கண்ணில் பட்டவை-3 (07/05/2014)



மிகச்சரியா பதினாலு  மணி  நேரத்துக்கு முன்பாக முகநூலில்  சுரேஷ்குமார் என்பவர் அவர் கண் எதிரில்   நேற்று காலை நடந்த ஒரு கொலையை எழுதி இருந்தார்... அதை  படித்த உடன் மனம் அந்த சின்ன பையனின் மீது  மையல் கொண்டு இருந்தது..


இன்று காலை பதினோறு மணிவாக்கில், போடி மீனாட்சி தியேட்டர் பின்புறம் ஒரு தனியார் கம்ப்யூட்டர் கல்வி நிலையத்தில் வேலை பார்க்கும் பெண்ணை அதே இடத்தில் அவனது கனவன் இரக்கமே இல்லாமல் வெட்டி வீழ்த்திவிட்டான்.

அந்தப்பெண்ணுக்கு தன் கனவனை பிடிக்காமல் விவாகரத்து வேண்டி வின்னப்பித்து இருந்தார் என்றும் கனவன் விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்து தன்னுடன் தொடர்ந்து வாழும்படி அடிக்கடி வந்து அந்த பெண்ணை வேலைக்குச்செல்லும் சமயம் மன்றாடிக்கேட்டுக்கேட்டு தொல்லை செய்துவந்ததாகவும் அந்த தெரு அலைபேசி கடைக்காரர் தெரிவித்தார். 

இன்றைக்கும் அந்த பெண் நான்கு வயது மகனுடன் அலுவலகம் வரும்சமயம் பின்தொடர்ந்தே வந்து கேட்டிருக்கிறான், மறுக்கவே இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து ஒங்க, அவள் கையை மறிக்க, கையில் விழுந்தது முதல் வெட்டு, ஜடையை இழுத்து வைத்து பின்கழுத்தில் இரண்டாம் வெட்டு. சரிந்துவிழுந்ததும் அந்த நான்குவயது மகன் கதறியிருக்கிறான். வெட்டிய இவனும் தலையில் அடித்து அழுதிருக்கிறான். வேறு எவரும் அருகில் வந்து காப்பாற்ற முடியாத அளவு, தூரத்து கடைக்காரர் கத்திக்கொண்டே அங்கே ஓடிவருவதற்குள் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. 

சற்று நேரத்திற்கெல்லாம் காவலர்களும் விபத்துவாகனமும் வந்துவிட்டது ரத்தவெள்ளமாய் கிடந்த அவளை வாகனத்தில் ஏற்றுகிறார்கள். கனவனை கைது செய்கிறார்கள். ஏதும் அறியாமல் அழுதபடியே இருந்த சிறுவனை செய்வதறியாது குழம்பியவர்கள் விபத்து வாகனத்தில் அம்மாவுடன் ஏற்றுகிறார்கள். 

இந்த கொடூரச்செயலை சட்டென ஒருவனால் அரங்கேற்ற முடிந்திருக்குமா? அவன், அந்த பெண்ணின்பால் ஏன் அத்தனை வன்மத்தை சுமந்திருக்கிறான்? இதை செயல்படுத்த காலையிலேயே மதுவைத்துணைக்கு வைத்து மதுப்போதை ஏறஏற அவளை வெட்டிவீழ்த்துவது என்று மூளையின் ஆழத்தில் பதிவு செய்துவிட்டிருக்கிறான். அவன் மதுவை துணைக்கு வைத்து நினைத்த காரியத்தை முடித்து வெற்றிகரமாக முடித்துவிட்டான். அவள் அவன் மதுவிடம் தோற்றுவிட்டாள். 

அதற்குப்பரிசாக, அவள் தன் தாயின் கருவறையிலிருந்து சேர்த்துவைத்த தன் மொத்த உதிரத்தை பருகிக்கொள்ள சாலையில் விட்டுவிட்டுச்சென்றிருந்தாள். 

இங்கே,
நாங்கள் அந்த இடத்தை கடக்கும் சமயம் எவரும் பருகிடாத அவள் குருதி சாலையில் இன்னமும் ஈரம் குறையாமல் இருக்கிறது. 

அங்கே, மருத்துவமனையில் யார் வந்து அழைத்துப்போவாரென்று இன்னமும் அந்தச்சிறுவன் பிரேதப்பரிசோதனை கட்டிடத்தில் தன்தாயின் பிரேதத்தின் முன் அமர்ந்திருக்கிறான் என தெரியவில்லை.
==============
என்று செய்தி  பகிர்ந்து இருந்தார்.... வாழ பிடிக்கவில்லை என்றால்  விட்டு விலகி விடவேண்டும்.. நிம்மதியாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்  இலையில்  பிடிக்காத  உணவு பொருளை வைத்து தின்னு தின்னு என்றால் எப்படி தின்ன  முடியும்....? அது போலத்தான்... பிடிக்கவில்லை என்றால் பிரிந்து தனி வாழ்க்கை வாழ்வது உத்தமம்.. 

அதுக்கா அறுத்துக்கிட்டு வா என்பது அல்ல.. முடிந்த வரை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்  முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள்.... 

இந்த கொலை  ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே நான் பார்க்கின்றேன்... பொட்ட சிரிக்கிக்கு அப்படி என்ன   ஈறுமாப்பு, ??அப்படி என்ன  சொல் பேச்சு கேளாமை ??? என்றே  சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஆண் என்ன மாதிரியான முடிவை  எடுப்பான் என்று நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை....

என்னோடுதான் வாழ வேண்டும்.. என்ற ஆணாதிக்க வெறி... ஒரு பெண்ணை ஈவு இரக்கமின்றி வெட்டி சாய்ததோடு மட்டுமல்லாமல்  ஒரு சின்ன பையனை அனாதை ஆக்கி  இருக்கின்றது...

 இதே இந்திய நாட்டில் போடியில்  தன் தணவனிடம் வாழ பிடிக்கவில்லை அதனால்  விவாகரத்து  வேண்டும் என்று கேட்ட பெண்ணுக்கு வெட்டுக்குத்தாகி மார்சுவரியில் இருக்கின்றாள் என்றால்...

60 வயது திக்விஜய சிங்...45 வயது டிவி ரிப்போர்ட்டர் பெண்  மீதான காதல்.,. நாடு முழுவதும் பெரிய விவாதத்தை  உண்டு பண்ணி இருக்கின்றது...  

இது பற்றி தற்போதைய இந்தியா டுடே இதழில் எழுத்தாளர் ஷோபா டே... எழுப்பி இருக்கும் கேள்விகளில்  நியாம் இல்லாமல் இல்லை..

ஒவ்வோரு இந்தியனும் தனது இரட்டை வாழ்க்கை முறைகளில்  இருக்கும் மனம் சம்ந்த பட்ட விஷயங்களில்  சுய பரிசோதனை செய்துக்கொள்வது அவசியமாகின்றது என்பதை ஷோபாடே கட்டுரை விவரிக்கின்றது...

கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருசன் ரைமிங்   மெல்ல மெல்ல மலையேறிக்கொண்டு இருப்பதை பழமை வாத ஆண்களினால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள   முடியவில்லை.
.
திக் விஜய சிங் காதலித்த ரிப்போர்டர் பெண்  கூறுகின்றார்... என் கணவரிடம்   இது குறித்து விவாதித்து விட்டேன்... அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்... இருவரும் மீயூட்சுவல் அன்டர்ஸ்டேன்டிங்கில் பிரிய முடிவெடுத்துள்ளோம். விவாகரத்துக்கு மனு கொடுத்துள்ளோம்... என்கின்றார்...

போடியில் தனியார் கம்யூட்டர் கல்வி மையத்தில் வேலை பார்த்த பெண்ணும், டிவி ரிப்போர்டர் பெண்  என இரண்டு பேருமே இந்திய பிரஜைகள்தான்... 

இரண்டு பேருமே பெண்கள்தான்... இந்திய நாட்டை பொருத்தவரை பெண்ணாக பிறப்பதை விட புரிதல் உள்ள இடத்தில் பெண்ணாக  பிறக்க வேண்டியதுதான்  ரொம்ப முக்கியம் என்பதைதான் மேலுள்ள இரு செய்திகளும் நமக்கு  தெரிவிக்கின்றன.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

=================

தகவலுக்கு நன்றி. கே.எஸ். சுரேஷ்குமார்


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. ஜாக்கி சேகர்,
    நம் நாடு ஆணாதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது. பெண்களைப் பற்றிய சரியான புரிதல்கள் இன்னும் நம் நாட்டு வீரம் விளைந்த ஆண்களுக்கு போய்ச் சேரவில்லை. நா மீச வச்ச ஆம்பளைடா, பொண்ணுன்னா இப்பிடி இருக்கணும் போன்ற நமது சுவர்ப் புலிகளின் பொறி பறக்கும் வசனங்களும், பெண்களை வக்கிரமாக கிண்டல் செய்யும் மனோபாவமும், கேடுகெட்ட பாடல்களும், சம்பிரதாய சாணிகளும் இன்ன பிற கலாச்சார கன்றாவிகளுமே இந்த கொடுமையை முன் எடுத்துச் செல்கின்றன. மனதை உடைக்கும் பதிவு. இன்னும் கொஞ்சம் காரமாகவே நீங்கள் சில முரட்டுக் காளைகளை சாடியிருக்கலாம்.

    ReplyDelete
  2. எனக்கென்னவோ இது ஆணாதிக்கம் அல்ல. தான் இல்லாமல் பெண் வாழ முடிகிறதே என்ற ஆண் பலவீனத்தின் வெளிப்பாடுதான் ஆத்திரமாக இப்படி வெளிப்படுகிறது. ஆணாதிக்கம் கை நழுவி வேறு முகம் அல்லது வேசம் தேடிஓடிகொண்டு இருப்பதாகப்படுகிறது

    ReplyDelete
  3. இதற்கு பெயர் ஆணாதிக்கம் இல்லை.

    ஆண்களுக்குப் பெண்களிடம் ஏற்படும் பொறாமை.

    ReplyDelete
  4. Jackie you are 100 percent correct. Paavam andha ponnu. How their parents would have brought up with wishes. within a minute her husband, collapsed. ch. really so sad.

    ReplyDelete
  5. Jackie,
    Just finished watching into the wild. Very nice. After a long time enjoyed all the dialogues in the movie.
    I am not sure whether you have reviewed Buffalo Boy. It is a Vietnamese movie. Make everyone feel good about what they have got in their life. A very touching movie. If you have not watched this yet please watch this movie.
    Thanks for all the reviews. Keep them coming
    Nellai

    ReplyDelete
  6. Jackie,
    A long time follower of your website.
    Had time to watch one of the movie you suggested "Into the wild".
    Just finished watching into the wild. Very nice. After a long time enjoyed all the dialogues in the movie.
    I am not sure whether you have reviewed Buffalo Boy. It is a Vietnamese movie. Make everyone feel good about what they have got in their life. A very touching movie. If you have not watched this yet please watch this movie.
    Thanks for all the reviews. Keep them coming
    Note: Please delete my earlier comment if you are going to publish on your website.
    Nellai

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner