தூறல் நின்னு போச்சு திரைப்படத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு...
அந்த படம் வெளியான ஆண்டு 1982 ....அப்போவோடு நான் திரையரங்கில் நான்
பார்த்த முதலும் கடைசியுமான திரைப்படம் அது ஒன்றுதான்... அதன் பிறகு அப்பா
என்னை எந்த திரைப்படத்துக்கும் அழைத்து சென்றது இல்லை...
காரணம் இல்லாமல் இல்லை...
இரண்டாம் வகுப்பு படிக்கின்றேன்... அப்பா என்னை தூறல் நின்னு போச்சி
திரைப்படத்தக்கு அழைத்து செல்கின்றார்...என் சோக கதையை கேளு தாய்க்குலமே..
பாட்டு வெகு பிரபலம்... நான் அதனை மனப்பாடம் செய்து நிறைய முறை பாடி
இருக்கின்றேன்...
அப்பா எப்போதுமே பர்ஸ்ட் கிளாஸ்
டிக்கெட்டில்தான் செல்லுவார்.. ஒரு நாளும் எழுப்பத்தி ஐந்து பைசா
டிக்கெட்டில் அவர் சென்றதே இல்லை...ரொம்ப டீசன்சி மெயின்டெயின் பண்ணுவார்.
அம்மா பாட்டி வீட்டுக்கு சென்ற காரணத்தால்.... அப்பா என்னை தூறல் நின்னு போச்சு படத்துக்கு அழைத்து சென்றார்....
கடலூர் ஓடியில் இருந்து வரும் போது ரமேஷ் தியேட்டர் என்று ஒரு தியேட்டர்
இருந்தது.. அது பாலாஜியாக மாறி இப்போது அந்த தியேட்டர் மண்ணோடு மண்ணாக போய்
விட்டது. அந்த தியேட்டரில் படம் பார்க்க அழைத்து சென்றார்...
அதுக்கு முன்னே எனக்கு ஏன் சோக கதையை கேளு தாய் குளமே பாடல் அத்துப்படி
என்றால் முன்னாள் நம்பியார் பேசும் வசனத்தில் இருந்து வீரபாண்டி
கட்டபொம்மன் வசனம் போல மனப்பாடம்...
பாட்டு ஆரம்பிக்கும் முன்
நம்பியார் அந்த பாட்டுக்கு ஒரு இன்ட்ரோ கொடுப்பார்... அதையும்
பாட்ரைடயும்.. பாட்டு வருவதுக்கு முன்னே சத்தமாக தியேட்டரில் டயலாக்கோடு
பேசி பாடி விட்டேன்....
மற்றவர்கள் என் பால்ய ஆர்வத்தை
ரசித்தார்கள்.. என் அப்பா அடிக்கவில்லை ஆனால் ஒரு முடிவு மட்டும்
எடுத்தார் இனி என் பிள்ளையோடு எந்த சினிமாவும் பார்க்க மாட்டேன் என்று வீர
சபதம் எடுத்தார்... அதை இன்று வரை காப்பாற்றுகின்றார்.......
நேற்று திருவாண்மியூர் தியாகராஜா எஸ் டூ வில் கிராவிட்டி படம்..
குடும்பத்தோடு போய் இருந்தோம்.... மற்ற தமிழ்படங்கள் விடாது பேசிக்கொண்டு
இருப்பார்கள் அதனால் யாழினி எது பேசினாலும் கேட்காது... படத்தின் முதல்
காட்சி... புல்லக்கும் குளூனியும் ஸ்பேசில் அமைதியாக உரையாடிக்கொண்டு
இருக்கின்றார்கள்...
யாழினி அவள பக்கம் கவனத்தை ஈர்க்க பேச ஆரம்பித்தால்...
அப்பா எனக்கு டெய்ரி மில்க் சாக்லேட், லட்டு எல்லாம் எனக்கு வாங்கி தாப்பா.. சஷ்மிதாவுக்கு வேண்டாம்பா என்றாள்...
அதன் பிறகு அணா ஆவன்னா சொல்ல ஆரம்பித்தாள் அமைதி காக்க சொன்னாலும் திரும்ப
பேச ஆரம்பித்தாள்...1982 ஆம் ஆண்டு தூறல் நின்னு போச்சி படத்துக்கு என்னை
அழைத்து போய் என் அப்பா என்ன மன நிலையில் இருந்தாரோ... அப்படி ஒரு
மனநிலையில் நான் இருந்தேன்.. ஆக்ஷூவலா அவ தூங்குடுவான்னு நினைச்சா,...
கொட்ட கொட்ட முழச்சிக்கிட்டு புல் படமும் பார்த்துச்சி....
மற்றவங்க அவ பேசினதுக்கு சிரிச்சாலும் எனக்கு சங்கடமா இருந்திச்சி... எங்க அப்பா பீல் பண்ணியதை இப்ப நாண் உணருகின்றேன்.
ஒவ்வொரு வினைக்கு சமமான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின்
மூன்றாவது விதி கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு. இதுதான் நியுட்டனின் மூன்றாவது விதி
ReplyDeleteவிதி தப்பாச்சே
ReplyDeleteSuperb
ReplyDeleteSuperb
ReplyDeleteஇது நியூட்டனின் மூன்றாம் விதி இல்ல சார்... ஆற்றல் அழிவின்மை விதி.... அறை வேக்காட்டுத்தனமா எதாவது எழுதாதிங்க சார்.....
ReplyDeletehttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF
நல்லா பல்பு வாங்கினீங்களா..யாழினி பாப்பாவ கேட்டதா சொல்லுங்க.
ReplyDeleteஹாஹா! என்ன ஒரு ஒற்றுமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteடைரி மில்க், லட்டு, ஜிலேபி, இடியாப்பம்.... உண்மைய சொல்லுங்க யாழினிய க்ராவிட்டிக்கு மட்டும் தான் கூட்டி போனீங்களா இல்ல மூடர் கூடத்துக்கும் கூட்டி போனீங்களா? ஒரு காலத்தில் என் அம்மா சினிமா பைத்தியமாக இருந்தார்.. என்னை கூட்டி போனால் நான் புரோஜெக்டர் வழியாக வரும் ஒளியையே பார்த்துகொண்டிருப்பேன். என் அப்பாவுடன் பார்த்தது சலங்கை ஒலி முதல் மரியாதை...
ReplyDeleteஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது...ஒரு வகை ஆற்றலை அழித்தால் சேதமில்லாமல் மற்றோரு வகை ஆற்றலாக சேதாரமில்லாமல் வெளிப்படும் என்று நியூட்டனின் மூன்றாவது விதி கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
ReplyDeleteஅருமை அண்ணா.
சரியாச் சொன்னீங்க
ReplyDeleteபோஸ்ட் போட்ட பத்து நிமிஷத்துல விதி தப்புன்னு தெரிஞ்சிடுச்சி... பட் உடனே மாத்த முடியலை... ஆபிஸ் போயாச்சி... செமையான வேலை அதான் மாற்ற முடியவில்லை... மற்றபடி விதியை சுட்டிக்காட்டி நான் ஒரு அரைவேக்காடு என்று புரிந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஆராய கூடாது. அனுபவிக்கனும்... சூப்பர் பதிவு...
ReplyDeleteசெல்வ மணிகண்டன் & சே. குமார்....
ReplyDeleteநியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு."
ஆற்றல் விதி:
“Energy cannot be created or destroyed, it can only be changed from one form to another.” ― Albert Einstein
நீங்கள் இருவரும் தான் குழப்பவாதிகள். ஜாக்கி சொன்னது தான் நியுட்டனின் மூன்றாம் விதி.
சங்கர நாராயணன் தியாகராஜன்
ஆம்ஸ்டர்டாம்