Oru Naal Iravil tamil movie Review by jackiesekar | ஒரு நாள் இரவில் திரைவிமர்சனம்



சின்ன சபலம்… பெரிய பிரச்சனைக்கு ஊரு விளைவிக்கும்…. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டம் அது..

 நேற்று வரை ஊரே கொண்டாடிய நல்லாசிரியர் அவர்… அவரை போன்ற ஒரு நேர்மையாளரை பார்க்கவே முடியாது… கணக்கு பாடத்தை அவர்  எடுக்க ஆரம்பித்தால் மர மண்டைக்கும் புரியும்  அளவுக்கு எடுப்பதில் வல்லவர்… அரசு ஒதுக்கும் நிதிகளை தன் வீட்டுக்கு ஒதுக்காத மாமனிதர், வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள்… ஆனாலும் காமம் என்பது பொல்லாதது.. அதை அடக்கி ஆள்வது  சிரமத்திலும் சிரமமான விஷயம்….  கொஞ்சம் யோசிக்கா விட்டாலும் முச்சந்தியில்  நிறுத்திவிடும் வல்லமை அதற்கு உண்டு.


  அவரது போறத நேரம்….  அவர்  வகுப்பில் படித்துக்கொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு மாணவி மேல்… மையல் கொள்ள…இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டு  பேர் ,புகழ் அனைத்தும் இழந்து தனி மரமாக நிற்கிறார்… நடைபினமாக நிற்கிறார் ஊரில் வீட்டில்  மதிப்பில்லை…
 ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதில்லை… நித்யானந்தா விவகாரம் எல்லோருக்கும் தெரியும்… சபலத்தின் காரணமாக சரசத்தில் ஈடுபட… எதிரிகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்டார்கள்.. அவ்வளவே… அதே போல மாட்டியவன் மாட்டாதவன்னு ரெண்டு கேட்டகிரி மட்டுமே இங்கே உண்டு…
அமெரிக்க அதிபராக பில்கிளிண்டன் இருந்தபோது, அவர் மோனிகா லெவின்ஸ்கி என்ற வெள்ளை மாளிகை பெண் ஊழியரிடம் செக்ஸ்  வைத்துக்கொண்டது….. வெட்ட  வெளிச்சமானது…
அமெரிக்காவில் 15 வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செக்ஸ் விவகாரம் குறித்து தற்போது மோனிகா லெவின்ஸ்கி, `தி டெத் ஆப் அமெரிக்கன் வெர்ச்சுவஸ்' என்னும் பெயரில் 769 பக்கம் கொண்ட புத்தகத்தை எழுதி  சில வருடத்துக்கு முன் வெளியானதாக தகவல்…
பில்கிளின்டன் அதுவரை சேத்து வைத்த பெயர் எல்லாம் பஸ்பம் ஆனது… நான் இல்லை என்று அவர் மறுத்த போது மோனிகா என்னுடை ஜட்டியில் அவரின் ‘செமன் இருக்கின்றது என்று ஆதாரபூர்வமாக  நிருபிக்க  எப்படியும்  தப்பிக்க முடியாமல் எலிப்பொறியில் சிக்கிக்கொண்டது போல கிளின்டன்  சிக்கிக்கொண்டார்.. அது போல  பெயர் பெற்ற குடும்பத்தலைவன் சின்ன சபலத்தால்.. ஒரு 32 மணி  நேரத்துக்கு வெதுக்கு வெதுக்கு என்று  பயந்துக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும் அதைதான் ஒரு நாள்இரவில்  திரைப்படம் விவரிக்கின்றது…
======
ஒரு நாள் இரவில் திரைப்படத்தின் கதை என்ன?,

 சத்யராஜ் (சேகர்) மனைவி இரண்டு பெண் பிள்ளைகளோடு  போரூரில் சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தை  வீடு கடை கட்டி  விட்டு அதில் வரும் வாடகை வாங்கி  வாழ்க்கையை  சுகமாக கழிக்கின்றார்.. அவருக்கு இருக்கும் மூன்று கடையில்  நடுக்கடையை வாடகைக்கு விடாமல் நண்பர்களோடு தண்ணி அடித்துக்கொண்டு இருக்கின்றார்.. அவருக்கு  ஒரு ஆட்டோ நண்பர்…ஒரு நாள்இரவில் தண்ணி  அடிக்க சபலப்பட… அது அவரை பெரிய வில்லங்கத்தில் சிக்க வைக்கின்றது.. அதில்இருந்து அவர் மீண்டாரா இல்லையா என்பதை வெண்திரையில்  காண்க..
===
  படத்தின் சுவாரஸ்யங்கள்..

சத்யராஜ்..  பின்னி இருக்கார்… இளமை ததுப்புகிறது..மலையாளத்தில் லால்  செய்த  பாத்திரத்தி தமிழில் செய்துள்ளார்… லால்  பின்தலையில் அடித்துக்கொள்ளுவார்… அதே போல பாடி லாங்வேஜை சத்யராஜூ பின் பற்றி இருக்க   வேண்டாம்…மற்றபடி அந்த பதட்டம் போன்றவற்றில் நம்மையும் பதட்டமடைய  செய்கிறார்.
யூகி சேது மலையாளத்தில் சீனுவாசன் செய்த பாத்திரத்தை செய்ததோடு.. இந்த படத்துக்கு டயலாக்கும் எழுதி இருக்கிறார்… சில இடத்தில் சீரியஸ்*  நஸ் அல்லாமல் நாடகம் போல இருக்கின்றது… ஆனால்  சத்தியராஜிடம்  12 வருஷம்  நீ சிங்கப்பூர்ல இருந்த போது நாங்க நம்பலை என்பது நறுக்கு தெரித்தற்போல இருப்பதோடு  யூகி அங்கே நிற்கிறார் என்பதே உண்மை.
அனுமோன்  விபச்சாரி கேரக்டரில்  பின்னி எடுத்து இருக்கிறார்.. படத்தின் பெரிய பலம்  இவரே… அருடைய குழைவான  பேச்சு எல்லோரையும் சொக்க வைக்கிறது..
பேர் என்ன என்று சத்தியராஜ் கேட்க தங்கமேன்னு கூப்பிடேன்- என்று சொல்லும் அந்த காட்சியும்.. கை அறுத்துக்கொண்ட தனக்கு சத்யராஜ் கட்டு கட்டி விட அதை காதலும் ஏக்கமுமாக பார்க்கும் அந்த பார்வை அசத்தல்..

 அதே போல ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடித்து இருக்கும் வருனிடம் இன்னமும் வேலை வாங்கி இருக்கலாம்..
இந்த திரைப்படத்துக்கு எம்எஸ்பிரபு கேமராமேன் என் குருநாதர்…  ரத்னம் என்ற இன்பெக்ட்ர் கேரக்டரில் நடிக்கவும்  செய்துள்ளார்… அதே போல இயக்குனர் கவுதம்மேனன்  இயக்குனராக கேமியோ செய்துள்ளார்..

=====
படத்தின் டிரைலர்.


====
படக்குழுவினர் விபரம்.



Directed by    Anthony
Produced by    A. L. Vijay (Presenter)
A. L. Azhagappan
Sam Paul
Written by    Yugi Sethu
(Dialogues)
Screenplay by    Anthony
Story by    Joy Mathew
Based on    Shutter
by
Joy Mathew
Starring    Sathyaraj
Yugi Sethu
Music by    Navin
Cinematography    M. S. Prabhu
Edited by    Anthony
Production
company
Paulsons Media
Distributed by    Think Big Studios,
Sri Thenandal films
Release dates
20 November 2015
Country    India
Language    Tamil
======
பைனல்கிக்.


2012 ஆம் ஆண்டு ஜாய் மெத்யூ இயக்கத்தில் மலையாத்தில் வெளியான ஷட்டர் திரைப்படத்தி ரீமேக் உரிமை வாங்கி  திரைக்கதையில் அதனை  கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து… ஏசி ரூமில்  எடிட் செய்துக்கொண்டு இருந்த ஆண்டனி… முதல் முறையாக  சுதந்திர சென்னை பொல்யூஷன் காற்றை சுவாசித்த படி ஆக்ஷன் கட் சொல்லி எடுத்து இருக்கும் திரைப்படம்தான்  ஒரு நாள் இரவில்..
 எடிட்டர் ஆண்டனி முதல் படத்தில் தேறி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்… நான் சொல்லவில்லை… படம் பார்த்து விட்டு வெளியே  வரும் ரசிகர்கள்.. கிளைமாக்சில் கண் கலங்கிய படி வெளிவரும்  ரசிகர்கள் சொல்கின்றார்கள்..
மலையாளத்துக்கும் தமிழுக்கும் இருக்கும் சின்ன டுவிஸ்ட்டை இவர் வேறு விதமாக எடுத்து இருக்கின்றார்… அது உணர்வு பூர்வமாகஇருக்கின்றது.. அதே வேளையில் இண்டர்வெல்பிளாக் ஒரிஜினல் ஷட்டரில் தெறி மாசாக இருக்கும்… அதுஇதில் மிஸ்சிங்..


நிச்சம் இந்த திரைப்படம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று கூறிக்கொள்கிறேன்.


======
படத்துக்கான ரேட்டிங்.
பத்துக்கு ஏழு


=========
வீடியோ  விமர்சனம்.




==========


ஜாக்கிசேகர்.
21/11/2015
follows on



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner