Flight/2012 /(பிளைட்)குடிகார விமானி...



குடி குடியை கெடுக்கும் குடி உடல்நலத்துக்கு தீங்கானது என்பதை  வலியுறுத்தி ஏகப்பட்ட படங்கள் வந்து இருந்தாலும், இந்த படம் பொட்டில் அறைந்து சொல்கின்றது.. குடிக்கு அடிமையாகவேண்டாம் என்று...

  என்னதான் திறமையானவனாக இருந்தாலும் குடிக்கு அடிமையாகிவிட்டால் சமுகம் அவனை குடிகாரன் என்றே அடையாளப்படுத்தும்...  அப்படி பாதிக்கப்பட்ட ஒரு விமானியின் கதைதான்  இந்த பிளைட் திரைப்படம்.....

=============================

(Flight/2012)பிளைட் படத்தின்  ஒன்லைன் என்ன?

பனமரத்துக்கு கீழ உட்கார்ந்துகிட்டு பால் குடிச்சாலும் கள்ளு குடிச்சான்னுதான் இந்த உலகம் சொல்லும்...ஆனா  பனை மரத்துக்கு கீழ உட்கார்ந்துக்கிட்டு கள்ளு குடிச்சா சும்மா விட்டுவிடுமா இந்த சமுகம்...?

=========================


(Flight/2012)பிளைட்  படத்தின்  கதை என்ன?

டென்சில் வாஷிங்டன்...திறமையான விமானி...  எப்படி பட்ட அவசர நிலையிலும்  பதட்டபடாமல் சாதுர்யமாக விமானத்தை இயக்குபவன். அப்படி ஒரு நாள் புயல் மழையில் பணிக்கு வருகின்றான்... வரும் முன் போதை மருந்து மற்றும் இரண்டு பெக் போட்டுக்கொண்டு  காக்பீட்டுக்கு வருகின்றான்.... அதன்பின்  பிளைட் பறக்கும் போது இரண்டு கட்டிங் விட்டுக்கொள்கின்றான்.. அவன் போதாத நேரம் அந்த பிளைட் பல பிரச்சனைகளை சந்தித்து,  பெரிய விபத்தை சந்திக்கின்றது...110 பேர்  பயணம் செய்ததில் ஆறு பேர் இறக்கின்றார்கள்..டென்சில்  சாமாத்தியத்தால் மற்றவர்கள் உயிர்  பிழைக்கின்றார்கள்..  டென்சில் விபத்தில்  மயக்கமாகின்றான்...ஆஸ்பத்திரியில் இரத்த பரிசோதனையில் டென்சில் ஆல்கஹால் குடித்து இருக்கின்றான் என்பது புலனாகின்றது... அவன் சிறை சென்றானா என்பதுதான்  மீதிக் கதை?

=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

 படத்தின் தொடக்கத்தில்.....ஒரு பிளைட் பறக்குது அடுத்த ஷாட் ஒரு அலராம் அடிக்குது... அந்த அலராம் பிரேமிலேயே ஒரு  பெண்ணின் வெற்று மார்பகம்  அவுட்ஆப் போகசில்.... அதன் பின் அந்த பெண் முழு நிர்வாணத்தோடு எழுந்து பாத்ரூம் செல்கின்றாள்...


படுக்கையில் டென்சில்... என்ன ஸ்டெக்சர்? என்ன கட்டைடா ,என்று மனசு  யோசிக்கும் அளவுக்கு அவள் நிர்வாணம் பார்வையாளர்களை பரவசபடுத்துகின்றது.... பட் அந்த  நெருக்கம் கிளைமாக்சில் இந்த படத்தில்  எந்தள அளவுக்கு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றது என்பது கவிதை..


டென்சில் நடிப்பில் பின்னி இருக்கின்றார்.... சான்சே இல்லாத நடிப்பு....அன் ஸ்டாப்பபிள் படத்துக்கு பிறகு இன்னும் தன்னை  ரசிக்க வைக்கின்றார்... அது எல்லாம் கடவுள் வரம் என்று    சொல்ல வேண்டும்.

 பிளைட்டில் டென்வில் ஏறும் போது படியில்  கால் தடுக்கும்... நம்ம ஊரில் அதை சகுனம் சரியில்லை என்பார்கள்..  ஆனால் அவன் போதையில் இருந்தான் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.


சரக்கு  அடிக்ட் ஆகி விட்டால் போதைதான் நம்மை வழி நடத்தும் என்பதை பல காட்சிகளில் சொல்லி இருக்கின்றார்கள்....


இந்த படத்தின் மேக்கிங்கை பார்க்கவும்...ஒரு  மழைகாட்சிக்கு  எப்படி மெனக்கெடுகின்றார்கள் என்று....





என் பைலட் நண்பி அடிக்கடி சொல்லுவாள்... 30,000 அடி உயரத்தில் பிளைட் பறக்கும் போது காமம், பயம் இரண்டு சரி விகிதத்தில் கலந்து இருக்கும்.. அப்படி ஒரு வேலை இந்த பிளைட்டில் பறக்கும்  வேலை என்பாள்..

 அதே போல  எல்லா விமானியும் சரக்கும் அடிப்பான்..  தம்மு அடிப்பான், ஸ்டப் எடுத்துக்குவான்... இது எல்லாம் இந்த வேலைக்கு பின்னால் இருக்கும் கஷ்டம்... உயிர் பயத்தோடு  செய்யும் வேலை என்பதால் ரிஸ்க் அதிகம் என்பதால்  இந்த துறையில் இருப்பவர்கள்... நினைத்த வாழ்க்கையை மனம்  போற வழியில் வாழ்ந்துகொள்ளுவார்கள்..
கிளைமாக்ஸ் சான்சே இல்லை....


இந்த படம் இரண்டு ஆஸ்கர் விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றது.
இயக்குனர்Robert Zemeckis..... காஸ்ட் அவே,பாரஸ்ட் கோம்ப் போன்ற மனதை கொள்ளை  கொள்ளும் படங்கள் எடுத்தவர்.. டெனசில் மற்றும் இயக்குனர் Robert Zemeckis சேர்ந்து வேலை பார்க்கும் முதல் படம் இந்த  படம்தான்

===============

படத்தின் டிரைலர்.


======================

படக்குழுவினர் விபரம்



Directed by Robert Zemeckis
Produced by Laurie MacDonald
Walter F. Parkes
Jack Rapke
Steve Starkey
Robert Zemeckis
Written by John Gatins
Starring Denzel Washington
Don Cheadle
Melissa Leo
Kelly Reilly
John Goodman
Bruce Greenwood
Music by Alan Silvestri
Cinematography Don Burgess
Editing by Jeremiah O'Driscoll
Studio Parkes + MacDonald Prods.
ImageMovers
Distributed by Paramount Pictures
Release date(s)
October 14, 2012 (New York Film Festival)
November 2, 2012 (United States, Canada)
Running time 139 minutes
Country United States
Language English
Budget $31 million[2]
Box office $115,943,000


============================

பைனல் கிக்...

 இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம். டென்சில் நடிப்புக்காக... நிர்வாணமாய் தன் உடம்பை தன்னிடம் கொடுத்து , பிளைட் விபத்தில் இறந்து விட, அவள் மேல் வீண் பழி சுமக்க விரும்பாமல் டென்சில் பேசும் அந்த நேர்மையான உண்மைக்காக..


குறிப்பு.


மலேஷியாவில் இருந்து  ஒரு மாதத்துக்கு முன் ஒரு நண்பர்  பேசினார் பேர்  நினைவில்லை...... சில படங்கள்  பற்றிய சந்தேகங்கள் கேட்டு தெரிந்தார்.... பின்னர் சென்னை வந்து அலிபாய் கடையில் நிறைய டிவவி வாங்கி சென்றேன். தயவு செய்து திரை விமர்சனங்கள் முன்பு போல அதிகம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. கண்டிப்பா இனி அதிகம் இருக்கும்...நிறைய சினிமா  பார்க்கவேண்டும்... பார்போம்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
EVER YOURS...
 

7 comments:

  1. தன்னுடைய திறமை மீதான நம்பிக்கையையும் தனிமனித அறத்தையும் சிறப்பாகக் கையாண்டுள்ள படம் இது, இந்த விஷயத்தில்தான் டெம்ப்ளேட் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு நின்றது. டென்சலின் நடிப்பு வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  2. எழுதுங்க.. இன்னும் நிறைய உலகப்பட விமர்சனங்களை....

    ReplyDelete
  3. வித்தியாசமான கதையமைப்புள்ள படம்! கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  4. அண்ணே, அப்படியே இது மாதிரி நல்ல படத்துக்கெல்லாம் நல்ல டோரண்ட் லிங்கும் கொடுத்துப்போட்டீங்கண்ணா புண்ணியமாப் போகும்.

    ReplyDelete
  5. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள்!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner