடுத்தி இருக்கின்றார்கள் என்பதுதான் நிரகரிப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம்.....
இந்த படம் எடுக்க நான்கு வருடங்கள் ஆனது என்று இயக்குனர் Eran Kolirin சொல்கின்றார்... ஏன் இவ்வளவு நாள் இந்த படத்துக்கு எடுத்துக்கொண்டார் என்பது விளங்கவில்லை... ஆனால் இந்த படம் பீல் குட் மூவி...
அரேபிய,இஸ்ரேல் உறவின் வேறு ஒரு பரிணாமத்தை இந்த திரைப்படம் சொல்கின்றது... இது பிடிக்காது ஆஸ்கார் கமிட்டியில் இருக்கும் ஒரு பொறம் போக்கு இதனை நிராகரிக்க இப்படி ஒரு காரணத்தை சொல்லி இருக்கலாம் என்று பட்சி சொல்கின்றது.
ஆனால் இந்த படத்தில் நடித்த Ronit Elkabetz விழாவில் பேசும் போது இந்த படம் இரண்டு விஷயத்தை கற்றுக்கொடுத்து இருக்கின்றது... அரேபியர்களை முதல் பார்வையில் எப்படி பார்க்க வேண்டும் என்று....
================
படத்தின்
டிரைலர்..
=======================
படக்குழுவினர்
விபரம்.
Directed by
Produced by Ehud Bleiberg
Koby Gal-Raday
Guy Jacoel
Eylon Ratzkovsky
Yossi Uzrad
Written by Eran Kolirin
Starring Saleh Bakri
Ronit Elkabetz
Sasson Gabai
Uri Gavriel
Music by Habib Shadah
Cinematography Shai Goldman
Editing by Arik Leibovitch
Distributed by Sony Classics
Release date(s) 19 May 2007
Running time 87 minutes
Country Israel/France/United States
Language Arabic, English, Hebrew
Box office $14,555,884
=============
பைனல்கிக்.
இந்த படம் பீல் குட் மூவீ... ரொம்ப நாள் ஆகிவிட்டது இப்படி படம் பார்த்து.. நேற்று யூடிவி வேல்ட் மூவிசில் இந்த படத்தை பார்த்தேன்... சேனல் மாற்றும் போது இந்த படம் கண்ணில் பட்டாமல் மிஸ் பண்ணாமல் இந்த படத்தை பாருங்கள்.
==============
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உண்மையின் கணம் உரைக்கும் போது தெரிகிறது.அது போல் தங்கள் விமர்சனம்.
ReplyDeleteThanks, Jackie. I will check it out.
ReplyDeleteThanks anna. will see this movie.
ReplyDeleteits a feel good movie, worth watching it
ReplyDeleteIts a feel good film, worth watching it......
ReplyDeleteIt's a feel good movie at the same time not worth for Oscar
ReplyDeleteNativity of the real Egyptians missing in the movie
They were shown too polite and decent.....which you will have to verify with the Indian workers in the Middle East
It's a feel good movie at the same time not worth for Oscar
ReplyDeleteNativity of the real Egyptians missing in the movie
They were shown too polite and decent.....which you will have to verify with the Indian workers in the Middle East
Jackie, the last scene which she was written on the bit papper is the destination place where they were go to conduct orchestra. She said that, "This is the place", also, in the starting of the movie he asked her the place name. Am is right? Did i understand the movie?
ReplyDeleteJackie, the last scene which she was written on the bit papper is the destination place where they were go to conduct orchestra. She said that, "This is the place", also, in the starting of the movie he asked her the place name. Am is right? Did i understand the movie?
ReplyDelete