யாழினி அப்பா..7 (DAY CARE)

வெகு நாட்கள் ஆகி விட்டன... நிறைய எழுதி.... 


சில நேரங்களில் இது போல தொய்வு நிலை வரும் போது நண்பர்களின் உற்சாகமான போன்கால்கள் திரும்ப எழுத வைக்கும்   கடந்த சில நாட்களாக வரும் மெயில்கள்  மற்றும் போன்கால்கள் அதைதான் உணர்த்துகின்றன...  அலுவலகபணி நிறைய... அங்கேயும் டைப்புகின்றேன்..  இங்கேயும் டைப்புகின்றேன். அதுதான் கொஞ்சம் எழுதுவதில் தொய்வு...   இனி அப்படி இருக்காது என்று நினைக்கின்றேன்.... எழுத கொஞ்சமாவது நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.. கண்டிப்பாக எழுதுவேன்...ஒரு வயது குழந்தையை ஆள் வைத்து  பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு இருவரும் வேலைக்கு போகும் கட்டயாத்தில்தான் இன்றைக்கு சென்னை வாழ்க்கை இருக்கின்றது.யாழினியை பார்த்துக்கொள்ள முதலில்  ஒரு 50 வயது பெண்மணியை வேலைக்கு வைத்தோம்... ஆனால் அது தின்று தின்று  தூங்குவதிலும், சீரியல்  பார்ப்பதிலும் அதிக கவனத்தை செலுத்துவதை அறிந்து கொண்டு டே கேருக்கு முயற்சி செய்தோம்...எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டே கேரில் சேர்த்தோம்...  ஒன்றரை வயது ஆகும் குழந்தையை   டே கேரில் விட்டு விட்டு அது கதற கதற அந்த இடத்தை விட்டு வேலைக்கு போகும்  வலி மிக கொடுமையானது... நகரவாழ்க்கை மனதை கல்லாக வைத்துக்கொள்ள எப்போதோ  நம்மை தயார் செய்து விட்டது...ஆனால் இந்த சீன் எல்லாம் ஒரு வாரம் தான்... இப்போதெல்லாம் அது போல அழுவது எல்லாம் இல்லை... டே கேரில் விடும் போது பாய் சொல்லி விட்டு அவளுடைய நண்பர்களுடன் விளையாட போய் விடுகின்றாள்...


ஆனால்  இரண்டு வயது பையன் நாங்கள் எப்போது குழந்தையை விட சென்றாலும் வாசல்   கேட்டை பிடித்துக்கொண்டு .. அங்கிள் எங்க அம்மாவை தயவு செஞ்சு இட்டுக்குனு வந்து விட்டு விட்டு போங்க அங்கிள்  என்று  தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுவதை இன்று அளவும் அவன் நிறுத்திய பாடு இல்லை... சின்ன சின்ன வார்த்தைகளை பேசிக்கொண்டு இருந்த யாழினி ஒரு வாரத்தில் எல்லாம் ரைமும் பாட ஆரம்பித்து விட்டாள்.. அம்மா ஆடு இலை எல்லாம் ஸ்பஷ்ட்டமாக வர ஆரம்பித்து  வெகு காலம் ஆனாலும் பாடல்கள் பாடுவது எனக்கு பெரிய ஆச்சர்யம்...


  உன் பெஸ்ட் பிரண்ட் யாருன்னு இப்ப   யாழினி கிட்ட கேட்டாலும் அப்பான்னு  சொல்லறது போதையான விஷயம்.. யாரும் சொல்லிக்கொடுக்கலை..டே கேரில் இதை ஆச்சர்யமாக பார்க்கின்றார்கள்....


 ரெயின்  ரெயின் கோ அவே பாட்டையே  மூன்றாம் வகுப்பு படிக்கும் போது   யோசித்து யோசித்து தப்பு தப்பாக பாடும்  மட சாம்பிராணி நான்....


பாலை கொடுத்து  வேப்ப மரத்தில் கட்டிய யானையில்   போட்டு இரண்டு ஆட்டு ஆட்டினால் சாலிடாக ஆறு மணி நேரம் தூங்கும் கும்பகர்ண  குழந்தை நான்...  அதுக்குள் என் அம்மா எல்லா வேலையையும் முடித்து விடுவாளாம்.. என்  பெரிய புள்ளை ரொம்ப சமத்து, என்னை படுத்தி எடுக்கவேயில்லை என்று எருமை மாடு போல வளர்ந்த பிறகு அப்போது படுத்தாமல் விட்டதற்கு கன்னத்தில் எச்சில் பட நிறைய முத்தம்  அம்மாவிடம் வாங்கி இருக்கின்றேன்.


நாலுவயது வரை பேசவேயில்லையாம் நான்...அம்மா மட்டுமே வீட்டில்  வேறு யாரும் இல்லை.. அதனால் பேசவேயில்லையாம்.. டார்ஜான் மாதிரி கத்திக்கொண்டு  ஓடுவதுதான் என் பொழுது போக்கு என்று அம்மா சொல்லி இருக்கின்றார்கள். அப்பாவுக்கு வருத்தம்  குழந்தை இன்னும் பேசவில்லை  என்பதால் இஷ்ட  தெய்வம் திருச்செந்தூர் முருகனிடம் அப்பா வேண்டிக்கொண்டாராம்...25 வயதுக்கு மேல் அப்பாவிடம்  சண்டை போடும் போது.. ங்கோத்தா எனக்கு என்ன மயிறு செஞ்சி கிழிச்சே என்று  அப்பாவை பார்த்து கேட்டு  சண்டை போட்ட போது , மோண்டாட்டடோத்தது இது பேசாமலே இருந்து இருக்கலாம் என்று என்னை பார்த்து  வேதனையுடன் நினைத்து பார்த்து இருப்பார் என்பதை இப்போது என்னால்  உணர முடிகின்றது.


பிலிப்ஸ்  ரேடியோ வாங்கி வந்து வீட்டில் வைக்க, அது பேசுவதை பார்த்துதான் நான் பேச ஆரம்பித்தேனாம்.. முக்கியமாக எந்த பாட்டையும் முழுதாக பாடும் வல்லமையை சரஸ்வதி தேவி எனக்கு  அப்போது வழங்கவில்லையாம்.. மலரே குறிஞ்சி மலரே சிவாஜி பாடும் பாட்டுதான் என் பேவரைட் பாட்டாம்.. அதையும் முழுதாக பாடாமல்....... மலரே குலுஞ்சி.............. என்று முடித்துக்கொள்வேன் என்று  என் அம்மா அடிக்கடி சொல்லி  சிரிப்பாள்


ஆனால் யாழினி தோசையாம்மா  தோசை பாட்டையும், ஜானி ஜானி எஸ்பாப்பா பாட்டையும்  பிரித்து மேய்கின்றாள்...திபிகா என்ற பெண்ணின் நட்பு கிடைத்து  எப்போது பார்த்தாலும் வீட்டில் திபிகா புராணமாக இருக்கின்றது...


மக்கையாளா  பாட்டு போட்டால்  இடுப்பை ஒடித்து ஆடுகின்றாள்....ஒருவேளை ஷகிரா பாட்டு  அ திகம் பார்த்த எபெக்ட்டா  என்று தெரியவில்லை...?


 ஏய் ஏய் என்று மிரட்டுவது அதிகமாகி விட்டது... சொர்னாக்கா எபெக்ட்டில் மிரட்டுகின்றாள்... எப்படி மிரட்டினாலும் அவளுக்கு பிடித்த்தைதான் செய்கின்றாள்....84 கிலோ உடம்பை வைத்துக்கொண்டு ஒருத்தன் திட்டிக்கொண்டு இருக்கின்றானே என்று பயம் நெஞ்சில் கிஞ்சித்தும் இல்லை.. இதில் கொடுமை எதையும் காதில் வாங்கி கொள்ளாத்து போல இருக்கின்றாள்... அதுதான் எனக்கு  கோபம் ஏற்படுத்துகின்றது..


காலையில் எழுந்ததும் அப்பா அப்பா என்று சத்தமாக அழைத்துக்கொண்டு  என்  அறைக்கு வந்து  என் கன்னத்தில் கிஸ் பண்ணி  விட்டு  செல்வாள்..வாழ்வின் மிக உன்னதமான கணங்களில் அதையும் சேர்த்துக்கொள்ளலாம்.


டே கேரில் ஒரு பையன் தொடர்ந்து இவளை வம்பு  பண்ணிக்கொண்டு இருந்து இருக்கின்றான்... அவன் பெரிய பையன்,...இவளை தூக்க   முயற்சி செய்து இருக்கின்றான்... இவள் அவனை மிரட்டி இருக்கின்றாள்...ஆனால் அவன் திரும்ப தூக்க வந்து இருக்கின்றான்... அதன் பிறகு யாழினி  செய்ததை டே கேரே சொல்லி  சொல்லி வயிறு வலிக்க  வலிக்க  சிரிக்கின்றது...


தரையில் சூ சூ போய் அதனை இரண்டு கைகளாலும் நன்றாக ஈரப்படுத்திக்கொண்டு அவன் முகத்தில் போய்  பூசி விட்டு  வந்து இருக்கின்றாள்...யார் சொன்னது, எப்படி செய்தாள்..? பெரிய ஆச்சர்யம்தான்.. அவள்.. அம்மா யாழினி தட்ஸ் பேட் ஹேபிட், டோன்ட் டூ தட் அகெய்ன் என்று அவளிடம் பீட்டர் விட்டாள்.. அது மண்டையை மண்டை ஆட்டி வைத்த்து... நான் எதுவும் பேசவில்லை...


யாழினி அவன் அம்மா ஆங்கிலத்தில் பேசுவதையும்  புரிந்து நடப்பாள்.. நான் தமிழில் பேசினாலும் புரிந்து நடப்பாள்.. அது குழந்தையில் இருந்தே அவளுக்கு அந்த புரிதல் இருக்கின்றது..


ஆபிஸ் போய் விட்டு  வீட்டுக்கு வந்ததும் முழுதாக நிறைய நேரம் எங்களோடு இருக்க  வேண்டும் என்று அவள்  விரும்புவதால் நிறைய பேசிக்கொண்டு இருக்கின்றாள்.. நான்  நிறைய எழுதாமல் போக.. அதிகம் படம் பார்க்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம்.
ஒன்றரை வயது  குழந்தை வண்டியில்  என்  பின்னால் உட்கார்ந்து கொண்டு  என் டயர் இடுப்பை கட்டிக்கொண்டு வருவது யாழினிக்கு மிக  பிடித்தமான பயணம்...வாகனம் செல்லும் போது இரண்டு புறமும் ரோட்டை எட்டி எட்டி பார்த்து குளிர் காற்றை முகத்தில்  அரையவிட்டுக்கொள்வது யாழினிக்கு மிக பிடித்த விஷயம்.


 நான் அவன் அம்மாவை ஆசையாக  தொடுவதையோ? அல்லது தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதையோ நான்  தவமாய்  தவம் இருந்து பெத்த பரதேவதை கிஞ்சித்தும் விரும்புவது இல்லை...


எனக்குதான் பொசசிவ்நஸ் அதிகம் என்றால் அவளுக்கு அதிகம்,.. நான்  பேசிக்கொண்டு இருந்தாள்.... அவள் நேராக அவள் அம்மாவிடம் சென்று திபிகா உப்பு பெறாத திபிகா புராணத்தை  அவள் முகம் திருப்பி வலுக்கட்டாயமாக பேச வைப்பதை பார்க்கும் போது செமை காமெடியாக இருக்கின்றது...


 டே கேரில் ஒரு பெண்மணி என்னங்க  உங்க  பொண்ணுக்கு ரொம்ப சாய் என்றார்.. நானும்  அவுங்க அம்மாவும் செம கேடிங்க.... அதனால அவ அப்படித்தான் இருப்பா என்றேன்.. அவர்  அதுக்கு மேல்  எதுவும் பேசிக்கொள்ளவில்லை..


நேற்று இரு சக்கர வாகனத்தில்   போகும் போது என் பின்னால் குழந்தை நின்றுக்கொண்டு  என் கழுந்தை கட்டிக்கொண்டு, கார், ஆட்டோ, மாடு, போ போ, மூன் என்று சொல்லிக்கொண்டு வந்தாள்... நானும் புதித்தாக  கேட்பது போல மண்டையை மண்டைய ஆட்டிக்கொண்டு வந்தேன்... ஒரு வருடம் யாழினியின் ஆய் துடைத்து, பவுடர் போட்டு லுலுலாயி பாடி திருஷ்ட்டி பொட்டு  வைத்து பார்த்துக்கொண்ட கழந்தை இப்போது என்  கழுத்தை கட்டிக்கொண்டு பேசிக்கொண்டு வருவதை நினைத்தால்   சிரிப்பாக வருகின்றது...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...


குறிப்பு.................................


தொடர்ந்து யாழினி அப்பா பதிவை படித்து விட்டு யாழினிக்கு……….yazhinijackiesekar@gmail.com க்கு  இதுவரை வந்த  மெயில்கள்..150 தாண்டி இருக்கின்றன.. எனக்கு  நேரம் ஒதுக்கி கடிதமும்  பின்னுட்டமும் போடுவது பெரிய விஷயம் இல்லை..

 அவளுக்கு நீங்கள் எழுதும் கடிதங்கள்தான் எனக்கு பெரிய உற்சாகத்தை  கொடுக்கின்றன... அவள் எதிர்காலத்தில் படித்து பார்த்து விட்டு ஒரு ஒரு கடிதத்துக்கும் எனக்கு ஒரு உம்மா கொடுத்தால் அதுவே பெரிய பாக்கியம்.


இந்த பதிவு அவள் எதிர்காலத்தில்  கோர்வையாக படித்து ரசிக்க எழுதுகின்றேன்... அலட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை..
நன்றி.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

22 comments:

 1. குழந்தையுடன் ஒன்றும் போது நாமும் குழந்தை ஆகி போகிறோம்...
  நன்றாக இருக்கிறது...

  ReplyDelete
 2. குழந்தையுடன் இருக்கும் தருணங்கள் வாழ்வின் பொக்கிஷங்கள் ஜாக்கி அண்ணே. இன்னும் சில வருடங்களில் இவை கிடைக்காது. இப்பொழுதே அனுபவித்துக் கொள்ளவும்

  இப்படிக்கு,

  ஒரு தேவதையின் தந்தை

  ReplyDelete

 3. இந்த பதிவு அவள் எதிர்காலத்தில் கோர்வையாக படித்து ரசிக்க எழுதுகின்றேன்... அலட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை..
  நன்றி.


  I like this lines ......... true lines

  ReplyDelete
 4. Anne unga ezluthum style rompa arumai
  :-)

  ReplyDelete
 5. //இந்த பதிவு அவள் எதிர்காலத்தில் கோர்வையாக படித்து ரசிக்க எழுதுகின்றேன்... அலட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை..//

  ஜாக்கி சார் நானும் எனது குழந்தைகாக நிறைய சேர்த்து வைத்திருக்கின்றேன் ஆனால் பதிவுகளாக இல்லை பக்கங்களாக
  மற்றவர்களைப் பற்றி கவலையில்லை அது அவரவர் பழக்கங்கள். யாழினிக்கு என் அன்பு விசாரிப்புகள்.

  ReplyDelete
 6. குழந்தையுடன் இருக்கும் தருணங்கள் வாழ்வின் பொக்கிஷங்கள் ஜாக்கி அண்ணே. இன்னும் சில வருடங்களில் இவை கிடைக்காது. இப்பொழுதே அனுபவித்துக் கொள்ளவும்

  இப்படிக்கு,

  tejashree's தந்தை

  ReplyDelete
 7. குழந்தையுடன் இருக்கும் தருணங்கள் வாழ்வின் பொக்கிஷங்கள் ஜாக்கி அண்ணே. இன்னும் சில வருடங்களில் இவை கிடைக்காது. இப்பொழுதே அனுபவித்துக் கொள்ளவும்

  இப்படிக்கு,

  TEJASHREE'S தந்தை

  ReplyDelete
 8. சின்ன சின்ன வார்த்தைகளை பேசிக்கொண்டு இருந்த யாழினி ஒரு வாரத்தில் எல்லாம் ரைமும் பாட ஆரம்பித்து விட்டாள்.. அம்மா ஆடு இலை எல்லாம் ஸ்பஷ்ட்டமாக வர ஆரம்பித்து வெகு காலம் ஆனாலும் பாடல்கள் பாடுவது எனக்கு பெரிய ஆச்சர்யம்...

  வாழ்வின் மாற்றங்களை அருமையாக ரசிக்கும் ரசனை உங்ககிட்ட அருமை அண்ணே

  ReplyDelete
 9. மிந்த வயதுக் குழந்தையின் பேச்சும் செயல்களும் பொக்கிஷம்.

  சேர்த்து வச்சுப் பின்னாளில் அனுபவிக்கலாம் என்னைப்போல:-)))

  ReplyDelete
 10. Jackie sir,
  There is really a scope for a book in future, compiling all these posts about Yazhini :)

  ReplyDelete
 11. Jackie Sir,

  There is much scope for getting these posts compiled and published into a book in future :)

  Keep Writing,
  Regards,
  Elavarasi Mahendiran

  ReplyDelete
 12. Superb..yazhini is very lucky child.. kannu pada poguthu jackie,thrusti suthi podunga..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner