அண்ணா மேம்பாலம் ஏறி,
இடது பக்கம் கோடம்பாக்கம் போக வாகனத்தை திருப்பினேன்... பாலம் இறங்கி ,அண்ணா மேம்பாலத்துக்கு கீழே சிக்னலுக்காக வெயிட் செய்துக்கொண்டு இருந்தேன்.
இடப்பக்கம் சுவற்று ஓரம் அவர் நின்று இருந்தார்...65 வயது இருக்கும்.... மெலிதான தேகம் .. பூர்னம் விஸ்வநாதன் டைபாய்ட்டில் படுத்து நலம் பெற்று எழுந்தால் எப்படி இருப்பார்? அப்படி இருந்தார்...
பெல்ட் போட்டு டக் இன் பண்ணி இருந்தார்....
கடந்த காலத்தில் பிரிட்டிஷ் காலத்து பேரிங் போன ஃபேனுக்கு அடியில் உள்ள மர மேஜையில் உட்கார்ந்து, அரசு கோப்பில் பச்சை இங்கில் அவர் கையெழுத்து போட்டு இருக்கக்கூடிய அனேக வாய்ப்புகள் இருப்பதாக அவர் முகம் தெரிவித்தது...
அவர் உடல் மொழி... அவர் மிக அவசரமாக செல்ல வேண்டும் என்பதை பறைசாற்றியது.. அவருக்கு ஆட்டோ பிடிக்க வேண்டும்... அல்லது யாரவது இரு சக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்க வேண்டும்...
ஆட்டோ இல்லை... லிப்ட் கேட்க தயக்கம்... தன் மேஜையில் இருக்கும் பெல்லை அடித்தால் உள்ளேன் ஐயா என்று சொல்லி கைகட்டிய சேவகனை பார்த்து வளர்ந்த காரணத்தால் லிப்ட் கேட்க அந்த பெரியவரிடம் கூச்சம் பிடிங்கி தின்றது...
நான்தான் அவரிடம் சொன்னேன்...
சார் நான் கோடம்பாக்கம் வரை போறேன்... நீங்க...?
தம்பி வள்ளுவர் கோட்டம் வரை போகனும்... என்னை அங்கே எறங்கி விடுறிங்களா?
கண்டிப்பா இறக்கி விடுறேன்.... என்று அவரை ஏற்றிக்கொண்டேன்..
1994 களில் இதே சென்னையில் சைக்கிள் இல்லாமல், நடந்து போய்க்கொண்டே, லிப்ட் கேட்க எல்லேருடைய மூஞ்சியையும் பார்த்துக்கொண்டே நான் போய் இருக்கின்ற காரணத்தால் அவருடைய பார்வையை என்னால் உணர முடிந்தது.
(இந்த பதிவு வேறு விஷயத்தை உள்ளடக்கியது... அதாவது இன்றைய இளைய தலைமுறைக்கு முதிய தலைமுறைக்கு உள்ள வேறு பாட்டை பதியவே இந்த பதிவு...)
வண்டி டிராபிக்கில் நீந்தி வள்ளுவர் கோட்ட சிக்னலை அடையும் போது, சிக்னல் போட்டு இருந்தது.... அந்த பெரியவர் ஆரம்பித்தார்... தம்பி சிக்னல் போட்டு இருக்கு சிக்னல் தாண்டி வண்டியை நிறுத்திக்கோங்க... நான் இறங்கி நடத்து வந்துக்கறேன் எனக்கு ஒன்னும் சிரமம் இல்லை என்றார்...
ஆனால் இதே இடத்தில் ஒரு சின்ன பையன் என் பின்னால் உட்கார்ந்து இருந்தால்??? சிக்னல் போட்டாலும் சார் இங்க தான் இறங்கனும் நிறுத்துங்க நிறுத்துங்க என்று வென்னிதண்ணியை கால்ல கொட்டிக்கறது போல துடிப்பானுங்க... சுயநலவாதிங்க...
ஒரு வாட்டி இது போலத்தான் ஒருத்தன் என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டான்... கோடம்பாக்கம் சந்திரபவன் சிக்னல்ல... சிக்னல் போட்டு இருந்துச்சி.. சிக்னல்ல தாண்டி நிறுத்தினா நான் உடனே போயிடுவேன்... ஆனா சிக்னலுக்கு முன்னாடி நிறுத்தினா ??? இரண்டு நிமிஷம் அடுத்த சிக்னலுக்காக நான் வெயிட் செய்யனும்... நான் அவசரமாவேற போவனும்.... அதனால் பின்னாடி உட்கார்நது இருக்கறவன்கிட்ட சொன்னேன்...டேய் சிக்னல் போட்டாச்சி... அந்த பக்கம் போய் இறங்கி விடுறேன் என்று சொன்னேன்...
சார்... நான் அவசரமா போவனும் இங்கேயே இறங்கி விட்டாத்தான் ஆச்சி என்றான்... நான் வண்டியை வேகம் எடுத்து சிக்னல் தாண்டி போய் நிறுத்திட்டு சொன்னேன்...
அவ்வளவு அவசரமாபோறவன் எதுக்குடா? பண்ணாடை லிப்ட் கேட்டுக்கிட்டு இருந்தே... ஆட்டோ பிடிச்சி போவ வேண்டியதுதானே? எவனுமே ஏத்தலைன்னா என்ன புடுங்கி இருப்ப? போ... போய் அணு ஆயுத ஒப்பந்தத்துல கையெழுத்து போடு என்றேன்...
சிக்னல் தாண்டி நடக்க சோம்பேறி தனம்.. உதவி செய்யறவனை உடனே தன்னோட அடிமையா மாத்திக்கற சுயநலம்...
பட், டக் இன் பண்ணிய அந்த பெரிசு... சிக்னல் போட்டாச்சி... அந்த பக்கம் போய் நிறுத்திக்கோங்க... எனக்கு ஒன்னும் சிரமமில்லை என்றதுமில்லாமல், வாழ்க வளமுடன் என்று சொல்லி விட்டு சென்றது...
இதான் இரண்டு ஜெனரேஷனுக்கும் உள்ள வித்தியாசம்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

ஆஹா......... எங்க தலைமுறை!
ReplyDeleteபெருசு நல்லா இருக்கட்டும்!
True na... Sila peru first oru idam lift keppanunga.. appuram sir neenga intha pakkam porengalanu nool vittu pappainga... you are watching people closely and getting the lessons and teaching them also...super na
ReplyDeletethanks teacher
ReplyDeletethanks teacher!!!!!
ReplyDeleteஅருமை! பெரியவங்க! பெரியவங்கதான்!
ReplyDeleteஉண்மைதான்...
ReplyDeleteநமக்கு முந்திய தலைமுறையிடம் நாம் நிறைய விசயங்களைக் கற்றுக் கொள்ளவில்லை...
இது நடந்தது 1987 - 1990 மத்தியில். என் நண்பனின் அண்ணன் ஸ்டேர்லிங் ரோட்டில் பைக்கில் வரும்போது ஒரு மாணவன் கை நீட்டி லிப்ட் கேட்டு அவரை நிறுத்தினான். அவரும் நிறுத்தி அவனை ஏற்றிக்கொண்டார் . அவன் உட்காந்த பிறகு நடந்தவை கிழே
ReplyDeleteமாணவன்: "லயோலா" (அவன் பேசிய ஒரே வார்த்தை)
அண்ணன்: " எறங்கி நடந்து போடா ! மரியாதை தெரியாது உனக்கு?"
சிறிய அனுபவமாக இருந்தாலும் சிறந்த அனுபவம்.
ReplyDeleteஐயா,நாங்க நாங்கதான்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
OLD IS GOLD JACKIE JEE
ReplyDeleteIts true, So many time i too had the same experience.
ReplyDeleteits true. i feel not only depends on generation gap. This generation didn't learn properly from the old generation.
ReplyDeletenice
ReplyDelete