Metro -2016 tamil movie review | மெட்ரோ திரைவிமர்சனம்




வேளச்சேரியில் புழுதிவாக்கம் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வாங்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்…  என் கண் எதிரில்  அப்போசிட்டில் வந்த பையன் ஒரு பெண்மணியின்  கழுத்தில் இருந்து அசால்டாக செயினை அறுத்துக்கொண்டு  பறந்தான்.. மனைவி குழந்தையோடு இருந்த காரணத்தால் அவனை வேகமாக விரட்ட முடியவில்லை.ஆறு பவுன் செயின் நொடிப்பொழுதில்லை அவன் கையில் கழுத்தில் காயத்தோடு அந்த பெண்மணி பறிதவித்து போய் இருந்தார்.… போலிசில் கம்ளெயின்ட் கொடுக்க சொன்னேன்.. இல்லைங்க வீட்டுக்கு போலிஸ் வருவதை எங்க வீட்டுக்காருக்கு பிடிக்காது… அதனால் கம்ளெயின்ட் கொடுக்கலை.. எல்லாம் என் தலையெழுத்து வாயை கட்டி வயித்தை கட்டி  சேர்த்து வச்சது என்று அழுது புரண்டார்..



கிண்டி ஒலிம்பியா டவர் பின் பக்க தெருவில் காலை  ஒன்பதரைக்கு ஐடியில்  வேலை செய்யும் பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுத்துக்கொண்டு மாயமானவனை  அவன் போன திசையை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்த பெண்ணையும்  எங்க  அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னு போட்டுவார் சார்ன்னு கதறியது இன்னும் என் கண்களில்…

இப்படியாக சென்னையில் செயின் பறிப்பு  சம்பவங்கள் நாளோரு மெனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்துக்கொண்டு இருக்கின்றது.. இன்றைய தேதிக்கு  சட்டென கைக்கு பணம் வரும்  பிசினஸ்…   அந்த சம்பவங்களுக்கு  பின்னே செயினை பறிகொடுப்பவர்கள் அடையும் வேதனையும்  வலியையும் விவரிக்க முடியாதவை…. அடிக்கடி பேப்பரில் செயின் ஸ்நாச்சிங் செய்த  கல்லூரி வாலிபர்கள் கைது போன்ற செய்திகளை  தினசரிகளில் படித்து இருப்பீர்கள்..

கல்லூரி மாணவர்கள் ஜாலியாக ஊர் சுற்ற  தேர்ந்து எடுத்த வழி இந்த செயின் ஸ்நாட்சிங்.. பத்து வருடங்களுக்கு முன் எப்போதாவது நடந்த சம்பவங்கள் இப்போது தினமும் செய்திதாளில் வரும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சரி செயினை  அடித்தால் விற்க முடியாதே  விற்றால் போலிஸ் புடிச்சிக்குமே.? அதான் இல்லை.. திருட்டு நகை வாங்க ஒரு கும்பல் அதை  உருக்கி விற்க ஒரு கும்பல் என்று பெரிய நெட்வொர்க்…
இந்த நெட்வொர்க்கைதான் தனது இரண்டாவது திரைப்படத்தின் கதை  களனாக எடுத்துக்கொண்டு இருக்கின்றார் இயக்குனர் ஆனந்ததிருஷ்ணன்…  இவர் விதார்த்தை வைத்து ஆள்  என்ற திரைப்படத்தை இயக்கியவர்…

 சரி.. மெட்ரோ திரைப்படத்தின் கதை என்ன?

சென்னை செயின்ட தாமஸ்  மவுன்டில் ஒய்வு பெற்ற  ஏட்டு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.. பெரியவன் அறிவழகன் பத்திரக்கை துறையில்  பணிபுரிகின்றான்…  சின்னவன் மதியழகன் கல்லூரியில் படிக்கின்றான்.. அவனுக்கு பைக் வாங்க வேண்டும் என்று ஆசை.. ஆனால் பணம் இல்லாத குடும்பம் அந்த ஆசை அவனை மட்டுமல்ல  அவன் குடும்பத்தையே பல்வேறு திசைகளல் பயணிக்க வைக்கின்றது… அதில் இருந்து அந்த குடும்பம்  மீண்டதா இல்லையா? என்பதே   மெட்ரோ திரைப்படத்தின் கதை.


 படத்தின் சுவாரஸ்யங்கள்..


இந்தி திரைப்படமான உதாப் பஞ்சாப்   எப்படி  சென்சார் பிரச்சனைகளில் எல்லாம் சிக்கியதோ… அதே போல இந்த திரைப்படமும் சென்சார் பிரச்சனையில் சிக்கியதோடு சென்சார் போர்டு படத்தில்  நிறைய இடங்களில் கட் கொடுக்க.. படம் பாதிதான் தேறும் என்பதை  உணர்ந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்னன் ரிவைசிங் கமிட்டிக்க படத்தை  அனுப்ப  அங்கே படத்தை பார்த்த கங்கைஅமரன் ஏ  சர்ட்டிபிகேட் கொடுத்த படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் என்பதும் இந்த திரைப்படம் 26 நாட்களில் முடிக்கப்பட்ட திரைப்படம் என்பதும்  இந்த படத்தின்  சிறப்புகள்…

முதல் காட்சியிலேயே அதாவது மன்னடி லாட்ஜ் சீனிலேயே நம்மை கொக்கி போட்டு இழுத்து  உட்கார வைத்துவிட்டார்கள். சிரிஷ் மற்றும் சென்ட்ராயன்  தங்கள் பாத்திரம் உணர்ந்து செய்துள்ளார்கள்..
கைதி கையெழுத்து போடும் சீன்  அருமையான கம்போசிங்.

செயின் யாரிடம் அறுக்க வேண்டும் எப்படி அறுக்க வேண்டும்.. யார் யார் எல்லாம் டாக்கெட் என்று சொல்லும் போது.. அது கற்று தறும் செயல்  அல்ல.,.. படம் பார்க்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் இன்னும்  தாலி  சரடில் இருந்து குழந்தைகளுக்கு போடும் செயின் வரை மேலும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்…. யாருக்கே நடக்கின்றது என்று எண்ணாமல் நமக்கும் எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்ற எண்ணமே வரும்… இதனை சென்சார் போர்டு எப்படி  யோசித்து இருக்கின்றது என்று பார்க்கும் போது தமிழில் காந்திரமான படைப்புகள் வர ரொம்பவே போராட வேண்டும்.

 அம்மா பாத்திரத்தில் துளசி வழக்கம் போல பின்னி இருக்கின்றார்..
தம்பி  மதியழகனாக  நடித்து இருக்கும் சத்யா சிறப்பாக  செய்துள்ளார்.. கொஞ்சம் கொஞ்சமாக  மாறும் வாழ்க்கை முறையை மிக அழகாக பதியவைத்துள்ளார்.

குணாவாக பாபிசிம்ஹா..  சான்சே இல்லை.. ஸ்மோக் எப்க்டொடு  என்ட்ரி.. அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் அசத்தல் ரகம்…  திருடனுக்கு  ராப்ரிக்கும் என்ன  வித்தியாசம்…? என்று கேட்பமும் அதனை விளக்குவதும் அழகான காட்சி.

திருடன்  அதிகமாக ஆசைப்படவே கூடாது… அடிமையா இருக்க போறியா.. அடிமையாக்க போறியா என்று அவர் பேசும் வசனங்கள் செம ஷார்ப்.
  கேமரா உதயகுமார்.  சிறப்பான பணியை மேற்கொண்டு இருக்கின்றார்… நிறைய ஷாட் அசத்தில் முதலில் மன்னடி லாட்ஜில் இருந்து மேலே  சென்று கான்கிரிட் காட்டினை காட்டும்   செயின் ஸ்சாட்சிங்க காட்சிகள் மற்றும்  தண்ணிர் பிம்பத்தில்  காட்சிகள், நிர்மலா தக்ஷன் ஹோட்டல் ஷாட்டுகள்   என்று ரசனையாக தன்  பணியை செய்துள்ளார்.

இசை ஜோகனின் பின்னனி இசை படத்துக்கு கூடுதல் பலம்… ஆரண்ய காண்டம் திரைப்படத்துக்கு பிறகு கல்ட்   திரைப்படமாக இந்த திரைப்படத்தை கண்டிப்பாக  சொல்லலாம்.

 ஆனந்த கிருஷ்ணன் மேக்கிங் தமிழ் சினிமாவுக்கு புது வரவாய் என்  மனதுக்கு தோன்றுகின்றது..,இன்னும் மென் மேலும் வளர ஜாக்கிசினிமாஸ் மெட்ரோ படக்குழுவினரை வாழ்த்துகின்றது..

படத்துக்கு ஜாக்கி சினிமாஸ் அளிக்கும் மதிப்பெண்.
ஐந்துக்கு நான்கு

இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner