பிரமாண்ட
படங்களை மட்டுமே இயக்கும்
இயக்குனர் ஷங்கரோட உதவி இயக்குனர் மாதேஷ் இயக்கி இருக்கும் படம் தான் மிரட்டல்..
.. நடிகர்
விஜய்யை வைத்து மதுரை படத்தையும்.. விஜயகாந்தை வைத்து அரசாங்கம் படத்தை இயக்கியது.. சாட்சாத்
இதே இயக்குனர் மாதேஷ்தான்...
சாக்லேட்
படத்தை தயாரிச்சதுக்கு அப்புறம் ஒரு பெரிய
இடைவெளி விட்டு இந்த மிரட்டல் படத்தை
மாதேஷ் இயக்கி இருந்தாலும், சேப்ட்டியா
தப்பிக்கறதுக்காக தெலுங்குபடமான தீ படத்தை ரீமேக் செஞ்சி இருக்கார்..
மோதி விளையாடு
தோல்விக்கு பிறகு வினய் நடித்து வெளிவந்து இருக்கும் படம் இந்த
மிரட்டல். முதலில் தில்லு முல்லு என்று
பெயர் வைத்து இருந்தார்கள்.. அனுமதி கிடைக்காத காரணத்தால் மிரட்டல் என்று பெயர் மாற்றத்தை இந்த
திரைப்படம் சந்தித்தது..
ரீமேக் படங்கள் பொதுவா ஓடற குதிரையில் சேப்ட்டியா பணம்
கட்டறது போல.. இந்த மிரட்டல் ரீமேக் குதிரை.... ஓடுமா? அல்லது நொண்டுமான்னு இப்ப
பார்த்துடலாம்...
========================
மிரட்டல்
படத்தின் கதை..
வினய் சின்ன சின்ன சீட்டிங் வேலைகளை தன் நண்பர்களுடன்
செய்து வருகின்றார்.. அவரின் அப்பா பாண்டியராஜன் ஊரில் பெரிய தாதாவாக
இருக்கும் பிரபுவிடம் வேலைக்கு சேர்த்து
விடுகின்றார்.. தாதா பிரபுவுக்கும், பக்கத்து ஏரியாவின் பெரிய தாதா பிரதிப்புக்கும் ஜென்ம பகை..
தாதா பிரதிப்பீன் மகனை பிரபு
கொலை செய்து விட, பிரபுவின்
தங்கையை கொல்ல பிரதிப் வெறியோடு அலைகின்றார்.. இதற்கு நடுவில் தாதா பிரபுவிடம்
வேலைக்கு வந்த வினய் பிரபுவின் தங்கையான ஷர்மிளாவை காதலிக்கின்றார் தாதாவின்
தங்கையை காதலித்தால்?.. முடிவு என்ன என்பதை வெண்திரையில் பாருங்கள்..
============
தில்லு முல்லு
கேரக்டருக்கு வினய் பாந்தமாக பொருந்தி இருக்கின்றார்..ஆனால் ரொம்ப டல்லாக
தெரிகின்றார்... சில காட்சிகளில் மட்டும் அதாவது பாடல் காட்சிகளில் மட்டும்
பிரைட்டாக இருக்கின்றார்.. அங்க மட்டும் வெள்ளைக்காரன் லுக் இருக்கு.. பல்லில்
பான்பராக் கரையா அல்லது சிகரேட்டின் நிக்கோட்டின் கரையா என்று தெரியவில்லை..
ரொம்பவே கொடுமையாக இருக்கின்றது...
நாயகியாக
ஷர்மிளா நடித்து இருக்கின்றார்.. தெலுங்கில் ஜெனிலியா செய்த ரோலை
இவர் ஏற்று நடித்து
இருக்கின்றார்..நிறைய காட்சிகளில்
நடிப்பில் அமெச்சூர் தனம் தென்படுகின்றது..
நாட்டுக்கட்டைக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு பாரின் சாங்கில் ரசிக
கண்மணிகளுக்கு விளக்குகின்றார்..
படத்தின்
முதுகெலும்பு என்று பார்த்தால் அது
சந்தானம்தான்... தெலுங்கு படத்தில் பிரமானந்தம் செய்த கேரக்ட்டரை தமிழில் செய்து இருக்கின்றார்... சந்தானம் சாரி என்ற கணக்கு குமாஸ்த்தா
கேரக்டரில் பின்னி இருக்கின்றார்...சந்தானம் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் செம
கிளாப்ஸ்.. அது எப்படி ஒருத்தனை கெடுக்கரதுன்னா மட்டும் கைல கேரியர் கட்டிகிட்டு
கிளம்பி வர்ரிங்க.. என்று டைமிங்காக பேசி, படம் நெடுக்க சந்தானம்
நகைச்சுவை தோரணம் கட்டி இருக்கின்றார்...அடையாள அணிவகுப்பு நடக்கும் போது
பக்கத்தில் அந்த குண்டு பையன் வந்ததும் சந்தானம் அடிக்கும் கூத்து செமை..
தெலுங்கில் சுனில் செய்த கேரக்டரை தமிழில்,
கஞ்சா கருப்பு செய்து இருக்கின்றார்...
நிறைய இடங்களில் சந்தானம், கஞ்சா கருப்பு காமினேஷன் காட்சிகள். வயிற்றை பதம்
பார்க்க வைத்து இருக்கின்றன... முக்கியமாக பர்த்டே பார்ட்டியில் கஞ்சா கருப்பை சந்தானம் ஆட விட்டு கலாய்ப்பது கலகல.
சங்கர் தாதா கேரக்டருக்கு பிரபு கனக்கச்சிதமாக
பொருந்துகின்றார்...பைனல் என்ற வார்த்தைதான் அந்த கேரக்டரிடம் சிக்கி படாதபாடு படுகின்றது..பைனல் என்ற வார்த்தை
உபயோகபடுத்தும் இடங்களில் எல்ல்லாம் நாடகதன்மை
எட்டிப்பார்க்கின்றது..
வெகு நாட்களுக்கு பிறகு மன்சூர் அலிகான் படம்
முழுக்க வருகின்றார்.. எந்த டயலாக்கும் பேசமுடியாத பெராலிஸ் அட்டாக்
நோயாளியாக நடித்து இருக்கின்றார்.. வெகு
நாட்களுக்கு பிறகு பாண்டியராஜன் வினயின் அப்பா கேரக்டரில் நடித்து இருக்கின்றார்..
பிரபுவை வைத்து பாண்டியராஜன் இயக்கிய முதல் படம் கன்னிராசி என் ஆல்டைம் கிளாசிக்
பேவரைட்..
பாடல்கள்
எதுவும் மனதில் நிற்க்கவில்லை என்பது பெரிய குறை... படத்தில் எதிர்பாராத
திருப்பங்கள் எல்லாம் ஏற்க்கனவே பார்த்த அரத பழசான திருப்பங்கள்தான் என்றாலும்
லாஜிக் பார்க்கவில்லை என்றால் படம் விறு விறுப்பாக செல்வதை ஒத்துக்கொள்ள
வேண்டும்..
==============
படத்தின்
டிரைலர்..
================
படக்குழு
வினர் விபரம்.
Directed by R. Madhesh
Produced by Sunanda Murali Manohar
Starring Prabhu
Vinay Rai
Sharmila Mandre
Santhanam
Music by Pravin Mani
Cinematography D.Kannan
Studio Majestic Multimedia Limited
Distributed by Mediaone Global Entertainment Limited
Release date(s)
August 2, 2012
Country India
Language Tamil
==============
பைனல்கிக்..
இந்த படம் மொக்கை என்று சொல்ல முடியாது.. காமெடி எண்டர்டெனிட்மென்ட் என்று சொல்லலாம்..
டைம்பாசுக்கு போய் லாஜிக் பார்க்காமல்
சிரித்து விட்டு வரலாம். மிரட்டல் படம் 100% கமர்சியல் மசாலா....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

//தாதாவின் தங்கையை காதலித்தால்?.. //
ReplyDeleteஒண்ணும் ஆகாது பாஸ்! பிரபு தாதாவா இருந்தா... அவர் நல்ல தாதாவாத் தானே இருப்பார்? அதானே முறை? :-)
கன்னிராசி Director GM.Kumar
ReplyDeleteகன்னிராசி director GM.Kumar
ReplyDeletedirector of KANNIRASI is Pandiarajan.story and dialogue is written by G.M.Kumar and Livingston
ReplyDeleteDirector of KANNIRASI is Pandiarajan.Story and dialogue is written by G.M.Kumar and Livingston
ReplyDeleteநான் ஈ படத்தைப் பார்க்க சத்யம் போயிருந்த போது இந்தப் படத்திற்கு விளம்பரம் போட்டார்கள். அப்போதே படம் எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. உங்கள் விமர்சனம் அதையேதான் சுட்டிக் காட்டுகிறது.
ReplyDeleteவினய் கதாநாயகன் வேடத்திற்குப் பொருந்தவில்லை என்பதுதான் என் கருத்தும். தமிழில் இனிமேல் அவர் தேறுவது கடினம்.
சிறப்பானவிமர்சனம்!நன்றி!
ReplyDeleteenaku romba bore adichithu
ReplyDelete