உப்புக்காத்து..13



விஷமுள்ள மனிதர்களோடு தான்  இந்தபூமியில் வாழ வேண்டி  இருக்கின்றது..   அவர்களை தவிர்த்த விட்டு, புறக்கணித்து விட்டு வாழ்வதில்தான் நம் கெட்டிக்காரத்தனம் அடங்கி இருக்கின்றது..


என் அம்மா என் முன் கோபத்தை பார்த்து அடிக்கடி என்னிடம் சொன்ன விஷயம் துஷ்டரைக்கண்டால் தூர விலகு என்பதுதான்..முன்பு போல் டென்ஷன் ஆகாமல்    நிறைய விலகி விட்டேன்வயது தந்த  பக்குவம் என்று கூட  சொல்ல்லாம்..


  என் சொந்த ஊரில் நாங்கள் வசிக்கும்  இடம் கோவில் நிலம் என்பதால்  யாருக்கும் எந்த பட்டாவும் கிடையாதுஅதனால் அடிக்கடி அடுத்தவர் மண்ணில் கால் வைக்கும் சம்பவங்கள்  அதிகம் அரங்கேறும்.. அதனால் சண்டைகள்…  அடிக்கடி நடக்கும்

பெண்கள் பேசும் கெட்டவார்த்தைகளை நீங்கள் காது கொடுத்து  கேட்கவே முடியாது..  வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டு, நீர் சொட்ட சொட்ட  தலை முடியை தொங்க விட்டு, சின்னதாக நெற்றியில் கீற்றாய் குங்குமத்தை வைத்துக்கொண்டு பய பக்தியாய் நடக்கும் பெண்மணியா? முந்தாநாள்  நைட்டு நடந்த தெருச்சண்டையில் …. 

ஆமாம் நான் புருசன் கிட்ட  விரிச்சி காட்டினதை நீ பார்த்தியாடா…?  சங்கமாங்கி சாண்டாகுடிச்சவனேநீ தான் எனக்கு வௌக்கு புடிச்சியாட பேமானி?   என்று நடுத் தெருவில் ராட்க்ஷ்ஷி  போல பேசிய பெண்மணியா இப்போது இவ்வளவு பவ்யமாக நடந்து போகின்றாள்  என்று  ஆத்து ஆத்து போவீர்கள்..


 என் அம்மா நாங்கள் வசிக்கும் எரியாவில் இருந்தால் கெட்டு போய் விடுவேன் என்று என் அம்மா என்னை ஹாஸ்டலில் படிக்க வைக்க வேண்டும் என்று  என்  அப்பாவிடம் ஒற்றைக்காலில் நின்று இருக்கின்றார்.


  என்  வீட்டுக்கும் என் பக்கத்து வீட்டுக் குடும்பத்துக்கும் பிரச்சணை…  எங்கள் வீட்டுக்கு சுற்று சுவர் கட்டும்  போதுதான்  அந்த  பிரச்சனை ஆரம்பமானது..  எங்கள் எல்லையில் கட்டினோம்.. இரண்டு அடி தள்ளி கட்ட வேண்டும் என்று பிரச்சனை செய்தார்கள்… 


போலிஸ் ஸ்டேஷன் வரை சென்று  பொய் புகார் அளித்தார்கள்.. நானும் என் அப்பாவும் தகராறு செய்வதாகபுகார்  கொடுத்தார்கள்போலிஸ் விசாரித்து  சமாதானப்படுத்தி அனுப்பியது…  அப்பா  வெறுத்து போனார்.. நான்கு பிள்ளைகள் வைத்துக்கொண்டு நிலையற்ற வருமானம்  இல்லாமல் வாழ்ந்த அந்த குடும்பத்துக்கு சக்கரை, அரிசி,காபிபவுடர் துவரம் பருப்புமண்ணெண்ணைய் என என் அம்மா அள்ளி அள்ளி கொடுப்பார்கள்… 

என் பொண்ணு சின்ன பொண்ணு.... இல்லேன்னா ஜாக்கிக்கு கட்டிகுடுத்துடுவேன்.. அவனை மாதிரி நல்ல பையன் யாரு இருக்கா-? கோவம் இருக்கும் இடத்துலதான் குணம் இருக்கும் என்று இனிக்க இனிக்க  பேசிய  பெண்மணி போலிசில்  புகார் கொடுத்த்தை என் அப்பாவால் என்றுக்கொள்ள முடியவில்லை

என் அப்பா வெறுப்பில் சொன்னார்ஓத்தா…. நான் எத்தனையோ பேரை என் வாழ்க்கையில பார்த்துட்டேன் அதிகமா  ஆசை பட்டவன் அத்தனை பேரும்  மண்ணோடு மண்ணாதான் போய் இருக்காங்க.. இந்த மண்ணுக்காக இவ்வளவு அசிங்கமா? ச்சேஅம்மா களத்தூர்  ஆத்தா நீயே பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு, நிறைய அவமானங்களுக்கு பிறகு  இரண்டு அடி தள்ளி எங்கள் வீட்டு மதில் சுவர் அமைத்தார்….. 

அவர் அப்படி செய்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ….அந்த மதிலுக்கு பக்கத்திலேயே  எங்கள் வீட்டு மாமரமும் இருந்தது..

மாமரம் சின்ன பிளாஷ் பேக்..

100 ரூபாய்க்கு அந்த  கோவில்  இடத்தை வாங்கி ,என் அப்பாவும் என் அம்மாவும்  இல்லற வாழ்க்கையை  அந்த  வீட்டில் இருந்துதான் துவங்கினார்கள்.. என் அம்மா நிறைமாத கர்பினியாக இருந்த போது,   சேலத்து மாம்பழம்  அப்பா வாங்கி வந்து அம்மாவுக்கு கொடுத்து இருக்கின்றார்.. 

அதன் மூலம்  எங்கள் வீட்டு தொட்டத்தில் ஒரு மாங்கன்று உதயமானது..நான் பிறந்தேன்..  அந்த மாங்கன்றும் பிறந்தது.   எனக்கு அந்த மாங்கன்றுக்கும்  ஒரேவயது  பள்ளி  விட்டு வருகையில் நானும்  அதனோடு நின்று உயரத்தை விளையாட்டாய் அளந்து கொள்வோம்

 மாமாரம் காய்க்க தொடங்கியது.. நான் பள்ளி விட்டு வந்த உடன் மரத்தில் பழுத்த பழத்தை சாப்படுவதுதான் என் வேலை.. காயாக இருக்கும் போது  வாயில் வைக்க முடியாது..  அந்த அளவுக்கு புளித்து தள்ளும்... அனால் பழத்தை சாப்பிட்டால் அதன் ருசியை எளிதில் மறக்க முடியாது..

மரம் கனியையும் நிழலையும்  தேவைக்கு அதிகமாய்  கொடுத்தது. எங்கள் வீட்டின் குடும்ப உறுப்பினாராய் மாறியது
நான் அங்கே இருந்த வரையில்  எந்த பிரச்சனையும் அந்த குடும்பம் செய்யவில்லை.. ஆனால் நான் சென்னைக்கு வந்த உடன் என் வீட்டில் ஏதாவது ஒரு  பிரச்சனை செய்ய ஆரம்பித்தது. காலையில் எழுந்து இருக்கும் போதே இன்று என்ன விதமாய் சண்டை போடலாம் என்று யோசிப்பார்கள்...

அப்பா படுத்த படுக்கையாக பரலிஸ் அட்டாக்கில் பாதிக்கப்பட்ட போது அவர்கள் இன்னமும்  அதிகம் ஆட ஆரம்பித்தார்கள்.

 அந்த மரத்தின் கிளை அவர்கள் வீட்டு பக்கம் போனதாக சொல்லி  எங்களை கேட்காமலேயே வெட்டி போட்டார்கள்.. அதை வெட்டியது.. அவர்கள் வீட்டு பெரிய பெண் என்பது  முக்கிய விஷயம்....


காலையில் எழுந்ததும் எங்கள் வீட்டில் என்ன பிடிச்சனை செய்யலாம் என்று யோசிக்கும் வல்லவர்கள்

25 அடி நீளத்துக்கு இரண்டு அடி மண்ணும்  அவமானமும் போனதுதான் மிச்சம்
..  சில நேரங்களில்  அந்த மரத்தை தொடுவது என் அம்மாவை  தொடுவதாக  நினைத்துக்கொண்டு இருக்கின்றேன். வேண்டும் என்றே ஒரு வேப்பம் மரத்தை வளர்த்து எங்கள்  மாமரம் அதிகம்  காய் காய்க்காத  படி பார்த்துக்கொண்டார்கள்.. 


அவர்கள் வீடு கட்ட அந்த வேப்பமரத்தை வெட்ட எங்கள் மாமரம் நன்கு சுவாசிக்க ஆரம்பித்துநேரில்  எங்கள் மாமரத்தின்  கணத்தை பார்த்தால்  36 வயது மாமரம் என்றால் நம்பவேமாட்டீர்கள் அந்த அளவுக்கு  தடிமன் குறைவாக இருக்கும்..

மரம் செழித்து  கொத்துக்கொத்தாய்  காய் காய்க்கஅவர்கள் கண்ணில்  பட்டதுஎங்கள்  வீட்டில் தொடர்ந்து மூன்று கல்யாணங்கள் நடைபெற்றதுவயிறு எரிய அது போதுமானதாக இருந்தது..

தானே புயலில் கடலூர் சிக்கி சின்னாபின்னமாக மாறிய போது போனில் நான் என்  குடும்பத்தாரிடம் கேட்ட முக்கிய கேள்வி மாமரம் என்ன ஆச்சி.. ?? என் தங்கை சொன்னாள்... அந்த கடுமையான காத்துல கூட    அசையாம நம்ம மாமரம் நின்னுடுச்சின்னே என்றுசொன்ன போது எனக்கு பெருத்த சந்தோஷம்.. 

காரணம்  ஒரு தென்னை மரம் வேரோடு புடுங்கி கொண்டு, மூன்று தெரு  தள்ளி  தென்னங்குலையுடன்  விழுந்தது.. அந்த அளவுக்கு காற்று  அடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

 தானே புயலில் தன்  இலைகளை பறிகொடுத்து விட்டு  நிமிர்ந்து நின்றதுதிரும்ப கொத்து  கொத்தாய் துளிர் விட்டு தழைத்து தொங்க ஆரம்பித்ததை  பார்த்து  விட்டு மனம் சந்தோஷபட்டது.

நேற்று என் அத்தை பையன் திருமணத்துக்கு கடலூர் சென்று இருந்தேன்வீட்டுக்கு போய் அப்பாவை பார்த்து விட்டு   என் வீட்டு தோட்டத்து பக்கம்  சென்ற போது.. எனது இதயமே வெடித்து விட்டது.. ஆம்  தழைத்து தள தள என்று இருந்த எங்கள் வீட்டு மாமரம் பட்டு போய் இருந்ததுதிடிர் என்று ஒரு மரம் பட்டு போக என்ன காரணம்வீடு கட்ட பக்கத்து  வீட்டில் தோண்டிய போது  மாமரத்தின் வேரில் திராவகம் அல்லது சைனட் தடவி இருக்கலாம் என்று  மரத்தை  சுற்றிப்பார்த்த நெருங்கிய  நண்பர்கள்   சொன்னார்கள்..


அந்த  மாமரம் என்ன பாவம் செய்தது…?


மனிதர்கள் இவ்வளவு கொடூரமானவர்களா-?


களத்தூர் அம்மன் பார்த்துக்கொண்டேதான் இருக்கப்போகின்றாளா?

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

17 comments:

  1. ரொம்ப மோசமான எண்ணம் கொண்டவர்கள் ஆக இருக்கிறார்களே ..இவர்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த போவதில்லை..

    ReplyDelete
  2. kaduvul irukiraar..but avar onnum panrathu ilai jackie...i am bleeding with pain because of few personal problems caused by betrayal..but who betrayed us are living happily only...i donot think God punishes any one ..

    ReplyDelete
  3. //அந்த மாமரம் என்ன பாவம் செய்தது…? //

    ரொம்ப கஷ்டமா இருக்கு.

    மனிதன் தனக்குள் இருக்கும் மிச்ச சொச்ச மிருக குணத்தை இயலாமையின் காரணமாகவே சக மனிதனின் உடமைகளின் மீது காட்டுகிறான்.

    அவனவே உணர்ந்து திருந்தினாலன்றி வேறு வழி இல்லை...!!!

    ReplyDelete
  4. Shocking Jackie. Manusana Konna case podalam. Avangalllam manusha janmame illa.

    ReplyDelete
  5. திரு ஜாக்கி
    பல வருடங்களாக உங்க்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன் இந்த பதிவு வாசித்து மிகவும் மனரீதியாக அதிர்ச்சி அடைந்தேன் கொலைகரர்களுக்கும் இவர்கல்லுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை பக்கத்துக்கு வீடில் இந்தமாதிரி துஷ்டர்கள் அமைந்துவிட்டால் ஆயுசுக்குக்கும் நரகம் தான் இயற்க்கையாக இந்தமாதிரி நபர்களளுக்கு நல்ல்லவிதமான சாவே வராது என்பது உண்மை பொறுத்தல் பூமி ஆழ்வார்

    ReplyDelete
  6. திரு ஜாக்கி
    பல வருடங்களாக உங்க்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன் இந்த பதிவு வாசித்து மிகவும் மனரீதியாக அதிர்ச்சி அடைந்தேன் கொலைகரர்களுக்கும் இவர்கல்லுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை பக்கத்துக்கு வீடில் இந்தமாதிரி துஷ்டர்கள் அமைந்துவிட்டால் ஆயுசுக்குக்கும் நரகம் தான் இயற்க்கையாக இந்தமாதிரி நபர்களளுக்கு நல்ல்லவிதமான சாவே வராது என்பது உண்மை பொறுத்தல் பூமி ஆழ்வார்

    ReplyDelete
  7. What sort of people are they? Killing a tree is like killing your future generations. I'm sure nature will teach them a lesson very soon.

    ReplyDelete
  8. jackie anna,

    these types of fights are very common now. time will take its own way to teach a lesson for those who cutted your mango tree.

    i hope you will visit my blog for reference one day

    ReplyDelete
  9. என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இது போன்ற ஆட்களால் நானும் பாதிக்கப்பட்டு உள்ளேன் :-(

    ReplyDelete
  10. YENNA KODUMAI SIR ITHU THIS IS TOO MUCH SUCH PEOPLE WILL BE PUNISHED BY GOD ONE DAY THAT TOO IN A VERY VERY CRUEL MANNER. PLEASE DO NOT HAVE SYMPATHY FOR THEM WHEN THEY ARE PUNISHED.

    ReplyDelete
  11. வயது தந்த பக்குவம் என்று கூட சொல்ல்லாம்..
    இல்லை இல்லை யாழினி குட்டி வந்தபின் உங்கள் தாயின் வடிவாக அவள் தந்த பக்குவம்.ஏனெனில் யாழினிக்கு முன்பிருந்தே அவள் அப்பாவை நாங்கள் நன்கு அறிவோம்.
    ஜாக்கி உண்மையா இல்லையா ?

    ReplyDelete
  12. நீ என்ன மரமாடா ? என கேட்கும் மனிதா அசராமல் தன பங்கை அளிக்கும் அந்த மரத்தை விட மோசமடா உன் எண்ணங்கள்.எதற்கெடுத்தாலும் மரத்தையும் நாயையும் குறை சொல்லும் கேவலமான மனித பிறவிகள் வாழும் உலகம்.இந்த சூழல் அநேகம் பேருக்கு நடந்தது உண்டு ஜாக்கி .எங்களுக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.

    ReplyDelete
  13. Sir, Same pinch. Enoda aunty veetla oru coconut tree iruku. Auntyoda enemy andha maradhuku edho panitanga. just 1 weekla adhu apadiye vilundhu adhula irundhu ore thanniya vandhuchi with bad smell....

    Ipadium sila per irukanga. Enoda pet dot pattappa. Sema cute sir. But enga neighbourku adhu kathuradhu pudikadhu so nanga iladha podhu adichiduvan. Romba kashtama irukum. Bec avan adichadhuku saatchi enga pattappa mattum than.

    ReplyDelete
  14. டியர் ஜாக்கி,
    உங்க மாமரத்து வேர்ல ஆசிட் ஊத்துன அந்த கருணையுள்ளம் கொண்ட கபோதிக்கு ஒருவேளை நாளை உதவி செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். கிடைத்தால் கண்டிப்பா செய்யுங்கள்.

    "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான
    நன்னயம் செய்து விடல்"

    அந்த சிச்சுவேசனல உங்க சட்டை காலர தூக்கிவிட்டுக்கிட்டு எதிராளியை ஒரு ஏளனப்பார்வை பார்க்கலாம். கண்டிப்பா நிறைவா இருக்கும். நான் அதை feel பண்ணியிருக்கிறேன்.

    மற்றபடி, மாமரம் = இயற்கை.
    இயற்கையை சீண்டியவனுக்கு இயற்கையே பதிலடி கொடுக்கும்.

    Your dear,
    Villagevaasi.

    ReplyDelete
  15. Its really tough to live with these negative vibration people , their negative vibration affects our family a lot.

    ReplyDelete
  16. same thing happened in my life also same maamaram and suvar ... manithargal apadithaan pola

    ReplyDelete
  17. Manasuku rombavum sangadamaka irukindradhu

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner