Attakathi/2012 /உலக சினிமா/ இந்தியா/அட்டகத்தி/ கிராமத்து டீன் ஏஜ் பாயோகிராபி.




  எங்கள் ஊரில் எதுக்கெடுத்தாலும் அலட்டுவான்...அவன் பெயர்  முருகன்.. முருகன் கொலுத்து வேலை செய்யும் முனியான்டி மகன்...
 அன்பரசன் பெயிண்டர் குமரேசன் மகன்.. இரண்டு பேரும்  நண்பர்கள்.. இரண்டு பேரின் குடும்பமும் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். நல்ல  நண்பர்கள். ஒன்றாக ஊர் சுற்றுவார்கள்..  கில்லியில் இருந்து கோலி வரை ஒன்றாக விளையாடுவார்கள்..

வாழ்க்கை சக்கரம் வேகமாக சுற்றும் போதே டரவுசர் போட்டுக்கொண்டு சுற்றி திறிந்த இரண்டு பேரும்  தினமும் ஜட்டி அணிந்து  கைலி கட்டும் பருவ வயதை  இருவரும் அடைந்த போது,   விதி  நக்கலாக அந்த இரண்டு பேரையும் பார்த்து  சிரித்து வைத்தது.

 ஊரில்  மருத்துவர் குடும்பம் ஒன்று முதன் முதலாய் குடியேறியது... அவருக்கு ஒரு பெண்.. எனக்கு தெரிந்து  எங்கள் ஊரில்  கைனட்டிக் ஹோன்டா ஓட்டிய முதல்  பருவ பெண் என்றும் சொல்லலாம்.

பார்க்க அந்த டாக்டரின் பெண் நன்றாகவே இருப்பார்... கிராமத்தில் நகரத்து வாடையோடு ஒரு  டாக்டரின் பெண் கைனட்டிக் வண்டியில் குழல் பறக்க டிசர்ட்டும் ஜீன்சும் அணிந்து செல்வதை கிராமத்து காளையர்கள் ஏக்கமாக பார்த்து வைப்பார்கள்..

 அந்த பெண்ணை கவர    சைக்கிளும் டிவிஎஸ் பிப்ட்டியும் போட்டி போடும்... இந்த போட்டியில் அன்பரசனும்  முருகனும்  அடக்கம்.. அந்த பெண் பள்ளி  செல்ல கிளம்பினால் முன்னும் பின்னுமாக அவர் அவர் சக்திக்கு தகுந்தது போல, உடை அணிந்து கொண்டு கேட்வாக்  செய்வார்கள்... ஆனால் அந்த பெண்  யாரையும் மதித்தது இல்லை.. திரும்பி கூட பார்த்தது இல்லை.


பால்ய நண்பர்கள் இரண்டு பேருமே  டாக்டர் பெண்ணை சைட் அடிக்க,  இரண்டு பேருக்குமே ஜென்ம பகை உருவானது..ஒரு நாள் கைனட்டிக்கில் இருந்து அந்த பெண்ணின்  டிபன் பாக்ஸ்  ரோட்டில் விழுந்து விட... அதை யார் எடுத்து  அவளிடம் எடுத்து கொடுப்பது என்பதில் தான் முதல் போர் உருவானது...

நண்பர்கள் எல்லாம் மாரியாத்தா கோவில் மாந்தோப்பில் உட்கார்ந்து கொண்டு  அவன்   அவன்  சைட்டுகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது... முருகன் தான் ஆரம்பித்தான்.. மச்சி அந்த டிபன் பாக்ஸ் எடுத்து கொடுத்த போது அவ ஒரு பார்வை பார்த்தா பாரு உசிரே  போயிடுச்சி... மயிறு போச்சி... அதை நான்  அது கூட விழுந்த தொட்டுக்க டப்பாவை கூடத்தான் நான் எடுத்து கொடுத்தேன்.. என்பதில் ஆரம்பித்த்து அந்த வன்மம்..

இரண்டு பேரும் அக்னி நட்சத்திரம் கார்த்தி, பிரபு போல  மோதிக்கொண்டார்கள்.. திரும்பி கூட பார்க்காத பெண்ணை யார்  டாவு  விடுவது என்று போட்டி...

அய்யானர்  கோவில் புளியந்தோப்பில் இரண்டு பேரும் நண்பர்கள் முன்னிலையில்  சண்டை போட வேண்டும்.. யார் ஜெயிக்கின்றார்களோ? அவருக்கு அந்த பெண்ணை எந்த தொந்தரவும்,  பிறர் தலையீடு இல்லாமல்  டாவு விடலாம்.

  அடித்துக்கொண்டார்கள்.. அய்யனார் அமைதி காத்தார். புளிய மரம்  காற்றில் ஊளையிட்டது.. அன்பு ஜெயித்தான்... இதில்  உச்சபட்ச  காமெடி என்னவென்றால்... வெஸ்டர்ன் கிளாஸ்செட்டில் ஆய்  போகும் டாக்டர் பெண்ணை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தாள்... அவள் ஆய் போக இரண்டு பேர் வீட்டிலும் டாய்லட் என்ற  வஸ்த்து என்பதே இருவர் வீட்டிலும் இல்லை என்பதே....

அது போல ஒரு  கிராமத்து வாலிபனின் காதல் வயப்படுதலை மிக சுவாரஸ்யமாக சின்ன சின்ன உணர்வுகளை  கவிதையாக சொல்லி இருக்கின்றது இந்த அட்டகத்தி திரைப்படம்.
==============
அட்டகத்தி படத்தின் ஒன்லைன்.


 காதலை அடையவேண்டும் என்று பார்க்கும் பெண்களிடம் எல்லாம் காதலை எதிர்நோக்கி  தோற்றுப்போகும் ஒரு  கிராமத்து வாலிபனின் கதை.
=========
 அட்டகத்தி  திரைப்படத்தின்  கதை...

தினகரன் (தினேஷ்) டுடேரியலில்  படித்து  ஆங்கில பரிட்சையில் போராடும்  சராசரி கிராமத்து இளைஞன்.. ரோட்டில் பேருந்தில் பார்க்கும் அத்தனை பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும்  ஸ்வீட் ரோமியோ...ஆனால் எல்லா காதலும்  சொதப்பி தொலைக்கின்றது..ஆனாலும் காதலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கின்றான்... அவன் காதலில் ஜெயித்தானா? என்பதே  மீதிக்கதை..


=========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

தமிழ் சினிமாவில் இது போன்ற இயல்பான காட்சிகளை பார்க்கும் போது மிக மகிழ்வாக இருக்கின்றது... எந்த பெரிய  ஆர்ட்டிஸ்ட் வேல்யூவும் இல்லாமல் ஒரு படத்தை ரசிக்க வைப்பது பெரிய விஷயம்.. அதை அட்டகத்தி சாத்தியபடுத்தி இருக்கின்றது...காதல் மறுக்கப்பட்ட தேசத்தில் காதலில் சொதப்பியதை, காதலித்த போது  மொக்கை வாங்கியதை இந்த படம் காமெடியாய்  அலசுகின்றது.


இயக்குனர் பா ரஞ்சித் இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் ... நல்ல ரசனைக்காரர் என்பது படத்தின் ஒவ்வோரு பிரேமிலும் வெளிப்படுத்தி இருக்கின்றார்..


முதல் காட்சியில் கிராமத்து உட்புறங்களில் கேமரா டிராவல் ஆகும் போது அது 2000 ஆம் ஆண்டில்  சென்னை ஆவடி பக்கத்தில் இருக்கும்  ஒரு கிராமத்து வீட்டின் வெளிப்புற உட்புற தோற்றம் அங்கே வாழும்  வெள்ளந்தி மனிதர்கள் என்று அழகாக  செல்லுலாய்டில் பதிந்து இருக்கின்றார்கள்.


தினேஷ் நல்ல தேர்வு... அற்புதமாக அவர் பாத்திரத்தை  செய்து இருக்கின்றார்.. அந்த  வெள்ளை புன்னகையோடு அவர் கொடுக்கும் மேனாரிசங்கள் கவிதை.. காதலில் தோற்றதும் அவர் சோகமாக வேண்டும் என்று அவர் முயற்சிக்கும் இடங்கள்   கியூட் கவிதை...


கிளைமாக்சில்  பேரநதில் நின்றுக்கொண்டு  இருக்கும்  போது காதலி பேசுவதும் அதற்க்கு அவர் கொடுக்கும் முகபாவங்கள் நல் நடிகள் எட்னபதை நிரூபிக்கின்றன..


ஆனால் படம் நெடுக அதே போல மேனாரிசத்தை காட்டிக்கொண்டே இருப்பது சின்ன எரிச்சலை  ஏற்ப்படுத்துவதும் நிஜம்.


 பூர்னியாக நந்திதா நடித்து இருக்கின்றார்.. கிராமத்து சாயலில் அழகான கதாநாயகி...
தினேஷ் கல்லூரிக்கு சென்றதும் படம் ரொம்பவே சுறுசுறுப்பாகின்றது...
பேருந்தில் பயணம் செய்த அனுபவம் மற்றும் ரூட் தலை போன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவுக்கு புதுசு.
டயலாக்கே குறைவாக  அரைமணிநேரம் பேருந்தில் நடக்கும் சுவாரஸ்யங்களை இசை பின்னயுடன் சொல்லி இருப்பது நல்ல ரசனை,...


தினேஷ் அப்பா அம்மா கேரக்டர், அண்ணன் கேரக்டர்... நண்பர்கள் கேரக்டர்கள் எல்லா கிராமத்து  முகங்களும் கண் முன்னே  நிற்கின்றார்கள்..


விடியற்காலை படுக்கையில் காதலியின்  இடுப்பு தடவி  தண்ணி கழட்டிக்கும் காட்சிகள் இலைமறைவாய் சொல்லும் சுவாரஸ்யங்கள்.


வெகு நாள் ஆயிற்று.. கோலி விளையாட்டை திரையில்  பார்த்து..  நேரில் பார்த்தும்...??
இப்படி படம் முழுக்க விரவி கிடக்கும்  ரசனை காட்சிகள் இந்த திரைப்படத்தில்  எராளம்...  முக்கியமாக  படத்தின்   பின்னனி  இசையும்  பாடல்களும் அற்புதம்.. அறிமுக   இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் ஆல் த பெஸ்ட்..


ஒளிப்பதிவில் பிகே வர்மா  நன்றாக செய்து இருக்கின்றார்... நிறைய பிரேம்கள் ஸ்டேடி பிரேமில் வைத்து இருக்கின்றார்கள். பேருந்தில் கேமரா பொருத்தி எடுத்து காட்சிகள் எல்லாம் அற்புதம்... அந்த பேருந்து  காமம்..  சான்சே இல்லை.


=======
 படத்தின் டிரைலர்.


===========
படக்குழுவினர் விபரம்.


Directed by Pa. Ranjith
Produced by C. V. Kumar
Screenplay by Pa. Ranjith
Story by Pa. Ranjith
Starring Dinesh
Nandita
Aishwarya
Music by Santhosh Narayan
Cinematography P. K. Varma
Editing by Leo John Paul
Studio Thirukumaran Entertainments
Distributed by Studio Green
Release date(s)
15 August 2012
Country India
Language Tamil



===============
பைனல்கிக்.
இந்த படம்  தமிழ்நாட்டின் கிராமத்து  வெள்ளந்தி இளைஞர்களையும் வாழ்க்கை முறையையும் செல்லுலாய்டில் சுவாரஸ்யமாக  பதிந்து இருக்கின்றார்கள்.   இடைவேளைக்கு பிறகு சின்ன தொய்வு இருப்பதும் கிளைமாக்ஸ் முன்பே தெரிந்து விடுவதும் சின்ன குறை என்றாலும் கவலையை மறந்து  ரொம்பவே சிட்டி லைப்பில் மிஸ்  செய்த கிராமத்து  வாழ்க்கையை அவர் அவர் வாழ்வில் கடந்து  போன காதல்களையும் நினைத்து பார்க்க வைக்கும் இந்த திரைப்படம்.. இந்த திரைப்படம் பார்த்தே தீர வேண்டிய  திரைப்படம்.. ஆல் த பெஸ்ட் பா ரஞ்சித் மற்றும் தொழில் நுட்பகலைஞர்கள்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

  1. Nallaki padaththa paarthera veandiyathuthaan.arumaiyana vimarsarnam.nandri jacki anne.

    ReplyDelete
  2. அருமையான அலசல். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு எழுத்துப்பிழைகள் ஏராளம். கண்ணை உறுத்துகிறது. சரி செய்ய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. what a writing style? and I know the persons you mentioned ah..ah..

    ReplyDelete
  4. super movie sir.na engineering college la padichathala ennala ipady la enjoy pana mudiala.intha mathiry arts college la padicha pasanga nirya per suthi pathuruken.nichayama paka vendya nalla movie

    ReplyDelete
  5. லஷ்மி. நீ படிச்சா கண்டிப்பாக உனக்கு தெரியும்ன்னு எனக்கு தெரியும்.. நாம இதை அதே அய்யனார் கோவில் புளியந்தோப்பில் பேசி சிரிச்சி இருக்கோம்.... நன்றி வாட் எ ரைட்டிங் ஸ்டைல் என்று ஆச்சர்யப்பட ஏதும் இல்லை நண்பா.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner