சினிமா எனக்கு நிரம்ப பிடித்த விஷயம் என்றாலும்
அதுக்கான மெனக்கெடல் ஒரு சில படங்களுக்கு மட்டுமே கொடுத்து இருக்கின்றேன்.
ஜாக்கிசான் படங்கள் எப்போது ரிலிஸ்
ஆனாலும் முதல் ஷோ முதல் காட்சி பார்த்து விடுவேன்.. அப்புறம் கமல் படங்கள்...
தற்போது மகேஷ்பாபு படங்கள்... அவ்வளவுதான்....
ஆனால் சென்னை வந்து மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் பார்க்க இரவு ஒன்பது மணிக்கு கிளம்பி கமலாதியேட்டருக்கு வந்தால் டிக்கெட் இல்லை,சத்தியம் போயும்
டிக்கெட் இல்லை.. ஆனால் நள்ளிரவு ஒரு மணி
ஷோ மாயாஜலில் இருக்கின்றது என்று தகவல் வர...கானத்தூரில் இருக்கும் ஒரு நண்பரை
பிடித்து, எக்ஸ்ட்ரா சேர் இரண்டு போட சொல்லி, நானும் என் மனைவியும் சத்தியத்தில்
இருந்து மாயாஜலுக்கு பைக்கில் சென்று ஒருமணிக்கு அந்த படத்தை பார்க்க ஆரம்பித்து.... விடியற்காலை நான்கரை மணிக்கு ஊரில் கூத்து பார்த்து
விட்டு வருவது போல வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
அதே போல எனக்கு தெரிந்து நாலரை டூ ஆறு விடியற்காலை கிரகபிரவேச முகூர்தத்துக்கு
செல்வது போல, நான், விடியல் மூன்று மணிக்கு
குளித்து முடித்து வில்லிவாக்கம் ஏஜிஎஸ்
தியேட்டரில் எந்திரன் திரைப்படம் பார்க்க சென்று
இருக்கின்றேன்.
விடியற்காலை 5 மணிக்கு
எந்திரன் திரைப்படம் பார்த்தது ஒரு
வித்யாசமான அனுபவம்தான்...
விஸ்வரூபம்
சர்ச்சையை தொடர்ந்து ஒரு குரூப் தெலுங்கில் படம் பார்த்து விட்டு சிலாகித்து
கொண்டு இருந்தார்கள் ..... பொறுத்துக்கொண்டோம்... பட் ,சிங்கை, மலேசியா, அமெரிக்கா என்று படத்தை
திரையிட........ நண்பர்கள் புக்கிங் டிக்கெட்டை
வலையில் ஏற்ற ஆரம்பித்து வெறுப்பு ஏற்ற
ஆரம்பித்தார்கள்.
ஞாயிறு
அன்று அலுவலகத்தில் வேலை இருந்த காரணத்தால் என்னால் விஸ்வரூபம் படம் பார்க்க போகவில்லை...
அக்ஷூவலாக நான் பெங்களூர் சென்று இந்த திரைப்படத்தை பார்த்து விட எண்ணி இருந்தேன்.
ஒரு காலத்தில் என்னிடத்தில் என் நேரம் இருந்தது... நினைத்த போது எங்கு வேண்டுமானலும் செல்வேன்.....மாத சம்பளத்தில் மாட்டிக்கொண்ட
காரணத்தால் என் பர்சனல் விஷயங்களை செயல்
படுத்த பெரும்பாடு படவேண்டியதாகி இருக்கின்றது.. ரேஷனில் சக்கரை வாங்கி நாலு
மாதங்கள் ஆகி விட்டது... அதுதான் நிதர்சனம்.
சரி இந்த படத்தை பார்த்து விட வேண்டும்...
உண்மையில் விஸ்வரூபம் திரைப்படத்தை எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.. பட் எதிர்பார்ப்பை எகிர
வைத்த விட்டது தமிழக அரசு....
இன்று
காலை வரை நான் சத்தியவேடு செல்வேன்
என்று நினைக்கவில்லை.... ஆனால் விடுமுறை
நாளில் சென்றால் டிக்கெட் கிடைக்காமல்
அல்லல் பட வேண்டி வரும் என்ற காரணத்தால் ஞாயிற்றுகிழமை திட்டத்தை கை
விட்டதும், வேலை இருந்ததும் நல்லதாக போய் விட்டது.
காலையில்
நான் நண்பர் நித்யாவும் எப்படியாவது இன்று
விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்து விட வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டோம்..
படம் பார்க்க போகும் முன் நான் மனதில்
குறித்துக்கொண்ட விஷயம் என்னவென்றால்....
டிடிஎஸ் இல்லாமல் அனலாக்கில் சவுண்ட் இருக்கும் தியேட்டராக இருந்தாலும்
படத்தை பார்க்க வேண்டும்.
ஆனால் படம் ஓடி பார்க்க கூடாது...
டிக்கெட் இல்லையென்றால் பர்ஸ்ட் ஷோவாக இருந்தாலும் இருந்து பார்த்து விட்டு வரவேண்டும்...
பிலிம்
புரோஜக்ஷனாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
தியேட்டர்
எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும்...
காலை காட்சி
அல்லது மேட்னியாக இருந்தாலும் கதவை திறந்து சன்லைட் திரையில் பளீர் என்று
பட்டாலும் பொறத்துக்கொள்ள வேண்டும்.. என்று பல முடிவுகளோட படம் பார்க்க முடிவு
எடுத்தேன்.
கிண்டியில்
இருந்து சத்தியவேடு ஆந்திரா கிராமம் 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க்கின்றது.
ஏற்கனவே புதியதலைமுறை
தொலைக்காட்சியில் பிரபலபடுத்தி
விட்ட காரணத்தால் சென்னையில் இருந்து சினிமா ரசிகர்கள் சாரை சாரையாக சென்று கொண்டு
இருப்பதாக நண்பர்கள் வட்டாரம் தகவல்களை அள்ளிவிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
கிண்டி,
வடபழினி,கோயம்பேடு, பாடி மேம்பாலம், ரெட்டை
ஏரி, அதை தாண்டி ரெட்ஹீல்ஸ் பாலம்
ஏறாமல், கிழே போய் லெப்ட் எடுத்தால் கல்கத்தா பைபாஸ் ஆரம்பிக்கும் அதன் வழியா
சென்றால் காரணோடை தாண்டி லெப்ட்டில் சத்தியவேடு போகும் வழிக்கான போர்டு போட்டு
இருக்கும்...... பைபாசில் இருந்து ஒரு 20 கிலோ மீட்டர் பயணத்தில சந்தியவேடு
எட்டிப்பார்க்கின்றது....
சென்னையில் இருக்கும் குன்றத்தூர் போல சின்ன டவுன்தான்
சத்தியவேடு....
.தமிழ்நாட்டு எல்லை முடிவடைந்த, ஒரு இரண்டு கிலோமீட்டரில் பெயர்
பலகைகள் ஜிலேபி சுட்டபடி நம்மை வரவேற்க்கின்றன.
முதலில் டவுன் உள்ளே நுழைந்து
சினிமா தியேட்டர் எங்கே இருக்கின்றது என்று மொட்டையாக கேட்டால் முதலில் இருக்கும்
சாமூண்டிஸ்வரி தியேட்டரை
கைகாட்டுகின்றார்கள்....
அதில் மகேஷ்பாபு மற்றும் வெங்கடேஷ் நடித்த சீதம்மா
தெலுங்கு படம் ஓடுகின்றது.... அந்த தியேட்டரை தாண்டி போகும் வழியில் சின்ன சாக்கடை பாலம் அமைக்கும் வேலை நடப்பதால் ரோட்டில் டேக் டைவர்ஷன் எடுத்து மார்ர்கெட்
வழியாக சீனுவாச தியேட்டர் எதுவென்றால் தமிழில் வழி சொல்லி கைக்காட்டுகின்றார்கள்.
சிமென்ட் ரோடு போட்டுக்கொண்டு இருப்பதால் மார்க்கெட்டில்
பெரிய நெரிசல்... அதையும் தாண்டி சென்றால்
ஒற்றையடி சாலை ஆரம்பிக்கின்றது.. ஆந்திராவின் வனத்துறை ஆரம்பமாகின்றது என்ற
போர்டு கண்ணில் படுகின்றது....
சாலை
எங்கும் தமிழக வாகனங்கள்... டிரிபில்ஸ் மற்றும் டுவிலிரில் இளசுகளின்
படையெடுப்பு கண்கொள்ளாக்காட்சி. தியேட்டர் முழுக்க பைக்கும் காரும் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன.
எங்கு
திரும்பினாலும் பைக் மற்றும் கார்கள்... எல்லாம் தமிழ்நாட்டு பதிவு எண்கள்..
முக்கியமாக சென்னை முகங்கள் பலதை பார்த்தேன். தியேட்டர்காரர்களே எதிர் பாராத கூட்டத்தின் காரணத்தால் எதிரில் வயலில் சின்ன வேலி
அமைத்து அதை கார் பார்க்கிங் ஆக்கி
இருக்கின்றார்கள்....
முதலிரவில்
புதுப்பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க ஏற்ப்படும் பட படப்பான ஆர்வம் போல படம் பார்க்க வந்த அத்தனை பேரின்
முகத்திலும் அது போன்றதொரு படபடப்பு எல்லோரிடமும் தொற்றிக்கொண்டு இருந்தது.
தியேட்டரில் எல்லோரும் வரிசையில் நிற்க.... சாரை சாரையாக கார்களும் பைக்கும்
வந்து கொண்டே இருந்தன.. மேனேஜரிடம் சென்று பேசினேன்...
எத்தனை
மணிக்கு படம்..
இரண்டு
மணிக்கு படம் ஒன்றரை மணிக்கு டிக்கெட் கொடுப்போம்...
இப்பயே
நெருக்கி தள்ளிக்கிட்டு நிக்கறாங்க... பொதுவா வந்த அத்தனை பேரும் சென்னையில் இருந்து வந்து இருக்காங்க... முன்னாடியே
டிக்கெட் கொடுக்க்கூடாதா? என்றேன்..
கொடுத்தோம்
சார்... அப்படித்தான் கொடுத்தோம்... சனி
ஞாயிறு கூட்டம் அள்ளிடுச்சி உங்க வீட்டு கூட்டம், எங்க வீட்டுக்கூட்டம் இல்ல
அவ்வளவு கூட்டம்... அதனால் முன்னாடியே கொடுத்தோம்... டிக்கெட் ரொம்ப கம்பி...ஆனா
50 ரூபாய்க்கு தியேட்டால கொடுக்கறோம்... பட் முன்டியே கொடுத்த காரணத்தால் நேற்று
எக்ஸ்ட்ரா டிக்கெட் வாங்கினவங்க... ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு வித்து
இருக்காங்க அதனால் அரைமணி
நேரத்துக்கு முன்ன டிக்கெட் கொடுக்கின்றோம் என்றார்...
நான் எங்கள் ஊர் கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலையை சில
காலங்கள் செய்து இருக்கின்றேன்... அப்போது டிக்கெட் கொடுக்கும் அல்லது தியேட்டரில்
வேலை செய்பவர்கள் பயங்கரமாக அலட்டுவார்கள்.. பட் இந்த தியேட்டர்
சிப்பந்திகள் அப்படி எல்லாம் அலட்ட வில்லை.
காட்டின்
எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும்
அந்த தியேட்டரில் அவ்வளவு கூட்டத்தை அந்த ஊர்க்காரர்களே எதிர்பார்க்கத ஒன்று..
வால்வோகன்,ஆடி போன்ற கார்கள் புழுதிக்கு நடுவில் நின்றதை பார்த்த
போது கமலின் மீதான மவுசை உணர முடிந்தது.....
அவரிடம்
மூன்று டிக்கெட் சொல்லி விட்டு
வந்தவழியிலே திரும்ப வந்தால் வேல்முருகன் ஒயின்ஸ் இருக்கின்றது.. சின்ன பெட்டிக்கடை போல ஒயின்ஸ்
கடை வைத்து இருக்கின்றார்கள்...பிளன்டர்ஸ்
விஸ்கியும், சிக்கன் பிரையுமாக போய் உட்கார்ந்தோம்... உலகத்துலேயே மிளகாய் தூளில்
பொறட்டி எடுத்த நாட்டு கோழியை இப்போதுதான்
பார்க்கின்றேன்...
நல்ல
சைடிஷ் என்று போதையில் அப்படியே
சாப்பிட்டால் மறுநாள் உங்க வீட்டு
பாத்ரூமில் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் பீச்சி
அடிக்கும் சாத்திய கூறு அதிகம் இருந்த காரணத்தால் நான் லைட்டாக தொட்டு நக்கிக்கொண்டேன்....
எதிரில்
ஒரு ஒட்டல்...50 ரூபாய்க்கு லெக் பீஸ் வைத்து நொய் அரிசியில் செய்த பிரியாணியை
வைத்தார்கள்... கிரேவியுடம் அவிச்ச முட்டையும் வைத்தார்கள்.. அது மட்டும் அல்ல
ரசத்துக்கு ஒயிட்ரைசும் போட்டார்கள்.. 50 ரூபாய்க்கு,.. பேசமா சந்தியவேடு போய்
விடலாமா என்று யோசிக்க வைத்து
விட்டார்கள்... ரசம் அவ்வளவு அருமையாக
இருந்தது....
டிக்கெட் எடுத்துவிட்டோம் உள்ளே பத்து நிமிடத்தில் அரங்கு நிறைந்து விட்டது...400
சீட் இருக்கும் அவ்வளவுதான் தியேட்டர்...மூன்று கதவுகள்தான்
இருபுறமும் இருக்கின்றன.. அந்த அளவுக்கு சின்ன தியேட்டர்... புரஜக்ஷன்
இல்லாமல் யுஎப்ஓ டிஜிட்டல் புரோஜக்ஷனில்
படத்தை காட்டுகின்றார்கள்...
தியேட்டரில் டிடிஎஸ் இல்லை... ஆனால் திரைக்கு
பின்னால் இருக்கும் ஸ்பீக்கரில் நல்ல
தரமான சவுண்ட் வருகின்றது.... சென்னையில் ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மியில் பாக்சில்
சவுண்ட் நன்றாக இருக்கின்றது.,. ஆனால் 70 ரூபாய்... பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் சவுண்ட் கொடுமையாக இருக்கும்.... இத்தனைக்கு
டிடிஎஸ் தியேட்டர். ஆனால் அந்த தியேட்டர்
டிடிஎஸ் இல்லாவிட்டாலும் சவுண்ட் நன்றாகவே இருந்தது...
கூட்டம்
அதிகமாக... இடம் இல்லாமல் நடக்கும் வழி
எங்கும் ரசிகள்கள் உட்கார ஆரம்பித்து
விட்டார்கள்.. இந்த கூட்டத்தை சமாளிக்க பக்கத்தில் இருக்கும் முருகன் தியேட்டரில் தமிழ் விஸ்வ ரூபம் திரையிட்டு இருக்கின்றார்கள்..
காரணம் அந்த தியேட்டர் டென்ட் கொட்டகை போல
இருக்கும் காரணத்தால் அந்த தியேட்டருக்கு ரசிகமகாஜனம் செல்லவில்லை...
சாமுண்டஸ்வரி
தியேட்டரில் போட்டு இருந்தால் இன்னும் பெரிய கலெக்ஷனை அள்ளி இருக்கலாம்.. ஆனால் மகேஷ்பாபு
வெங்கடேஷ் நடித்த சீதம்மா படத்தை மனவாடுக்காக போட்டு இருக்கின்றார்கள்.
தமிழ்
மக்கள் மொண்டுக்கொண்டு அந்த சின்ன தியேட்டர் திண்டாடிக்கொண்டு இருக்க படத்தை
போட்டார்கள்... கமலஹாசன் என்று பெயர்
போட தியேட்டர் அதிர்ந்தது.... கமல்
இன்ட்ரோ ஆயர் தம் மாயா நீ வா பாடலுக்கு கமல் ஆட விசில் சத்தம் காதை கிழிந்த்து....
முதல்
சண்டைகாட்சியில் கமல் முதலில் வேகமாக அடிப்பதும் பின்பும் டைம்பிரேமில்
காட்டுவதுமாக அந்த முதல் சண்டை காட்சி
முடிந்ததும் திரும்பவும் ரிவைன்ட் செய்து அதே சண்டைக்காட்சியை ஒன்ஸ்மோர் போட்டு
ரசிகர்களை திக்கு முக்காட செய்தார்கள்...
அக்னி
நட்சத்திரம் படத்துக்கு பிறகு பின் முதுகில் சட்டை நனைந்து வியர்வையில் ஊறிய படம் இந்த
படம்தான்.... நாலும் நாலும் எட்டு பேன்தான் இருந்தன.. நிறைய கூட்டம் ரொம்ப நாளைக்கு பிறகு ஏசி இல்லாத
தியேட்டரில் வியற்வையோடு படம் பார்த்த காரணத்தால் பால்யகால நினைவுகள் பீடு நடை
போட்டன...
படம் ஆர்பாட்டம் இல்லாமல் சத்தியத்தில்
பார்க்கவேண்டும் என்று நினைத்தக்கொண்டேன்... படம் அற்புதமாக இருக்கின்றது...தமிழ்
சினிமாவில் இது புதிய களம் என்பதை யாராலும் மறுக்க முடியாது...
சத்தியவேடுவையும்
விஸ்வரூபத்தையும் சீனுவாசவையும் வேல்முருகன் ஒயின்னசையும் 50ரூபாய்க்கு லெக்பீசோடு
ரசத்துக்கு ஒயிட் ரைஸ் கொடுத்த ஒட்டலையும் மறக்கவே முடியாது...இரவு
ஏழு மணிக்கு கிண்டியில் இறங்கினேன்...பல தரப்பட்ட கனவுகளோடு சாலைகளில் சென்னை வாசிகள் விஸ்வருபம் எடுக்காத குறையாக விரைந்துகொண்டு
இருந்தார்கள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
:)
ReplyDelete//முதலிரவில் புதுப்பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க ஏற்ப்படும் பட படப்பான ஆர்வம் போல//
ReplyDeleteஆஹா, என்னா உவமை!
Supeer na
ReplyDeleteIntha vaaran kantippa paarkkanum.
ReplyDeleteKamal has to give this kind of fight sequence in his all films... also he has to compromise..instead of fantastic film, just good movie is expected from him
ReplyDeleteமுதல் சண்டைகாட்சியில் கமல் முதலில் வேகமாக அடிப்பதும் பின்பும் டைம்பிரேமில் காட்டுவதுமாக அந்த முதல் சண்டை காட்சி முடிந்ததும் திரும்பவும் ரிவைன்ட் செய்து அதே சண்டைக்காட்சியை ஒன்ஸ்மோர் போட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்தார்கள்...
Super Thala .
ReplyDeleteகாரனோடை தாண்டி, தச்சூர் கூட் ரோடு தாண்டி, பொன்னேரி தாண்டி, கவரப்பேட்டை பாலம் இறங்கிய உடன் இடது பக்கம் திரும்பவேண்டும். காரனோடையில் லெஃப்ட் எடுத்தால் பெரியபாளையம்தான் வரும்.
ReplyDeleteநல்ல அனுபவம்
ReplyDeleteமுதலிரவில் புதுப்பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க ஏற்ப்படும் பட படப்பான ஆர்வம் போல படம் பார்க்க வந்த அத்தனை பேரின் முகத்திலும் அது போன்றதொரு படபடப்பு எல்லோரிடமும் தொற்றிக்கொண்டு இருந்தது./////Hahahahaha....Thala Kalakkal...:)
ReplyDeleteஉங்களது கட்டுரை திரைபடத்தை விட மிகவும் அருமை..."பல தரப்பட்ட கனவுகளோடு சாலைகளில் சென்னை வாசிகள் விஸ்வருபம் எடுக்காத குறையாக விரைந்துகொண்டு இருந்தார்கள்".. இந்த வாக்கியம் மிகவும் அருமை.எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் கட்டுரைலிருந்து... உங்கள் கட்டுரையில் நீங்கள் இன்னும் கிண்டியில் இருந்து சத்தியவேடு சென்றடைந்த அனுபவத்தை கூட்டி எழுதி இருக்கலாம்...ஒரு அனுபவத்தை கண் முன்னே கொண்டு வந்த கட்டுரை தங்களுடையது.
ReplyDeleteஉங்களது கட்டுரை திரைபடத்தை விட மிகவும் அருமை..."பல தரப்பட்ட கனவுகளோடு சாலைகளில் சென்னை வாசிகள் விஸ்வருபம் எடுக்காத குறையாக விரைந்துகொண்டு இருந்தார்கள்".. இந்த வாக்கியம் மிகவும் அருமை.எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் கட்டுரைலிருந்து... உங்கள் கட்டுரையில் நீங்கள் இன்னும் கிண்டியில் இருந்து சத்தியவேடு சென்றடைந்த அனுபவத்தை கூட்டி எழுதி இருக்கலாம்...ஒரு அனுபவத்தை கண் முன்னே கொண்டு வந்த கட்டுரை தங்களுடையது.
ReplyDeleteசுவையான அனுபவம்தான்! தச்சூர் கூட்டு ரோடு பகுதியில் சில இளைஞர்கள் சீனிவாசா தியேட்டர் எங்கிருக்கிறது என்று என்னிடமும் விசாரித்தார்கள்!
ReplyDeleteபிளன்டர்ஸ் விஸ்கியும், சிக்கன் பிரையுமாக போய் உட்கார்ந்தோம்... உலகத்துலேயே மிளகாய் தூளில் பொறட்டி எடுத்த நாட்டு கோழியை இப்போதுதான் பார்க்கின்றேன்...
ReplyDeletegreat jackie sir
தலைவரே, நல்ல விமர்சனம்.
ReplyDeleteசூப்பர்..மாயஜாலில் புக் பண்ணியாச்சில்ல...
ReplyDeleteவால்வோகன்,ஆடி போன்ற கார்கள் புழுதிக்கு நடுவில் நின்றதை பார்த்த போது கமலின் மீதான மவுசை உணர முடிந்தது.....
ReplyDeleteSuperbbbbb
சத்தியத்தில் வெள்ளிகிழமை கமலின் ரசிகர் மற்றும் எனது நல்ல நண்பரான என் தந்தையுடன் பார்க்க டிக்கெட் புக்செய்து விட்டேன்.
ReplyDeleteஅனுபவ பகிர்வு அருமை.
அருமை,எனது பால்ய நினைவுகள் ஞாபகம் வந்தது,நன்றி
ReplyDeleteஅக்னி நட்சத்திரம் படத்துக்கு பிறகு பின் முதுகில் சட்டை நனைந்து வியர்வையில் ஊறிய படம் இந்த படம்தான்..///////////அருமை
ReplyDeleteஅருமை,எனது பால்ய நினைவுகள் ஞாபகம் வந்தது,நன்றி
ReplyDelete