எனக்கு ஒரு டவுட்


ஏஆர் ரகுமானின் ஜெய்ஹோ பேட்டியும்.... பார்த்திபனின்விகடன் பேட்டியும்... பார்த்தேன் படித்தேன்...

ரகுமானின் அம்மா அவர் வந்தார் ஆர்மோனியம் வாசிச்சார்ன்னு பேசறாங்க... அதை விட பார்த்திபன்... ராக்கி படம் பார்த்தார்... அவரோட விமர்சனம் எனக்கு தேவைன்னு பேட்டியில தன்னோட புள்ளைய அவர்ன்னு மரியாதைய விளிச்சி இருக்கார்....

ரகுமான் ராக்கி இரண்டு பேருமே சின்ன வயசுல வளரும் போதே அவர்ன்னுதான் அழைச்சி இருப்பாங்களோ..???


அல்லது....

புகழ் வந்தாலோ அல்லது பெரிய பொசிஷன்ல வளர்ந்துட்டம்னா.. அப்படி பேசிவாங்களோ? ஒன்னும் புரியலை.. எத்தனை அவார்டு வாங்கினாலும்... வாடா போடான்னுதானே பேசனும்...?? இல்லை அவர் வந்தார் போனார் சொல்றதுதான் நாகரீகமா?

சினிமாக்காரவங்க ரெண்டு படம் ஜெயிச்சிட்டாலே ரொம்ப சின்ன பையனா இருந்தாலும் சார்ன்னு சொல்லாம பேசமாட்டாங்க...இதுதான் சினிமா ரூல்...

ஆனா பெத்த புள்ளைய கூட அப்படி பேசறது வியப்பா இருக்கு....தலைக்கு உசந்து வளர்ந்ததும் அவர்ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க போல...

எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆனதும்..யாழினி வந்தாங்க... அவங்க பேசினாங்கன்னு நானும் பேசுவேனோ..?






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

13 comments:

  1. அது சரி அண்ணா...
    உரிமையோடு அழைப்பதில்தான் பாசம் இருக்கும்...
    அம்மா என்றுமே அவன் இவன் என்று சொன்னால்தான் நல்லாயிருக்கும்....
    அவர் என்று சொல்லும் போது தாய்மை தள்ளியே நிற்கும்தானே...?

    ReplyDelete
  2. //எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆனதும்..யாழினி வந்தாங்க... அவங்க பேசினாங்கன்னு நானும் பேசுவேனோ..?// நான் அப்படி நினைக்கவில்லை

    ReplyDelete
  3. வாடா போடான்ன பேசுவது இயல்பாய் இருக்கும்...கொஞ்சூண்டு மரியாதை சேர்த்தா கூட அதில் செயற்கை தன்மை கூடிடும்.

    சரியான உச்சரிப்புடன் ஆங்கிலம் வாசிக்க மென்பொருள்

    ReplyDelete
  4. I Saw many tamil family Singapore , They call call their child ,(Avar ).

    ReplyDelete
  5. பின்னுட்டம் மிட்ட நண்பர்களுக்கு விளக்கம் அளித்த நட்புகளுக்கும் என் அன்பும் நன்றியும்.

    ReplyDelete
  6. ஒரு விஷயம் புரிகிறது... புருஷனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.. ஆனால் சபை என்று வரும் போது அவரு வந்தாரு போனாரு ஓக்கே.. ஆனால் பிள்ளைகள் என்பது நம்பிள்ளைகள்... எங்கப்பாரு... அவன் என்ன கிழிச்சான்..?? நான் இல்லாட்டி ஒரு மயிறும்புடுங்கி இருக்க முடியாது என்று பொதுவெளியில் சொல்லும் ரகம் ..ஒருவேளை பெரிய ஆளாக மாறியதும் மரியாதை கொடுப்பாரோ என்னவோ..?? ஆனால் தன் பிள்ளையை சமுகத்தில் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பதாலே அவர் இவர் என்று பெற்றோர்கள் அழைக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்.. அதே போல குழந்தைகளை மரியாதையாக அழைப்பதில் தவறில்லை..அது அவர்வர் விருப்பம் சார்ந்த விஷயம். ஆனால் வாங்க சார் இங்க வந்து அப்பாவுக்கு ஒரு முத்தா கொடுடா என்பதற்கும்.. வாடி செல்லம் வந்து அப்பாவுக்கு ஒரு முத்தா கொடுடி என் குட்டிம்மா என்பதற்கும் நிறைய வித்தியாசமும் மகிழ்வும் இருப்பதாக எனக்கு படுகிறது.. எதிர்காலத்தில் பார்ப்போம்.. இன்றைக்கு நான் வாடி போடி என்பதுதான் எப்போதும் அப்படி இருக்கவே என் விருப்பம்.

    ReplyDelete
  7. Nadagame Ulagam..... Ulagame nadikuthu!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. சினிமால இது எல்லாம் சகஜம் விடுங்க பாஸ்
    Joshva

    ReplyDelete
  9. தங்கள் பகிர்வுக்கு நன்றி
    latha

    ReplyDelete
  10. இப்படி வீட்டில் பேசமாட்டார்கள்

    ReplyDelete
  11. //எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆனதும்..யாழினி வந்தாங்க... அவங்க பேசினாங்கன்னு நானும் பேசுவேனோ..?// பேச வேண்டும்!!!
    கட்டாயம் யக்கி, பெரிய ஆளாகமாத்திரமன்றி, புகழ் வெளிச்சம் பாச்சப்படுபவராகவும் ஆகலாம்- அப்போ அப்பாவாக இருந்தாலும் "அவங்க" என மரியாதையோடு தான் நீங்கள் பேசவேண்டும், பேசுவீர்கள்.
    அவர் விசிறிகளும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். இது உலக நியதி.
    கலைஞர்- ஸ்ராலினைக் குறிப்பிடும் போது "அவர்" என்கிறார். கலைஞர் பிள்ளைகள் அப்பா எனக்கூட பொது வெளியில் குறிப்பிடுவதில்லை. தலைவர் எனவே விளிக்கிறார்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner