QUEEN-2014/குயின் சினிமா விமர்சனம்



வட இந்தியாவில் ரொம்பவே கொண்டாடி தீர்த்த படம்.... பெரிய ஆளுமைகள் தயாரிப்பில் உருவான திரைப்படம்.. ஆங்கில பத்திரிக்கைகள் அருமை பெருமை என்று எழுதி தள்ளிய திரைப்படம்...இயக்குனர் அனுராக் கஷ்யாய் தயாரித்த படம்,  திரைப்படத்தின் நாயகி கங்கனாராவத்தும்  சேர்ந்து வசனம் எழுதிய திரைப்படம்... 

அனுராக் கஷ்யப்பே உட்கார்ந்து எடிட் செய்த படம் என்று  குயின் படத்தை பற்றி ஏகப்பட்ட தகவல்கள்.... அப்படி  கொண்டாடிய குயின் படத்தை நேற்றுதான் பார்த்தேன்.... 

பொதுவாக டெல்லி  பெண் கற்பழிப்பு பிரச்சனைக்கு பிறகு பெண் சுதந்திரம் கட்டுப்பெட்டிதனம் குறித்து நிறைய கேள்விகள்  அந்த பிரச்சனையோடு  சம்பந்த பட்ட விவாதங்கள் நிறையவே நாடு முழுவதும்  எழுந்தன. 

பெண்  அணுக்கு அடங்கியவளா-? ஆனால் அப்படித்தான் இந்திய பண்பாடு இன்று வரை  சொல்லி வருகின்றது... பெண் வேலைக்கு போனலும் வீட்டு வேலை செய்ய வேண்டும்.... ஆண் பேப்பர்  படித்துக்கொண்டு டீவி பார்க்க வேண்டும் என்று காலம் காலமாக சொல்லி வருகின்றது... 

மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் வேண்டுமானால் கொஞ்சமாக அவர்கள்  சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும்... ஆனால் இந்திய  கிராம புறங்களில்  இன்னும் அதே பல்லவிதான்..

 கடந்த  தலைமுறை அப்பாக்கள் படிப்பறிவோடு கட்டுப்பெட்டி தனங்களில் இருந்து வெளிவந்து.. ஒரு ஆண் பிள்ளைக்கு இருக்கும் அதே சுதந்திரத்தை  தன் பெண்ணுக்கு வழங்கினர்... சுதந்திரம் என்றால்  அவுத்து  போட்டு அலைய வேண்டும் என்பது இல்லை.. அவள் விருப்பங்கள் அபிலாஷைகள் இப்போததான் கேட்கப்படுகின்றன.. 

கல்யாணத்தில் அவள் சம்மதம், அவளுடைய விருப்பங்கள்  என்னவென்று  காது கொடுத்து கேட்கப்படுகின்றன... ஆனால் 20 வருடம் முன்பு பொட்டக்கழுதை  உனக்கு என்ன தெரியும்? உனக்கு என்ன தெரியும்? என்று திட்டி திட்டி மூளை மழுங்கடித்து விட்டார்கள்...


இப்போதுதன் தலை சிலும்பி வெளியே  வர ஆரம்பித்து இருக்கின்றார்கள்... கடைசி வரை வாழ போற பிள்ளை ... வாழப்போற அவளுக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் வேண்டாமா? என்று தகப்பன் ஸ்தானத்தில் இருக்கின்றவர்கள் யோசிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

 கல்யாணத்துக்கு பிறகு காதல் சாத்தியமே இல்லை என்று பொய் பேசிக்கொண்டு இருக்கும் சமுகத்தில்  திக் விஜய சிங் காதல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி பெரிய விவாதங்களை   நாடு முழுவதும் விவாதித்துக்கொண்டு இருக்கின்றது...

குயின்....

இரண்டு பேர் தீவிரமாக  காதலிக்கின்றார்கள்.... திருமணத்துக்கு  ஒரு நாள் இருக்கும் நிலையில்...  காதலன்  சொல்கின்றான்.... நான் லண்டன் எல்லாம் போய் வந்து இருக்கேன்..நீ மாறவேயில்லை... அதனால இது சரிப்படாது...  நமக்கு நடக்க இருக்கற கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு சொல்லறான்.

 அவ அழுது ஆர்பாட்டம் பண்ணறா...புரிஞ்சிக்கோன்னு கெஞ்சி பார்க்கறா.. ஆனாலும் அவன் மசியலை... கல்யாணம் நின்னடுச்சி... சரி அவன்தான் வேணாம்ன்னு  சொல்லிட்டான்.. அதுக்காக கல்யாணத்துக்கு செஞ்ச ரசகுல்லாவை  டேஸ்ட் பார்க்க கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? அந்த பொண்ணு என்ன பண்ணுறா  தெரியுமா? ரசகுல்லா சாப்பிடாம.. கல்யாணம் முடிஞ்சா ஹானிமூன் போக  வாங்கி வச்சி இருந்த டிக்கெட்டு சும்மா இருக்குதேன்னுட்டு...   மைன்ட் ரிலாக்ஸ் ஆக...   புக் பண்ணி வச்சி இருக்கற ஹனிமூன்  டிக்கெட்டை எடுத்துக்கிட்டு தனியா  பாரிஸ் போறா., 

 கட்டுப்பெட்டி தனமான, கன்னிதன்மை கெடாத இந்திய பெண், என்ன  என்ன கலாச்சரா மாற்றங்களை  எதிர்கொள்கின்றாள் என்பது கதை...

ரைட் குயின் படம் பார்க்கும் போது எனக்கு  இரண்டு தமிழ் படங்கள் அப்படியே நினைவுக்கு வந்தன.. 


 இந்த படம்  பார்க்கும்  போது.. கிராமத்தில் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டு  கல்யாணத்துக்கு தயாராகும் இரண்டு பேர்... கல்யாணம் தற்போது வேண்டாம் என்று தள்ளிப்போட ஆயிரம் பொய் காரணம் சொல்லி நடக்க இருக்கும்  கல்யாணத்தை நிறுத்துகின்றார்கள்... ஆனால் திரும்பவும் சென்னையில்  சந்திக்கும் பொது மனது தவியாய் தவித்து இரண்டு பேரும் எப்படி சேருகின்றார்கள் என்பதுதான் அழகம் பெருமாய் இயக்கிய டும் டும் படத்தின் கதை... அப்படியே நினைவுக்கு வந்து படம்  ஓடும் போது அதுவும் ஓடிக்கொண்டு இருந்தது.

 அனுராக்  கஷ்யப்புக்கு தமிழ் படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்... தமிழ் சினிமா கலைஞர்கள்  நல்ல கதை சொல்லிங்க...   ஆனா இதுவா   அதுவான்னு ஷாட் வைக்கும் போது கொழம்பிடுவாங்க.... 

உதாரணத்துக்கு  நாயகி சிகரேட் பிடிக்கும் காட்சி  வெச்ச...  அண்ணா...  நம்ம  லேடிஸ் ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்குவாங்கன்னு ஒரு கேள்வியை ஏதாவது ஒரு அல்லக்கை கேட்டா.. ???அவ்வளவுதான்.... அவன் சொல்றது லாஜிக்தானேன்னு மாத்தி மாத்தி எடுத்து கடைசியா  படத்தை திரிசங்கு சொர்கத்துல தொங்க விட்டுவானுங்க...

ரைட்  விஷயத்துக்கு வரேன்...

இனிமே இப்ப எழுதறத எல்லாமே என் சொந்த கற்பனை...

  தமிழ் டிவிடி.,.. அதுவும் வெற்றி பெற்ற  சூப்பர் டூப்பர் ஹிட்  படத்தோட டிவிடி எடுத்து வாங்கப்பா... சொல்ல.. அதை எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்க??

யூடிவி தனஞ்சயென் ஒருத்தர் இங்கிலிஷ்ல  தமிழ்  சினிமா  வரலாறு புக் எழுதி இருக்காரு... அதுல  சூப்பர் டூப்பர் ஹீட் படங்களை வரிசை படுத்தி இருப்பார்..  அதுல இருந்து  எடுத்து வாங்க.

இல்லை  தமிழ்ல  ஆண் பெண் நட்பு பற்றி பேசிய படம் இதுதான் சொல்ல யாராவது விக்ரமன் இயக்கி பெரும்  வெற்றி பெற்ற  சூப்பர் ஹீட் படமான புது வசந்தம் படத்தோட   டிவிடியை  கொடுத்து இருக்கலாம்...

காதலிச்ச சோகம் மனசு புல்லா வீட்டை விட்டு  சென்னைக்கு சித்தாரா கிளம்பி வர... குமரிமுத்துக்கிட்டு இருந்து  காப்பாத்தி நாலு பேர் ரூம்ல தங்க வைப்பாங்க.. அவுங்க இசை கலைஞர்கள் நல்ல வாய்ப்புக்காக ஏங்கி கிட்டு இருப்பாங்க...  கடைசியா அவுங்க காதலன் கிட்ட முரன் பட்டு  இருக்கும் போது சுரேஷ் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு  நண்பர்கள் பாடும் பாட்டு  நிகழ்ச்சிக்கு போய் கலந்துப்பாங்க. 

டும் டும் டும் , மற்றும் புது வசந்தம் படத்தின்  மிக்சர் வெர்ஷன்தான் குயின் அப்படின்னு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பாரம் கணக்கா நான் எழுதினா... அது  நகைப்பு.... பட்  இது போல நிறைய  இன்சிடென்ட்  நிறைய நடக்குது...

 பட் படம் பார்க்கும் போது அந்த படங்களின் நியாபங்கள் வந்து இருந்திச்சி.. அல்லது படத்தோட  டைரக்டர் விகாஸ்  பாயிக்கே . அந்த மாதிரி ஒரு பீல் வந்து இருக்கலாம்..  மேல சொன்னது எல்லாம் சும்மா கற்பனைதான்..


 படத்தோட கேமராமேன் பாபி வேற முதல் ஷெட்யூல்ல இறந்து போயிடுறார்.... கொடுமைங்க... அவரோட நினைவுகளோடத்தான் படம்  தொடங்குது... 

இரண்டாம் பாதி களைகட்டுமு என்றாலும் இந்திய கட்டுபெட்டிதனங்களை மனதில் வத்தே காட்சிகள்  பின்னப்பட்டு இருக்கின்றன.
வெள்ளைக்காரன் செப் மீது காதல் இருப்பதை வெளிப்படையாக சொல்வது எல்லாம் அருமை...

இந்த படத்தோட  மெயின் கான்செப்ட் என்ன வென்றால்.... எந்த ஆண் உன்னை நிராகரித்தாலும்...  உலகம் அழிந்து விட்டது போல நினைத்து கதறி ஆர்பாட்டம் செய்யதே....  you will stand  in your own leG  என்பதைதான் குயின் படத்தை   பார்க்க வரும் பெண்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றது.


 படத்தை பாருங்கள்...
============

இப்ப படத்தோட டிரைலர்...


===========

 படக்குழுவினர் விபரம்


Directed by Vikas Bahl
Produced by Anurag Kashyap
Vikramaditya Motwane
Written by Anvita Dutt (dialogue)
Kangana Ranaut (dialogue) [1]
Screenplay by Vikas Bahl
Chaitally Parmar
Parveez Shaikh
Story by Vikas Bahl
Starring Kangana Ranaut
Rajkummar Rao
Lisa Haydon
Music by Amit Trivedi
Rupesh Kumar Ram
Cinematography Siddharth Diwan
Bobby Singh
Editing by Abhijit Kokate
Anurag Kashyap
Studio Phantom Films
Distributed by Viacom 18 Motion Pictures
Release dates
7 March 2014
Running time 146 minutes
Country India India
Language Hindi
Budget ₹12.5 crore

=========

பைனல் கிக்...

 இந்த் படம் பார்க்க வேண்டிய திரைப்படம்.. நல்ல மேக்கிங்.... கங்கனா ராவத்  நடிப்புல பின்னி இருக்கு... சில காட்சிகள் இயல்பை  மீறி திணிக்கப்பட்டு இருந்தாலும் சினிமா அப்படின்னறது பேன்டசி மீடியம்... அது எப்படி தத்ரூபமாக எடுத்தாலும்   அது நிழல்... அவ்வளவுதான்... சோ படத்தை கண்டிப்பா  பார்க்கலாம். படத்தோட மியூசிக் அருமை..  அது என்ன வென்று தெரியவில்லை சமீபகாலமாக நான் பார்க்கும் இந்தி படங்கள் எல்லாம் கல்யாண   வீடுகளில்  இருந்தே படம் ஆரம்பிக்கின்றது.....
ரோமான்ஸ்...
ஹிசிதோ பசி,
பேன்ட் பஜா பாரத்
குயின்
 போன்றவைகளை சொல்லாம்..


====
படத்தோட ரேட்டிங்..

 பத்துக்கு ஏழு.
========

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. Thanks, Jackie. I will add this to my list of movies to watch.

    ReplyDelete
  2. உடனடியா ஒத்துக்க முடில படத்தை.....அதைப்போல மறுக்கவும் முடில. ஆனா சந்தோசமா இரு என்பதை பார்ட்டி சரக்கு என்று தீர்மானித்து திணிப்பதை எப்படி சொல்ல? இங்க்லிஸ் விங்க்லிஷ்ம் ஒரு பெண்ணின் உணர்வுகளை காட்டியது ...ஆனால் இவ்வளவு ஆக்வேர்டாக தோண வில்லை.இதில் தோணுகிறது.போஸ்டரில் எந்த வித உறுத்தலும் இல்லாததால் மகனுடன் சென்றிருந்தேன்...ஏழு வயது மகன் படம் ஒரே 'ங்கப்பு' என்று சொன்னத எப்படி எடுக்க என்று தெரியவில்லை,

    இன்னும் இந்தப்படத்தை ஏத்துக்கவும் முடில..ஒதுக்கவும் முடில..அதுதான் இதோட ப்ளஸ்?

    ReplyDelete
  3. முதல் நாள் ஜெயம் ரவியோட படத்துக்குன்னு போய் அது ரிலீஸ் ஆகாததால் இந்தப் படம் பார்த்தோம். பல இடங்களில் வசனங்கள் கொஞ்சம் அப்படி இப்படியாக இருந்தது என்றாலும் மக்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner