சென்னையில் மலிவு விலை உணவகம் முதல்வர் ஜெயலலிதா
அவர்களால் திறந்து வைக்கப்பட்டது...
ஆனால்புதிய தலைமை செயலகத்தை மருத்தவமணையாக
மாற்றியே தீருவேன் என்று தனது ஈகோவால் இதுவரை மக்கள் வரிப்பணம் 85 கோடி செலவு
செய்யப்பட்டு இருக்கின்றது..எப்படியும் அதை மருத்துவமணையாக மாற்றத்தான்
போகின்றார்... அதில் மாற்றுகருத்து இல்லை.
ஆனால்
இந்த மலிவு விலை உணவுகம் போன்ற ஏழை எளிய
மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்
நல்ல திட்டங்களை அவர்
செயல்படுத்தலாம். கண்டிப்பாக இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கலாம்... முதல்வருக்கும் நன்றிகள்.
விலைவாசி
உயர்வு காரணமாக ஹோட்டலில் உணவு பண்டங்களில் விலை தாறுமாறக உயர்ந்து விட்டது ..
முக்கியமக குறிப்பிட்டு சொல்ல வேண்டும்
என்று சொன்னால்.. வெஜ் ரெண்டாரண்ட் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை
இருக்கின்றதே.... கொடுமையோ கொடுமை...சரவணபவன், சங்கீதா போன்ற உணவகங்களில் ஒரு தோசை
55 ரூபாய் முதல் எழுபது ரூபாய், என்று இஷ்டத்துக்கு விலை
வைக்கின்றார்கள்...
அதை
விட கொடுமை என்னவென்றால் கோபி மஞ்சூரியன் வெஜ்ரெஸ்ட்டாரண்டில் கேட்டால் முழுக்க
முழுக்க கோபியையும் காட்டாமல், மஞ்சூரியனையும் காட்டாமல் கடலமாவை போட்டு நாளே நாலு
துண்டை போட்டு கண் முன்னாடி எடுத்து வந்து வச்சி டென்சன் பண்ணறானுங்க யுவர்
ஹானர்.,
கோழிக்கடைகடை
,மீன் கடை நாத்தத்தில் நின்று மீன் ஆஞ்சி,
கோழியை துண்டாக்கி எடுத்து வந்துஅதை கவுச்ச வாடை வராம இருக்க நல்லா கழுவி, சமைச்சி எப்படி இருந்தாலும் கவிச்ச ஸ்மெல்லு
வந்து தொலைக்கும்..... அதை போக்கனா போலவும்
ஆச்சி.... சாமியை கும்பிட்ட போலவும்
ஆச்சின்னு கட்டு ஊதுபத்தி ஏத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சி, இன்னும் சாப்பிட
வருபவன் கவனத்தை திசை திருப்ப எப்எம் ரேடியோ போட்டு , நல்ல டிசன்டான முனியான்டி
விலாஸ்ல அல்லது நான்வெஜ் ஓட்டல்ல சாப்பாடு 50 இலிருந்து 55 ரூபாய்தான்...ஆனா சரவணபவன்ல மீனி மீல்ஸ் 75, மீல்ஸ்110
ரூபாய்....
கோபி மஞ்சூரியன் 80ரூபாய்.... வெஜ்
ஓட்டல்ல...
நான்வெஜ் ஓட்டல் சிக்கன் மஞ்சூரியன் 80ரூபாய்.... ங்கோத்தா காலிபிளவரும் கோழியும்
ஒன்னாடா? பேமானிங்களா?
அதுவும்
வெஜ் நான்வெஜ் ஒட்டல் வச்சி இருக்கறவனுங்க
ரெண்டு ரேட்டுமே ஒன்னாதான் வச்சி இருப்பானுங்க..
இதை
தப்புன்னு சொல்ல முடியாது.. பேரை சம்பாதிச்சாட்டாங்க... எலைட் கஸ்டமர் வந்தா
போதும்ன்னு நினைக்கறாங்க... அதனால அந்த
ரேட்.. எலைட் கஸ்டமுரும் அங்க போறான் அதுல எந்த பிரச்சனையும் இல்லை... என்னை மாறி கிராமத்தான் என்னைக்காவது போய்
மாட்டிக்கும் போதுதான் வயிறு எறிஞ்சி தொலைக்குது.
சரி
சரி..... இப்படி ரேட் இஷ்டத்துக்கும்
வெஜ் ஓட்டல்ல ஏத்த...... இதை பார்த்து நம்ம நான் வெஜ் ஓட்டல் கார
புள்ளைங்களும்.... கோழியும் காலிபிளவரும் ஒன்னான்னு ரேட்டை ஏத்தி
தெலைச்சிட்டானுங்க..
அது
மட்டும் அல்ல.... நடைபாதை ஓட்டல்கள்தான் ரேட் கம்மியா இருக்கும் இப்ப அங்கயும்
ரேட் ஏத்தியாச்சு..... சுத்தமா இருக்கோ இல்லையோ? வறுத்த கறி வச்சி அஞ்சி இட்லி
வச்சா 50 ரூபாய் நைசா
புடுங்கிடுறானுங்க....
எனக்கு
தெரிஞ்சி காலத்துக்கு தக்க படி ரேட் ஏத்தி இருக்கறஒரே நடைபாதை கடை...தி நகர் ரோகினி ஓட்டல் பக்கத்துல அதாவது தியகராஜர் ஹால்
பேக் சைட்ல ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் .....98இல இரண்டு மூட்டை போட்டு பெரிய
தோசை இழுத்து அதில இட்லித்தூளை தூவி
பத்து ரூபாய்க்கு கொடுப்பாங்க... இப்ப அந்த தோசை 20 ரூபாய்
இப்படியெல்லாம்
ஏழை பாழைங்க வயத்தை கழுவிக்கிட்டு இருக்கும் போது அம்மா இந்த மலிவு விலை உணவகத்தை சென்னையில் திறந்து ஏழை எளியவர்கள் வாழ்வில்
பசியை போக்கி இருக்கின்றார்... நல்ல வேலை இதுல பார்சல் இல்லை....
ரைட்....சாப்பாடு
ரொம்ப முக்கியமானது நல்ல ...சைதை வணிகர் சங்கம் கம்மியான ரேட்டுல இன்னமும் கொடுத்துக்கிட்டுதான்
இருக்காங்க.
..
ஆனா
சமீபத்துல ஒரு நடை பாதை ஓட்டல் சாப்பிட்டு விட்டு மிரண்டு விட்டேன்..
இட்லி
3ரூபாய்.... வடை ரெண்டு ரூபாய், பொடி தோசை 7 ரூபாய், நெய் தோவை பத்துரூபாய்....பொங்கல்
பத்துரூபாய்... நின்று சாப்பிட்டு பார்த்தேன்....ருசி அருமையாக இருந்தது. இதுல ஏழு ரூபாய்
பொடி தோசைக்கு ஒரு கார சட்டினி, ஒரு
பொட்டுக்கடலை தேங்காய் சட்டினி அப்புறம் சாம்பார்.....
முட்டை
தோசை என்றேன்.... இல்லை ஐயா ஒன்லி
வெஜ்தான்... நான்வெஜ் கிடையாது என்றார்...
ஒரு
அம்மாவும் அவர் பிள்ளையும் அந்த தள்ளு வண்டி கடையை காலையில் மட்டும் போடுகின்றார்கள்....
முக்கியமாக பொடி தோசை ஏழு ரூபாய்..... ஒரு டீயே
இன்னைக்கு ஏழு ரூபாய் சென்னையில்.. பட்
ஒரு போடி தோசை ஏழு ரூபாய்.... தோசைக்கு எண்ணைய் வார்த்து, மாவு ஊத்தி அதுக்கு மேல
பொடியை துவனும்...
அம்மா டீயே ஏழு ரூபாய் பொடி தோசை ஏழுரூபாய்க்கு
விக்கறது பெரிய விஷயம்.. அப்படி விக்க மனசு வேனும்.....உங்க நல்ல மனசுக்கு எல்லபாம் நல்லபடியா நடக்கனும்..
ரெண்டு பொண்ணு ஒரு பையன்....பொண்ணுங்க ஏதோ படிச்சி
வேலைக்கு போவுதுங்க.. நான் இங்க கடை போடறேன்.. கலையில மட்டும்தான்... இப்பதான்
பொடி தோசை ஏழு ரூபாய்க்கு விக்கறேன்... இரண்டு மாசத்துக்கு
முன்னாடி 5 ரூபாய்தான்... இட்லி இரண்டு
ரூபாய்தான் பொங்கல் எட்டு ரூபாய்தான்..
கரென்ட்,பருப்பு,
எண்ணெய்,சிலின்டர் எல்லாம் ரேட் ஏறிபோயிடுச்சி, தக்காளி மட்டும்தான் பத்து ரூபாய் மத்த காய் ரேட்டு
எல்லாம் உங்களுக்கே தெரியும் இல்லை… அதனாலதான் கொஞ்சம் ரேட் ஏத்த வேண்டியதாப்போச்சி… செத்துப்போனா எத்த தம்பி வாரி தலையில அடிச்சிக்கிட்டு
போகப்போறோம்….???
கடைக்கு
வரும் எல்லாருமே அந்த அம்மாவுக்கு ஐயா,ராசாதான்…ராசா அந்த தட்டை எடுத்து அதுல பிளாஸ்ட்டிக் பேப்பரை வச்சிக்க
, அப்படியே ஹாட் பேக்குல இரண்டு பொடி தோசை
எடுத்து வச்சிக்க…சட்னி சாம்பார், தா அங்க இருக்கு எடுத்துக்கோ… என்று வீட்டில் சாப்பிடும்
ஒரு உணர்வை அந்த அம்மா வழங்குகின்றார்..
என்னங்க
ரெண்டு தோசை தோசைகல்லுக்கு பக்கத்துல இருக்கு…. கொஞ்சம் தடியாயிடுச்சி.. சில பேர் முருவல
கேட்பாங்க,.. அதனால் அந்த தோசையை என்ன பண்ண்ணுது..?
காக்காகிட்ட போட்டுவேன்… அதுங்க பாவம்தானே….?
நானே
அப்படி ஒரு கடை வைத்து இருந்தாலும் அந்த கடி தோசையை என்னை போல எதாவது கேனை வருதான்னு வெயிட் பண்ணி தலையில கட்டுவேன்… அந்தம்மா காக்காகிட்ட போடுது…அதுதான்
மனசு…
அப்படி
ஒரு மனசு எல்லாருக்கும் வந்துடாது…
ஆட்சி
இல்லை ,அதிகாரம் இல்லை, ஆனாலும் தான் இயங்க சின்ன லாபம் வைத்து வியாபாரம் செய்து பல
பேர் பசியை போக்கும் அவரே என்னை பொருத்தவரை அன்னலட்சுமி….
காரணம் சென்னையில் அடுத்த வேலை சோத்துக்கு அல்ல பட்டு திருவல்லிக்கேணி பஸ்டாப் அருகில் பங்கிகாம் கால்வாய் பிரிட்ஜ் மேலே.... 94 இல் கூடையில் சாப்பாடு எடுத்து வந்து விற்பபார் ஒரு கனத்த அம்மா...., ஒன்னரை ரூபாய்க்கு ஒரு கப்பு சாப்பாடும் ஒரு ரூபாய்க்கு கருவாடும் வாங்கி சாப்பிட்டு அந்த நடைபாதை கடையில் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து இருக்கின்றேன்....
இதே
ரேட்டுக்கு சென்னையில்
இருக்கும் எந்த நடைபாதை கடையிலும் இந்த சுவையோடு இந்த ரேட்டுக்கு எனக்கு தெரிந்து
யாரும் கொடுக்கவில்லை....
மூன்று
பொடி தோசை 21 ரூபாய்... சாப்பிட்டு முடித்தால் வயிறு திம்முன்னு ஆயிடுச்சி...
அந்த
தள்ளு வண்டி கடை போட்டு இருக்கும் அம்மா,
என் இறந்து போன அம்மாவை பெற்ற சத்தியா
பாட்டியை ஞாபகபடுத்துகின்றார்...
(த ரியல் அன்னலட்சுமி....)
எனக்கு
தெரிந்து ரியல் அன்னலட்சுமி அவர்தான்... லாபம் அதிகம் பார்க்காமல் ஏழைகள் பசியை
போக்கிக்கொண்டு இருப்பவர்...
ரெண்டு
நாள் வரலைன்னாலும் நியாபகம் வச்சி ஏன்
வரலை என்று வினவுகின்றார்.
சரி
கடை எங்க இருக்குன்னு சொல்லலியே....
கிண்டி
மேம்பாலம் இறங்கி வடபழனி போற ரூட்டுல ஒலிம்பியா டவர்ருக்கு முன்னாடி லெப்ட்டுல ஒரு ரோடு போகும்....அதாவதுஅதுக்கு பக்கத்துலேயே லெப்ட்டுல ஒரு ரோடு போகும்.... அந்த ரோட்டுல ரெண்டு
லெப்ட் ரோட்டை தள்ளி....ரெடிங்கடன் ஒரு பில்டர்ன்னு பெரிய ஆபிஸ் இருக்கும் ...அதுக்கு
எதிர்ல இருக்கு........ இல்லை அந்த ரோட்டுல லேப்ட் சைடுல பார்த்துக்கிட்டே போனா
லெப்ட் சைடுல அந்த கடை இருக்கு...
சென்னையில கோடையிலும் மழை பெய்ய காரணம்... இது போல அன்னலட்சுமிங்க இருக்கறதாலதான்...
பொடி
தோசை மறந்துடாதிங்க....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
எல்லா ஊரிலும் இப்படி சில அதிசிய ஆட்கள் இருக்காங்க.... அதற்கு பெரிய மனசு வேண்டும்...
ReplyDeleteஉங்கள் பதிவுகளில் மிக சிறந்த பதிவு இது.நானும் chennaiyel sappadukku padda padu markathu.
ReplyDeleteLONG LIVE THE REAL ANNA LAKSHMI..
ReplyDeletedhanathil sirantha dhanam annadhaanam
ReplyDeletedhaanathil sirandha dhaanam annadhaanam
ReplyDeleteரியல் அன்னலட்சுமியை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்! இவர்களை போன்றவர்களால்தான் உலகம் இன்னும் உழன்று கொண்டிருக்கிறது! நல்ல பகிர்வு!
ReplyDelete//நான்வெஜ் ஓட்டல் சிக்கன் மஞ்சூரியன் 80ரூபாய்.... ங்கோத்தா காலிபிளவரும் கோழியும் ஒன்னாடா? பேமானிங்களா?// I ALSO HAVE THE SAME DOUBT.
ReplyDeleteLONG LIVE THE REAL ANNA LAKSHMI..
ReplyDeleteஒலிம்பியா எதிர் புறம் இருக்கும் GTTC -இல் தான் மூன்று வருஷம் படித்தேன். இந்தியா வரும் போது எல்லாம் என்னை உருவாகிய இடத்தை பார்க்க தவறுவதில்லை. இந்த முறை வரும் போது நிச்சியம் இந்த அம்மாவை பார்த்து ஒரு வணக்கம் போடுவேன். வாழ்க.
ReplyDeleteஒலிம்பியா எதிர் புறம் இருக்கும் GTTC -இல் தான் மூன்று வருஷம் படித்தேன். இந்தியா வரும் போது எல்லாம் என்னை உருவாக்கிய இடத்தை பார்க்க தவறுவதில்லை. இந்த முறை வரும் போது நிச்சயம் இந்த அம்மாவை பார்த்து ஒரு வணக்கம் போடுவேன். வாழ்க.
ReplyDeleteஇந்த மாதிரி அன்னலெட்சுமிகலால்தான் சென்னையை நம்பிவரும் நிறையப்பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்
ReplyDeleteஇந்த மாதிரி அன்னலெட்சுமிகலால்தான் சென்னையை நம்பிவரும் நிறையப்பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்
ReplyDeletevery good info thanks for sharing
ReplyDeleteLONG LIVE THE REAL ANNA LAKSHMI..
ReplyDelete\\சென்னையில கோடையிலும் மழை பெய்ய காரணம்... இது போல அன்னலட்சுமிங்க இருக்கறதாலதான்...//
\\இந்த மாதிரி அன்னலெட்சுமிகலால்தான் சென்னையை நம்பிவரும் நிறையப்பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்//
மிக' மிக' நல்ல பதிவு ஜாக்கி சார்......நான்வெஜ் ஓட்டல் சிக்கன் மஞ்சூரியன் 80ரூபாய்.... ங்கோத்தா காலிபிளவரும் கோழியும் ஒன்னாடா? பேமானிங்களா? உங்களுடைய கோபம் மிக நியாயம் ஆனது.........ஜாக்கி சார்........GREAT ANNA LAKSHMI.....CONVEY MY REGARDS TO YAZHINI BABY....
ReplyDeleteஜாக்கி அண்ணா கண்டிப்பாக அன்னலட்சுமி அம்மாவின் உணவகத்திற்கு சென்று சாப்பிட வேண்டும் என்ற ஆவலை தூண்டியது உங்கள் பதிவு
ReplyDeleteபதிவிற்கு மிக்க நன்றி
ஜாக்கி அண்ணா,உங்களது பதிவு அன்னலட்சுமி அவர்களின் உணவகத்திற்கு சென்று ஒருமுறை சென்று சாப்பிடவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது, பதிவிற்கு மிக்க நன்றி
ReplyDeleteஜாக்கி அண்ணா கண்டிப்பாக அன்னலட்சுமி அம்மாவின் உணவகத்திற்கு சென்று சாப்பிட வேண்டும் என்ற ஆவலை தூண்டியது உங்கள் பதிவு
ReplyDeleteபதிவிற்கு மிக்க நன்றி
அன்னலட்சுமி அம்மா ஒரு சிறந்த மனிதாபிமானி
ReplyDeleteநான் யோசிப்பது வேறு இணயம் இல்லாதிருந்தால் இந்த செய்தி இத்துணை பேரை அடைதிருக்குமா?
ReplyDeleteஅனேகமாக உங்கள் பெயரை சொல்லிக்கொண்டோ சொல்லாமலோ இந்நேரம் ஒரு நூறுபேராவது இந்தக் கடையில் சாப்பிட்டிருப்பார்கள்
அது எனக்கு மகிழ்ச்சி
நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி
இரண்டாவது கருத்து
ReplyDeleteஎனக்கு தோன்றியதை தெரிவித்தவுடன் மேலே பார்த்தல் நம்ம பய பாதிபேரு அந்த கடைக்கு போகணும்னு தான் சொல்லீருக்கான்
cablar enga irunthaalum vizha medaikku varavum
ReplyDelete