பர்ஸ்



ஒரு பர்ஸ் உங்கள் கையில் கிடைத்தால் என்னவெல்லாம் தோன்றும்..? ஒன்னுமே தோன்றது என்று ஒரு சிலர் சொல்லலாம்... காரணம் அந்த பர்ஸ் சார்ந்த முக்கியமான விஷயங்களை அது உங்களுக்கு நியாபக படுத்தாமல் இருக்கலாம்...




ஆனால் புகைபடத்தில் இருக்கும் இந்த பர்சை கையில் எடுத்த போது, பல பழைய நினைவுகள் மற்றும் மனிதர்களை நியாபகப்படுத்தி நினைவுகளில் என்னை பின்னோக்கி அழைத்து சென்று அசை போட வைத்து விட்டது...


கேமரா மீதான என் காதலுக்கு கடலூரில் எனக்கு வழிகாட்டியவர்... காலம் சென்ற செவ்வந்தி ரெட்டியார் சுப்ரமணியன் அவர்கள்தான்......


இப்போது புதுப்பாளையத்தில் கடை வைத்து இருக்கும் வைத்திதான் எனக்கு கேமரா மீதான பயத்தை போக்கியவன்.. அதன் பின் என்னை அடையாளம் கண்டுக்கொண்டு ஒரு காட் பாதர் போல எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தவர் தங்கம் வீடியோ தங்கராஜ் அண்ணன்தான்....

ஒரு காலத்தில் திருப்பாதிரிபுலியூர் மகளீர் பள்ளிக்கு எதிரில் இருந்த மணியம் ஸ்டுடியோவில்தான் நான் என்னை புதுப்பித்துக்கொண்டேன்... வீடியோ மற்றும் போட்டோவை எப்படி ரசனையோடு எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டது...காபாலி அண்ணன் அவர்களிடத்தில்தான்.....அண்ணனின் மனைவி உடன் பிறந்த சகோதரி போலவே என்னை பார்த்துக்கொண்டார்...


வாடிக்கையாளர்களிடம் எப்படி பழக வேண்டும் என்று தொழில் கற்றுக்கொண்ட இடம்.... என் காதல் மெல்ல அரும்ப ஆரம்பித்ததும் அங்கேதான்... அவரை விட்டு விலகிவிடுவேணோ என்ற பயத்தில் என் காதலை சாத்வீக முறையில் லைட்டாக எதிர்த்தார்... நான் விலகினேன்...

15 வருடம் ஆகி விட்டது.. கபாலி அண்ணன் தன் துனைவியுடன் கோவையில் செட்டில் ஆகி விட்டதாக கேள்விப்பட்டேன்... சமீபத்தில் போனில் பல வருடங்களுக்கு பின் பேசினேன்... எப்படி ஜாக்கி... எத்தனை பேரு உன்னை படிக்கறாங்க...!! எவ்வளவு பேரு உன் மீது பாசமா இருக்காங்க...!!. நான் உன்னோட ரசிகனா மாறிட்டேன்,....உ ன்னோட எல்லா பதிவுகளையும் வாசித்து விடுவேன்...அவர் மனைவி போனை வாங்கி... அண்ணன் டெய்லி உன்னோட பதிவை வாசிச்சிடுவாங்க.... என்னையும் அழைத்து காண்பிப்பார்கள்,... நீ நல்லா வரனும் ஜாக்கி என்று வாழ்த்தினார்...

. இப்படி ஒரு பையனா என் கடையில் வேலை செஞ்சான் என்பதை என்னால் நம்பமுடியவில்லை ஜாக்கி என்றார்.. இன்னும் நீ நிறைய உயரங்களை தொட இந்த கபாலி அண்ணனின் ஆசிகள் எப்போதும் உண்டு என்றார்... அவரிடம் வேலை செய்த போது எனக்கு மாத சம்பளம் 2000 ரூபாய்..


என்னை பொறுத்தவரை நான் வேலை செய்த கடையின் ஒனர் பல வருடங்களுக்கு பிறகு என்னை பாராட்டுவதுதான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து....


பல வருடங்களுக்கு பின் என் பழைய பொக்கிஷங்கள் புதைந்து கிடைக்கும் பையை இன்று ஆராய்ந்த போது இந்த மணியம் ஸ்டுடியோ பர்ஸ் எனக்கு கிடைத்தது...

அண்ணன் கபாலி மற்றும் அக்காவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..... Kabaleeswaran Subramaniam


அண்ணா இந்த புகைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகின்றேன்...




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

7 comments:

  1. முகநூலில் நான் போட்ட பதிவுக்கு அண்ணன் கபாலி போட்ட கமென்ட்.



    Kabaleeswaran Subramaniam தம்பி தனுஷ்!..52 வயதில் என்னை மீண்டும் 32 க்கு அழைத்து சென்றுவிட்டாய்..இளமையின் பொலிவுடன் லட்சியத்தை நோக்கி பயணித்த நாட்கள்..உள்ளது உள்ளபடியே உண்மையை கொட்டியுள்ளாய்!.ரொம்ப பிடித்திருக்கிறது...மறுநாளே மறந்துவிட நினைக்கிற இந்த உலகத்தில்,இன்றளவும் எங்களை நேசிக்கும் உன் மாண்பு பெருமைக்குரியது...கல்வியில் சாதிக்க முடியாதவர்கள் தொழிலில் சாதித்தால் மாட்டுமே வாழ்கையில் வெற்றி பெறுவர்.அந்த வாழ்க்கைக்கு வழி வகுத்த குருமார்களை பலரும் மறந்து விடுகிறார்கள் நீ பாசத்தோடு பெருமையோடு பகிர்ந்துகொண்டது இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு...நன்றி...நன்றி...வாழ்க வளமுடன்....அன்பு ஜாக்கி ரசிகன்...கபாலீஸ்வரன்....

    ReplyDelete
  2. Generally a purse contains currency notes, atm cards, visiting cards etc. But this purse contains your old thoughts which is quite valuable than these items. I stayed in 103 Sankara Naidu Street just adjacent to this studio for some years and your post took me to those days for a moment. Good post,.

    ReplyDelete
  3. Generally a purse contains money, atm cards, visiting card etc. But this purse of yours contains your old history which makes you to remember the people you moved with and worked with in the past. Good post. During later 1960s and in the beginning of 1970s I stayed at 103 Sankara Naidu Street and after reading the address of the studio, I simply could not control my mind going to Sankara Naidu street instantly.

    ReplyDelete
  4. i had asked you yesterday about difference between tv dramas and movies? how can we find immediately it is a drama or movie? since you learnt camera tricks from kabaleeswaran subramanian anna you can explain clearly i think so.

    waiting for your reply jackie...... ( som 24frames 30 frames solraanga. yeanku puriyala)

    ReplyDelete
  5. நெகிழ வைத்த நினைவுப்பதிவு! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. மனம் தொடும் நினைவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. மனம் தொடு நினைவுப்பதிவு!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner