எல்லை மீறுகின்றதா? புத்தாண்டு கொண்டாட்டம்...


புத்தாண்டு கொண்டாட்டம்  எல்லை மீறி போகின்றதா ??? என்று சன்டிவி நியூஸ் சேனலில் இளைஞர்கள் சிலர்  எல்லை மீறிய காட்சிகளை காட்டினார்கள்…



பதினோரு மணிக்கு மேல எந்த கடையும் சென்னையில்  இல்லை… 1980களில் வேண்டுமானால்  இந்த ஊரடங்கு உத்தரவை ஏற்றுக்கொள்ளலாம்..

ஆனால்  சென்னை முழுவதும் கடந்து பத்து ஆண்டுகளில்  ஐடி நிறுவணங்கள் இரவு முழுவதும்  உழைக்கின்றன..  பல லட்சகணக்கான இளைஞர்கள் இளைஞிகள் உழைக்கின்றார்கள்...ஆனால் அவர்கள்  பசிக்கு வெளியே வந்தால் ஒரு கடை இருக்காது…

கேன் டீ வைத்து இருப்பவர்களிடம் ஒரு டீயும் ஒரு சிகரேட்டுடன்  பசியை வருடம் முழுக்க அடக்கிகொள்ள வேண்டும்…


அதெல்லாம் விடுங்கள்… இரவு பதினோருமணிக்கு மேல் குடும்பத்துடன் கூட  வெளியே செல்ல முடியவில்லை..

இரண்டு மணிக்கு கடற்கைரை சர்விஸ் சாலையில் கூட  ஒரு ஆணால் வாக்கிங் போக முடியாது… எல்லோரையும் திருடன் போல பார்க்க வேண்டியது ...கேள்விகளை கேட்க வேண்டியது….

வருடம் முழுவதும் பதினோரு மணிக்கு குடும்பத்துடன் போய் வீட்டில் பூட்டிக்கொண்டு படுத்து காலையில் ஆறு மணிக்கு வெளியே வந்தால் போதும் என்று  நடுத்தர குடும்பத்து இளைஞனை போலிஸ்  வருடம் முழுவதும் எச்சரிக்கின்றது… பயமுறுத்துகின்றது..


வருடத்தில் ஒருநாள் தன் விதிமுறையை  போலிஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தளர்த்துகின்றது…

வருடம் முழுக்க பூட்டி வைத்த, அடக்கி வைத்த வேட்கை ,வருடத்துக்கு ஒரு நாள்  புத்தாண்டின் நள்ளிரவில் நடுத்தரகுடும்ப இளைஞனுக்கு அது வாய்க்கப்பெரும்  போது ,அது கள்ளு குடித்த குரங்கு கதையாக மாறிவிடுகின்றது என்பது என் அபிப்பராயம்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
03/01/2015



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

  1. எல்லை மீறினால்தான் கொண்டாட்டம் என்றாகிவிடுகிறது... ஒருநாள் தானே என்ற முறையில் விட்டு விடலாம்...
    வேறென்ன செய்வது..

    ReplyDelete
  2. ஒரு நாள்தான், ஆனால் எத்தனை உயிர்கள் மரிக்கின்றன?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner