காசினோ
சென்னை மாநகரில்
அந்த பெயருக்கு என தனித்த அடையாளம் உண்டு.
காசினோ என்பது‘ அண்ணாசாலைக்கு அருகே டேம்ஸ் சாலையில் அமைந்து இருக்கும்
தியேட்டர்.
சென்னை மாநகரில் ஏறக்குறைய 74 வருடங்களாக சென்னை வாசிகளை
மகிழ்வித்துக்கொண்டு இருக்கும் தியேட்டர்...இன்னும் ஒரு வருடம் கடந்தால் 75 வது வருட டயமன்ட் ஜுப்ளி கொண்டாட இருக்கின்ற தியேட்டர்...
சுதந்திரத்துக்கு முன் 1941 ஆம் ஆண்டு திறப்பு விழாக்கண்ட
திரையரங்கம் இது. வெள்ளைக்காரர்கள் முதற்கொண்டு படம் பார்த்த தியேட்டர்.. முதன் முதலில்
ஆங்கிலபடமும்,1950க்கு பிறகு தமிழ் படங்களும் 1970களில் திரும்பவும் ஆங்கில படங்கள் என திரையிடப்பட்ட இந்த திரையரங்கம் 2012 ஆம் ஆண்டில் 2கே புரஜெக்ஷனுக்கு மாறியது..சில வருடங்களாக, காசினோ திரையரங்கில் உலக திரைப்பட விழாக்கள் நடைபெற்று
வருகின்றது..
தற்போது சந்தியம் தியேட்டர் இந்த தியேட்டர்காரர்கள் காசினோ
தியேட்டரை லிசுக்கு எடுத்து நடத்தி வருகின்றார்கள்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 எழுபது வருடங்களுக்கு முன் சென்னையில் ரைட் ராயாலாக ஒரு தியேட்டர் எப்படி இருக்கும் என்று இளையதலைமுறையினர்
காண வேண்டும் என்றால் காசினோ திரையரங்கிற்கு தாராளமாக செல்லாம்.
தற்போது இந்த தியேட்டர் சென்னை மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது...
காரணம் அதன் முகப்பில்
திடிர் என்று முளைத்த பிரமாண்டமான அழகான பெண்
ஓவியம்....
யார் அந்த பெண்...??
தியேட்டர் முகப்பில் ஏன் அந்த பெண்ணின் ஓவியத்தை வரைகின்றார்கள்...??
எப்படி வரைகின்றார்கள்...??
யார் வரைகின்றார்கள்??
எதற்காக வரைகின்றார்கள்...??
மாற்றம் ஒன்று மட்டுமே
மாறதது என்பது போல காசினோ தியேட்டர்
முகப்பில் கிரேன் உதவியுடன் ஒரு பெண் ஓவியம் வரைந்து கொண்டு இருப்பதால் காசினோ தியேட்டர் பக்கம் செல்லும்
சென்னைவாசிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து கடந்து செல்கின்றார்கள்..
என்னடா காசினோ தியேட்டருக்கு வந்த வாழ்வு என்று விசாரித்தால் ஸ்டீரீட் ஆர்ட் அமைப்பினர் சென்னையில் விழா நடந்துகின்றார்கள் அதன் பொருட்டு காசினோ தியேட்டர்
முகப்பில் உள்ள சுவற்றில் பம்பாயை சேர்ந்த
ரன்ஜித் என்ற ஓவியரிடம் பொறுப்பை ஒப்படைத்து உங்கள் கைத்திற காண்பிக்க வேண்டும் என்று பணிக்க
.... அவரும் கிரேனில் ஏறி இறங்கி தன் குழுவினரோடு வரைந்து கொண்டு இருக்கின்றார்...
அவரிடம் சில கேள்விகளை ஜாக்கி சினிமாஸ் சார்பில் முன் வைத்தோம். அந்த பெண்ணின் ஓவியம் யார் என்று கேட்ட போது, இது வையெஜயத்தி மாலா என்றார்....அவர் ஏன் முகப்பு
சுவற்றில் வைஜெயத்தி மாலாவை வரைகின்றீர்கள் என்று கேள்வியை முன் வைத்த போது இந்தி தமிழ்
இரண்டிலும் அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் அவரை
தேர்வு செய்வதாக சொன்னார்.
இந்த புகைப்படம் 1955 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான தேவ்தாஸ் திரைப்படத்தில் வைஜெயத்தி மாலாவின் புகைப்படத்தை ஓவியமாக தீட்டுவதாக கூறினார்.
மேலும் காசினோ தியேட்டரின்
பழமை கெடாமல் அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இது இருக்கும்
என்பது மட்டும் உண்மை.ஆம் வைஜெயந்தி மாலா முகப்புடன் இன்னும் ரசிகர்கள் மகிழ்விக்க எப்போதும் போல கம்பீரமாக காத்திருக்கின்றது காசினோ தியேட்டர்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
30/01/2015
===========
குறிப்பு...
இது நானே வீடியோ எடுத்து, ஸ்கிரிப்ட் எழுதி அதை கொஞ்சம் கலோக்கியலாக
படித்து, அதனை எடிட் செய்து, அதன்பின் வீடியோவோடு ஆடியோவை சிங் செய்து... நானே அதை எடிட் செய்து ரெண்டர் போட்டு அவுட்
எடுத்து அப்புறம் யூடியூபில் அப்லோடிட்டு இருக்கின்றேன்..
எல்லாமும் நானே செய்யும்
போது டயர்டாகி விடுகின்றது... சரியாக ஆறுமணி நேர வேலை...
தவறுகள் இருந்தால் பொருத்தருள்க..... நன்றாக இருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.... ஜாக்கி சினிமாஸ் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..

Nice job, Jackie.
ReplyDeleteஅருமை.... வீடியோவும் நல்லாயிருக்கு...
ReplyDeleteமுழு விவரம் இங்கே www.mangojoos.com/street-art-chennai
ReplyDelete