சோபிக்கண்ணு....

சோபிக்கண்ணு....

யாழினியோடு வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தேன்...திடிர் என்ற ஒரு இளம்பெண் என் முன் டிஷர்ட் மற்றும் திரி போர்த்தில் தோன்றினால்... 18 வயது இருக்கும்...அவளை பார்த்த உடன் யாழினி குதித்துக்கொண்டு இருந்தாள்... என் ஆச்சர்ய புருவத்தை பார்த்துவிட்டு....

பக்கத்துல விஷால் வீட்டுலதான் குடித்தனம் இருக்கின்றோம்... அவுங்க வீட்டுக்கு யாழினி வந்தா எங்கிட்டு ஒட்டிக்குவா..

நான்வேனா கடைக்கு அழைச்சிக்கிட்டு போவட்டா..? 

சரிம்மா.... 

அதன் பின் இரண்டு நாளைக்கு முன் காலையில் ஆபிஸ் கிளம்பும் போது அவளை பார்த்தேன்.... கடைக்கு போய் விட்டு திரும்பி நடந்து வந்துக்கொண்டு இருந்தாள்... செம ஆட்டிடுயூட்டான நடை... யாழினி அவனை பார்த்ததும் சிரித்தாள்....அவளும் சிரித்துக்கொண்டே சென்றாள்...

இன்று அலுவலக வேலையாக அலைந்து விட்டு வீட்டுக்கு வந்தால் அப்பா திட்டினாருன்னு தூக்கு மாட்டிக்கிட்டு மதியானம் செத்துபோச்சி, ஆஸ்பிட்டலுக்கு எடுத்துக்கிட்டு போயிருக்காங்க என்று சொல்கின்றார்கள்...

இரண்டு முறைதான் அந்த பெண்ணை பார்த்து இருக்கின்றேன்.. ஆனாலும் இந்த மரணம் மனதை பிசைகின்றது...

அந்த பெண்ணின் பெயர் அவள் இறந்து போன இன்று மாலை ஏழுமணிக்குதான் எனக்கு தெரியும்...பெயர் சோபியாம்.... :-(
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

8 comments:

 1. கண்டிப்பான பெற்றோர்களால் இளம் வயதினரின் வாழ்க்கை இப்படி சோகமாக முடிந்து விடுகின்றது. பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு தகுந்த மன நல ஆலோசனை மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் எதிர் காலங்களில் நடைபெறாமல் தடுக்க நல்லதொரு வழியாக இருக்கும்.சோபிக்கண்ணின் ஆன்ம சாந்தி அடைய பிரார்த்திப்போம்

  ReplyDelete
 2. சில மரணங்கள் இப்படி தான்.....அவஸ்தைப்படுத்தி விடும்...!!!!! இது போன்று மரணங்கள் தான், அதன் மேல் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது ..கூடவே பணத்தை விட மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும்.....

  ReplyDelete
 3. ஈரமுள்ள நெஞ்சு வலிக்கத்தான் செய்யும். முகம் அறியாத எனக்கே பகீரென்கிறது. இரண்டுமுறை சந்தித்த உங்களுக்கு இப்படியென்றால் பெற்றவர்களுக்கு...? உயிரை விடும் அளவுக்கு உள்ள துணிச்சலை வாழ்க்கையில் காட்டலாம் என்ற எண்ணம் இருந்திருந்தால் அந்தப் பூ கருகியிருக்காது. இப்படி ஆயிரம் ஆயிரம் சோபிக்கள்...

  ReplyDelete
 4. இன்றைய இளையோர் , சிறிய தோல்விகளை கூட தாங்கும் சக்தியற்று இருக்கிறார்கள்

  ReplyDelete
 5. இன்றைய இளையோர் , சிறிய தோல்விகளை கூட தாங்கும் சக்தியற்று இருக்கிறார்கள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner