Mugamoodi/2012/உலகசினிமா/ இந்தியா/ முகமூடி/ மனதை கவர்கின்றான்.






சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய்,போன்ற
படங்களை   நிச்சயம் நீங்கள் பார்த்து இருக்கலாம்.. அதில்  என்னவெல்லாம்  காட்சிகள் இருந்தன.. உதாரணத்துக்கு.,...


ஒரு ஊனமுற்ற கேரக்டர் அல்லது ஒரு விளிம்பு நிலை மனிதன்,  லென்த்தி ஷாட், முட்டு சந்தாக இருந்தாலும்  டாப் ஆங்கிள், கேமரா மெல்ல கேரக்டர் கூடவே டிராவல் ஆகும் லென்த்தி ஷாட்.... லோ அங்கிளில் டிராலியில்  மெல்ல நகரும் கேமரா.... முக்கியமாக லோ ஆங்கிள் ஷாட்டுகளில் கால்கள் முக்கிய பங்கு வகிக்கும்... 




கண்டிப்பாக ஒரு டாஸ்மார்க் கடை ஷாட், ஒரு குஜால் பாட்டில் கண்டிப்பாக பின்புலம் சரக்குகடையாக இருக்க வேண்டும்...கதையின்  நாயகி முடிந்தவரை தைரியமான பெண்ணாக இருப்பார், சேசிங் காட்சியில்  ஸ்டெடிகேம் கேமராமேனின் பருப்பு எறைய வைக்கற அளவுக்கு ஓட வைத்து இருப்பார்... பெரிய செட் எல்லாம் போடாமல் முடிந்தவரை சின்ன சின்ன அறைகளாக இருந்தாலும் அந்த இடத்திலேயே காட்சிகள் கம்போஸ் செய்து இருப்பார்.. 


இசை எங்கு தேவையோ அங்கே மட்டும்தான் இருக்கும் எல்லா  இடத்திலும்  காட்டுக்கத்தல் கத்தாமல்  இசையமைப்பாளர் அடக்கியே வாசித்து இருப்பார்.. முக்கியமா படம் நெடுக பிளாக் ஹீயூமர் காமெடி சின்ன சின்ன ஹைக்கு போல வந்துட்டு போகும்.. எம்ட்டி பிரேம்ல கேரக்டர்கள் பிரேம் என்ட்ரி ஆகும்... அல்லது லோ ஆங்கிலில் கேமரா இருக்கும் போது ,  ஏதாவது ஒரு வாகனம் கிராஸ் ஆகும்.


 ஏதாவது ஒரு கேரக்டர் பித்துக்குளி  போல பேசும்.. சில  நேரத்துல காதநாயகனே அப்படி பேச வாய்ப்பு இருக்கும்.. எதிர்ல இருக்கும் முக்கியமாக சப்ஜெக்ட் ஆவுட் ஆப் போக்கஸ்ல இருக்கும்.. போர் கிரவுண்டுல இருக்கும் சப்ஜெக்ட்டோ ஆப்ஜக்ட்டோ போகஸ்ல இருக்கும், அதே போல வட சென்னை  அல்லது ராயபுரம் பார்ட்டி   ஒன்னு லோக்கல் பாழை பேசிக்கினு ரவுடி கேரக்டர் கண்டிப்பா இருக்கும். வயசான  கேரக்டர் ஒன்னு சென் துறவி போல வாழ்க்கை  தத்துவத்தை பேசும், இப்படி  அவருடைய எல்லா படத்திலேயும் இருக்கும்  இது போலான காட்சிகள்.. 

முகமூடி படத்திலேயும் இருக்கு... இதை சினிமா பாணியில சொல்லனும்னா? கிளிஷே காட்சி என்று சொல்லுவார்கள்.. கிளிஷே என்றால் ஒரு மாதிரி எடுத்த காட்சியே எடுத்தது போல, எடுப்பதை அப்படி சொல்லுவார்கள்... ஆனால் கிளியேஷ காட்சிகள் இல்லாமல் எந்த கொம்ப டைரக்ட்டரும் இதுவரை படம் பண்ணியதில்லை.. எப்படி இருந்தாலும் ஒரு ஷாட்டாவது  அனிச்சை செயல் போல வந்து தொலைக்கும்...

கவுதம்மேனன் படத்துல ஆண் அல்லது பெண் கேரக்டர் இருட்டு அறைக்கு உள்ளே போய்  கர்ட்டனை திறந்து புது ஜன்னல் வெளிச்சத்தை அறையில் பாய்ச்சி சந்தோஷபடுவார்கள்..தொப்பக்கடீர் என்று பெட்டில் விழுந்து தொலைப்பார்கள்.. அது போல  காட்சிகள் வருவதை  ஒன்றும் செய்ய முடியாது.


சார் இப்படிஎல்லாம் இருந்தா இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன்.. குட் அப்ப இதுக்கு மேல படிக்காதிங்க.. இப்படியே போய் வேற பொழப்பை பாருங்க.. பிள்ளைகுட்டியை படிக்க வைங்க...


சார்  பீச்சாங்கைல சோறு துங்கறவன் வேனும்னு துன்னலை.... அது அவன் பழக்கம்.. அதுக்கு அவன் என்ன  செய்வான்.. பீச்சாங்கைல  சாப்புட்டுகிட்டு இருக்கறவனை வித்யாசமா  சோத்தாங்கைல சாப்பிடுன்னு சொன்னா....  பார்க்க சகிக்காது... அது போலத்தான்.. மிஷ்கின் அவர் பாணியில்   இந்த படத்தை எடுத்து முடிந்தவரை  சுவாரஸ்யபடுத்தி இருக்கின்றார்.


====================
முகமூடி படத்தின் ஒன்லைன் என்ன?


 அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஒரு சூப்பர் ஹீரோ பாத்திரம் தமிழ் பேசினால் எப்படி இருக்கும்... அதுதான் முகமூடி படத்தின்   ஒன்லைன்.

====================
 முகமூடி படத்தின் கதை என்ன?


ஜீவா( லீ) புருஸ் லீ மேல , அவரோட குங்பூ மேல அவருக்கு பெரிய காதல் அதனால தன்னோட பேரை லீன்னு ஜீவா மாத்திக்கிறார். அந்த அளவுக்கு வெறி....குங்பூ மட்டும்  தெரியும்.. நகரில் தொடர்ந்து  முகமூடிகொள்ளைகாரர்களின் கொள்ளை சம்பவங்கள் மற்றும் கொலைகள் நடந்து வருகின்றன. போலிஸ் எந்த குளுவும் இல்லாமல் தவித்து போகின்றது.. போலிஸ்காரர் நாசர் பெண்ணை காதலிக்க முகமூடி வேடம் அணிந்து செல்லும் போது, முகமூடி கொள்ளைகாரர்களோடு சண்டை போட நேரிடுகின்றது... 


எதிர்பாராமவ்ல கொலை  பழியும் ஜீவாவின் மீது விழுந்து பாரத்தை அழுத்த எப்படி மீண்டு காதலியையும் சமுகத்தையும் எப்படி காக்கின்றார் என்பதை வெண்திரையில் பாருங்கள்..



===================


படத்தின் சுவாரஸ்யங்களில்  சில...


பிரபல ஜப்பான் இயக்குனர்கள். அகிரோ குரோவோவா, மற்றும்  டக்கிஷிகிட்டானோ  ஒரு போதும் தன் படங்களின் ஷாட் கம்போசிஷனை மாற்றிக்கொண்டதில்லை அவர்களிடம் இருந்து இன்ஸ்பயர் ஆகி படம் எடுக்கும் மிஷ்கின் தன் திரைப்படம் எடுக்கும் ஸ்டைலை  மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.


வாவ் அற்புதமான ஷாட் கம்போசிஷன்  சான்சே இல்லை என்று சொல்ல்லாம்.. இந்த ரசனையை கடைகோடி தமிழ்ரசிகனுக்கு விடாப்பிடியாக கடத்தும் மிஷ்கின் பாராட்டுக்குறியவர்.


 முக்கியமாக  ஜீவா சாப்பிடும் காரக்குழப்பில் இருக்கும் கேமரா மெல்ல பின்னே வந்து பக்கத்து அறையில் பேசும் ஜீவாவின் அப்பா பேசும் ஷாட் கம்போசிஷன் ஒரு சின்ன எடுத்துக்காட்டு...
முதல் பார் பாடலில்  சாவர் பையனோடு பயணிக்கு கேமராவும் அந்த லென்தி ஷாட்டும் போட்ட செட்டை செல்லுலாய்ட்டில் கவிதையாக பதியவைத்த  முயற்சி எனலாம்...


ஜீவா முகமூடி  பாத்திரத்துக்கு பாத்தமாக பொருந்துகின்றார். பெரிய இன்ட்ரோ எல்லாம் இல்லாமல்  இயல்பாய் அறிமுகமாகின்றார்.


படம் முழுக்க ஜீவாவை பெண்டு நிமித்தி பிழிந்து காய போட்டு  இருக்கின்றார்கள் என்பது பல பிரேம்களில் தெரிகின்றது.


ஜீவாவுக்கு பக்கவான சூப்பர் ஹீரோ வேஷம்... அவர் கேரியரில் கற்றது தமிழ்,முகமூடி இரண்டும்  தவிர்க்க முடியாதவை எனலாம். இதே கேரக்டர்  முதலில் சூர்யா, விஷால் என்று பல கை மாறி கடைசியாக ஜீவாவுக்கு அந்த லக் அடித்து இருக்கின்றது....


கொசுவலையில் இருந்து துரத்தும் சேசிங் காட்சியில் படம் பர பரவென பம்பரமாக சுற்ற ஆரம்பிக்கின்றது.. முக்கியமாக  அந்த சேசிங் காட்சியிம் பின்ன்னி இசையும் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன..... நிறைய ஷாட்டுகள்  நிறைய    உழைப்பு... சான்சே இல்லை.... கேமராமேன் சத்யா ஹேட்ஸ் ஆப் அண்டு மியுசிக் டைரக்ட் கே..


 சர்க்கிளாகவும் இல்லாமல் ஓவலாகவும் இல்லாமல் நீள்வெட்டு தோற்ற தொப்புளோடு அழகு பொம்மையாக வந்து போகின்றார்.. அறிமுக நாயகி. பூஜா.. வாழைப்பழ தோலை காரில் வீசி எரியும் காட்சியில் ரசிக்க வைக்கின்றார்...


படத்தில் நிறைய இடங்களில் பிளாக் ஹீயூமர்  காட்சிகள் வருகின்றன.. அவைகளை தியேட்டரில் போய் ரசியுங்கள்.


நீண்ட இடைவேளைக்கு பிறகு  கோல்மால்    செல்வா கணமான பாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்..


வசனங்களில் நிறைய புத்தகங்கள் படித்த பாதிப்பை உணர முடிகின்றது.. புருஸ்லீ யாரு போலவும் ஆக ஆசைப்படலை.. அவருக்கு என்ன வேணும் எப்படி மாறனும்னு அவருதான் முடிவு பண்ணாரு..  அது போல நீ முடிவு பண்ணு போன்ற முக்கிய வசனங்கள் கிரிஷ்கர்னாட் பேசும் போது செம மெச்சூர்டாக இருக்கின்றன..


மாட்டிக்கொண்ட குற்றவாளி பதில் பேசாமல் இருக்க.. நாசர் போனில் அவன் எதுவும் பேசவில்லை என்று ஒரு போலிஸ்காரரிடம் சொல்லும் போது.. அந்த வாய்ஸ் கேரக்டர் பேசும் வசனமும், அந்த ரவுண்ட் டிராலி ஷாட்டும் உலக தரம் என்பேன்... ரொம்ப டிடேயில்டான சீன் அது டோன்ட் மிஸ் இட்......குரலிலேயே  பீல் கொண்டு வர முடியும் என்று நிரூபித்த காட்சி அது..



நரேன் வில்லன்  கேரக்டரில் நடித்து இருகின்றார்.. அவர் பேட்மேன் ஸ்பைபடர்மேன் என்று பேசும் வசனங்கள் காமெடியாக இருகின்றது.. ஆனால்  நளினமாக நடந்து கொண்டு செல்வாவை  தேடி வரும் காட்சிகள்.. அருமை.


நாசரை கொல்ல வரும் மருத்துவமனை காட்சியும் அந்த பைட்டும் விறு விறுப்பு..
 முதன் முறையாக பெரிய பேனர் என்பதால் ஒரு பாடல் காட்சிக்கு பாரின் சென்று வந்து இருக்கின்றார்கள்..மஷ்கின்  படத்தில் இதுதான் முதல் முறை என்று நினைக்கின்றேன்.
மஞ்சபுடவை டப்பாங்குத்து பாட்டை இந்த  படத்தில்  இல்லாமல் வித்யாசம் காட்ட முயற்சித்து இருக்கின்றார்...



இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வுதான் என்றாலும் வேறு வழியில்லை.. கதை சொல்லி ஆக வேண்டுமே??


கடைசியாக முகமூடி பிள்ளைகளை  காப்பாற்றி விட்டு ஓடும் காட்சி...படத்துக்கு பெரிய திருஷ்ட்டி.. அந்த ஓட்டம் சிரிப்பை வரவைக்கின்றது..

====================
படத்தின்  டிரைலர்.


=================
படக்குழுவினர் விபரம்..


Written by Mysskin
Starring
Jiiva
Narain
Pooja Hegde
Nasser
Selvaah
Music by K
Cinematography Sathya
Editing by Gaugin
Studio UTV Motion Pictures
Release date(s)
August 31, 2012[1]
Running time 155 minutes[2]
Country India
Language Tamil


===================
பைனல்கிக்..
சூப்பர் ஹீரோ படங்களுக்கு லாஜிக் அதிகம்  பார்க்க்க்கூடாது என்பது பாலபாடம்... இந்த படம் தமிழ் சினிமாவின் சூப்பர்  ஹீரோ படம் என்றால் அது மிகையில்லை. டயலாக்குகள் ஷாட் கம்ப்போசிஷன்.. விறு விறுப்பான முதல் பாதி திரைக்கதை இந்த படத்தை கண்டிப்பாக பார்த்தே  தீர வேண்டும் என்று சொல்லுவேன்..சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம்.. எனக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது... படத்தில் குறைந்த பட்சம் ஒரு லைவ்லிநஸ் இருக்கின்றது... இந்த படம் பார்க்கவேண்டியபடம்... முக்கியமாக ரசனை மாற்றத்தை  தொடர்ந்து தன் படங்களில் செய்து வரும் மிஷ்கின்  நிச்சயம் தமிழ்சினிமாவின் முக்கிய நபர்.. இது போன்ற விஷயங்கள் செய்வதால் அவர் கருப்புகண்ணாடி அணிந்து கொண்டு சுற்றலாம்.நோ அப்ஜெக்ஷன்.
..
==============


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

28 comments:

  1. ஓகேண்ணே.. நீங்க சொல்றது எல்லாமே சரித்தான்.. மிஸ்கின் படத்த மேக்கிங்க்காகவே பார்க்கலாம்.. பட் //இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்றால் அது மிகையில்லை/// இதுதான் கொஞ்சம் இடிக்குது.. அப்புடின்னா வேலாயுதம் கந்தசாமி கூட சூப்பர் ஹீரோ படங்கள்தானே...ஒரு சாமானியன் அசாமானியன் ஆகும் இதே பிளாட்தானே?

    ReplyDelete
  2. //இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்றால் அது மிகையில்லை. //

    இத மட்டுந்தான் ஒத்துக்க முடியலங்க. பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரி எந்த சூப்பர் ஹீரோ வேலையும் பண்ணல/காட்டல. அப்புறம் எப்பிடிங்க இது சூப்பர் ஹீரோ கதை? சூப்பர் ஹீரோ மாதிரி டிரஸ் போட்டிருக்குறதாலயாங்க?

    ReplyDelete
  3. மொக்க ராசு மற்றும் செந்தில் மோகன்... முதல் என்ற வார்த்தையை நான் சேர்த்தது பிழையானது திருத்தி விட்டேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அந்த சின்ன வார்த்தை நான் சொல்ல வந்த அர்த்தத்தையே மாற்றி விடுகின்றது.. சூப்பர் ஹீரோவுக்கான காரணம் குங்பூ நன்கு தெரிந்த லாஜிக் மீறாத பேட்மேன் கலந்த கலவைதான் முகமூடி என்பதுதான் கான்செப்ட்... லாஜிக் அதிகம் மீறாமல் கதை சொல்ல முயற்சி செய்து இருப்பதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.. முகமுடி என்பது சூப்பர் ஹீரோவுக்கான பிரண்ட் நேம்தான்... சூப்பர் ஹீரோ படமான டார்க் நைட் ரைசஸ் 3 ஆம் பாகம் பார்த்த போது அதை விட இந்த படம் எனக்கு பிடித்து இருந்தது...

    ReplyDelete
  4. ஜாக்கி உங்கள் விமர்சனங்களை தமிழ் இணைய உலகமே படிக்கிறது,சற்று நடுநிலையோடு எழுதியிருக்கலாம்..

    ReplyDelete
  5. எல்லா அம்சங்களையும் குறிப்பிட்டு, முழுமையாக விமர்சனம் செய்திருக்கீங்க!

    ReplyDelete
  6. Always Jackey Sekar !

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. ok thalaivare appa padam parthuduvom.

    ReplyDelete
  8. ok thalaivare appadina padam parthuduvom.

    ReplyDelete
  9. மிஸ்கின் படத்தைப் பாராட்டியே தீருவது என்கிற உங்கள் வைராக்கியத்துக்கு வாழ்த்துகள், ஜாக்கி!

    முகமூடிக் கொள்ளைக்காரர்கள் கட்டிடம் கட்டிடமாகத் தாண்டி ஓட, விரட்டிப்போகும் காட்சிகள் 'காசினோவா' மலையாளப்படத்தில் இதைவிடச் சிறப்பாக வந்திருக்கிறது பாருங்கள்! வெளிநாட்டுப் படங்களை என்ன, உள்நாட்டுப் படங்களையும் நகல் எடுக்கத் தயங்கமாட்டேன் என்கிற மிஸ்கினைப் பாராட்டித்தானே ஆகவேண்டும்?

    நல்லா இருங்க! ஆனா, //போலிஸ்காரர் நாசர் பெண்ணை காதலிக்க முகமூடி வேடம் அணிந்து செல்லும் போது, முகமூடி கொள்ளைகாரர்களோடு சண்டை போட நேரிடுகின்றது...// இந்த வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றுங்கள்.

    நாசர் பெண்ணைக் காதலிக்க எந்தப் போலீஸ்காரர் முகமூடி அணிந்து போகிறார்? தமிழில், பொதுவாக, மரபுப்படி முதலில் எழுவாய் (subject) வர, அடுத்து செயப்படுபொருள் (object) வர, இறுதியில் வினைச் சொல் (verb) வந்து முடியும். எ.டு: ஜாக்கி மிஷ்கினைப் பாராட்டி இருக்கிறார்.

    இந்த வரிசையை மாற்றுகிற போது கவனமாக இருக்க வேண்டும். அந்த வாக்கியம், /போலீஸ்காரரான நாசரின் பெண்ணைக் காதலிக்க, ஜீவா முகமூடி அணிந்து செல்லும்போது முகமூடிக் கொள்ளையர்களோடு சண்டை போட நேரிடுகிறது/ என்று இப்படி அல்லது இதுமாதிரி மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  10. Yesterday I read the review of the same movie in ADRASAKKA which was totally against this review. Just tell me whether we should watch the movie for entertainment or story value or for the sake of usage of technology. HIGHLY CONFUSING.

    ReplyDelete
  11. ஐயா உங்கள் விமர்சனம், வலை தளங்களில் வந்த விமர்சனகளில் மிகவும் ஆழமானதாக படுகிறது. சில முற்றும் சினிமா தெரிந்த வித்தகர்கள் மேலெழுந்த வாரியாக திட்டுவதையே விமர்சனமாக எழுதுகையில், உங்கள் விமர்சனம் சினிமா தெரியாதவனையும், ரசித்து சினிமா பார்க்க கற்று கொடுக்கிறது. டைரக்டரின் தனித்துவம் பற்றிய உங்கள் கவனிப்பு அபாரம். நான் அதை அப்படியே ஏற்று கொள்கிறேன் என்பதல்ல இதன் பொருள். ஆனால் உங்கள் கருத்தை தர்க்க ரீதியாக முன் வைத்து என்னை சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள். வெறும் திரைகதை சரியில்லை என்று அடித்து விட்டு போகையில் யாருக்கு என்ன பயன். எந்த விதத்தில் சரியில்லை, எப்படி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லும் போது தான் விமர்சகரின் ஆளுமை புலப்படுகிறது. இல்லை என்றால் 'நல்லா பாத்துக்குங்க... நானும் ரவுடி தான்' நிலை என்று தான் கொள்ள வேண்டும். தொடரட்டும் உங்கள் அர்த்தமுள்ள விமர்சனகள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ஐயா உங்கள் விமர்சனம், வலை தளங்களில் வந்த விமர்சனகளில் மிகவும் ஆழமானதாக படுகிறது. சில முற்றும் சினிமா தெரிந்த வித்தகர்கள் மேலெழுந்த வாரியாக திட்டுவதையே விமர்சனமாக எழுதுகையில், உங்கள் விமர்சனம் சினிமா தெரியாதவனையும், ரசித்து சினிமா பார்க்க கற்று கொடுக்கிறது. டைரக்டரின் தனித்துவம் பற்றிய உங்கள் கவனிப்பு அபாரம். நான் அதை அப்படியே ஏற்று கொள்கிறேன் என்பதல்ல இதன் பொருள். ஆனால் உங்கள் கருத்தை தர்க்க ரீதியாக முன் வைத்து என்னை சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள். வெறும் திரைகதை சரியில்லை என்று அடித்து விட்டு போகையில் யாருக்கு என்ன பயன். எந்த விதத்தில் சரியில்லை, எப்படி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லும் போது தான் விமர்சகரின் ஆளுமை புலப்படுகிறது. இல்லை என்றால் 'நல்லா பாத்துக்குங்க... நானும் ரவுடி தான்' நிலை என்று தான் கொள்ள வேண்டும். தொடரட்டும் உங்கள் அர்த்தமுள்ள விமர்சனகள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. நன்றி நிஷா இது என் பார்வை.. அவ்வளவே...

    ReplyDelete
  14. ராஜசுந்தர்ராஜன் சார்.. எனக்கு மிஷ்கின் சொந்தம் எல்லாம் இலலை...படைப்பாளியையும் படைப்பையும் நான் ஒரு போதும் குழப்பிக்கொள்வது இல்லை.. இந்த படத்தில் குறை இல்லாமல் இல்லை.. ஆனால் நிறைகளை நிறைய சொல்லி இருக்கின்றேன்... வாக்கியதவறு நேராமல் எழுத முயல்கின்றேன். நன்றி

    ReplyDelete
  15. ஜாக்கி,
    வலையுலக நண்பர்கள் காரி துப்பும் படம் எல்லாம் ( மிரட்டல், முகமுடி ) நீங்கள் மட்டும் பாராட்டும்
    காரணம் என்ன .? திரை உலகில் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டதா ?

    ReplyDelete
  16. ஜாக்கி,
    வலையுலக நண்பர்கள் காரி துப்பும் படம் எல்லாம் ( மிரட்டல், முகமுடி ) நீங்கள் மட்டும் பாராட்டும்
    காரணம் என்ன .? திரை உலகில் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டதா ?

    ReplyDelete
  17. இவன் யார் கரேக்ட்டா கண்டுபிடிச்சிட்டிங்க.. சான்சே இல்லை உங்க துப்பறியும் திறமை..

    ReplyDelete
  18. Inkeethaane unga thozlil thiramai velipadukirathu.eppadi ovvraru shot ta frame by framemaa solluringa paarunga anga thaan unga kavanippu,yosippu thiran therikirathu.kandipa nee oru padam panurenga naan paarkka thaan poorean .

    ReplyDelete
  19. இந்தப்படத்த ஒரு சூப்பர் ஹீரோ படமா என்னால ஏத்துக்க முடிலங்க. மத்த தமிழ் பட ஹீரோக்கள் என்ன பண்ணாங்களோ அதையே தான் லீயும் பண்றான். எக்ஸ்ட்ராவா சூப்பர்ஹீரோ மாதிரி டிரஸ் மட்டுந்தான் போட்டிருக்கான். சூப்பர்ஹீரோ படம்னு சொன்னதால, சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரி, அதாவது, பறக்குறது, பில்டிங் டு பில்டிங் ஜம்ப் பண்றது, உயரமான மாடிலருந்து சர்ருனு கீழ வர்றறதுங்குற மாதிரியான சீன்ஸ் எதிர்பாத்திருந்தேன். அதனால, இரண்டாவது பாதி மொக்கையாத் தெரிஞ்சது.

    ReplyDelete
  20. your review's on "Memories of murder" film is not available in the movies now shop. if u have can u send to me?i pay for u.

    ReplyDelete
  21. Ur review on Memories of murder film is not available on movies now shop. can u pls provide me? i send u the dvd+korear money? my id sivasdpi@gmail.com

    ReplyDelete
  22. ஜாக்கி மிக அருமையான டெக்கினிக்கலி குட் விமர்சனம். திருஷ்டி போல ஒரு இடத்தில் மட்டும் சிறிய பிழை.

    //கண்டிப்பாக ஒரு டாஸ்மார்க் கடை ஷாட்//

    அது டாஸ்மாக் கடை சீன் என்று வந்திருக்க வேண்டும். தவறுதலாக ஷாட் என்று எழுதியிருக்கிறீர்கள். மற்றபடி நிறைய சினிமா வார்த்தைகள். அனைத்தும் அருமை.

    ReplyDelete
  23. தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்

    ReplyDelete
  24. sir movie romba bore sir first market fight mattum super oru tamil padathuku title card full la english epadi sir ithu tamil la pota ena kornji poguthu

    ReplyDelete
  25. Ennaku intha padathoda Jackie reviewla udanpaadu illai....padam avlavu mokkai....Hope Jackie will correct this in future.....Matha padi....2.30 minutes time and 110 rupees money waste !!!!

    ReplyDelete
  26. This is the first time both Myskin and our Jackie stepped down from their great work...Hope Everyone agree after watching this waste film Mugamoodi !!!!

    ReplyDelete
  27. வணக்கம் ஜாக்கி சார், மிஷ்கின் படத்தில் வரும் பொதுவான அம்சங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நான்கு பாராவையும் படித்தபோது எனக்கு “சுஜாதாவின் நாவலில் வரும் கதாபாத்திரத்தினை குறிப்பிட சுஜாதா பயன்படுத்தும் வரிகள்தான் ஞாபகம் வருகிறது. குறிப்பாக சொல்வதானால்,

    //சர்க்கிளாகவும் இல்லாமல் ஓவலாகவும் இல்லாமல் நீள்வெட்டு தோற்ற தொப்புளோடு அழகு பொம்மையாக வந்து போகின்றார்.. அறிமுக நாயகி. பூஜா.. //

    நிறைகள் கூடிய தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  28. hello ravi xavier sir, entha oru padaippum, ezhuthum namathu munodi padaipazhiyin paathippu illamal irukkuathu, (ithil vidhi vilakkum undu) sujatha avargale avarin ezhuthukkalil athai solli irukkarar, mathabadi naan jacki xerox ellam illai.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner