கடலூருக்கு பக்கத்தில்தான் பாண்டிச்சேரி இருக்கின்றது…
அதனால் நிறைய குடிகாரர்களின் அலம்பல்களை பார்த்து இருக்கின்றேன்..
அதனாலே அதனை நான் வெறுத்தும் இருக்கின்றேன்…ஆனால்
அதில் அப்படி என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வம் இருந்தாலும் நிறைய கமிட்மென்ட்
வாழ்க்கை பாதையில் பயணித்து கொண்டு இருந்த
காரணத்தால் ,அந்த சோதனை முயற்சியை செய்து பார்ப்பதில் எனக்கு துளியும் விருப்பம்
இல்லை. அப்படியே குடித்தாலும் அதற்கு அடிமையாகி விடவும் கூடாது... என்பதில்
மிக தெளிவாக இருந்தேன்...
கடலூரில் இருந்து பாண்டிக்கு செல்லும் போது கன்னிக்கோவில் என்கின்ற பாண்டிச்சேரி பார்டர், கடலூர்
வாசிகளுக்கு வெகு பிரபலம்.. நண்பர்களோடு கன்னியக்கோவிலில் இருக்கும் கென்னடி ஒயின்சுக்கு போய் விட்டோம்.. ஆளுக்கு ஒரு
பியர் ஆர்டர் செய்து விட்டோம்..
பார்
சிப்பந்தி பிசியாக இருக்க..
நாங்களே பியர் பாட்டிலை ஓப்பன் செய்து
கிளாசில் ஊற்ற ஆரம்பித்தோம்..
முதல் முறையா கிளாசில் நுரை வராமல் ஊற்றும் கலை
எனக்கு கை வரவில்லை... மரியாத்தா
கோவில் கூழ் பானையை தலை கீழாக சாய்ப்பது போல, தலை கீழாக கிளாசில் பீர் பாட்டிலை
கவிழ்க்க, பீர் பொங்கி வரும் காவேரியாக
எனது கிளாசில் மாறிப்போக ,நான் முகம் வெளிரிப்போனேன்.. என்னோடு வந்த நண்பன்
பூந்தி பாக்கெட்டில் இருந்து நாலு பூந்தியை எடுத்து நொப்பும் நொரையுமாக பொங்கும் பீரில் எடுத்து போட்டான்.. பீர் பொங்குவதை விடுத்து அமைதி காத்தது-
முதல் முறையாக எந்த
கெட்ட விஷயத்தை உடல்
ஏற்றுக்கொள்ளாது.. பியரின் சுவையை முதல்
முறையாக அனுபவித்தேன்.. என்னோடு வந்த நண்பர்களுக்கும் அதுதான் முதல் முறை என்பதால்
ஆப்பாயில் போட்டுக்கொண்டார்கள்.. மூக்கை பிடித்துக்கொண்டு பியரை காலி செய்தார்கள்.. பிடித்தால் சாப்பிடுவோம்..
இல்லையென்றால் அப்படியே வைத்து விடுவோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்....
போதை ஏறி விட்டால் எப்படி நடக்க வேண்டும்? எப்படி ஊர் போய் சேர
வேண்டும்-? பயங்கர போதையாக மற்ற குடிகாரர்கள்
போல விழுந்து கிடப்போமா? என்ற
கேள்விகள்....ஆனால் பயந்தது போல நடக்கவில்லை... அதன் பிறகு, அரைகிளாஸ் சாப்பிட்ட போது அது கொடுத்த
போதை உற்சாகமாக்கியது... பாட்டிலை காலி
செய்து விட்டு வீடு வரும் வரை ஊதி ஊதி ஸ்மெல் வருகின்றதா? ஸ்மெல்
வருகின்றதா என்று என் நண்பர்களின் உயிரை
வாங்கி விட்டேன் என்பது வேறு விஷயம்.....
அதன் பிறகு
ஹாட்டுக்கு மாறிய போதும் இப்படித்தான் பயம் என்னை பிடித்து ஆட்டியது..ஆனால் அப்படி
எல்லாம் இல்லை உணவே மருந்து என்பது போல அளவாய் குடிப்பதே ஸ்டெடியை கொடுக்கும் என்ற
உண்மையை புரிந்து கொண்டேன்...யாராவது நான் ஒரு புல் சாப்பிடுவேன் என்று சொன்னால்
அந்த நபரை பார்த்து எனக்கு சிரிப்புதான் வரும்..
இதில் என்ன பெருமை வாழ்கின்றது என்று
தெரியவில்லை..
சரியாக குவாட்டரில்
பாதியை குடித்து, வரும் போதையானதே போதுமானதாக பல நேரம்
இருக்கும்...குவாட்டர் சாப்பிட்டு விட்டு
நிதானமான போதையில் நீங்கள் இருந்தால்,
குடி உங்களை ஆக்கிரமிக்கவில்லை என்று அர்த்தம்... ஆப் சாப்பிட்டு விட்டு
போதை இன்னும் ஏறவில்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் குடியில் மூழ்கி
விட்டீர்கள் என்று அர்த்தம்...
நான் எப்போதாவது குடிப்பேன் என்று என் அப்பாவுக்கு தெரிந்தாலும் அவர்ஒரு போதும் தெரிந்தது போல வெளியே
காட்டிக்கொண்டதில்லை.. ஒரு முறை நல்ல
போதை.... தூங்கி கொண்டு இருக்கும் அப்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன்..வாய்
குழறலோடு அப்பாவை எழுப்பினேன்.. அப்பா நீ
ஒன்னும் கவலைபடாதே... நான் நம்ம
குடும்பத்தை பார்த்துக்குறேன் என்று சொன்னேன்.
இரவு பதினோன்றரை மணிக்கு தன்னை எழுப்பி குடும்பத்தை
பார்த்துக்கொள்கின்றேன் என்று சொல்லும் மக்கு மகனை முதலில் மிரட்சியாக
பார்த்தாலும் வாய் குழறலையும் ,
நாற்றத்தையும் வைத்து என் அப்பா
என்னிடத்தில் சொன்னார்.. சரிப்பா ரொம்ப சந்தோஷம் இப்பயவது உனக்கு குடும்பத்தை காப்பாத்தனும்னு தொனி இருக்கே.. ரொம்ப சந்தோஷம்... என்று எழுந்து எனக்காக பாய்
தலையனை போட்டு விட்டு எதுவும் பேசாம இப்ப படு காலையில எதுவா இருந்தாலும்
பேசிக்கலாம்.. என்றார்..
காலையில் எழுந்தேன்.. என் அப்பா முன் இரவில் நடந்த எந்த
சம்பவத்தை பற்றியும் கேட்கவில்லை.. நானும் எதுவும் பேசவில்லை.. அந்த மரியாதையை
இன்று வரை காப்பாற்றி வந்தாலும் ஒரு
முறை நிதானம் இழக்க அந்த குடிதான்
காரணம்.... அதனால் குடிக்க வேண்டாம் என் நண்பர்களே.. அப்ப நீங்க.. உங்களுக்குதான்
சொல்ல முடியும்-? குடியை பழகிக்கொள்ள வேண்டாம்... குடி குடியை கெடுக்கும் குடி
உடல் நலத்துக்கு தீங்கானது...
டிஜிட்டல்
தொழில் நுட்ப வளர்ச்சியானது தமிழ்
சினிமாவின் வளர்ச்சியில் தற்போது பெரிதும் பங்களித்துக்கொண்டு இருப்பதை மறுக்க
முடியாது...பல சோதனை முயற்சிகளை
செல்லுலாய்ட்டில் செய்து பார்க்கவும்,
மாற்று சினிமா பற்றி யோசிக்கவும் டிஜிட்டல் தொழில் நுட்பம் கை கொடுத்துக்கொண்டு
இருக்கின்றது..
கமர்சியல்
திரைப்பபடங்களை மட்டுமே கண்டு
கொண்டு இருக்கும் தமிழ் சினிமா பார்வையாளனின் ரசனையை சற்றே வேறு கோணத்தில்
ரசிக்க வைக்க, மதுபானக்கடை திரைப்படகுழுவினர் முயன்று இருக்கின்றார் அந்த
முயற்சிக்கு முதலில் நாம் வாழ்த்தினை படக்குழுவுக்கு தெரிவித்து விடுவோம்.
கதை என்ற ஒரு வஸ்துவை இந்த திரைப்படத்தில் கண்டு
பிடித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதாய் முதலிலே சரண்டர் ஆகிவிட்டுதான் படத்தினை
ஆரம்பிக்கின்றார்கள்..ஒரே ஒரு மதுபானக்கடை பின்புலத்தை வைத்துக்கொண்டு கேரக்டர்களை மட்டும்
அறிமுகப்படத்தி அவர்களினுடே இரண்டு மணிநேர
திரைப்படத்தை நகர்த்தி இருப்பது தமிழ்சினிமாவுக்கு புதிய முயற்சி என்று சொல்லலாம்.
ஒரு
டாஸ்மார்க் கடையில் ஒரு நாளில் நடக்கும்
காட்சிகளின் தொகுப்பு இந்த திரைப்படம்.. அதாவது இரவு டாஸ்மார்க் ஷட்டரை குளோஸ்
செய்யும் இடத்தில் படம் தொடங்கி மறு நாள் ஷட்டர் மூடும் வரை
மேற்கத்திய
கலாச்சாரம் போல ஆணும் பெண்ணும் சரி சமமாக பாரில் உட்கார்ந்து சாப்பிடுவது போலன
கலாச்சாரம் நம்முடையது அல்ல...ஆனால் சீரியல் பார்த்து வெளியுலகம் அதிகம் தெரியாத தமிழ் பெண்கள், டாஸ்மார்க்
உள்ளே அப்படி என்னதான் ஆண்கள் பேசிக்கொண்டு குடிப்பார்கள் என்ற ஆவல் இருப்பின்
இந்த திரைப்படம் மிக நுனுக்கமாக அவைகளை அலசி இருக்கின்றது..
===========
படத்தின் கதை என்ன?
அப்படி ஒரு வஸ்துவை திரையில் தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்...
=========
படத்தின் சுவாரஸ்யங்கள்.
தினமும்
கட்டிங் ஏதாவது ஒரு கும்பலிடம் ஆட்டையை
போட்டு குடிக்கும் கேரக்டர்... போலிஸ் ஸ்டேஷங்ன வாசலில் பெட்டிஷன் எழுதி
புரட்சி பேசும் மணி கேரக்டர், கடவுள் வேஷம் போட்டு பிச்சை எடுத்து அந்த பணத்தை கட்டிங் அடிக்கும் கேரக்டர்கள், பேக்ட்ரியில் வேலை
செய்யும் போது கையில் அடிப்பட்ட
, சோகத்தோடு சரக்கடிக்கும் தொழிலாளிகள்,
துப்புரவு வேலை பார்க்கும் விளிப்புநிலை
மனிதர்கள் என்று விளிம்பு நிலை மக்களின் இன்றைய
வாழ்வியல் நிதர்சனங்களை இந்த திரைப்படத்தின் ஒவ்வோரு கேரக்டர்களும் நமக்கு
புரிய வைக்கின்றன..
கமர்சியல் படங்களை பார்த்து ரசித்த தமிழ் சமுகத்துக்கு மதுபானக்கடை
திரைப்பட அனுபவம் நிச்சயம் புதிய
அனுபவத்தை தரும் ... அதை அவணப்படம் போல இல்லாமல் விளம்புநிலை மனிதர்கள் குடிக்கும்
காரணம், வாழ்வியல் பிரச்சனை, சாதி வெறி என்று
சகல இடத்தையும் ஜஸ்ட் லைக்தட்டாக தொட்டு சென்று இருக்கின்றார் இயக்குனர்
கமலக்கண்ணன்.
டாஸ்மார்க்
களேபரத்துக்கு மத்தியில் ஒரு காதல்
ஜோடியின் சேட்டைகள் என்று படம் நெடுக சுவாரஸ்யபடுத்தி இருக்கின்றார்கள்.. அதே போல
அந்த காதல் ஜோடியின் உதட்டு முத்தம் கிராமத்து திருட்டு முத்தங்களை
நினைத்து பார்க்க வைத்து உதட்டை அனிச்சையாக ஈரப்படுத்த உதவுகின்றது.
வசனங்கள் படு ஷார்ப்... அனுமார் வேஷம் போட்ட கடவுள் கேரக்டர் மற்றும்
எதுக்கெடுத்தாலும் காலில் விழும் மணி
கேரக்டர் பேசும் வசனங்கள் ஒரு
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். முக்கியமாக அனுமர் ராமர் வேடம் போட்டு இருக்கும்
கேரக்டரில் அனுமன் வேஷம் போட்டு இருக்கும் கேரக்டர்.. கஞ்சிக்கே லாட்டரி அடிக்கும் போது, கட்டிங் கொடுப்பவனே
கடவுள்.... என்பதாகட்டும்..
நாங்க இங்க தள்ளாடினாதான் அரசாங்கம் ஸ்டெடியா
இருக்கும் என்ற டயலாக்.... நாங்க இங்க
பணத்தை கொட்டுறதாலதான் அரசாங்க வேலை செய்யறவன்
மாசம் பொறந்த கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கறான் என்பது போன்ற டயலாக்குகளில் வாழ்வியல் மற்றும் அரசியல் நிதர்சனங்களை அள்ளி தெளித்து
இருக்கின்றார்கள்.
கொஞ்சம் பிசகினாலும் பிசிர் தட்டினாலும், ஆவணப்படம் என்ற முத்திரையை இந்த திரைப்படம் பெற்று விடும் வாய்ப்பு நிறைய இருக்கும் காரணத்தால் மதில் மேல் பூனையாக படக்குழுவினர் சாமார்த்தியமாக
சமாளித்து இருக்கின்றார்கள்.
சின்ன சின்ன
கேரக்டர்கள் மூலம் சுவாரஸ்யபடுத்தி ரசிக்க வைத்த
இந்த திரைப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் தமிழ் சினிமாவில் கவனிக்கபடுவேண்டியவர் என்றால்
அது மிகையில்லை.
பாடல்கள்
நன்றாகவே இருக்கின்றன.. முக்கியமாக சமரசம் உலாவும் இடமே சாங் சான்சே இல்லை..7டி
கேமராவில் மிக நேர்த்தியாக படம் எடுத்து இருக்கின்றார்கள்.. கேமராமேனுக்கு ஒரு
கன்கிராட்ஸ்....
சாதி கட்சியில் இருக்கும் ஒரு வெள்ளையும் சொல்லையும் சப்பென்ற அடிவாங்கும்
இடத்தில் சுவாரஸ்யபடுத்தி இருக்கின்றார்கள்..
பாரை லீசுக்கு எடுத்து நடத்தும் கேரக்டர் நல்ல
தேர்வு என்பேன்.... ஆனால் அவரின் பெண்ணை
பாரின் பின் பக்கம் இருக்கும் இடத்தில் கிஸ் அடிப்பது பெரிய சருக்கல்....
அந்த பெண் நல்ல தேர்வு... கிஸ் அடித்து
விட்டு அந்த இடத்தை விட்டு அகலாமல் திரும்ப வந்து கிஸ் அடிப்பது செமை...
இன்னும் நிறைய விஷயங்கள் சேர்த்து இருக்கலாம்... பட்.. இப்படி ஒரு
முயற்சி எடுத்தற்க்கே இயக்குனரையும் பாராட்டி தள்ளலாம்.. இயக்குனர் தண்ணி அடித்ததே
இல்லையாம்.. அதைதான் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு தெரியாதுன்னு
சொல்லுவாங்களோ-.?
=================
படத்தின் டிரைலர்..
==================
படக்குழுவினர்
விபரம்.
Starring: Rafeeq, Iswarya
Director: Kamalakannan
Music: Ved Shankar Sugavanam
==============
பைனல் கிக்....
இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்... தமிழில் இந்த படம் நல்ல முயற்சி.. வழக்கமான தமிழ் சினிமாவை போல் கமர்சியல் முலாம் பூசாமங்ல எதார்த்தத்தை மிக அழகாய் பதிவு செய்து இருக்கின்றார்கள்.. அந்த வகையில் இந்த மதுபானக்கடை திரைப்பட குழுவுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
சென்ற வாரம் ஒரு காஃபி ஷாப் படம், இந்த வாரம் ஒரு ஒயின் ஷாப் படம்... தமிழ் சினிமா மாமூல் க்ளிஷேக்களில் இருந்து மீண்டுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி! விமர்சனம் வழக்கம் போல அருமை!
ReplyDeletePada nalla irukku Anne.. Unga review superb...
ReplyDeleteThambi,
Erode
படம் நல்ல இருக்கு அண்ணே.. உங்க விமர்சனமும் அருமை.
ReplyDeleteதம்பி,
ஈரோடு
நம்ம சொந்த காரங்க எடுத்த படத்த இன்னும் பார்க்க முடியல.படம் பார்க்கனும் .உங்க விமர்சனம் அருமை...
ReplyDeletegood movie
ReplyDeletenice review jackie anna
ReplyDeleteபடத்த பார்க்கணும்னு தோன வச்சு இருக்கு உங்க பதிவு ஜாக்கி
ReplyDeletesuper review
ReplyDeletesuper review
ReplyDeletesuper
ReplyDelete