GONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.நிக்  காலையில எழுந்துருக்கரான்எழுந்தா கடுப்பா இருக்குவெளியே வந்து பார்க்கறான்.. ரோடு அமைதியா இருக்கு

மணி பார்க்கறான்.. ஏழரை ஆவுது

 கடுப்பா இருக்கு

 காரை எடுத்துக்கிட்டு போறான்.

எங்கே போறான்  தெரியுமா?

பேமானி எங்க  வேடிக்கை பார்க்கறே

கதை சொன்ன அட்லீஸ்ட் ஊம் கொட்டனும்னு ஒரு அடிப்படை கர்ட்டசி மயிறு கூடவா உனக்கு தெரியாது

 சரிய்யா.உம்

   நேரா  அவன் காரை எடுத்துக்கிட்டு போறான்..

ம்.

எங்க போறான் தெரியுமா?


நிக் அவனோட தங்கச்சி பார் வச்சி நடத்திக்கிட்டு இருக்குஅந்த பாருக்கு போறான்..
 நிக்கு நிக்குன்னு சொல்றியே அவன் யாரு.,???

நிக்-.. ((பென் அப்லக்)

 அவன் தங்கச்சியோட பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கான் ..
இன்னைக்கு கல்யாணம் ஆகி 5 வருஷம்.. ஆவுதுன்னு சொல்றான்.. இன்னைக்கு கல்யாண நாள்ன்னு  சொல்றான்.. 

தங்கச்சி சொல்றா.. இங்க என்னடா   பண்ணிக்கிட்டு இருக்கே பொண்டாட்டிக்கு போய் விஷஸ் சொல்லுன்னு சொல்லறா

ம்-..

அவதூங்கிட்டு இருக்கான்னு சொல்றான்.. சொல்லிட்டு சரி ஒரு பெக் கொடுன்னு சொல்லி ஒரு பெக் போட்டுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கான்..
போன்வருது

பக்கத்துவூட்டு கிழவர் பேசறார்ஏன்டா எங்க இருக்கே
 நிக் தங்கச்சி கூட இருக்கற விஷயத்தை சொல்லறான்டேய் உன் வீடு திறந்துக்கெடக்குஉன் வீட்டு பூனை  வெளிய திரிஞ்சிக்கிட்டு இருக்கு  சீக்கரம் வா
சரின்னு வீட்டுக்கு வாரான்போன் செஞ்சி  எச்சரிக்கைசெய்த கிழவனுக்கு தேங்ஸ் சொல்லறான்

 வீட்டுக்கு போறான்..  கதவு திறந்து கெடக்குது.. பூனை தெரு பொறிக்கி போல  சுத்திக்கிட்டு இருக்குபொண்டாட்டி பேரு எமி((ராஸ்முன்ட்பைக்))  அழகான பொண்டாட்டிதான்எமி எமின்னு கூப்பிடுறான்பேச்சே காணோம்  எல்லா அறைக்கு சென்று  தேடுறான்.. ஆளைக்காளோம்.. ஆனா ஒரு டீபாய் உடைஞ்சி கிடக்கு.
பொண்டாடிட்டி மிஸ்சிங்.,.. தலையோ தலையோன்னு ராஜ்கிரன் போல  அடிச்சிக்கலைஐயையோ என்  பொண்டாடி காணாம  போயிட்டாளேன்னு பதறலை,போலிசுக்கு போன் பண்ணிட்டான்
டிடெக்டிவ் குழுவோட வந்து தேடுது..

 என் பொண்டாட்டி எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா எங்க போனான்னு எனக்கு தெரியலைன்னு  நிக் சத்தியம் பண்ணி தலையில அடிக்கறான்


பொண்டாட்டி காணாம  போன அன்னைக்கு எங்கடா போனேன்னு எதிர்கேள்வி கேட்டா என் தங்கச்சி பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு இருந்தேன்  சொல்றான்
காசு பிரச்சனை , புருசன் பொண்டாட்டிக்குள்ள ஏதாவது சண்டை இருந்திச்சா அப்படின்னு  இப்படின்னு பல கோணத்துல விசாரிக்குது போலிஸ்..

காணாம போன   பொண்டாட்டி எமி சாதாரண ஆள் இல்லை.. நாடு புகழும் குழந்தை கதைகள் எழுதும் எழுத்தாளர்எமியோடு அப்பா அம்மாவும் மாப்பிளை நிக்கை பூரணமா நம்புறாங்கஎங்க பொண்ணு காணம போயிட்டா மாப்பிளை நாம சேர்ந்து   தேடிக்கண்டுபிடிக்கலாம்ன்னு  சொல்றாங்க

 எப்படி எப்படியோ போலிஸ் விசாரிக்குதுபய ஒரே பல்லவியை பாடுறான்.. மீடியா மூலமா  உருக்கமான வேண்டுகோள் வைக்குறாங்க.

 சரி நிக்கோடு ஆபிசை செக் பண்ணலாம்ன்னு போனா.. அங்க ஒரு புக் ஷெல்ப்புல செவப்புகலர்ல லேஸ் வச்ச சிவப்பு கலர்  ஜட்டி ஒன்னு கிடக்குது ? அது யாருதுன்னு கேட்டா மழுப்பலா பதில் வருது

திடிர்ன்னு காணம போன பொண்டாட்டி என்னவானா? என்று கேள்வியை முன்னோக்கி செல்லும்  இந்த திரைப்படம்  பல பல திடிர் திருப்பங்களை முன்னெடுத்து செல்லுதுபொண்டாட்டி தலையை நாயகன் ஆசையாக தடவிக்கிட்டே சொல்லறான்எனக்கு ஒரு ஆசை.. என் பொண்டாட்டி தலைக்குள்ள இருக்கற மூளையில பொதஞ்சி கிடைக்கற விஷயங்களை தெரிஞ்சிக்கனும்ன்னு ஆசை என்கின்றான்..

எல்லா திருமணங்களும் திருமம்ன முடிந்த உடன் மூன்று கேள்விகளை முன் வைக்கின்றன
என்ன நினைக்கறே..?? எப்படி பீல் பண்ணறே?? நாம் ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணபோறோம்?? இந்த கேள்விகளுக்கான விடையை எந்த தம்பதியும் 100 சதவிகிதம் சரியாக சொல்ல முடியாது. படத்தின் ஆரம்பத்தில் வைக்கப்பட்ட இந்த கேள்விகள் படம் முடியும் போது நம்மிடமே கேட்க வைத்து இருப்பதுதான் இயக்குனரின் புத்திசாலிதனம்.
இந்த படத்தை இயக்குனர் டேவிட் பிலின்சர் இயக்கி இருக்கின்றார்..ஏலியன்3.பேனிக்ரூம், ஜோடியாக், த கேர்ள் இன் டிராகன் டாட்டு போன்ற பரபரப்பான திரைப்படங்களை இயக்கியவர்

2012 ஜிலியன் பிளை  என்ற பெண்மணி கான் கேள் என்ற பெயரில் நாவலாக  இந்த திரைப்டபத்தின் கதை வெளியிட்டார்… நாவல் வெளி வந்து சக்கை போடு போட்ட திரைப்படம் இது என்பது குறிப்பிடதக்கது.. 5வது வருஷ கல்யாண நாளுக்கு பொண்டாட்டிக்கு விஷ் செய்யலாம் என்று வீட்டுக்கு போனால் பொண்டாட்டியை கானோம்.. இதுதான் படத்தின் ஒன்லைன்

இந்த படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஜீலியன் பிளைய்ன்நல்ல வேளை இந்த கதையை பொம்பளை எழுதி இருக்காங்க.. ஒரு ஆம்பளை எழுதினாஅவ்வளவுதான் ஆணாதிக்க திமிர்பெண்மையை அசிங்க படுத்திவிட்டான் என்று சொல்லி போராடி கடையடைப்பு நடத்தி இருப்பார்கள்


20 சென்டியூரி பாக்ஸ்   நாவலோட ரைட்ஸ் வாங்கி  இயக்குனர் டேவிட் பின்சர் கிட்ட படத்தை இயக்கும் பொறுப்பை  ஒப்படைச்சாங்க..
 இது என்ன  பெரும்  தலைவலியா போச்சின்னு  அந்த அம்மா ஜீலிய்ன் பிளையை கூப்பிட்டு இந்த திரைப்படத்துக்கு திரைக்கதை எழுத வச்சார் இயக்குனர்…
படத்தோட தலைப்புக்கு  ரொம்ப  எல்லாம் தலையை உடைச்சிக்கலை.. நாவலோட தலைப்பையே படத்துக்கும் தலைப்பா வச்சிட்டார்..

 படத்தோட டிரைலர்.========
படக்குழுவினர் விபரம்
Directed by David Fincher
Produced by
Leslie Dixon
Bruna Papandrea
Reese Witherspoon
Ceán Chaffin
Screenplay by Gillian Flynn
Based on Gone Girl 
by Gillian Flynn
Starring
Ben Affleck
Rosamund Pike
Neil Patrick Harris
Tyler Perry
Carrie Coon
Music by
Trent Reznor
Atticus Ross
Cinematography Jeff Cronenweth
Edited by Kirk Baxter
Production
company
Regency Enterprises
Pacific Standard
Distributed by 20th Century Fox
Release dates
September 26, 2014 (NYFF)
October 3, 2014 (United States)
Running time
149 minutes[2]
Country United States
Language English
Budget $61 million
Box office $365.3 million
=========

 பைன்ல் கிக்.

பொதுவா ஊர் உலகத்துக்காக  சிலர் வாழ்க்கை வாழுவாங்க.. வீட்டுல ங்கோத்தா கொம்மான்னு நாளோரு மேனியும் பொழுதொரு மேனியா சண்டை நடக்கும்.,.. ஆனா வெளியில ஐடியல் கப்பில்ன்னு சொல்லுவாங்க

அது போல சமுகம் சில பிம்பங்களை வைத்து இருக்கும் சில நேரத்தில் அந்த சமுகம்  கொடுக்கற பிம்பத்தை கேள்வி மயிரே கேட்காம ஏத்துக்குவோம் இல்லையா.? அதுதான் இந்த படத்துல கேள்விகளா  எழுப்பப்படுது..

படத்தை பத்தி நிறைய  சொல்லலாம் ஆனால்  அது படத்தின் சஸ்பென்சை பாதிக்கும் என்பதால் அதை சொல்ல விரும்பவில்லை

2.30 மணி நேரம் ஓடம் இந்த படம் பல பதிரும்பங்களை அதிர்ச்சியையும் கொடுக்கும் திரைப்படம். படம் முடியும் போது நல்ல திரில்லர் திரைப்டபம் பார்த்த உணர்வினை  இந்த  திரைப்படம்  கொடுக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
ரொம்ப அற்புதமான திரில்லர்.

 டோன்ட் மிஸ்  இட்.

திரில்லர் விரும்பிகள்  அவசியம் பார்க்க வேண்டிய  திரைப்படம் அது மட்டுமல்ல இந்த திரைப்படம்  எழுப்பும் கேள்விகளும் அதிர்வுகளும் அதிகம்.. ஒரு பெண் நினைத்தால்  ஒருவனை ஈசியாக அவனை கேரக்டர் அசாசிநேஷன் செய்யலாம் என்பதை இந்த திரைப்படம் அருமையாக விவரிக்கின்றது.

திரில்லர் ரசிகர்கள் அவசியம் மிஸ் பண்ணாமல் பார்த்தே தீர வேண்டிய திரில்லர் திரைப்படம்.. GORN GIRL..

வீடியோ விமர்சனம்.

========
====indrajith indrajith

அது நாய் இல்லைங்க... பூனை.  நிக் 'what have we done to each other?'னு தான் கேப்பான்.. அப்பறம் அந்த படம் பேரு 'the girl with the dragon tattoo'... உங்கள் ஆழமான விமர்சனத்தில் இதெல்லாம் சின்ன பிழையாக பட்டது... நன்றி வணக்கம்...
========

Jackie Cinemas1 hour ago

+indrajith indrajith  தவறுகளை சுட்டிக்காட்டிய உங்களுக்கு என் நன்றிகள்..   நாய் என்பது தவறு… வீடியோ அப்லோட்  செய்து விட்டு .. ஒரு வாரத்துக்கு பிறகு  படம் பார்த்த போது தவறு  நடந்து விட்டது தெரிந்தது… மீண்டும்   இது போன்ற தவறுகளில் கவனமாய் இருக்கின்றேன்… நானே
ஷுட் செய்து.. நானே எடிட்  செய்து வலையேற்றும்
காரணத்தால் சில வற்றில்  சில பிரச்சனைகள் ஏற்ப்பட்டு
விடுகின்றது..  மீண்டும் மிக்க   நன்றி.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. விமர்சனம் அருமை அண்ணா...
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner