உப்புக்காத்து...25


ஹலோ ஜாக்கி சார்..


ஆமாம் சொல்லுங்க...

என் பெயர்  செந்தமிழ்...  இப்பதான் உங்க முகநூல்  பார்த்தேன்....  பிறந்தநாள் வாழ்த்துகள்.

மிக்க நன்றி செந்தமிழ்...

பேசலாமா..? ரொம்ப பிசியா இருந்தா அப்புறம் பேசறேன்..

இல்லை இப்ப பிசியில்லை... பேசுங்க...  இன்னைக்கு  நான்  ஆபிஸ்க்கு லீவ்...

உங்க  மிசஸ்க்கும் இன்னைக்குதான் பர்த்டேன்னு பார்த்து ரொம்ப சர்பிரைஸ் ஆயிட்டேன்....அவுங்களுக்கும் என் பர்த்டே விஷஸ் சொல்லிடுங்க...யாழினி எப்படி இருக்கா?

நல்லா இருக்காம்மா...

ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உங்க கூட பேசறது..எதேச்சையா ஏதோ தேடும் போது  உங்க பிளாக் பார்த்தேன்......ரொம்ப நல்லா இருந்திச்சி... முக்கியமா உப்புக்காத்து ரொம்ப நல்லா இருந்திச்சி....

மிக்க நன்றிம்மா...

உப்புக்காத்துல மீட்டர் கடை வச்சி இருக்கும் பஷிர் பாயை பற்றி படிச்சேன். வெரி இன்ரஸ்ட்டிங்... சான்சே இல்லை... உங்க எழுத்து ஏதோ என் கூட பக்கத்துல உட்கார்ந்து பேசறது போல இருந்துச்சி...ரொம்ப நல்லா எழுதறிங்க சார்......

  செந்தமிழ் மிக்க நன்றி.

சார் ஒருவாராம செம டைட் ஒர்க்...நான் இங்க சவுத் கலிபோர்னியாவுல ரிசர்ச்சரா  இருக்கேன். தமிழ்ல  யாராவது பேச மாட்டாங்களான்னு  தவிச்சேன்.... உங்ககிட்ட இப்ப தமிழ்ல பேசறது ரொம்ப  சந்தோஷமா இருக்கு சார்.....

செந்தமிழ் தயவு செய்து சார்ன்னு சொல்லாதிங்க... நீங்க சின்னவங்களா  இருந்தாலும் பெரியவங்களா இருந்தாலும் என்னை  ஜாக்கின்னு கூப்பிடுங்க...பிளீஸ்...

இல்லை அப்படியே பழகிடுச்சி...வேணும்னா அண்ணன்  கூப்பிடுறேன்..

ரொம்ப நல்லது...  சார்.... வெள்ளக்காரன் விட்டு விட்டு போனது நாம இன்னும் அதை புடுச்சி தொங்கிகிட்டு இருக்கோம்... இன்பேக்ட் ,நாணும் அதை சில நேரங்களில் கட்டிக்கிட்டு அழுது தீரவேண்டியதா இருக்கு.. என்ன செய்ய?

  செந்தமிழ் உங்களை பத்தி சொல்லிங்க..

(நிறைய பேசினாலும் தன்னம்பிக்கையையோடு ஏழ்மையை விரட்டிய ஒரு கிராமத்து பெண்ணை.... சுவாரஸ்யத்தோடு சுருக்கமாக  பார்க்கலாம்.)

அது பெரிய கதைன்னா... சேலம் பக்கத்துல ஒரு சின்ன கிராமம்... என் அப்பா விவசாயி.. ஆனா வெகுளி... வெகுளின்னா வெளுத்தது எல்லாம் பால் என்று  எண்ணுகின்றவர்...  அதனால நிறைய கடன்கள் ஏமாற்றிய உறவுகள்ன்னு அது பெரிய  கதை... அதுல பல உப்புக்காத்து எப்பிசோட் எழுதலாம்..


எங்க வீட்ல நான் அண்ணன் ரெண்டு பேருதான்...எங்க அம்மா  அப்பா எங்க ரெண்டு பேரையும் வறுமை சூழ்நிலையிலும்  எங்களை படிக்க வச்சாங்க.... பக்கத்து டவுன்லத்தான் என் பள்ளி படிப்பு...  அந்த பள்ளிக்கூடத்துக்கு என் கிராமத்தில் இருந்து படிக்க போன, ஒரு பொம்பளை புள்ளை நான் தான்...

 எட்டு கிலோமிட்டர்ல அந்த ஸ்கூல்.... ஒன்னரை  ரூபாய் பஸ்   சார்ஜ்..  அதை கொடுக்க கூட என்கிட்ட அப்ப காசு கிடையாது...  அந்த ஒன்னரை ரூபாய் மிச்சம் பிடிக்க நிறைய நாட்கள் நடந்து போய் இருக்கேன்.


 எங்க அம்மா என்னையும் என் அண்ணாவை இரண்டு பேரையும் ஒரே மாதிரிதான்  டிரிட் செஞ்சாங்க... பொம்பளை  புள்ளை வீட்டு வேலை செய்யனும்... ஆம்பளை பிள்ளை படிக்கனும் அப்படிங்கற கதை எல்லாம்  எங்க வீட்ல இல்லை... ரெண்டு பேருமே சமம்... அடிச்சி புடுச்சி....பிளஸ் டூ முடிச்சேன்.... ஆனா  எல்லா வகுப்பிலயும் நான்தான் பர்ஸ்ட்... 

 சேலம் சாஸ்த்தா காலேஜ்ல எனக்கு சீட் கிடைச்சது.... என்ன படிக்கனும் என்ன செய்யனும் எனக்கு எதுவும்  தெரியாது.. எங்க ஸ்கூல் டிச்சர்ஸ்தான் என்னை  வழி நடத்தினார்கள். ஆங்கிலம் ததிக்கனதோம்தாம்....

 பிகாம் வரைதமிழ்  மீடியம்... மாஸ்டர் டிகிரி  பண்ணறப்ப எல்லாம்  இங்கிலிஷ் ரொம்ப  கஷ்டப்பட்டேன்... அதுக்கு எங்க  காலேஜ்ல மேட்டுக்குடி பசங்க என்னை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுவாங்க...ஒரே ஒரு  சுடிதார்தான் அதை  வராம் புல்லா துவைச்சி துவைச்சி காய வச்சி போட்டுதான் காலேஜ்  போய் படிச்சேன்....


சாஸ்தா கலேஜ்ல ஒரு  ஆல் இண்டியா எக்சாம்... அதை படிச்சா எனக்கு ஸ்காலர்ஷிப்  கிடைக்கும்னு நினைச்சி படிச்சேன்... அதுல அந்த கலேஜ்ல நான்தான் பர்ஸ்ட்... அது மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் அந்த எக்சாம் எழுதுனதுல 340 பேர்தான் பாஸ் செஞ்சாங்க... 

அதுல நானும் ஒருத்தி... நான் ஸ்கலார்ஷிப்பை எய்ம் பண்ணிதான் அந்த எக்சாம்  அட்டன் செஞ்சேன்... ஆனா அது அமெரிக்காவுல ரிசர்ச்  செய்ய  வாய்ப்பை எனக்கு கொடுக்கும்ன்னு நான்  நினைச்சிபார்க்கலை..


 பிஹெச் டி  படிக்க சென்னை வந்தேன்... இரண்டு  காலேஜ்ல வேலை பார்த்தேன்.... நான் மொத மொத அமெரிக்காவுல ரிசர்ச் பண்ண  அப்ளை பண்ண  முத கம்பெனியிலயே எனக்கு வேலை கிடைச்சிடுச்சி....


இன்னைக்கு சவுத் கலிபோர்னியாவுல ரிசர்ச்சரா இருக்கேன்... இப்ப கீரின்  கார்டு அப்பளை பண்ணி இருக்கேன்....


இந்த கதையை கேட்ட போது அவளின் தன்னம்பிக்கை  அதற்கான  உழைப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.... ஒரு ஆண் வெளியே வந்து  போராடி வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயமே இல்லை ஆனால் இந்த பெண்ணின் மன உறுதியும் என்னை மிக  சந்தோஷப்படுத்தியது...


ஜாக்கி அண்ணே  உங்களுக்கு  ஒன்னு தெரியுமா? ஒரு செட் டிரஸ்தான் எனக்கு இருந்திச்சி... ஆனா  இப்ப நான் லாண்ட்ரிக்கு துணி போட்டு  ஆறு மாசம் ஆகுது.... வீட்டுல எல்லாரும் செட்டில் ஆகிட்டாங்க.... இம்ப்போர்ட் பொருட்கள் வீடுமுழுக்க நிறைஞ்சி இருக்கு...


ஜாக்கி அண்ணா நீங்க கூட சென்னை மெரினா பிளாட்பாரத்துல படுத்து  கஷ்டப்பட்டது எல்லாத்தையும் படிச்சி இருக்கேன்... அதனால உங்க தன்னம்பிக்கையை மட்டும் தயவு செய்து விட்டு விடாதிங்க....நீங்க நிச்சயம் நல்ல  பொசிஷனுக்கு கண்டிப்பா வருவீங்க..
அவசியம் அமெரிக்கா வந்தா கண்டிப்பா என்  வீட்டுக்கு வரனும்....

ஏய் யம்மா என்னவோ கோயம்பூத்தூர்ல  குனியமுத்தூர் கூட் ரோடு  பக்கம் வாங்கன்னு சொல்லறது போல பேசற?

அண்ணா... உங்க கிட்ட பாஸ்போர்ட் இருக்கா....?

இருக்கு....மொத ஒரு பத்து வருஷத்துக்கு பாஸ் போர்ட்  எடுத்து கன்னி கழியாம காலவதி ஆயிடுச்சி... இப்படி அடுத்து  எடுத்து இருக்கேன்.. பட் கண்டிப்பா  ஒரு நாள்  பிளைட் ஏறுவேன்....

குட் இதுத்தான் என் நம்பர் நோட் பண்ணி வச்சிக்கோங்க... ( ஏதோ ஒரு சைட் அட்ரஸ் சொன்னாள்) அந்த சைட்டுல ஆப்ர் டிக்கெட்  குடும்பத்துக்கே 40 ஆயிரம் அப்படி எல்லாம் ஆபர் வரும்.. அது போல நேரத்துல புக் பண்ணுங்க....

நான் ரிசர்சர் என்பதாலும் என் கம்பெனி பெரிய கம்பெனி என்பதாலும் விசாவுக்கு நான் உங்களுக்கு  ஹெல்ப் பண்ணுவேன்.... பேலஸ் போல பெரிய வீடு எடுத்து இருக்கேன்... மூன்று பெட் ரூம் சும்மாதான் இருக்கு.... ரெண்டு   கார் இருக்கு....  அதுல  ஒன்னை எடுத்துக்கிட்டு ஊரை பேமிலியோடு சுத்துங்க....

சரி உங்க அம்மா அப்பாவை அழைச்சிக்கிட்டு போய் இருக்கியா... இப்பதான் அப்ளை பண்ணி இருக்கேன்... இந்த வருடம் அழைச்சிக்கிட்டு போயிடுவேன்....

கல்யாணம்...?

 தமிழ்நாட்டு பையனை இங்க  தேடிக்கிட்டு இருக்கேன்... கிடைச்சதும் கண்டிப்பா உங்களுக்கு  கல்யாண பத்திரிக்கை அனுப்பறேன்..

அதே போல ஒரு பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா அண்ணே ? இங்க சர் நேம் வச்சிதான் கூப்பிடுவாங்க... இங்க யாருக்கும் என் பெயர்  தெரியாது... எங்க அப்பா பேர வச்சிதான் டாக்டர் கணேஷ்ன்னு என்னை  கூப்பிடுவாங்க..,


 அப்பா சொல்லுவாங்க... நான்  எதுவுமே படிக்கலை... ஆனா  என் பொண்ணால.....என் பேருக்கு முன்ன  அமெரிக்காவுல டாக்டர்  பட்டம் வந்துடுச்சின்னு பெருமையா சொல்லுவாரு...


உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்.... இந்த ஜாக்கி அண்ணனின் அன்பும் கனிவும்.........


 அதன் பின்   நிறைய  அமெரிக்க வாழ்க்கை முறை பற்றியும் நம்ம ஊர் வாழ்க்கை முறை பற்றியும் நிறைய பேசினாள்...
திரும்ப வாழ்த்து சொல்லி   நிறைவு செய்தாள்....


போன் வைக்கும் போது, அண்ணே ... எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையும் திறமையும் மட்டும் விட்டுவிடாதிங்க...   வளர்ச்சி பற்றிய நினைவா  இருங்க கண்டிப்பா எல்லாம் மாறும்.. என்றால்....

  என்  திறமை மீதான திமிரும் தன்னம்பிக்கையும்தான்   என்னை இன்று வரை வழி நடத்தி செல்கின்றது... நன்றி செந்தமிழ்..


அதாவது என்னை போல ஒரு கிராமத்து ஆண் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.. ஒரு பெண் அதுவும் கிராமத்து பெண்... அவள் அம்மா  நினைத்து இருந்தால் அவளை  வீட்டை சானி  போட்டு மொழுகி பத்திரம் கழுவும் வேலைகளை செய்ய வைத்து, அடுப்படியிலேயே அவள் வாழ்க்கையை  முடித்து இருக்கலாம்...ஆனால் அணையும் பெண்ணையும் இரு கண்களாக ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்காத அந்த கிராமத்து  தாய் இருக்கும் திசை நோக்கி நெடுஞ்சான் கிடையாக என் நமஸ்காரங்கள்...


ஆங்கிலம் வரவில்லை அதனால் தற்கொலை.... வகுப்பு மாணவர்கள் ராகிங் அதனால் தற்கொலை  என்று தினம் செய்திதாள்  படிக்கும் போது  நம் கல்வி சூழல் ரொம்ப  கேவலமாக இருக்கின்றது....  ஆனால் அதையெல்லாம்  மீறி... அந்த பெண் தன்னம்பிக்கையும் மனோ திடத்தோடு  வெற்றி பெற்று இருக்கின்றாளே... அது எவ்வளவு  பெரிய விஷயம்... இந்த பதிவை ஏதாவது ஒரு கல்லூரி மாணவி இந்த பதிவை படிக்க  நேர்ந்து  தன்னம்பிக்கையோடு போராடினால்  அதுவே இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்.....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

19 comments:

 1. அருமையான பதிவு !! வாழ்த்துகள் ஜாக்கி ! !

  இந்த பதிவு தன்னம்பிக்கை இல்லாதவர்களூக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை ! !

  ReplyDelete
 2. செந்தமிழ் அவர்களின் வெற்றி-க்கு நமது கல்வி முறை காரணம் அல்ல. அதற்க்கு அவர்களது பெற்றோரின் வளர்ப்பே காரணம். அனவைருக்கும் அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை.

  ReplyDelete
 3. அண்ணா நான் உங்களின் உப்பு காற்று பகுதியை விடாமல் படிக்கும் வாசகி! ஆனால் இந்த அப்பகுதியல் நானே இடம் பெறுவேன் என்று எதிர் பார்க்கவில்லை! நம் உரையாடலை அழகாக எழுதி உள்ளீர்கள்! நன்றி!

  இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியான ஆளா என தெரியவில்லை! இதை படிக்கும் போது என் மீது என் பெற்றோர் மற்றும் உங்களை போன்ற அன்பு நிறைந்தோர் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு உரிதாக என் கடமையும் இன்னும் செவ்வனே செய்யவேண்டும் என்ற உத்வேகமும், பொறுப்பும் தோன்றுகின்றது!

  ReplyDelete
 4. அண்ணா நான் உங்களின் உப்பு காற்று பகுதியை விடாமல் படிக்கும் வாசகி! ஆனால் இந்த அப்பகுதியல் நானே இடம் பெறுவேன் என்று எதிர் பார்க்கவில்லை! நம் உரையாடலை அழகாக எழுதி உள்ளீர்கள்! நன்றி!

  இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியான ஆளா என தெரியவில்லை! இதை படிக்கும் போது என் மீது என் பெற்றோர் மற்றும் உங்களை போன்ற அன்பு நிறைந்தோர் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு உரிதாக என் கடமையும் இன்னும் செவ்வனே செய்யவேண்டும் என்ற உத்வேகமும், பொறுப்பும் தோன்றுகின்றது!

  ReplyDelete
 5. என் திறமை மீதான திமிரும் தன்னம்பிக்கையும்தான் என்னை இன்று வரை வழி நடத்தி செல்கின்றது...superneeeeeeeeeeeeeee

  ReplyDelete
 6. என் திறமை மீதான திமிரும் தன்னம்பிக்கையும்தான் என்னை இன்று வரை வழி நடத்தி செல்கின்றது...

  ReplyDelete
 7. WONDERFUL ARTICLE ABOUT AN AMAZING PERSON. BEST WISHES TO HER. MAY GOD BLESS YOU.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் செந்தமிழ் :-)

  ReplyDelete
 9. மிக மிக அருமையான பதிவு.........ஜாக்கி சார்

  ReplyDelete
 10. i have no words to say what i felt after reading.Thanks for making my day brighter with this inspiring person.
  wish you all the very best...

  ReplyDelete
 11. Tiramai irunthum english sariyaga teriyamal tinarum ennaiponravargalukku periya boost.

  ReplyDelete
 12. ரொம்ப நாள் கழித்து இப்படி ஒரு பதிவு படிக்கிறேன் நன்றி அண்ணா. நிச்சயமாய் தன்னம்பிக்கை நம் தலையை நிமிர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

  செந்தமிழ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. Senthamizh / Jackie, IF you tell the site name, it would be useful for us too ...

  ReplyDelete
 14. அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு... செந்தமிழின் நம்பிக்கை அனைவருக்கும் ஒரு வழிகாட்டி... உப்புக்காத்து லையே எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது... ஜாக்கி மிக நன்றி

  ReplyDelete
 15. "ஜாக்கி அண்ணா நீங்க கூட சென்னை மெரினா பிளாட்பாரத்துல படுத்து கஷ்டப்பட்டது எல்லாத்தையும் படிச்சி இருக்கேன்... அதனால உங்க தன்னம்பிக்கையை மட்டும் தயவு செய்து விட்டு விடாதிங்க....நீங்க நிச்சயம் நல்ல பொசிஷனுக்கு கண்டிப்பா வருவீங்க.."
  "வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா மற்றும் செந்தமிழ் அக்கா, நல்ல பதிவு ஜாக்கி அண்ணா. இந்த உப்புக்காத்து நன்றாக இருந்தது " மெய்சிலிர்க்க செய்தது "

  ReplyDelete
 16. "ஜாக்கி அண்ணா நீங்க கூட சென்னை மெரினா பிளாட்பாரத்துல படுத்து கஷ்டப்பட்டது எல்லாத்தையும் படிச்சி இருக்கேன்... அதனால உங்க தன்னம்பிக்கையை மட்டும் தயவு செய்து விட்டு விடாதிங்க....நீங்க நிச்சயம் நல்ல பொசிஷனுக்கு கண்டிப்பா வருவீங்க.."
  "வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா மற்றும் செந்தமிழ் அக்கா, நல்ல பதிவு ஜாக்கி அண்ணா. இந்த உப்புக்காத்து நன்றாக இருந்தது " மெய்சிலிர்க்க செய்தது "

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner