அடுத்த வினாடி ஒளித்து வைத்து இருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்… காலையிலேயே நண்பர்களின் புத்தாண்டு வாழ்த்துகளால் இனிதானது..
நண்பர் ஜெகன் காலையிலேயே சந்திக்கலாம் என்று சொன்னார். மதியம் வரை ஆளைக்கானோம் என்பதால் போன் செய்தேன்…
பாலகுமாரன் வீட்டில் இருப்பதாகவும் கொஞ்சம் நேரத்தில் வருகின்றேன் என்று சொன்னார்..மனைவி பிள்ளையோடு வெளியே செல்ல வேண்டும் என்பதால் அவரை வாரன் தெருவில் சந்தித்து விட்டு செல்லலாம் என்று பாலகுமாரன் வீட்டு வாசலுக்கு வந்து அவருக்கு போன் அடித்தேன் .
. வீட்டில் பூஜை நடக்கின்றது ஜாக்கி … வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போங்க என்றார்… நான் குடும்பத்தினரோடு சென்றேன்… சூர்யா , சாந்தாம்மா மற்றும் ஜெகன் வரவேற்றார்கள்… நான் கூச்சத்தில் நெளிந்தேன்….
சில வருடங்களுக்கு முன் பாலகுமாரனுடைய பிறந்தநாளுக்கு நண்பர் ஜெகன் மூலம் சென்றேன்.. அதன்பின் இப்போதுதான்…
எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் ஆசி பெற்றேன்…
சென்னையில் செக்யூரிட்டி வேலைக்கு வந்து தோற்று போய் பெண்களை ஹா என்று பார்த்தவனை, தன் எழுத்தின் மூலம் தன்னம்பிக்கை கொடுத்ததோடு… உன் முன்னேற்றத்தை உற்று பார்… உன் தொழிலை நேசி…பெண் தானாக உன் திறமை பார்த்து வருவாள் என்று எழுத்துக்களில் எழுதினார்… நான் செய்த எல்லா தொழிலையும் நேசித்தேன்… வாழ்க்கை வசப்பட்டது.
எல்லாவற்றையும் விட சாந்தாம்மா என் அம்மா போல உரிமையுடன் என் மனைவி பெயர் சொல்லி அழைத்தது எங்களை சாப்பிட வைத்ததும் மனதுக்கு நிறைவாய் இருந்தது..
யோகி ராம்சுரத்குமார் விக்ரஹத்துக்கு மலர் தூவி நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினேன்… சாப்பிட சொன்னார்கள்…
தலைவாழை இலையில் சாப்பாடு போட்டடார்கள்… வயிறு நிறைய சுவையான உணவு.. சாப்பாடு பறிமாறியவர் மிகஅழகாக பறிமாறினார்… வயிறு நிறைந்தது… புத்தாண்டின் முதல் நாளில் நான் வாழ்வில் உருப்பட, மறைமுகமாக தன் எழுத்தின் மூலம் புத்திமதி சொன்ன எழுத்தாளன் வீட்டில் புத்தாண்டின் முதல்நாளில் மதிய சாப்பாடு …
வயிறு நிறைய எழுந்தோம்…
கமலம்மா யாழினியிடம் என்ன படிக்கறே என்று விசாரித்தார்கள்..
சாந்தாம்மா யாழினிக்கு ஜெம்ஸ் பாக்கெட்டும் பழங்களும் கொடுத்தார்கள்.
சூர்யா ராம்சுரத்குமார் காலண்டர் கொடுத்தான்.. அவன் வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தினான்...நான் ஜெகன் சூர்யாவோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்..
மனநிறைவாய் கிளம்பினோம்.
பாலகுமாரனோடு அதிக பட்சம் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் நான் பேசியதில்லை.
பாலகுமாரன் மீது ஆயிரம் விமர்சனங்கள் சமீபத்தில்…
ஆதரியுங்கள், திட்டுங்கள், நீரூபியுங்கள், அவருடைய பல கருத்துக்களில் நான் முரண்பட்டு இருக்கின்றேன்… அது வேறு விஷயம்.. ஆனால் காலை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டால் குற்றமில்லை புத்தகத்தில் சொல்லித்தந்தவன் அவன்.
பாலகுமாரனால் உந்தப்பட்டு நல்ல நிலைமைக்கு வந்து விட்டு... ஐ ஹேட் பாலகுமாரன் என்று இன்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்… ஆனால் பாலகுமாரன் எழுத்தால் நான் தெளிவு பெற்றேன் என்று வளர்ந்த பிறகு சொல்ல சிலர் கூச்சப்படலாம்..எனக்கு அப்படி எந்த கூச்சமும் இல்லை…
ஒருவனால் வளர்ந்து விட்டு நான் சுயம்பு என்று பீத்திக்கொள்ளும் சூட்சமம் எனக்கு தெரியவில்லை என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்...பாலகுமாரன் கொடுஞ்செயல் புரிந்தவனாக சித்தரிக்கப்பட்டாலும் அந்த எழுந்தே என்னை செழுமைபடுத்தியது என்று சொல்லுவேன்.
மறைந்த விகடன் ஆசிரியர் சொன்னது போல படைப்பாளியை பற்றி எனக்கு கவலை இல்லை படைப்புதான் முக்கியம்.
அந்த எழுத்து என்னை உருப்பட வைத்தது என்று எப்போதும் சொல்லுவேன்… கோவத்தை குறைத்து வெற்றியை நோக்கி பயணிக்கவைத்து.. ங்கோத்தா கொம்மா என்று எல்லாத்துக்கும் எகிறி குதித்தவனை அமைதிபடுத்தியது.. அவர் எழுத்து இல்லாமலும் நான் கண்டிப்பாக முன்னேறி இருப்பேன்..ஆனால் கொஞ்சம் காலம் தள்ளி போய் இருக்கலாம்..
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டுமல்லவா…
தன் மகள் போல என் மனைவியை அறிமுகப்படுத்தாமலே உரிமையாய் பெயர் சொல்லி அழைத்த சாந்தாம்மாவுக்கு என் நன்றியும் அன்பும்.
நிகழ்வை சாத்தியப்படுத்திய ஜெகனுக்கு என் அன்பும் நன்றியும்….
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
02/01/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நினைவுகள் சுகமானவை...
ReplyDelete