Dear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு



தாரை தப்பட்டை

பார்க்க வேண்டிய திரைப்படம்தான்....

ஆனால்... கொஞ்சம் விரிவாய் பேசுவோம்



இந்த படம் கரகாட்ட காரர்களில் வாழ்விய்ல் துன்பத்தையும் அவர்கள்  காம்பரமைஸ் வாழ்க்கையையும் உறக்க சொல்கிறது.. பச்சையான பாடல்கள் அர்த்தங்களை உடல் அசைவுகளை  அப்படியே  அப்பட்டமாக உண்மையை  பதிவு செய்து இதுதான் அவர்கள் வாழ்வியல் எதார்த்தம் என்பதை சொன்ன தைரியத்துக்கு பாலாவுக்கு ஸ்பெஷல் பொக்கே.

 சேது தவிர்த்து பார்த்தால்  தொடர்ந்து விளிம்பு நிலை  மக்களின்  வாழ்வியில் துயரங்களை  பாலா தன் திரைப்படங்களில்   பதிந்து வருகிறார்… சேதுவில் கூட மன நிலைபாதிக்கப்பட்டவர்களை பற்றிய டீடெயில் இருக்கும்…

ஆனால்  வர வர அது டெம்ளெட்டான கதையாக மாறி வருகின்றது என்பதே உண்மை…

 உதாரணத்துக்கு பாலா படங்கள்… விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வியல் சந்தோஷத்தை முதல்  பாதியில்  பதிவு செய்து…  ஒரு கொடுரமான வில்லன் மூலம்  அந்த சந்தோஷத்தை பறிக்க  செய்து… பறிக்க  செய்வது என்றால் சாதாரணமாக அல்ல… கொடுரத்தின் உச்சமாக அந்த மகிழ்ச்சியை  பறிக்க  செய்து… படத்தின் கடைசியில்  ஒரு பத்து நிமிஷத்தில் நாயகன் வில்லனை  சூரசம்ஹாரம் செய்து..அவன் குரல் வலையை  நாயகன் கடித்து  துப்பியதை தாங்களே கடித்து துப்பியது போல  படம் பார்க்கும்  ரசிகனை உணர்ச்செய்வதே… பாலாவின்  முந்தைய படங்களின் டெம்ளேட் திரைக்கதைகள்…பரதேசி, சேது போன்ற விதிவிலக்குகள் உண்டு

நிச்சயம் பாலா  இதில் இருந்து மாற வேண்டும்.. விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை  பதிவு செய்யுங்கள்.. ஆனால் எல்லா படத்திலும் இதே டெம்ளேட்  இருந்தால்   படம் பார்க்கும் ரசிகனின்  ஆர்வத்தை எதிர்காலத்தில் குறைத்து விடும் என்பதே நிதர்சன உண்மை…

விளிம்பு  நிலையில் இருந்து உயர்ந்த  நிலைக்கு சென்ற  தன்னப்பிக்கை கதைகள் நிறையவே இருக்கிறன… ஒரு இரண்டு படங்கள் அப்படியான திரைக்கதையில் எடுத்து விட்டு  இது போன்ற படங்கள் எடுத்தால் கூட பரவாயில்லை... தொடர்ந்து  இது போன்ற படங்கள் பார்க்க அயற்சியாய் இருக்கின்றது.. முக்கியமாக யூகிக்க கூடிய திரைக்கதை...



பாலாவை அனுராக் கஷ்யாப் கொண்டாட காரணம் அவரின் பாசாங்கற்ற  திரைப்பட உருவாக்கம் என்பதுதான் உண்மை.... ஆனால்  வெவ்வேறு தளங்களில் பாலா கஷ்யாப்பை போல பயணிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்..

நதி என்பது ஒரே நேர்கோட்டி சென்றால் அது அழகல்ல.. வளைந்து   நெளிந்து  செல்ல வேண்டும்… திடும் என  மலை முகட்டில் இருந்து சட்டென அருவியாய்  உருமாறி ஆர்பரிக்க வேண்டும்.

கடலும் அப்படித்தான்… ஏரி போல தேமே என்று தண்டக்கருமாந்திரம் போல  அமைதியாக இருந்தால் அதில் ரசிப்பில்லை… கடல் அலை போல  வித விதமாக  ஆர்பரிக்க வேண்டும்… அப்போதுதான்  அவைகளை ரசிக்க முடியும்..

ஸ்டான்லி  கியூப்ரிக் 13 படம்தான் தன் வாழ்நாளில் எடுத்தார்.. ஆனால் எல்லா படங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தளங்கள்…

அதுதான்  ஒரு இயக்குனருக்கு பெருமை..

பாலா சிறந்த இயக்குனர்… அது ஏரி போல தன் பரப்பை குறுக்கிக்கொள்ள கூடாது.. ஒரு ஆற்றை போல ஒரு கடலை போல…  அதன் எல்லைகளை  விரிவாக்கிகொள்ள வேண்டும்… அதுதான் அழகும் ரசனையும்..

செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா?

பாலா…-?



ஜாக்கிசேகர்

21/01/2016



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

4 comments:

  1. செய்தால்தான் நிலைத்து நிற்க முடியும்! இல்லாவிட்டால் இவரும் கடந்து போக வேண்டியதுதான்!

    ReplyDelete
  2. பாலாவின் தாரை தப்பட்டை திரைபடத்தின் இணைய தளங்களில் வரும் விமர்சனகள் பார்க்குபோது சிரிப்புதான் வருகிறது பாலா சைக்கோ,ஒரே டெம்ப்ளேட்டே வைத்துக்கொண்டு படத்தை ஓட்டும் இயக்குனர் என்று பலவிதமான கருத்துக்கள் எழுதி ஒரு திறமையான/நல்ல இயக்குனரை சினிமாவை விட்டு ஓடவைக்காலமா?
    பாலா இன்னொரு மணிரத்னமோ ஷங்கரோ அல்ல அது போல் இன்னொரு கங்கை அமரன் ரவிக்குமார் அல்ல தமிழ் சினிமாவின் தனக்கு என ஒரு அடையாளம் வைத்துகொண்டு தனக்கென பாணியில் படமெடுக்கும் இந்தியாவின் சிறந்த இயகுனரகளின் ஒருவர்.
    பாலாவால் மிக நேர்த்தியாக செதுக்கி முழுநீள ஜனரஞ்சகமான வெற்றிப்படங்கள் தரமுடியும் ஆனால் அது அவரின் வேலை அல்ல பாலா கற்ற திரைமொழியில் நமக்கு ரசிக்க நல்ல படங்களை தருகிறார் அது அவர் தெரிவு செய்யும் கதை/களம் பொறுத்தே தீர்மானிக்க படுகிறது ( நந்தா .பரதேசி )
    இப்படித்தான் படத்தின் முடிவை இருக்க வேண்டும் என்று வைத்துகொண்டு அவர் உருவாக்கவில்லை (தாரை தப்பட்டை climax)
    இது தான் climax என்று ஊகித்தாலும் அது படத்தில் எங்கே வரும் என்று நமக்கு தெரியாது சாமிபுலவர் இறந்த பிறகே படம் climax நோக்கி நகர்கிறது சாமி புலவரின் இறப்பும் படத்தின் climax எந்த விட சம்பந்தமே இல்லை இது போல் நிறைய விஷயங்கள் படத்தில் ரசிக்கலாம் பாலாவின் முந்தைய படங்களை விட இந்த படம் மிகவும் நேர்த்தியாக மற்றும் நேர்மையாக எந்தவித வியாபார சமரசங்களை செய்யாமல் அவர் மனதில் என்ன இருக்கிறதோ அதை திரைவடிவமாக தந்துள்ளார்

    ReplyDelete
  3. //செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா?//

    ஆனாலும், இது கொஞ்சம் ஓவர்தான் ஜாக்கி! :-))

    ReplyDelete
  4. Oremaathiri padam Edithu enga thaaliya aruga aarambichidaaru Baala.. Ithula avara paaraatta enna Iruku. .jacky solvathe sari..
    Sethu.. is an excellent movie. .athu polavum padam pannalaam. ..
    Eppapaaru.. pichakaara pasangala pathiye padam Panna . Ithu our nalla director ku azhakalla..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner