salute air india | ஏர் இந்தியாவுக்கு வணக்கம்





வளைகுடா போர் 1990 ஆம் ஆண்டு … ஆகஸ்ட் ஒன்னாம் தேதி தொடங்குகின்றது..

ஒரு லட்சத்ததி எழுபதாயிரம் மக்கள் அகதிகளாக தவித்து போய் கிடக்க…அவர்களை அழைத்து வர இந்திய கவர்மென்ட் எடுத்து முயற்சிகள் உள் அரசியல்…
அலட்சியம் போன்றவற்றை மிக விரிவாய் விவரிக்கின்றது ஏர்லிப்ட் இந்தி திரைப்படம்.


டெல்லிக்கும் குவைத்துக்கும் 4117 கிலோ மீட்டர்.. குவைத்தில் இருப்பதோ இந்திய மக்கள் ஒரு லட்சத்தி எழுபதாயிரம் பேர்…. பிளைட்டில் அழைத்து வர வேண்டும் என்றால்..? ராணுவ விமானங்கள் போதாது… பயணிகள் விமானம் என்றால் ஏர் இந்தியாதான்.. ஆனால் ஏர் இந்தியா பைலட்டுகள் போர்க்கொடி உயர்ந்துகின்றார்கள்..

இது என்ன டவுன் பஸ்சா…??? ஒரு லட்சம் பேருக்கு மேல் ஏற்றி வர…முதலில் முரண்டு பிடித்தாலும்.. நம்ம ஆட்கள் தவிக்கின்றார்கள் என்றதும்…ஏர் இந்திய பைலட்டுகள்தான் வண்டி ஓட்டினார்கள்…


மகா மட்டமான ஏர்லைன்ஸ்… ஏர்ஹோஸ்டல்ஸ் எல்லாம் ஆயா மாறி இருப்பாங்க… எப்ப பார்த்தாலும் ஏர் இந்தியா பிளைட் லேட் லிஸ்ட்டில் முதல் இடம்.. என்று வெறுப்பாக உவ்வே என்று பார்த்த வளைகுடா பயணிகள் எல்லாம் ஏர் இந்தியா விமானத்தை கண்டதும் உற்சாகம் கொண்டர்.


ஒரு முறை இல்லை இரு முறை அல்ல…488 முறை குவைத்துக்கும் டெல்லிக்கும் ஏர் இந்தியா விமானங்கள் பறந்தன…

இரண்டுமாதங்கள் நடந்த இந்த செயல் மனித குல வரலாற்றில் பெருபாண்மையான மக்களை பிளைட்டில் இடப்பெயற செய்தது என்பது இதுவே முதல் முறை என்று கின்னஸ் அறிவித்தது…..

ஆம் 1990ஆகஸ்ட் பதினாலாம் தேதி… தொடங்கிய இந்த பிராசஸ்.. அக்டோபர் பதினோராம் தேதிதான் முடிவுக்கு வந்தது..


இந்தி அரசின் மிகப்பெரிய சாதனைதான்…. 2012 ஆம் ஆண்டி பெண்அப்லக் உருவாக்கத்தில் ஆர்கோ திரைப்படம் வந்தாலும்… இது ஏழு பேர் அரசு கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பிப்பார்கள்… ஆனால் இது அப்படி அல்ல… 1,70000 பேர் என்பது சாதாரண விஷயமா-?


இது போன்ற இக்கட்டான தருணங்களில் அரசு நிறுவணங்கள்தான் செயல்படும்… உதாரணத்துக்கு சென்னை பெரும் வெள்ளத்தில் சிக்கி சென்னை விமான நிலையம் மூடப்பட்டது…


அரக்கோணம் விமான நிலையத்தை அவசரத்துக்கு பயண்படுத்துக்கொள்ள அனுமதி அளித்த போதும் எந்த தனியார் விமானமும் இயக்கவில்லை…

ஹைதராபாத்தில் இருந்து முதல் ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை அரக்கோணம் ராணுவ கேந்திரத்துக்கு வந்தது.


சரியாக பதினைந்து வருடத்துக்கு முன் நடந்த பெரிய பிராசஸ் என்றாலும் இந்த நேரத்தில் ஏர் இந்தியாவுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்…

(அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஏர்லிப்ட் திரைப்படத்தின் விமர்சனத்தின் ஒரு பகுதி இது).

#airlift
#airliftmoviereview
#airindia
#indianairlines
#saluteairindia
#akshaykumar

விமர்சனமும் பதிவும் பிடித்து இருந்தால் ஷேர் மற்றும் சப்ஸ்பிரைப் செய்யவும்





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. வரலாற்று ஆவணமாய் வந்துள்ள படம் போலும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. விமர்சனம் அருமை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. I was not aware of this. I am proud of Air India.

    It does not mean that I will be using it services anytime soon. :-)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner