#dearzindagimovie
#dearzindagi
#srk
ஆர்கே சாலையில் இருக்கும் சிட்டி சென்டரில் இருக்கும் ஐ நாக்ஸ் தியேட்டர் நுழைவு சீட்டில் டியர் ஜிந்தகி திரைப்படத்தின் ஒன் லைனை எழுதி விடலாம்
ஆனால் அந்த ஒன்லைனை மூன்று மணி நேரத்துக்கு காதல், காமம், தவிப்பு, பெண் உணர்வுகள், பெண்கள் பார்க்கும் ஆண்கள் பார்வை என்று கலந்து கட்டி பேல்பூரி குண்டானில் போட்டு அடித்துக்கொடுத்து இருக்கின்றார் கவுரி ஷின்டே...
அலியா பட்டை இந்த படத்தில் ஏனோ பிடித்து விடுகின்றது....
அதை விட அலியா பட் போன்ற அழகான யுவதிகள் எதிரில் உட்கார்ந்துமு ஐ லைக் யூ என்று சொன்ன போதும் மசியாத ஐ நீட் யூ என்று சொன்ன போதும் கொஞ்சமும் காமத்துக்கு இடம் தாராத தலையோரம் நரையேறிய ஷாருக்கை ரொம்பவே ரசிக்க முடிகின்றது..
காதலும் காமமும் டீ குடித்து வாய் துடைத்து விட்டு போகும் விஷயம் இல்லை அது ஒரு உன்னத நிலை... அது யாரிடத்தில் வேண்டுமானாலும் வரலாம் அதை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்பதில் வாழ்வின் சூட்சமம் அடங்கி இருக்கின்றது....
வாழ்வியல் அழகை அதன் போக்கில் ரசிப்பவர்கள் டியர் ஜிந்தகியை தவறவிடக்கூடாது...
சத்தியம் மெயின் ஸ்கிரினில் சப்டைட்டிலோடு போட்டு இருக்கின்றார்கள்.. திரையரங்கள் முழுவதும் அலியாபட்டுகளால் நிறைந்து இருந்தது..
டியர் ஜிந்தகி பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment