THE KINGS OF SUMMER-2013/உலகசினிமா/ அமெரிக்கா/ அமெரிக்கா பாய்ஸ்




துள்ளுவதோ இளமை என்ற படம் நாம் அனைவரும் பார்த்து இருப்போம்... 
அந்த படத்தின் கதை  என்ன? அப்பா  அம்மா பிரஷர்  தாங்க  முடியாம...  பசங்க வீட்டை விட்டு ஓடிப்போயிடுவாங்க இல்லையா? பாய்ஸ் படத்தின் கதை என்ன? அப்பா அம்மா கொடுக்கற டார்சர் தாங்காம வீட்டை வீட்டு ஓடி போய் மோட்டர் கொட்டாயில் எல்லாம் படுத்துகிடப்பாங்க இல்லை... 

சரி இந்த இரண்டு படமும் எப்ப வந்துச்சி? ஒரு 5 வருஷத்துக்கு  முன்னன்னு வச்சிக்கோங்க... 

இந்த படம் இப்பதான் வந்து இருக்கு... 


 நம்ம ஊர்ல இருக்கற சில வேதாளங்கள் இந்த படத்தை பார்த்துட்டு பாய்ஸ் படத்தின் அப்பட்டமான காப்பி என்று எழுதினால் எப்படி இருக்கும்? ஆனா எழுதமாட்டானுங்க.. காரணம்.. வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதுதான்... நாட்டுல எவ்வளவோ  பசங்க ஓடிப்போறாங்க.. ஒவ்வோருவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கும் ... அதை எப்படி ஒரு  இயக்குனர் அனுகி இருக்கார் என்பதை பார்க்கவேண்டும் .....அதை விட்டு விட்டு காபி,டீன்னு சொல்லிக்கிட்டு...  அப்படி அப்பட்ட்மான காப்பி அடிக்கப்பட்ட திரைப்படங்களை சொல்லுங்கள் கவலை இல்லை. தெய்வ திருமகன் அப்பட்டமான காப்பி திரைப்படம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. 

 ரைட் விஷயத்துக்கு வருவோம்...

 ஜோ அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்... கொஞ்ச நேரம் பாத்ரூம்ல இருந்த கூட என்னாடா  இன்னும் வெளிய வரலை கையடிச்சிக்கிட்டு இருக்கியான்னு கேட்டு  டார்சர் பண்ணற ரகம்.... அதனால் அவன் தன் நண்பர்கள்  இன்னும் இரண்டு பேரோட சேர்ந்துக்கிட்டு காட்டுல போய் ஒரு சின்ன வீட்டை  கட்டிக்கிட்டு மிக சுதந்திரமாக வாழுறாங்க  .. அவுங்க சந்திக்கற பிரச்சனை மற்றும்  கிளைமாக்ஸ்ல ஜோ  அவுங்க அப்பாவுக்கும்ன காட்சி ரொம்ப நெகிழ்ச்சியா  இருக்கு... படத்தோட ஒளிப்பதிவு அருமை...


இந்த படத்தை ஹாஹ ஓகோன்னு சொன்னாலும்... எனக்கு ஒன்னும் அந்த அளவுக்கு இந்த  படம் ஒட்டவில்லை..
=========

படத்தின் டிரைலர்.


=============
படக்குழுவினர் விபரம்.

 B. Ted Deiker
John Hodges
Eric Hollenbeck
Allan Marks
Michael Razewski
Richard Rothfeld
Robert Ruggeri
Peter Saraf
Susan Wasserman
Written by     Chris Galletta
Starring     Nick Robinson
Moisés Arias
Gabriel Basso
Alison Brie
Nick Offerman
Megan Mullally
Music by     Ryan Miller
Cinematography     Ross Riege
Editing by     Terel Gibson
Studio     Big Beach Films
Low Spark Films
Distributed by     CBS Films
Release date(s)   

    January 19, 2013 (Sundance)
    May 31, 2013 (United States)
    August 23, 2013 (United Kingdom)

Running time     94 minutes[1]
Country     United States
Language     English
Box office     $1,315,500


===========
பைனல்கிக்..

 இந்த படம் என்னை பொருத்தவரை டைம்பாஸ் திரைப்படம். பட் கிளைமாக்ஸ் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சி...

=========
படத்தோட ரேட்டிங்

இணைய தளங்கள் பத்துக்கு ஏழு கொடுக்கின்றன...  விரும்பம் இருந்தால் பார்க்கவும்.
   


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. நீண்ட நாட்களாக விமர்சனங்களை படித்து வருகிறேன். ஆனால் இன்றுதான் கருத்திடுகிறேன்.

    இராணுவ போர் தொடர்பான படங்களின் விமர்சனங்கள் ஏன் எழுதுவதில்லை.? ஆக்சன் அல்லது சயின்ஸ் பிக்சன் படங்களை பார்த்து சலிப்படையும் ஒரு நேரம் வரும்போது ஆறுதலாக இருப்பவை இராணுவ போர் தொடர்பான படங்களே . அவையும் இறுதிவரை விறுவிறுப்பாக சென்றாலும் சோகம் கலந்திருக்கும் இறுதியில் நியாமான போர் வெற்றி பெற்றால் நாமும் வெற்றி பெற்றோம் என்ற உணர்வைத் தரக்கூடியவை என்பது எனது எண்ணம்.

    City of Life and Death , Flowers of war போன்ற சீனா , ஜப்பான் போர் தொடர்பான திரைப்படங்களை குறிப்பிடலாம். நேரம் கிடைத்தால் இவற்றின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

    ஒசாமாவை கொல்வது போன்ற அமெரிக்கா ஆதிக்க பிரச்சார படங்களைத் தவிர்த்து. 2010 ம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த சிறந்த போர் படம் எதுவென்று கூறுங்கள் ஜாக்கி.

    ஜப்பான் , சீனா, அமெரிக்கா தவிர ஏனைய நாடுகள் எதுவும் யுத்தம் தொடர்பான சிறந்த படங்களை எடுத்திருந்தால் அவற்றையும் விமர்சனாமாக் தாருங்கள்.

    விமர்சன பதிவுகளை விடாமல் தொடர வாழ்த்துக்கள்!

    நன்றி
    அருண் , சுவிஸ்

    ReplyDelete
  2. When you say u didnt like it much,am not goi ng to see it

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner