உப்புக்காத்து...19




இது ஒரு வெற்றிக்கதை....

தோல்வி நிலையென நினைத்தால்.... மனிதன் வாழ்வை  நினைக்கலாமா? என்ற பாடல் வரிக்கு உயிர் கொடுத்த கதை இது... இந்த உலகம் கதவடைத்தால் .....எட்டி உதைப்பேன் அது திறக்கும்...... என்ற பாடல் வரிக்கு ஏற்றது போல கதவடைத்த உலகத்தை எட்டி உதைத்து  வெறியோடு திறந்த கதை....

அயனாவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த கடைக்குட்டி இந்த  உப்புக்காத்தின் நாயகன்.. நாயகனின் பெயர்...ஆனந். தன் உடன் பிறந்த அண்ணன், அக்கா என எல்லோரும் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டாலும் தான் என்ன செய்ய போகின்றேன் என்று தெரியாமல் தவித்தார் ஆனந்... சில நேரங்களில் பல வீடுகளில் கடைக்குட்டி பிள்ளைகளுக்கு இப்படி நேர்வதுண்டு..

1988களில் ராயபுரத்தில் ஆட்டோமொபைல் ஷாப்  சின்னதாக வைத்தார்..நாலு வருடம் நலிந்து போகாமல் அந்த கடை நடக்க  உதவியது  யார் என்றால்....ஈசிஆரில் இருக்கும் எம் ஜி எம் நிறுவனர்  முத்து அவர்கள் கொடுத்த ஆர்டர்கள்... ஜாக்கி அப்ப எல்லாம் போர்ட்டுலருந்து  எண்ணுருக்கு லாரி டிப்பர்ல லோட் அடிப்பாங்க.. எங்க கடைவாசல்ல  வந்து  அவசரத்துக்கு சிகரேட் கேப்பாரு  கொடுப்பேன்... அடுத்த அரைமணி நேரத்துல ஒரு பாக்கெட்டா டிரைவர்கிட்ட கொடுத்து  அனுப்புவாரு... அவரு புண்ணியத்துலதான் என்னோட  ஆட்டோமோபைல் ஷாப் நாலு வருஷம் ஓடிச்சி..


ஆனாலும் ஒரு கட்டத்தில் கடன் கொடுத்து கொடுத்து நொடிந்து அந்த  ஆட்டோ மொபைல் தொழில்  சுபயோக சுபதினத்தில் முடுவிழாக்கண்டது...

திருமணம் ஆகிவிட்டது.. பெண்  பிள்ளை பிறந்து விட்டாள்.... வாழ்க்கை பயணத்தை ஓட்ட கண்ணா பின்னா என்று ஓட வேண்டும்.. எப்படி ஓட வேண்டும்? எதன் பின்னால் ஓட வேண்டும்? என்று  தெரியாத நேரம்.. மனைவி  பிள்ளை மிதிப்பு குறையாமல் சமுகத்தில்  வாழ கடுமையாக உழைக்க வேண்டும்... முதல் தோல்வி  தந்த பயம் எதை  தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமை.

 தோல்வி பயம் கண்களில் தெரிய.. அடுத்த என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது மண்ணடியில் லேத் பட்டறை வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொந்தங்களுடன்  கலந்து ஆலோசிக்க...  சின்னதாக பத்துக்கு பத்து கடையை உறவுகளோடு ஆரம்பிக்க, அந்த கடையில் உறவுகளினால்  பிரச்சனை ஏற்ப்பட்டு ஒரு கட்டத்தில் இந்தியாவில் இனி இருக்க கூடாது என்று முடிவு எடுத்தார்..... சொந்தங்களை  முன்னே தலை நிமிர வேண்டும் என்று முடிவு எடுத்தார்.. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பது போல ,சராசரி தமிழ் குடிமகன் போல மீனம்பாக்கத்தில் இருந்து  சவுதி அரேபியாவுக்கு பெண்டாட்டி பிள்ளைகளை விட்டு விட்டு பிளைட் ஏறினார் ஆனந்..

1990 களில்  சென்னையை விட்டு  சவுதிக்கு சென்றார்.. சொல்லி அழைத்து சென்ற வேலை  சேல்ஸ்மேன் வேலை....... ஆனால் கொடுத்த வேலை வேறு... இந்த வேலையில் விருப்பம் இல்லாதவர்கள் அடுத்த பிளைட்டை பிடிக்கலாம் என்று சொன்ன போது, சிலர் அடுத்த பிளைட்டை பிடிக்க ஓடினார்கள்... ஆனந் தீர்மானமாக  நின்றார்.. எல்லா இடத்திலும் தோல்வி என்றால் அது வந்து கொண்டேதான் இருக்கும் ஓட ஓட துரத்திக்கொண்டே இருக்கும் ... ஒரு முறையாவது  தோல்வியை எதிரில் நின்று முறைத்து பார்க்க வேண்டும்?- அல்லது  எட்டி நடு மார்பில் உதைப்பது போல தோல்வியை உதைத்தால் மட்டுமே தோல்விக்கு பயம் வரும்.. விடாது கருப்பாக துரத்தும்  தோல்வியை எதிர்கொள்ள சவுதி அரேபியாவில் இருக்க  முடிவு எடுத்தார்...


 சவுதி ஆர்மி கேம்பில் வேலை....   சேல்ஸ்மேன் வேலை  இல்லை... ஆர்மி  கேம்பிள் கிளினிங் லேபர். காலை 5 மணிக்கு விழித்து, ஆறு  முப்பதிலிருந்து 2.30 மணி வரை ஷிப்ட் .. பேருந்து தங்கும் இடத்துக்கு வரும்........ ஆர்மி கேம்புக்கு செல்ல வேண்டும்...  அங்கே போனதும் உத்தி பிரிப்பார்கள்.... எந்த எந்த வேலை  யாருக்கு என்று...ரூம் கிளினிங், துணி துவைப்பது,  டாய்லட் கிளினிங், என்று சகலமும் செய்ய வேண்டும்.. எட்டு மணி நேரத்தில் கொட்டை பிழிய வேலை வாங்கிதான் அனுப்புவார்கள்....மூன்று மணிக்கு திரும்ப தங்கும் இடத்துக்கு வர வேண்டும்.. மீதம் தினமும் 5 மணிநேரம் பாக்கி இருந்தது.. ஏதாவது செய்ய வேண்டும்..

வெறும் 22 ரியால் பணமும் இந்திய பாஸ்போர்ட்டுடன் பாலைவன வாழ்க்கைக்கு  தன்னை  உட்படுத்திக்கொண்டார் ஆனந் ....400 ரீயால் சம்பளம் ஜாக்கி... அதுல மூணு மாசத்துக்கு வெறும் 50 ரியால் தான் கொடுத்தானுங்க... 50 ரியால்லதான் சாப்பிட்டுக்கனும் எல்லாத்தையும் பார்த்துக்கனும்..   டெய்லி ரசம் சாதம் தான் சாப்பாடு.. தொட்டுக்க  என்ன தெரியுமா? வெங்காயம்.. அதை நினைச்சா இன்னைக்கு கண்ணை கட்டும்.... 


வெள்ளிக்கிழமை ஆனா கோழி அடிச்சி குழப்பு வைப்போம்.. அவ்வளவுதான்.......400 ரியால் சம்பளம் ஊரில்   தோல்வி  கொடுத்த கடன்கள்... ஏதாவது செய்ய வேண்டும்.. என்ன செய்வது..? யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டார்.. முதலில் அவர்கள் கொடுத்த வேலை.. ஆர்மி கேம்பில் சுத்தம் செய்யும் வேலை... ஆனந்துக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் ஆர்மி ஆபிசர்களுடன் ஆங்கிலத்தில் பேசி  உயர் அதிகாரிகளின் கார்களை துடைக்க அனுமதி வாங்கினார்.. அந்த கார்களையும் ஜீப்பையும் துடைப்பது மூலம் மாதம் 300 ரீயால்களை சம்பாதித்தார்..

பார்ட்டைமாக ஏதாவது வேலை இருக்கின்றாதா என்று தினமும் தேடல் வேட்டையில் இறங்கினார்.. உதாரணத்துக்கு,சென்னை வடபழினி சிக்னலில் இருந்து வளசரவாக்கம் மேகா மார்ட்  வரை அதாவது மூன்று கிலோமீட்டர் தூரம் தினமும் சவுதியில் உள்ள ரோட்டில் இருக்கும் இரு புறகடைகளில் பகுதி நேர வேலை ஏதாவது இருக்கின்றதா? என்று தினமும்  தேடல் வேலையில் இறங்கினார்...


தினமும் 100 கடைகளுக்கு மேல் ஏறி இறங்கினார்...பீ ஷுகல் என்றால் அரபியில்  வேலை இருக்கின்றதா? என்று அர்த்தம். ஆனால்  லா என்றால் இல்லை என்று அர்த்தம்.. பிஷூகலும், லா எனக்கு ஒருமாதத்தில்  கேட்டு கேட்டு புளிச்சி போயிடுச்சி  ஜாக்கி.. தோல்விபயம் மிரள வைக்க சவுதி தெருக்களில் சுற்றிய நாட்கள் அது...


  வாரத்துக்கு இரண்டு நாள்  ஒரு பார்ட்டைம் ஜாப் கிடைச்சது ஜாக்கி... நிறைய பேர் செய்ய  யோசிச்சானுங்க... ஓத்தா நேர்மையா இருக்க.. எந்த வேலையும் செய்யலாம்னு மனசு சொல்லிச்சி துணிஞ்சி இறங்கினேன் ஜாக்கி.. கோழி பண்ணையில கிளினிங்  வேலை.. சாதாரணமா சென்னை சிக்னல்ல கோழி  ஏத்திக்கிட்டு போற வண்டி வந்து பக்கத்துல நின்னாலே கோழிப் பீ நாத்தம் குடலை பொறட்டும்.... நான் அந்த வேலையை செஞ்சேன்... ஏன் தெரியுமா? என்  பொண்டாட்டியும் புள்ளையும் தான் கண்ணுக்கு வந்தாங்க.. முக்கியமா என் பொண்ணு கண்ணுக்கு வந்தா.. ஸ்கூல் பீஸ்  கட்டனும் படிப்பு ,குடுப்ப  செலவு கண்ணுமுன்னால இருக்கும் போது கோழி பீயும், நாத்தமும் என்  கண்ணுக்கு தெரியலை... அதுல மாசம் 200 ரியால்  கிடைக்க ஆரம்பிச்சது... என் கூட சென்னையில் இருந்து வந்து ஆர்மி கேம்பில் வேலை செஞ்சவங்க எல்லாம் அந்த எட்டு மணி நேரம் வேலை செஞ்சி முடிச்சதும் டயர்ட்ல படுத்துடுவாங்க.. எனக்கு அப்படி இருக்க பிடிக்கலை.
  இரண்டு மாதம் கழித்து கடை கடையாக ஏறி இறங்கி செல்ல... ஒரு பாகிஸ்தானி ஓனர் அவசரமாக  காரில் ஏறும் போது...


Sir I want part time job….
Where you from?
I am from india…
Which place…?
 Chennai geee….
Madhrasi…?
Yes sir…
Ok now  where you work here?
Saudhi Army camp cleaning labor…
What …? why cleaning labor?
Sir that’s the big story.. I will tell you later…
No broblem… I will go  meeting now… you will come meet me in the monimng…
Ok sir thank  you so much….

மறுநாள் மாலை மதியம் மூன்று மணியில் இருந்து இரவு  ஒன்பது மணிவரை  வேலை  அந்த பாகிஸ்தானி ஆட்டோ மோபைல்ஷாப்பில் வேலை கிடைத்தது.

இப்ப எல்லாம் ஈ மெயில், போன், ரொம்பவே உலகம் சுருங்கிடுச்சி... என் பொண்டாட்டி போட்ட  லட்டர் 15 நாள் கழிச்சி கிடைக்கும்..  அது போல  நான் போடுற லட்டர் பதினைஞ்சு நாளைக்கு  அப்புறம்தான் கிடைக்கும்.. அந்த லட்டரை எத்தனை வாட்டி படிச்சி கண் கலங்கி இருக்கேன்னு எனக்கும்  அந்த லட்டருங்களுக்கு மட்டும்தான் தெரியும்..

பாகிஸ்தான் ஓனர்  ஆனந் வேலையும் அவர் ஆங்கிலமும் பிடித்து போக  முழு நேரம் கடையில் இருக்க பணித்தான்... நான் வீசாவும் அட்வான்சும் கேட்டேன்... வீசா எடுத்துக்கொடுத்தான்... போயிட்டு வர அட்வான்சா.. 5000 ரியால் பொக்குன்னு தூக்கி  கையில கொடுத்தான்... எல்லாரை போல  அந்த காசுல ஒரு 5 பவுன் செயினை வாங்கி கழுத்துல போட்டுகிட்டு ஆர்மி கேம்ப வேலையை    ரிசைன் பண்ணிட்டு சென்னைக்கு பிளைட் புடிச்சேன்., இந்த முறை தோல்வியை எதிர்த்து லைட்டா முறைச்சேன் அவ்வளவுதான்... சென்னையில எனக்கு இறங்கனதுமே ஆப்பு வந்துச்சி...

1992 இல புலிகள் பிரச்சனையில் பாஸ்போர்ட் பெரிய  பிரச்சனையா இருந்துச்சி..  சென்னை வந்து பொண்டாட்டி புள்ளைய பார்த்து சந்தோஷமா கூட இருக்க முடியலை..  ஒரு மாசம் லீவ் கொடுத்து அந்த பாகிஸ்தானி 5000 ரியால் கொடுத்து அனுப்பிச்சான்.. ஆனா பாஸ்போர்ட்  வீசா பிரச்சனையில  எட்டுமாசம் இங்கையே உட்கார வச்சிட்டான்  ஆண்டவன்... வரவன் போறவன் எல்லாம் இன்னுமா? போவலை  இன்னுமா போவலைன்னு  தலையில முக்காடு போட்டுக்கினு போகாத குறை...

ஒரு முஸ்லிம் சாமியரை பார்க்க என் பிரண்ட் ஒருத்தன்  என்னையும் அழைச்சி கிட்டு போனான்... சீக்ரம் பிளைட் ஏறுவேன்னு சொன்னார்.. தலையில கை வச்சி முதுகி தடு விட்டார்.. என் உடம்பு சிலித்துச்சி.. சொன்னா நம்ப மாட்ட ஜாக்கி ...ஒரு வாரத்துல பிளைட் ஏறினேன்.. அந்த பாகிஸ்தானிக்கு நம்வே முடியலை கண்ணு கலங்கிட்டான்...  எல்லாரும் நான் ஏமாத்திட்டேன்னு சொல்லி இருக்கானுங்க.. பிரச்சனையை சொன்னேன்.. இன்னைக்கு ரியாத்ல பத்தான்ற இடத்துல இருக்கும் ஒரு எலக்ட்ரிக்ல் ஷாப்புல நானும் ஒரு சவுதிகாரனும் பார்ட்னர். கடவுள் புண்ணியத்துல  வியாபரம் நல்லா போவுது...  இன்று அயனாவரத்தில்   உழைப்பின் பலனாய்  ஆனந் கோடிஸ்வரனாக  இருக்கின்றார்....
ஆறு மாதத்துக்கு  முன் ஒரு போன் கால் ... நான் ஆனந் பேசறேன்.. ஜாக்கிசேகர்தானே பேசறது...


ஆமாங்க சொல்லுங்க..

நான் அயனாவரம்... உங்க  பிளாக்கை என் கசின்தான்  அறிமுகபடுத்தி வச்சான்.. நான் ரியாத்ல இருக்கேன்.. ரொம்ப சிம்பிளா இருக்கு உங்க பிளாக்... என்கிட்ட நேர்ல எதிர்க்க உட்கார்ந்து பேசறது போல இருக்கு  அப்படி எழுதறது.. ரொம்ப  பெரிய கொடுப்பினை.. எல்லாருக்கும் இப்படி எழுத வராது.. தயவு செய்து எழுதுவதை குறைக்காதிங்க..
அதன் பின் வாரம் வாரம் சரியாக  ஞாயிற்று கிழமை ஒன்றரை மணிக்கு போன் செய்வார்...   ஒரு வாரமும் தவறியதே இல்லை.. யார்  அவர்  எப்படி இருப்பார்?  ஏன்  என்னிடம் வாரம் தவறாமல் பேசுகின்றார்.. அப்படி என்ன பெரிதாக  எழுது கிழிச்சிட்டேன்..


 அவர் வயதை நான்   கேட்டதே இல்லை.. அதனால் வாயா போயா என்று எல்லாம் பேசி இருக்கின்றேன்...ஒரு முறை  அவர் குடும்பத்தை பற்றி பேசும் போது என் பேரன் சஞ்சய் நினைவா இருக்கு என்றார்... எனக்கு தூக்கி வாரி போட்டது என்னது பேரானா-? ஆமாம் என்றார்.. என்னால இப்படித்தான் பேச முடியும் உடனே அண்ணான்னு பேசி டகால்ட்டி எல்லாம் அடிக்க முடியாது என்றேன்.. யோவ் இப்படி இருக்கறதாலதான்யா உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்... உனக்கு எது கம்பர்ட்டா இருக்கோ அப்படியே  கூப்பீடு...ஆனாலும் வாயா போயா என்றுதான் பேசிக்கொண்டு இருந்தேன். 


ஜாக்கி அடுத்த வாரம்  சென்னை வரேன்.. என்ன வேணும்..  எனக்கு ஒன்டிபி  ஹார்ட் டிஸ்க் வேணும்... வாங்கியாங்க. பணம் கொடுத்தடறேன் என்றேன்.. ஆனா  சாக்லேட்டும், ஹார்ட் டிஸ்க்  கொடுத்தார்...  பணம் என்றேன்.. உங்க அண்ணன்கிட்ட நீங்க பணம் கொடுப்பிங்களா.. ஜாக்கி என்றார்...? இப்போதெல்லாம்  வாங்க போங்க என்றுதான் அழைக்கின்றேன்.. சில   நேரங்களில் கூச்சம் பிடிங்கி தின்ன அண்ணே என்று அழைத்து பார்த்து இருக்கின்றேன். என்  உடன்  பிறந்தவன் இல்லை, என் சொந்தம் இல்லை, என் பந்தம் இல்லை.., ஆனால் இன்று எனக்காய் கவலை படும் ஜீவன் தப்பு சரி என்று தைரியமாக என்னிடம்  உரிமையா சொல்லி வாதாடும் ஒரே நபர்....


இப்போது ஆனந் சென்னையில் அவர் பர்சன்ல் வேலையாக வந்து  இருக்கின்றார்...ஜாக்கி நாம மீட் பண்ணவேண்டும்.. சின்னதாக கட்டிங் அடித்து விட்டு  பேசுவோம் …..அதுக்கு முன்ன என் வீட்டுக்கு வர வேண்டும் என்றார்... அவர் என்னை அழைத்து வர கார் அனுப்பி இருந்தார்...அயனாவரத்தில் அந்த  குறுகலான தெருவில் அந்த வீட்டின்  கேட்டை கடந்து முதல் தளம் செல்லும் வரை.. நான் அப்படி ஒரு  இண்டிரியரில்  அந்த வீடு இருக்கும் என்று நினைக்கவேயில்லை… உள்ளே நுழைந்தேன்  கல்யாண  மண்டபம் போல பெரிய ஹால்  அதில் 60 இன்ச் அளவுக்காவது இருக்கும் அவ்வளவு பெரிய பிளாஸ்மா டிவி… டவர் ஸ்பீக்கர்ஸ்  ஹோம் தியேட்டர் என்று கலக்கிக் கொண்டு இருந்தார். புருனோ சுல்தான் அரண்மனைக்கு வந்து விட்டது போல திரைசீலைகள். மரவேலைபாடுகள் கொண்ட நாற்காலிகள்.. படுக்கையறைகள் என்று எல்லாம் ஹைகிளாஸ் ரகம்.. அந்த வீடு மட்டும் வளசரவாக்கத்தில் இருந்து  டிவி சீரியலுக்கு வாடகை விட்டால்… ஒரு நாளைக்கு 50,000க்கு வாடகை விடலாம் என்று மீடியா புத்தி கணக்கு போட்டது… அவரது மகள் என்னை வரவேற்றார்.. அவரது பேரன் சஞ்சய் எனக்கு முகமன் கூறினான்…


ஜாக்கி எல்லாம் இண்டிரியரும் சவுதியில் இருந்து கன்டெய்னர்ல போட்டு எடுத்து  வந்தேன் என்றார்.. எல்லா அறைகளிலும் பெட்ரூம்கிளிலும் கலை நயம் வியாபித்து இருந்தது… எல்லாத்திலேயும் ஒரு பிரமாண்டம் கலை நயம்… எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வந்தேன்....  ரொம்ப பெருமையாக இருந்தது.. எல்லோரை போல  பயந்து ஒடுங்காமல் கதவடைத்த உலகத்தை எட்டி  உதைத்து திறந்தவனின் வீடு எப்படி இருக்கும் என்பதை  நேரில் பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது….இன்னும் பல சிறப்புகளை அடைய ஆனந் அண்ணணுக்காக  எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்….



 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

30 comments:

  1. எதிர்ப்பவருக்கு அனைத்தும் கால் தூசிக்கு கீழ் தான் வெற்றி தோளில் துவள ஆரம்பிக்கும். வாழ்த்த்துக்கள் ஆனந் & ஜாக்கி சேகர் இருவரும் ஒருவரே

    ReplyDelete
  2. What you do is not important but how you do it is more important. Perseverance and patience helped him to come out of the temporary shortcomings. Kudos to Shri Anand. He stands as a good example for others.

    ReplyDelete
  3. Hi Jackie,How are u,yazhini ? how about ur work ? Usually i read ur blog looks very nice & informative,

    I read the story of Mr.Anand it's amazing as it proves hardwork lead the way to success.

    I am also residing in Riyadh (Saudi Arabia) I will be greatful to you if you can provide the saudi contact number for Mr.Anand.

    Take Care

    Best Regard's,

    Shahul Hameed,
    Mob # 00966 568200276

    ReplyDelete
  4. hello jackie uncle
    I have no words to express myself!!! I am very thankful to God to have such a wonderful father!! Thank you so much uncle, u have done a great job!!! Part of me is also selfish for appriciating you since the article is about my father... Thank you anyways, but I should also Tell you that after reading all you other stories I have become a great fan of yours! Keep up the good work uncle... My hearty wishes to you!! Love and regards,
    abi

    ReplyDelete
  5. Hello Jackie uncle
    I have no words to express how exactly I am feeling now. You are such a simple, wonderful person and it so very kind of you to publish about dad in your blog. I am proud to say that I am the daughter of Mr.Anand and so greatful to God for such a wonderful fahter. He is the greatest dad in the world a person could ask for!! Like a fellow friend had mentioned you both are such similar people.. You certainly seem to know exactly what to say and you are so selfless... I maybe partly selfish in praising you, only since you have written about my dad, but truly you have earned yourself another fan.. Thank you uncle, Thank you for being you!!
    Love and regards
    abi

    ReplyDelete
  6. superb story jackie its a boost for all who are trying hard

    ReplyDelete
  7. excellent . . . really giving more charge . . .

    ReplyDelete
  8. Mr. Anand was my ex-house owner from August 2006 to January 2008... used to give rent to his brother since he was in Saudi.. Glad to know many details about him which I am unaware of ...

    Thanks Jackie.!!!

    ReplyDelete
  9. அயனாவரத்தில் அந்த குறுகலான தெரு.. Duraisamy Street !! NAMMA AREA ...upto June 2012

    ReplyDelete
  10. kalakkal.. could relate well.
    thanks

    ReplyDelete
  11. ஜாக்கி, நான் உங்களது பதிவுகளின் ரசிகன். எளிய நடை, straight to point, நன்றாக இருக்கும். உப்பு காத்தின் இந்த வார நபர் நண்பர் ஆனந்த் வாழ்க்கை முன்னேறும் வெறி கொண்டவர்களுக்கு ஒரு பாடம். மிக சில மணி துளிகளில் குழந்தைகளில்ருந்து முதியோர் வரை எல்லாரையும் எளிதாக கவரும் ஒரு இளமை துள்ளல் கொண்ட மனிதர். உங்களுக்கும் அவருக்கும் முன்னேற்றம் தொடரட்டும்.

    ReplyDelete
  12. Nice and inspiring post. Thanks for sharing.
    Best wishes to Anand.

    ReplyDelete
  13. Nice and inspiring post. Thanks for sharing.
    Best wishes to Anand.

    ReplyDelete
  14. Great ! no others word to say..... just thinking of u and anand sir.

    ReplyDelete
  15. உப்புக்காத்து எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடலாம் ஜாக்கி. எளிமையான நடையில், யாரும் கேள்விப்படாத விஷயங்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  16. Excellent write-up on an amazing personality!!!

    ReplyDelete
  17. Excellent write up on an amazing person!!!

    ReplyDelete
  18. யுவா சொன்னதுதான் மனசுல பட்டுச்சு ஜாக்கி

    ReplyDelete
  19. Hai jaki,

    Reading your blog for the past 1 year.this is my first comment.Super.All the best.Uppu kaathu usanthu adikuthu.

    ReplyDelete
  20. நெகிழ்ச்சியான பதிவு...

    என் சௌதிவாழ் நண்பர்கள் அனைவரையும் இதை படிக்க வைத்திருக்கேன்.

    அடிக்கிற வெயிலில் சில சமயம் வாழ்க்கையே வெறுத்தாலும் இவரை போன்ற ஜாம்பவான்களால் தான் கடந்து செல்ல முடிகிறது.

    ReplyDelete
  21. நெகிழ்ச்சியான பதிவு...

    என் சௌதிவாழ் நண்பர்கள் அனைவரையும் இதை படிக்க வைத்திருக்கேன்.

    அடிக்கிற வெயிலில் சில சமயம் வாழ்க்கையே வெறுத்தாலும் இவரை போன்ற ஜாம்பவான்களால் தான் இப்பாலைவனத்தை கடந்து செல்லும் துணிவை பெற முடிகிறது.

    ReplyDelete
  22. பார்ட்டைமாக ஏதாவது வேலை இருக்கின்றாதா என்று தினமும் தேடல் வேட்டையில் இறங்கினார்.. சென்னை வடபழினி சிக்னலில் இருந்து வளசரவாக்கம் மேகா மார்ட் வரை ரோட்டில் இருக்கும் இரு புறகடைகளில் பகுதி நேர வேலை ஏதாவது இருக்கின்றதா? என்று தினமும் தேடல் வேலையில் இறங்கினார்...

    ReplyDelete
  23. பின்னுட்டம் இட்டு வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு என் நன்றிகள்.

    யுவா, இளா நீங்கள் சொன்னது மனதில் இருக்கின்றது பார்ப்போம்..

    இந்த பின்னுட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.. அண்ணன் ஆனந் அவர்களின் மகள் எழுதிய பின்னுட்டம்தான் அதை படித்த போது என் கண்களில் கண்ணீர்..

    ReplyDelete
  24. ஜாக்கி சார்,
    முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் .... இதற்கு ஆனந்த் ஒரு நல்ல எடுத்துக்காட்டு...
    ஒரு சினிமா படம் பார்ப்பது போல இருந்தது.....

    வாழ்த்துக்கள் ஆனந்த்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner