The Conjuring 2 - 2016 - தி கான்ஜுரிங் 2 திரை விமர்சனம்.





கான்ஜுரிங் திரை விமர்சனம்.


2013 ஆம்  ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர்  திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள் அறிவார்கள்… தற்போது  அதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்  தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது…



=======
கான்ஜூரிங் திரைப்படத்தின் கதை என்ன?
எட் மற்றும்  லோரின் இருவரும் ஆதர்ச  தம்பதிகள்… ஒரே மகளுடன் அமெரிக்கரிவில் வசித்து வருகின்றார்கள்… அவர்களுடைய வேலை என்னவென்றால் பேய் ஓட்டுவதுதான்… 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில்  உள்ள ஒரு இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும்… அதனை ஒட்ட வேண்டும் என்று வேலை வருகின்றது… இருவரும் அங்கே செல்கின்றார்கள்.. ஆனால் அவர்களால் முடியாத சக்தி  அங்கே வியாபித்து இருப்பதை உணர்ந்தாலும்… ஒரளவுக்கு கட்டுக்குள்  கொண்டு வருகின்றார்கள்.. ஆனால் அவர்கள் சிறிது காலம் பேய் ஓட்ட வேண்டாம் என்று முடிவெடுகின்றார்கள்.. ஆனால் இரண்டு வரும் கழிந்து 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நான்கு பிள்ளைகளோடு வசிக்கு  பெண்மணியின் வீட்டில் பேய் இருப்பதாகவும் அதனை  ஓட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு ஊத்தரவு சர்ச் மூலமாக  வருகின்றது… பேயினை ஓட்டினார்களா? இல்லையா? என்பதுதான் கான்ஜூரிங் திரைப்படத்தின் கதை.
=====
படத்தின் சுவாரஸ்யங்கள்.
ஹாரர் பிலிம் என்று நம்முர்காரர்கள் போல படம் எடுக்காமல்  அசத்தி இருக்கின்றார்கள்.. அவர்கள் எடுத்த திரைக்கதைக்கு கூடுமான வரை உண்மையாக உழைத்துள்ளார்கள். உதாரணத்துக்கு  பிரேம் முழுவதும் 1977 ஆம் ஆண்டு கால கட்டத்தை கண் முன்  நிறுத்தியுள்ளார்கள்.
சின்ன பையனை வைத்துக்கொண்டு டென்ட்டுக்கு செல்லும் பாயர் சர்விஸ் பொம்மை, அம்மாவிடம் பிள்ளைகள் பேய்  பேய் என்று கத்தினாலும் நம்பாத அவர் அவர் எதிரிலேயே பேய்கள்  தங்கள் கொட்டதை காட்டுகின்றன.
அதை விட போலிஸ் வந்து பேயும் இல்லை ஒன்னும் இல்லை என்று சொல்லும் போது வரும் சத்தமும் சேர் தானாக செல்லும் காட்சியும்  அசத்தலான காட்சிகள்.
ஒரு பேய் படம் என்றால் அதில் லாஜிக்கான  காட்சிகள் அவசியம் அந்த வகையில் கான்ஜூரர் திரைப்படம்  பயத்தையும் பதட்டத்தை ஒரு  சேர  உருவாக்குகின்றது என்பதை ஒத்துக்கொள்ளத்தான்   வேண்டும்..

அது மட்டுமல்ல படம் ஓடும் போது பலர் மொபைல் போனை நோன்டிய படி பயத்தை விரட்டிக்கொண்டு இருந்ததை பார்க்க  கண்  கொள்ளா காட்சியாக இருந்தது.
இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்கி இருக்கின்றார்..

ஹாரர் பிலிம் ரசிகர்கள் கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இந்த கான்ஜூரிங்  திரைப்படம் என்றால் அது   மிகையில்லை.


வீடியோ விமர்சனம்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner