DRISHYAM-2013/ உலக சினிமா/மலையாளம்/திரிஷ்யம்/ சராசரி தகப்பனின் விவேகம்.




50 கோடி ரூபாயை   மலையாள திரையுலகில் தொடுவது  என்பது..... ஏழு கடல் ஏழு மலைதாண்டி இருக்கும் கூண்டின் உள்ளே இருக்கும் கிளியிடம்  கோச்சடையான்  திரைப்படம்  எப்போது ரிலிஸ் ஆகும் என்று ஜோசியம் கேட்பதற்கு சமம்...  மலையாள திரையுலகில் 50 கோடி கலெக்ஷனை  அனாயாசமாக தொட்ட   முதல் திரைப்படம்.




 லால்  சேட்டன் மோகன் லாலின் நடிப்பை  போற்றி புகழ்ந்த படம்.
இந்திய திரையுலகினரில் சாதிக்க நினைக்கும் அத்தனை பேரும் தியேட்டரில் போய் பார்த்த படம்...

சென்ன சத்தியம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய படம்... முக்கியமாக ஒரு காட்சி  திரையிட்டாலும்   எல்லா ஷோவும் ஹவுஸ்புல் ஆனா திரைப்படம்...
திரிஷ்யம் படத்தை பார்த்து விட்டு கமல்  அந்த படத்தை   எடுக்க நினைக்க... படத்தின் ரைட்ஸ்  வாங்கி வைத்து இருந்த ஸ்ரீபிரியா கமலை  இயக்க ஆசைப்பட்டார்  என்று ஏதோ ஒரு வலைதளத்தில் படித்த நினைவு...

திரிஷ்யம்  தமிழ் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக  மீனா கேரக்டரில் நடிக்க  இதுவரை ஜோடி சேராத  நதியாவை   நடிக்க வைக்கலாம் என்று  செய்தியை கிளப்பிய படம்...

ஓத்தா படம் ஜெயிச்சி தாறுமாற ஓடிக்கிட்டு இருக்கா.... எந்த  படத்தின் காப்பி இது என்று தன் அறிவுஜீவி தனத்தை  நீருபிக்க நாயாய் பேயாய்  அலைந்துக்கொண்டு இருந்த கூட்டம்  ஒரு புறம்...

அதே கண்டு பிடித்து விட்டேன் என்று  சஸ்பெக்ட்டிங் எக்ஸ் என்ற   ஜப்பானிய நாவலை  அட்சரம்பிசகாமல் அடித்து விட்டார்கள்  என்று கூவிய படம்.

 இப்படி இந்த  படத்தை பற்றி நிறைய பேச்சுகள்.... ஆனால் 150 வது நாளை இந்தி திரைப்படம்  தொட்டு விட்டது... மோகன்லாலுக்கு இந்தனை வருட சினிமா கேரியரில்  ஒரு மரியாதையான  வெற்றியை பெற்றுக்கொடுத்தது இந்த திரைப்படம்தான்... எல்லா  மொழியிலும் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய நான் நீ என்று போட்டி நடக்கின்றது...
 சரி படத்தை பத்தி பார்ப்போம்....

சென்னையில் இருந்து கும்பகோணம்  போறிங்க.... அதுவும்.. பாண்டி  கடலூர் சிதம்பரம் , மாயவரம் ரோட்ல போறிங்க....

கடலூர் தாண்டற வரைக்கு ஒன்னும் இருக்காது...  புவனகிரிக்கிட்ட இருந்து அந்த காட்சிகள் ஆரம்பிக்கும்  சாலையோரம் இருக்கும்  வாய்கால்களில்... ஆண்களும்  பெண்களும் குளித்துக்கொண்டு இருப்பார்கள்...காவிரி  பாயும் வழிகளிலும் சரி.. அது  கிளைநதியாக மகசூல் செய்ய  செல்லும் வழியாக இருந்தாலும் சரி.. அந்த  வாய்கால்களில் பெண்கள் தங்கள் அழுக்கு துணிகளை துவைத்து விட்டு  குளித்து விட்டு வருவார்கள்.... ஆனால் இப்போது அப்படி குளிக்க   செல்ல  வேண்டாம் என்றுதான்  சொல்ல வேண்டி இருக்கின்றது...  உடை மாற்றும் போது ஏதாவது ஒரு கணத்தை  மூள் செடி மறைவில் இருந்து செல்போன் கேமராவில் வீடியோவாக அல்லது போட்டோவாக  சிறைபடுத்தி அந்த பெண்ணிடம் காட்டி  தங்கள் இச்சைக்கு பயண்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 10க்கு மேற்பட்ட வீடியோக்கள் வலையேற்ற படுகின்றன...  இதில் காதலன் கேட்டான் என்று   தாங்கள் குளிக்கும் பாத்ரூமில்   அந்த பெண்ணே செல்போன் கேமரா வைத்து படம் எடுத்து  காதலனிடம் கொடுக்க... அது  அங்க சுற்றி இங்கே சுற்றி    வலையேறி  விடுகின்றது என்பது  தனிக்கதை.

கேமரா செல்போன் வந்த பிறகு... யாருடைய அந்தரங்கமும் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று ஆகி  விட்டது.... இது போன்ற பிரச்சனையை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று ஆகி விட்டது... அப்படி ஒரு நிலைமை வந்தால் பெற்றோரிடம் சொல்லி  போலிஸ் காம்ளெயின்ட் கொடுப்பதுதான்  சிறந்த வழி.



 இந்த  திரிஷ்யம் மலையாள படமும் அப்படி பட்ட சப்ஜெக்ட்டைதான் பேசுகின்றது...
  நாலாவது படிச்ச மோகன்லாலை பத்தாவது பெயில் ஆனா மீனா திருமணம் செய்துக்கொள்ள அதன்  விளைவாக மோகன்லாலுக்கு இரண்டு பெண் குழந்தைகள்... ஒன்று வயதுக்கு வந்த பெண்...  கடைக்குட்டி சின்னவள்....

சின்ன கிராமத்தில் 5 ஏக்கர் தனி வீட்டில் மனைவி பிள்ளைகளோடு வாழ்பவன். ஊரில் கேபிள் டிவி வைத்து நடத்துகின்றான்... இரவு முழுவதும் கேபிள் டிவி  அலுவலகத்தில் இருக்கின்றான்...

ஏதாவது மசாலா கில்மா படம்  பார்த் ழ மூட் வந்தால் கேபிள் டீவி ஆபிசில் இருந்து வீட்டுக்கு போய்  மனைவியை சீண்டி நைட்டி அவிழ்த்து ....  இயங்கி, வியர்வையோடு  தூங்கும் சராசரி குடும்பத்ததலைவன்....

மனைவிக்கு வானில் ஏறி வைகுண்டம் போக வேண்டும் என்று ஆசை.... கூரை ஏறி கோழி பிடித்தாலும் மனதுக்கு  நிறைவாக   பிடிக்க வேண்டும் என்று நியாயமாக ஆசை கொண்டவன்....

அமைதியாக வாழ்ந்து வருபவன் வீட்டில் ஒரு ஐஜி மகனால் பிரச்சனை வருகின்றது.. அது அந்த குடும்பத்தின் நிம்மதியை  குலைத்து விடுகின்றது...  அது என்ன என்று திரைப்படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

மோகன் லால்  பின்னுகின்றார்... சான்சே இல்லை.... அசத்துகின்றார்... சினிமா மீது பைத்தியம் என்பதை அடிக்கடி லால் அமரும் இடங்களில் எல்லாம் டிவி இருப்பது போன் ற காட்சி  அமைப்பு அந்த கேரக்டரின் நம்பகதன்மைக்கு உதவுகின்றன.
மீனா... நடிப்பில் குறை  சொல்ல  முடியாது..

ஆனால்  ரெண்டு சுற்று பெருத்து இருக்கின்றார்....  யோசிக்கவே கூடாது என்று நினைத்தாலும்  தில்லான தில்லான பாட்டில்.. இடமும் வலமும் ஆடி தமிழகத்து இளைஞர்களை சேலம் சித்த வைத்திய சாலை தாத்தாவை பார்க்க  செல்லமா என்று  யோசிக்க  வைத்த காட்சிகைள  நினைவு அடுக்குகளில் இருந்து கடாசி தொலைய மனது  இடம் கொடுக்கவில்லை....

 லால்  மீனா  இரண்டு பேரும் படுக்கையில்  இருக்கையில்....மூட் வந்த உடன் மீனா நைட்டியில் கை வைக்கையில்... மீனா ஆரம்பிப்பார்...   ஜீப்பை விற்று விட்டு  மாருதி  வாங்கலாம் என்று சொல்லும் போது... கணவர்களாக படம் பார்த்துக்கொண்டு இருக்கும் அத்தனை கணவர்களுக்கு பீதி ஏற்படுத்தும் காட்சி....

 படத்தோட இன்டர்வெல் பிளாக் மற்றும்  கிளைமாக்ஸ் செமை.... முக்கியமாக இண்டர்வெல் பிளாக்  ரொம்ப நாளைக்கு பிறகு  இந்த படத்துல செமையா இருந்துச்சி..
  திரிஷ்யம் என்றால் காட்சி என்று பொருள்...

 இரண்டாம்   பாகத்தில்  நடக்கும் இண்வெஸ்ட்டிகேஷன்  அருமை.. எல்லா கேரக்டர்களும் கனக்கச்சிதம்...

  திரிஷ்யம் திரைப்படம்.  சஸ்பெக்ட் எக்ஸ் திரைப்படத்தின் காப்பி என்று சொல்கின்றார்கள்.. ஈ  அடிச்சான்  காப்பியை தான் காப்பி என்று சொல்ல  முடியும்... சூது கவ்வும் திரைப்படத்தில்  நிறைய படத்தின் சின்ன சின்ன வி ஷயங்களை பயண்படுத்தி இருப்பார்கள்..  முதன் முதலில்  ஐந்து கொள்கைகள்.... ஹெட் ஹன்டர்ஸ் படத்தில் ஹீரோ பேசும் வசனத்தை   அதை அப்படியே  தமிழ் சூழலுக்கு ஏற்றது போல  மாற்றி இருப்பார்கள்... அதே போல  அந்த சேதுபதியில் கற்பனை பெண்  அது  ஜலிலோ ஜிம்கானா படத்தில் இருந்து எடுத்த  காட்சி.. பட் இதுதான் இன்ஸ்பிரேஷன்... அதனால் படம் பார்க்காமல்  என்னால்   திருஷ்யம் படம் காப்பியா இல்லையா என்பதை சொல்ல முடியாது...

ரைட் திரிஷ்யம் படத்தின்  கிளைமாக்ஸ் பார்க்கும் போது  ஹாலிவும் படத்தின் கிளைமாக்ஸ் நினைவுக்கு வந்தது..... அது எந்த படம் என்று  சொன்னால்  உங்களுக்கு ஒரு  பொக்கே.. காரணம்.... அந்த படத்தின் கிளைமாக்ஸ் சற்று மாற்றி அமைத்தால் இந்த படத்தின்  கிளைமாக்ஸ் ஆக மாற்றலாம்... கண்டு பிடியுங்கள்.. ரெடி ஸ்டார்ட்.

Jeethu Joseph இயக்கத்தில் மை பாஸ் எனக்கு மிகவும்  பிடித்த படம்.. மெமரிஸ்.. அருமையான ஷாட் விஷூசல்  சஸ்பெக்ஸ் திரில்லர் திரைப்படம்.. ஒருவேளை ஈ ஆடிச்சான்  காப்பி திரைப்படமாக இல்லாமல் இன்ஸ்பிரேஷனில்   எடுத்து இருந்தால் ஜீத்து ஜோசப் படைப்புகளில் இந்த படம் ஒரு பெஞ்ச்மார்க் திரைப்படம் என்றால் அது மிகையில்லை.

 =======
படத்தின்  டிரைலர்..


===
படக்குழுவினர் விபரம்



Directed by Jeethu Joseph
Produced by Antony Perumbavoor
Written by Jeethu Joseph
Starring Mohanlal
Meena
Ansiba Hassan
Baby Esther
Kalabhavan Shajon
Asha Sarath
Siddique
Roshan Basheer
Music by Anil Johnson
Vinu Thomas
Cinematography Sujith Vaassudev
Editing by Ayoob Khan
Studio Aashirvad Cinemas
Distributed by Maxlab Entertainments
Release dates
19 December 2013 (Kerala)
20 December 2013(Tamil Nadu & Karnataka)
27 December 2013(Rest of India)
2 January 2014 (Overseas)
Running time 164 minutes
Country India
Language Malayalam



=============
பைனல் கிக்...


நிறைய  விருதுகள் மற்றும் பத்திரிக்கைகள் பாரட்டிய படம்...  ஒரு  மென்மையான  குடும்ப படமா  ஆரம்பிச்சி பர பரன்னு ஆக்ஷன் பிளாக் அதிகம் இல்லாம, ஸ்பீடா கொண்டு போக இந்த திரைப்படத்தின்  திரைக்கதை  உத்தி ஒரு உதாரணம்ன்னு  சொல்லலாம்...  கண்டிப்பாக  பார்த்தே தீரவேண்டிய திரைப்படம். கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய  கிரைம் திரில்லர் திரைப்படம்  

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

17 comments:

  1. suspect x படத்தின் முழுமையற்ற plot-அய் இங்கே படிக்கவும் http://en.wikipedia.org/wiki/Suspect_X. இந்த படம் 2:44 minutes ஆக இருந்தாலும் கொஞ்சகூடம் சலிப்பு தட்டவே இல்லை. போலீஸ்-க்கு சந்தேகம் வந்தவுடன் அவர்கள் ஏன் மோகன்லால் வீட்டில் மற்றும் அவரோட வீட்டு தோட்டத்தில் தேடவில்லை????? மற்றபடி,இந்த படத்தின் கான்செப்ட் excellent கான்செப்ட்.

    ReplyDelete
    Replies
    1. 1. The IG is doing private investigation , without leaking news
      2. No clue about missing person without clue how they dig 5 acre land !!!

      Delete
    2. தோண்டி இருந்தாலும் ஒண்ணும் கிடைசிருகாது அங்க!!! ஏன்னா மோகன்லால்தான் பொணத்த போலீஸ் ஸ்டேஷன்-க்கு ஷிப்டு பண்ணிடாரே!!!இத நான் யோசிக்க மறந்துட்டேன்.எப்டியாவது ஒரு லாஜிக் mistake-ஆவது கண்டுபிடிசிருலாம்-ன்னு பாத்த முடியல!!!! உங்களுக்கு எதாவது தெரிஞ்ச சொல்லுங்க

      Delete
    3. தோண்டி இருந்தாலும் ஒண்ணும் கிடைசிருகாது அங்க!!! ஏன்னா மோகன்லால்தான் பொணத்த போலீஸ் ஸ்டேஷன்-க்கு ஷிப்டு பண்ணிடாரே!!!இத நான் யோசிக்க மறந்துட்டேன்.எப்டியாவது ஒரு லாஜிக் mistake-ஆவது கண்டுபிடிசிருலாம்-ன்னு பாத்த முடியல!!!! உங்களுக்கு எதாவது தெரிஞ்ச சொல்லுங்க

      Delete
    4. empa ippadiya suspense-a pottu udaipa.

      Delete
  2. Love the Subtle writing skill of yours . Ungal pani thodara vaazhthkiren anna .

    ReplyDelete
  3. hello i know from this one copied. Watch perfect number korean movie. This is indianized perfect number. a math professor helps to neighbor family who killed a person accidentally. they made some ulta in this. hero well educated, killer wants police to found body very easy, hero doesnt have family etc etc. some of the ideas they used directly, confusion on murder date, create alibi for going out on the date of murder, guiding them to face investigation etc.

    ReplyDelete
  4. One more information - What people mentioned here as suspect X and Me mentioned as perfect number - both are same only.

    ReplyDelete
  5. வெகு நாட்களுக்குப்பின் மனதை கனக்கச் செய்த படம். முதல் முக்கால் மணி நேரம் வளவளா காட்சிகளாக இருந்தாலும் அவை கதைக்கு கனம் சேர்க்கிறது என்பதை படம் முடியும்போது அறிந்தேன்.

    ReplyDelete
  6. Jackie, In my opinion copying movie and making better than original will be the toughest toughest toughest task . See the histories of all holllywood movie remakes,EVIL DEAD,OLD BOY, THE RING , THE HILL HAVE EYES, TOTAL RECALL ( My exception of (EYE ON THE SKY ), NANPAN etc...so the word inspiration will be the good.

    ReplyDelete
  7. Eventhough it is copy or inspiration of suspect x/perfect number this movie was done well. Screen play and climax is amazing.

    ReplyDelete
  8. Hello Jacky, I love korean movies. Please introduce more korean crime/thriller/mystery/investigation movies. I would like to introduce '' gifted hands'' to you

    http://www.primewire.ag/watch-2740384-The-Gifted-Hands

    ReplyDelete
  9. http://www.primewire.ag/?country=South%20Korea
    http://www.primewire.ag/index.php?genre=Korean&page=1

    you can watch some good korean movies in this link

    ReplyDelete
  10. திருஷ்யம் - நல்ல படம்...

    காப்பியா, இன்ஸ்பிரேஷனா என்கிற விவாதத்தில், எதுவரை எடுத்து கையாள்வது காப்பியாகும் அல்லது எதுவரை எடுத்து கையாள்வது இன்ஸ்பிரேஷனாகும் என்பதை உணர்ந்து கொள்ள சுலபமான வழி -

    ஒரிஜினல் படத்தின் மொழியிலேயே டூப்ளிகேட் படத்தையும் ரிலீஸ் செய்யமுடியுமா என்பதை சுயகேள்வி கேட்டுக்கொண்டால் தெரியும்...

    உதாரணத்திற்கு, லூசியா(Lucia)-வின் இன்ஸ்பிரேஷன் இன்ஸெப்ஷன்(Inception) தான். ஆனாலும், லூசியாவை ஆங்கிலத்தில் தைரியமாக வெளியிடலாம் இல்லையா?

    இந்தி வரை வந்துவிட்ட கஜினி-யை ஏன் ஆங்கிலத்தில் வெளியிடமுடியாது? ஏனென்றால் அதுதான் காப்பி!

    "காரணம் ஆயிரம்" கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.in

    ReplyDelete
  11. நான் ரசித்துப் பார்த்த அருமையான படம் ஒன்று
    நன்றி அண்ணா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner