Stonehearst Asylum-2014-மர்மம் நிறைந்த மன நலகாப்பகம்



மன நலம் பிழன்றவர்களை மையப்படுத்தி வந்த திரைப்படங்கள்  தமிழ்சினிமாவில் அதிகம் என்றாலும்  உண்ர்வு பூர்வமாய் அவர்களின் மன நிலைகளை அலசிய திரைப்படங்கள் வெகு குறைவு என்பதுதான் வரலாற்று உண்மை….


ஜாக் நிக்கல்சன் நடிப்பில்  மனநலம் பாதித்தவர்களை முன்னிலை படுத்தி ஹாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் One Flew Over the Cuckoo's Nest மன நலம் பாதித்தவர்களை பற்றி  இந்த படம் தந்த அதிர்வை… எனக்கு  தெரிந்து வேறு எந்த திரைப்படமும் கொடுத்தது இல்லை என்பேன்… ஆனால் அதே படத்தை  ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மனசுக்குள் மத்தாப்பு திரைப்படம்  தமிழில் நம் சம்பிரதாயங்களை  உள்ளடக்கி One Flew Over the Cuckoo's Nest யை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் அது.

மிராக்கள் இன் செல்  நம்பர் செவன்  திரைப்படம் ஒரு மன நலம் பாதித்த தகப்பனை பற்றிய கதை… தமிழில்  பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஆராரோ  ஆரிரரோ திரைப்படம்  மனநலம் பாதித்தவர்கள்  பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கர் வாழ்வில்  ஒரு மன நலம் பாதித்த பெண் குறுக்கிடுகின்றாள்… முடிவு என்ன என்பது கதை..

பாக்கியராஜூக்கே உரிய காமெடி மூலம் பூசப்பட்டு எடுத்த திரைப்படங்கள் ஆகும்… பொட்டில் அடித்தால் போல மனநலம்
பாதித்தவர்களின்  வாழ்கையில்  உள்ள  வலியை சொன்ன திரைப்படங்கள் என்று பார்த்தால்  அது  கமல் நடித்த குணாவும், சேதுவும்தான்.. இன்னும் சில திரைப்படங்கள் இருக்கலாம்..  ஆனால்   என் நினைவுக்கு  இவைகள் மட்டுமே  வருகின்றன.


அதாவது ஊரே பைத்தியம் என்று சொல்லும் ஆனால்  அவர்கள் பைத்தியம் இல்லை என்பது போலான கதாபாத்திரங்கள் மேலே சொன்ன திரைப்படங்கள் … அதே போல சிப்பிக்குள் முத்து திரைப்படத்தையும் இதில் சேத்துக்கொள்ளலாம்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ரிலிஸ் ஆன திரைப்படம் Stonehearst Asylum … மனநலகாப்பத்துக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இருந்து   மருத்துவதுறையில் பட்டம் பெற்ற டாக்டர் நுயூகேட்… Stonehearst Asylum காப்பகத்துக்கு வருகின்றான்….

அங்கே Eliza Graves (Kate Beckinsale) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கின்றான்.. அந்த மனநல காப்பக  மருத்துவமனை   ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கின்றது… அது வழக்கமான மருத்துவமனை போல இல்லை… அங்கே பல ரகசியங்கள்  புதைந்து கிடக்கின்றன… 


இளம் டாக்டராக சென்ற (Brendan Gleeson) யை மிகப்பெரிய ரகசியங்களை கண்டு பிடிப்பதோடு அவனை ஆபத்தும் சூழ்ந்து கொள்ள… மன நலம்  பாதிக்கப்பட்டு இருந்தாலும்  காதலி எலிசாவோடு அவன் அந்த மன நல காப்பகத்தில்  இருந்து தப்பித்தானா? இல்லையா?  என்பதுதான் Stonehearst Asylum … திரைப்படத்தின் கதை.


படத்தின் சுவாரஸ்யங்கள்.

இயக்குனர் Brad Anderson இயக்கத்தில் வெளிவந்த  புகழ் பெற்ற திரைப்படங்கள் இரண்டு  கிரிஸ்டன் பேல்   நடிப்பில் வெளியான த மெக்கானிஸ்ட்  மற்றும் கடந்த வருடம் வெளியான  ஹாலி பெரி நடிப்பில் வெளியான  தி கால் திரைப்படமும்  பிராட் ஆன்டர்சன்  இயக்கத்தில் வெளிவந்து பட்டையை  கிளப்பிய திரைப்படங்கள்..


மிக அற்புதமான சஸ்பென்ஸ் திரில்லர்.. அரதபழசான கதை போலவும்..- எங்கேயோ பார்த்து இருக்கின்றோம் என்ற உணர்வும் படம் பார்க்கும் போது தவிர்க்க முடிவதில்லை.

காப்பகம் இருக்கும் இடம் ….. பின்னனி இசை  போன்றவை படம் பார்க்கும் போது காதை பொத்திக்கொண்டோ  அல்லது சவுண்டை குறைத்தோ பார்க்கும் படி செய்கின்றன என்பதே நிதர்சன உண்மை…

டாக்டராக நடித்த Brendan Gleeson நடிப்பில் பின்னி இருக்கின்றார்…  இவன் ஏன்டா வேர்த்து விறு விறுத்து  கிடக்கறான் என்று படம் பார்க்கும் போது எழும்  கிளைமாக்சில் விடை இருக்கும் என்று பார்த்தால்  எலிசாவிடம் உண்மை சொல்லும் போதே  சொல்லிவிட்டான் என்று நினைத்தால்   அதிலும் ஒரு அக்கு வைக்கின்றார்கள்…

படத்தை தூக்கி நிறுத்துவது எலிசா கிரேவ் கதாபாத்திரத்தில் நடித்த (Kate Beckinsale) நடிப்பில் பின்னி இருக்கின்றார்..  முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து  உட்கார செய்கின்றார். 

அதே போல பென் கிங்ஸ்லி… சிறந்த நடிப்பை வழங்கி இருக்கின்றார்.. ஷட்டர் ஐ லேன்ட்  திரைப்படத்தில் செய்த அதே கேரக்டர். ஆனாலும் அசத்தி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.
=========
 வீடியோ டிரைலர்


===========
 Directed by Brad Anderson
Produced by Bruce Davey
Mark Amin
Mel Gibson
Rene Besson
Written by Joseph Gangemi
Based on "The System of Doctor Tarr and Professor Fether" 
by Edgar Allan Poe
Starring Kate Beckinsale
Jim Sturgess
Michael Caine
Ben Kingsley
David Thewlis
Brendan Gleeson
Music by John Debney
Cinematography Thomas Yatsko
Production
company
Icon Productions
Sobini Films
Distributed by Millennium Films
Release dates
October 24, 2014 (United States)
Country United States
Language English

=======
பைனல் கிக்..
அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் என்று நான் பரிந்துரைக்கின்றேன்.. ஆனால்  உலகளாவிய அளவில்  இந்த படத்துக்கு இரண்டு விதமான விமர்சனங்களை  சினிமா விமர்சகள் முன் வைத்தாலும்.. இந்த படம் நல்ல  சஸ்பென்ஸ் திரில்லர் என்றால் அது மிகையில்லை…


====
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழரை

======
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 



 நம்மோட வீடியோ விமர்சனம்.




3 comments:

  1. Hi Jackie sir..
    Your Review always good, if you wish you may watch i mentioned movies & give your
    Review for us.

    1. Midnight FM [Korean thriller]
    2. Mischef things
    3. Copycat [Serial killer model type continue murder will happen in this movie]

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner